வாசகர் கடிதங்கள்

அன்புள்ள நவஜோதி வணக்கம்.

வாழ்த்துக்கள். அன்புள்ள நவஜோதி, வணக்கம்.   உங்களது பிரித்தானிய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த பார்வை - கனடா பதிவுகளில்  படித்து உண்மையிலேயே களைத்துப்போனேன்.  படித்த எனக்கே அப்படி என்றால், இத்தனை ஆர்வத்துடன் -  தேடுதலுடன் இந்த அறிமுகக்குறிப்பிற்காகவும் - திறனாய்விற்காகவும் பல நாட்கள்  உழைத்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். தமிழ்நாட்டவர் இதனைக்கேட்டு திகைத்திருப்பார்கள். பிரித்தானியாவில் இத்தனை எழுத்தாளர்களா...?   அனைவரும் அவரவர் துறைகளில்  தம்மால் முடிந்ததை செய்திருக்கிறார்கள்.  உங்கள் ஆக்கம் ஆவணமாகத் திகழுகிறது.   வாழ்த்துக்கள். உங்கள் கடின உழைப்புக்கு தலைவணங்குகின்றேன்.

பலரும் முகநூல்களில்  சலிப்புத்தரும் அரசியல் அரட்டைகளிலும் - தனிமனித தாக்குதல்களிலும் ஈடுபட்டு தங்கள் நேரத்தையும், மற்றவர்கள் நேரத்தையும் வீணடிக்கும் சமகாலத்தில், நீங்கள் அமைதியாக இத்தனை தகவல்களை சேகரித்து பதிவுசெய்துள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.   கனடா பதிவுகளில் வாசித்தவுடன் இதனை எழுதுகின்றேன். கனடா பதிவுகள் கிரிதரனுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் உரை இலக்கிய ஆய்வாளர்களுக்கு  உசாத்துணையாக இருக்கும்.

அன்புடன்
முருகபூபதி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.