அ.செ.மு,.வின் 'புகையில் தெரிந்த முகம்' பற்றிச் சில வார்த்தைகள்!

மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்' என்னும் தலைப்பில்  ஜொஸப்பின் பாபா (துணைப் பேராசிரியர், புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை )  எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது தமிழகப் பண்ணையொன்றில் கால்நடை வைத்தியராகச் செல்லும் ஒருவரிடம் அங்கு காதற் பிரச்சினையால் காதலன் படுகொலை செய்யப்பட, தற்கொலை செய்துகொண்ட கற்பகம் என்னுமொரு பெண் தன் கதையைக் கூறுவதாகக் கதையோட்டம் செல்வதை அறிய முடிந்தது.

இறந்தவர்கள் தம் கதைகளைக் கூறி தம் கொலைகளுக்கான மர்மத்தைத் தீர்க்கும் வகையிலான படைப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. உலகப்புகழ் பெற்ற நாவல்களிலொன்றான நோபல் பரிசு பெற்ற துருக்கிய நாவலாசிரியரான ஓரான் பாமுக்கின் 'எனது பெயர் சிவப்பு' (My Name is Red) நாவல் இத்தகைய பாணிப் படைப்புகளிலொன்று. 'மாஜிக்கல் ரியலிசம்' மிக்க பின் நவீனத்துவப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆனால் இது போன்ற பாணியில் அமைந்த குறுநாவலொன்றினை ஐம்பதுகளிலேயே இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார் என்பது கவனத்துக்குரியது. அவர் அ.செ.முருகானந்தன். அக்குறுநாவல் சுதந்திரன் வாரவெளியீட்டில் தொடராக வெளியாகி, நவலட்சுமி புத்தகசாலை (136 செட்டியார் தெரு, கொழும்பு) பதிப்பகத்தால் 1950இல் வெளியிடப்பட்ட 'புகையில் தெரிந்த முகம்'. 

இக்குறுநாவலில் கதை சொல்லியான ராமலிங்கம் சுருட்டொன்றைப் பற்ற வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கின்றார். புகையை வட்ட வட்ட வளையங்களாக விட்டுக்கொண்டிருக்கின்றார். அச்சமயம் அச்சுருட்டுப் புகையினூடு அழகிய முகமொன்று தெரிகின்றது. அந்த முகத்துக்குரியவள் வேறு யாருமல்லள். புகையிலை வியாபாரி பொன்னுச்சாமியின் மகளான காந்திமதியே் அவள். காந்திமதியையும் அவளது காதலன் முருகேசனையும் பொன்னுச்சாமி அவர்களது காதலை எதிர்த்ததனால் கொன்று விடுகின்றார். ஊருக்கு அவர்கள் ஊரைவிட்டு ஓடிப்போய்விட்டதாகக் கூறி நம்ப வைத்துவிடுகின்றார். அவர்களை புதைத்த இடத்தின் மேல் தென்னம்பிள்ளையொன்றையும் வளர்த்து விடுகின்றார். அவ்விதம் அவரால் கொல்லப்பட்ட அவரது மகளான காந்திமதியே கதை சொல்லியான ராமலிங்கத்துக்கு அவரது சுருட்டுப் புகை வளையங்களூடு தென்பட்டுத் தன் கதையினைக் கூறுகின்றாள். . வித்தியாசமான கற்பனை அ.செ.மு.வுக்கு அக்காலத்திலேயே வந்திருக்கின்றது., அக்கற்பனையை வைத்துச் சிறப்பானதொரு குறுநாவலை அப்பொழுதே தந்துள்ளார். தமிழில் 'மாஜிக்கல் ரியலிச'ப் பாணியில் ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் புனைகதையொன்றினைத் தந்துள்ளார் என்பது கவனத்தில் வைக்க வேண்டியதொன்று.  அ.செ.மு.வின் 'புகையில் தெரிந்த முகம்' குறுநாவலை  இற்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதன் அவசியம் கருதி 'பதிவுகள்' இணைய இதழில் மீள்பிரசுரம் செய்கின்றோம். 


(குறுநாவல்) புகையில் தெரிந்த முகம் (1) - அ.செ.முருகானந்தன். -

 அத்தியாயம் ஒன்று!

சாப்பிட்டுவிட்டு ஒரு சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில்சாய்ந்தேன். மேலே எலெக்ட்ரிக் லைட் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. இரவு பத்து மணிக்குமேலிருக்கும். என் அறையிலும் வெளியிலும் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது.

புகைப் போட்ட திறம் யாழ்ப்பாணத்துப் புகையிலை (என்று தான் கடைக்காரன் சொல்லித் தந்தான்) குழப்பம் செய்யாமல் நன்றாக எரிந்தது. எனது சொற்ப நேர விறுவிறுப்பு இன்பத்துக்கு அந்தப் புகையிலைச் சுருட்டு தன் உடலையே அக்கினிக்கு அர்ப்பணித்துக் கொண்டது. இந்தக் காலத்திலே பிறர் நலத்துக்காக இம்மாதிரித் தியாகம் செய்யும் தியாகசீலர்கள் சமுதாயத்துக்கொருவர் இருந்துவிட்டால் உலகம் எப்பேர்ப்பட்ட சீரும் சிறப்பும் அடைந்துவிடும்!.

