- வாசகர்களே! உங்கள் ஆக்கபூர்வமான 'பதிவுகள்; இணைய இதழ் பற்றி, இவ்விதழில் வெளியான ஆக்கங்கள் பற்றி எழுதி அனுப்புங்கள். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


 

ஓவியர் சதானந்தன்:
Sat, Feb 12 at 9:41 a.m.

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, இலங்கையிலிருந்து, சதானந்தன் எழுதிக் கொள்வது, தங்களது தேக, உள ஆரோக்கியம் வேண்டி முதற்கண் ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கின்றேன். தங்களது பயன்மிகு நேரத்தை சிரமம் பாராமல் செலவிட்டு எனது நேர்காணல்களை, வடிவமைப்புடன் நேர்த்தியாய், தங்களது 'பதிவுகள்' இணைய தளத்தில் பதிவிட்டு அதனை பல வாசகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றீர்கள்.தங்களது இந்த உதவி கிட்டாவிடில், இப்பேட்டி வாசகர்களிடம் முழுமையாய் சென்று சேர்வது என்பது சாத்தியமில்லை என்றே நான் கருதுகின்றேன். தங்களது இந்த உதவிக்கு எனது பெரு நன்றிகள் என்றும் உரித்தாகும். மேலும் தங்களது எழுத்து/இலக்கிய பணிகள் மேலும் சிறக்க எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி.
இப்படிக்கு அன்புடன் சதானந்தன்.


Naresh <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Fri, Feb 11 at 10:29 p.m.

அன்புடன் பதிவுகள் ஆசிரியருக்கு,
தங்கள் தமிழ் வளர்ச்சிப் பணிக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். அண்மையில் நான் அனுப்பிய கட்டுரையை தங்கள் பதிவுகள் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தமையை பார்வையிட்டேன். மிக்க மகிழ்ச்சியுடன் வெளியிட்டமைககான எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது மென்மேலும் எழுதுவதற்கான ஆர்வத்தை தூண்டுவதோடு ஊக்கத்தையும் அளிக்கிறது.
மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களுடன் அடுத்த மின் அஞ்சலில் சந்திக்கும்வரை விடைபெறுகிறேன்.

நன்றி
இங்ஙனம்
த. நரேஸ் நியூட்டன்


Dr.GSunil Joghee <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Fri, Jan 21 at 5:46 a.m.

பெருமதிப்பிற்குரிய ஐயாவிற்கு வணக்கம். ஐயா நீலகிரி படகர் இன மக்களைப்பற்றி "மாதி" எனும் தலைப்பில் புதினம் ஒன்றினை இயற்றியுள்ளேன். இது படகர் இனமக்களைப்பற்றி வெளிவந்த முதல் இனவரைவியல் புதினமாகும். மேலும் இது படகர்களின் அகவயத்தார் இயற்றிய முதல் புதினமாகும். இந்த நாவலை பரிசல் பதிப்பத்தார் வெளியிட்டுள்ளனர். என் 20 ஆண்டுகளுக்கு மேலான படகர்கள் குறித்த ஆய்வு அனுபவத்தில், அவர்களின் தொல்குடி வாழ்வினை வெளிப்படுத்தும் வண்ணம் இயற்றியுள்ள இந்தப் புதினத்தின் வெளியீட்டுத் தகவலை எனை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கு அறிவிக்க விரும்புவதோடு கடமைப்பட்டுள்ளேன். தங்களின் மேலான ஊக்கத்திற்கு நன்றிகள் நாளும்.

மாதி | Buy Tamil & English Books Online | CommonFolks

Dr G.Suniljoghee
Assistant Professor
kumaraguru college of
Liberal Arts and Science,
saravanampatti
coimbatore
Ph - 9159383919


Lux Jothikumar <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Tue, Dec 21, 2021 at 6:22 a.m.

தீர்த்தக்கரை:

அன்பின் கிரி, நண்பர்கள் பலரும், மகிழ்வு தெரிவித்து எழுதி இருந்தார்கள். மிகவும் நன்றி கிரி.

அன்புடன் ஜோதிகுமார்.


Lux Jothikumar <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Tue, Dec 7, 2021 at 9:15 p.m.

வணக்கம் கிரி. எங்கெல்லாம் மனித இதயத்தின் ஈரம் விகசிக்கின்றதோ அங்கெல்லாம் பேனையின் கூர்முனை தன்னை மெல்ல ஒற்றிக்கொள்ளும் ஓர் நிகழ்வை காட்சி படுத்துவதில் 'பதிவுகள் ' முக்கிய பங்காற்றுகின்றது.
அன்புடன் ஜோதிகுமார்


 

M. Rishan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Sat, Dec 4, 2021 at 8:19 a.m.

இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இரண்டு நூல்களுக்கு இரண்டு சாகித்ய விருதுகள்! இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 03.12.2021 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்புக்கு இரண்டு சாகித்ய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவரது மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் பதிப்பகம் மூலமாக வெளிவந்த 'தரணி' நாவல் மற்றும் வம்சி பதிப்பகம் ஊடாக வெளிவந்த 'அயல் பெண்களின் கதைகள்' சிறுகதைத் தொகுப்பு ஆகியவையே 2019, 2020 ஆகிய வருடங்களில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது ‘அயல் பெண்களின் கதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பானது ஏற்கெனவே இந்தியா வாசகசாலை விருதினை வென்றுள்ளதோடு, ‘தரணி’ நாவலானது கொடகே சாகித்ய விருதினை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.