திருச்சூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது இளம் பெண் கவி அனிஷா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . அவருடன் கவிதை சார்ந்த  ஒரு உரையாடல் :

இன்றைய மலையாள கவிதை உலகு எப்படி இருக்கிறது?

இன்றைய மலையாள கவிதை உலகில் போலிகளும் ஜிமிக்கிகளும் அதிகமாக தான் இருக்கின்றன. நான் தற்சமயம் வாழும் துபாய் நகரத்தில் இப்படி போலிகள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கவிதை அனுபவங்களை விட கவிஞர்கள் என்று சொல்வதில் பெருமை இருக்கிறது

உங்கள் பங்களிப்பு..

 என்னுடைய கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்துக்கு கூட இரண்டு தொகுப்புகளை கொண்டு வந்திருக்கிறேன். இப்போது என்னுடைய தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் வெளிவர ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைய மலையாள கவிஞர்கள்  எந்த வகையில் தீவிரமான செயல்பாட்டில் இருக்கிறார்கள்?

இன்றைய இளம் கவிஞர்கள் பத்திரிக்கையில் எழுதுவதை விட சமூக ஊடங்களில் எழுதுவதை அதிகம் விரும்புகிறார்கள் நான் இரண்டிலும் எழுத விருப்பம் கொண்டிருக்கிறேன். உரைநடை கவிதை மட்டும் இல்லாமல் சந்தம் வைத்துக்கொண்டு எழுதுகிற கவிதைகளிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. இந்த சந்தக் கவிதைகளை பாடி யூடுப்பில்  வெளியிட்டு இருக்கிறேன். பழைய கவிஞர்கள் கவிதைகளைப் பாடும் இயல்புகளைக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இந்த இளைஞர்களின் சமூக ஊடங்களிலும் 'யூடுப்பு'களிலும் கிடைக்கும் அங்கீகாரத்திற்காக,  விளம்பரத்திற்காக கவிதைகளை பாடல்களாக பாடுகிறார்கள். கவிதை பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைய உரைநடை கவிதையில் எழுதுபவர்களில் பலருக்கு அரசியல் பாதிப்பும் திடமான அரசியல் கருத்துக்களும் இருக்கின்றன.பி பி இராமச்சந்திரன் போன்றவர்கள் அரசியல் கருத்தானாலும் எந்த கருத்தாலும் மிக தாழ்ந்த குரலில் தான்  பாடல்களாகச் சொல்கிறார்கள். அது போன்ற குரல் தான் எனக்கும் பிடிக்கிறது இன்றைய இளைஞர்கள் முகநூல் யூடுப்பில்  என்று தன்னுடைய கவிதைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவை ஒரே பாதையில் தேய்ந்த பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. கிராமங்களை எழுதுவது குறைந்து கொண்டிருக்கிறது. பெண் எழுத்து என்பது தீவிரமாக வெளிபட்டுக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மாதவி குட்டி போன்ற  எழுத்தாளர்களை மட்டும் கலகக் குரலுக்காக சொல்வார்கள். இன்றைக்கு 90% பெண்கள் கலகக் குரலில் தான் தங்களுடைய படைப்புகளை வெளிப்படுத்துகிறார்கள். அவை சுதந்திரத்தை விரும்பும்  கருத்துக்கள் .தங்கள் சொந்த  அனுபவக்கருத்துக்களை முன்வைப்பவை.

மொழிவளமை எப்படி உள்ளது?

 பொது மொழியில் எழுதுவது மலையாளத்தில் அதிகரித்து இருக்கிறது. அந்த நாட்களில்  வட்டார மொழிகளுக்கு சென்று எழுதுவது,  அந்த அனுபவங்கள் எழுதுவது குறைந்து வருகிறது காரணம் கிராமங்கள் நகரங்களாக விரிவடைந்து வருகின்றன

உங்களின் வேறு முயற்சிகள் பற்றி..

 நானும் கவிதைகளை தாண்டி உரைநடையில் என்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் ஞாபகக் குறிப்புகளையும் எழுதி வருகிறேன்.. விரைவில் அவை ஒரு நூலாக வெளிவர இருக்கின்றன. கல்லூரி மாணவ மாணவிகள் தமிழ்நாட்டைப் போல் அல்லாமல் இந்த நிறைவே எழுதுகிறார்கள். ஆனால் அவர்களை சமூக ஊடங்களில் எழுதில்தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். பாடல்கள் பாடுவது, ஆட்டம் ஆடுவது  போன்றவற்றில் ஆர்வம் கொள்ளும் கல்லூரி மாணவர்கள் கொஞ்சம் எழுதுவதில் அக்கறை கொள்கிறார்கள். அவையெல்லாம் கவிதை மரபு அல்லது அரசியல் மரபு சார்ந்து இல்லை அவையெல்லாம் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிற சாதனங்களாக இருக்கின்றன.

இளைஞர்கள் பத்து வருடங்களுக்குள் தான் அதிகம் கவிதைகளை எழுதி இருக்கிறார்கள். இன்றைக்கு குறைந்துவிட்டது தான். பலருக்கு அரசியல் கோஷங்களாக கவிதைகள் அப்படி அமைந்துவிடுகின்றன. மேடைப் பகுதிகளாகவும் அவர்கள் அமைந்து விடுகின்றன. சங்கம்புழா  போன்றவர்களும் மலையாற்றூர் ராமகிருஷ்ணா போன்றவர்களும் இன்றைக்கும் கவிதை உலகில் தங்களுடைய இடத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மரபுகளை பின்பற்ற வேண்டியது இளைஞருடைய கடமையாக இருக்கிறது.

திகில் படங்கள் மலையாளத்தில் அதிகரித்திருக்கிறது. இலக்கியத்தில்...

 இன்றைய மலையாள எழுத்தாளர்கள் வாசகர்கள் மத்தியில் திகில் பேய் கதையிலும் படிப்பதும் எழுதுவதும் அதிகமாக இருக்கிறது. அதற்கு வரவேற்பும் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் தீவிரமான எழுத்துக்கு ஒரு அடையாளமும் இருந்து கொண்டிருக்கிறது


அவரின் 2 கவிதைகள் ஆங்கிலத்தில்..
 

1. (S)HE  By Aneesha P.

Seeing an old friend as leaning towards that
old red coloured muddy desk,
and go mad and dark
up to the shaking  legs of the bench,
with oily hair,
And now at the bottom of Boorju with head erect ninety degree.
Now,
this age of your hair
that pasted with red is not reaching even the shoulders.

At the time of lemon smelled youth festivals, on the shocking, envied memory of
the bevy of boys came to win the sub district started wandering behind you.
By frowning towards  your ironed hair,
wish to come before you.
Having the inferiority complex for
not springing up a moustache,

as the only one who never felt a fascination towards you,
Wearing a woman self   inside,
that doubted  own identity,
overcoming stares and touchings
from the surroundings, with the fear of lacking moustache,
and the ever covering bulging of the growth of body,
having the documents of a transgender that even now not corrected.
The one who crossed the sea.

Now how can I introduce myself,
having a hair up to the knee,
with confusing identity of 'he' or 'she',
as a 'sin child', as my mother curse,
as your old neighbour?

 
2. On reading a poetry By Aneesha P.

Whenever I read any kind of poetry,
I just reach to you.
The lips of love, dances to that gaze.
That of insanity recollects the wonder as we.
All the lines stopped.
As could not move away from the destination
I just shake to the dried soul as a memory.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.