புகையிலைச் சுருட்டு எரிந்துகொண்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிய புகை வட்டம் வட்டமாகச் சுழன்று மேலே மேலே மிதந்துபோயிற்று.

இந்தச் சுருட்டுப் புகையை உள்ளுக்கிழுத்து வாயை ஏதோ ஒருமாதிரி கோணிப் பிடித்துக் கொண்டு வெளியே ஊதிவிட்டால் அது வட்டமாகச் சுழன்று கொண்டு போகும். பார்ப்பதற்கு அழகாயிருக்கும்.

சுருட்டுப்புகை பிடிக்காதவர்கள் கூட அதைப் பார்த்து ரசிப்பார்கள். சினிமா தியேட்டர்களில் இந்த மாதிரிப் புகை ஐhலங்கள் நடைபெற்றதைப் பல சமயங்களில் அவதானித்திருக்கிறேன்.

இப்பொழுது நான் தனியெ இருந்தால் அந்த வித்தையைப் பாPட்சை செய்து பார்த்துக்கொண்டிருந்தேன். பலமுறைப் பிரயத்தனங்களுக்குப் பின் அதில் வெற்றி கிடைத்துவிட்டது.

ஊதிய புகை குபீரென்று முகத்துக்குமுன்னே போய் அந்தரத்தில் நின்று வட்டம் போட்டது. சில விநாடி நேரம் அப்படியே நின்றுவிட்டுப் பின்னர் கலையத் தொடங்கியது.

கலைந்து மேலே எழும்பிக்கொண்டிருந்த சுருட்டுப் புகைப்படலம் ஒரு ஆளின் முகமாக அமைந்து அப்படியே நிலைத்து நின்றது.

ஆமாம், ஆள் முகம்தான்! அழகான தாமரைகள் கண்கள், அந்தக் கண்களிலே ஒரு சோகம் கலந்த பார்வை, பட்டிக்காட்டு மண்காவி படிந்து நெற்றியில் சுருண்டு விழுந்த கேசம் - ஒரு யௌவனப் பெண்ணின் முகம் எனக்கு முன்னே அப்படியே தெரிந்தது.

எனக்குத் தேகம் ஒரு தடவை நடுங்கிப் போயிற்று. “பயப்படாதே ராமலிங்கம், உன்னை எனக்குத் தெரியவில்லையா? நான் தான் காந்திமதி…..”

காந்திமதியா? யார் அது காந்திமதி…..

“என்னப்பா முழிக்கிறே! அதற்குள்ளாக என்னை மறந்துபோய்விட்டியா? உன் ஊரிலே புகையிலைத் தோட்டக்காரர் பொன்னுச்சாமியின் மகள்….”

பொன்னுச்சாமியின் மகள் காந்திமதி! கனவு கண்டதுபோல எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆனால் அவள் அவளது அத்தானோடு கூடிக்கொண்டு ஊரை விட்டே ஓடிவிட்டாள் என்றல்லவா ஊரெல்லாம் கதையாயிருந்தது….

“ராமலிங்கம் நீ யோசிக்கிறதென்னவென்று எனக்குத் தெரியும். காந்திமதி ஊரைவிட்டு எங்கேயோ ஓடிப்போய்விட்டாள் என்று நீ மட்டும் எண்ணவில்லை. ஊர் முழுக்கவே அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறது ஆனால் உண்மை பொன்னர் தோட்டத்துக் கிணற்றடியில் நிற்கும் பூவரசு மரம் ஒன்றுக்குத்தான் தெரியும். பத்து வருஷங்களுக்கு முன் ஒரு விடியப் புறச்சாமத்திலே பொன்னர் என்னையும் என்னுடனிருந்த என் அத்தானையும் மண்வெட்டிப் பிடியினால் ஒரே வீச்சில் அடித்துக் கொன்றபொழுது அந்தப் பூவரசு மரம் ஒன்றுதான் விழித்திருந்தது. விழித்திருந்தது என்று என் சொல்லுகிறேனென்றால் நாங்கள் இருபேரும் ஐயோ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தபோது பூவரசுமரத்திலிருந்த காகம் ஒன்று சிறகடித்த சத்தம் கேட்டது….

எனக்குத் தேகமெல்லாம் புல்லரித்துப் போயிற்று. நான் மனத்தில் நினைக்கிறதை இந்த உருவம் சொல்லுகிறது, ஒரு பக்கமிருக்கட்டும். தன்னை யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்களென்று கதை வேறு அளக்கிறதே. அப்படியானால் இப்போ என் முன்னே நிற்பது பேயா பசாசா?

என் ஊரிலே பொன்னுச்சாமி என்ற புகையிலை வியாபாரி ஒருவர் இருந்தது எனக்குத் தெரியும். அவருக்கு காந்திமதி என்று ஒரு மகள் இருந்தும் ஞாபகமிருக்கிறது. அவள் தன் அத்தான் முறையான ஒருவனைத் தவிர வேறு யாரையும் கட்டிக்கொள்ள மாட்டேனென்று பிடிவாதம் பிடித்ததும் இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

அவளுடைய தகப்பன் யாரோ உத்தியோக மாப்பிள்ளைமீது இலக்கு வைத்துக்கொண்டிருந்தாரென்றும் ஊரிலே சிலர் அப்பொழுது கதைத்தார்கள்…..

“ராமலிங்கம், என்ன மீண்டும் யோசனையில் ஆழ்ந்துபோய்விட்டாய். கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுது எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? நான் என் அத்தான் முருகேசனைத்தான் கல்யாணம் கட்டிக்கொள்வதென்று பிடிவாதம் பிடித்தேன். தோட்டக்காரனாயிருந்தாலும் எனக்கு அவன்மேலே என்னவோ பிரியம் விழுந்து விட்டது. எங்களது தோட்டத்துக்குப் பக்கமாகவே அவனது தோட்டமும் இருந்தது. அவன் துலாவிலே மேலும் கீழுமாக ஏறி இறங்கும்போது பார்வை எல்லாம் எங்கள் தோட்டப்பக்கமாகத் தானிருக்கும். விடியற் காலையில் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பாகவும் பள்ளிக்கூடம் விட்டு வந்த பிற்பாடும் நான் அவனுக்குத் தரிசனம் கொடுக்க தவறுவதில்லை. அவனை ஒரு நாள் தரிசனம் பண்ணாவிட்டால் எனக்கும் அன்றைக்கு என்னவோபோலவிருக்கும்.

இந்தமாதிரி நாங்கள் இருபேரும் ஒரு திசையில்போய்க் கொண்டிருந்தது அப்பாவுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் என்னைக் கண்டிக்க ஆரம்பித்தார்.

அப்பா ஒரு முரடன். அத்தோடு பேராசைபிடித்த பேய்மனிசன். எனக்கு விரைவாகவே ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட ஏற்பாடுகள் பண்ணத் தொடங்கினார். நாள் முகூர்த்தம்கூட வைத்துவிட்டார். கொழும்பில் எங்கேயோ ஒரு கந்தோரில் கால்சட்டை போட்டு உத்தியோகம் பார்ப்பவனாம். அவனைத்தான் எனக்குக் கட்டியடிக்க அப்பா நிச்சயம் பண்ணிவிட்டார். கால் சட்டைக்கார மாப்பிள்ளைகள் மேலே அப்பாவுக்கு ஒரே காதல்! அவர்மட்டும் ஒரு பெண்ணாயிருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷத்தோடு அந்த மாப்பிள்ளையை அவர் கட்டிக்கொண்டிருப்பார்!

கல்யாணத்துக்கு நாள் வைத்தாய்விட்டது. ஆனால் எனக்கு அது து}க்குத்தண்டனைக்கு நாள் வைத்ததுபோலிருந்தது. என் அத்தானைவிட்டு ஒரு நிமிஷமும் பிரிந்திருக்க முடியாதுபோல் தோன்றியது. அவனுக்கு இந்தமாதிரி துரோகம் செய்வதைவிட உயிரையே தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருந்தது….”


…… இவ்வளவு பிடிவாதம் அந்தப் பட்டிக் காட்டுப் பெண்ணாண காந்திமதிக்கு இருந்ததாவென்று நான் சந்தேகப்படவில்லை. புலிக்குப் பிறந்தது பூனையாகவா இருக்கும்?

அனால், அந்த மனுஷன் பொன்னுச்சாமிக்கு அந்தப் பையன் மேலே அவ்வளவு கோபம் இருக்கக் காரணம் என்ன? ஏன் இவ்வளவு வன்மம் சாதிக்கவேண்டும், இத்தனைக்கும் அவன் அவரது ஒன்றுவிட்ட சகோதரி பிள்ளையாயிற்றே!

எந்தப் புற்றில் என்ன பாம் இருக்குமோ யார் கண்டார்கள்?

கிராமத்திலுள்ளவர்கள் பட்டணத்து வாசிகளைப்போல் அல்ல. அவர்களது வாழ்க்கையே ஒரு தினிசு. அவர்கள் சண்டைபிடிக்கும் காரியங்கள், சந்தோஷப்படும் சம்பவங்கள் எல்லாமே ஒரு தினிசு. இதற்காகத்தானா இவ்வளவு ஆத்திரப்பட்டார்கள் என்று நமக்கு ஆச்சரியமாகவிருக்கும். ஆனால் அவர்களுக்கோ அது பாரது}ரமானதாயிருக்கும். அதையிட்டுத் தீராத வைராக்கியம் சாதிப்பார்கள். எடுத்த எடுப்பில் எதையும் முன்பின் பாராமல் கவிழ்த்துக் கொட்டிவிடுவார்கள்.

புகையிலைத் தோட்டத்துப் பொன்னுச்சாமி கிராமத்திலேயே பிறந்து வளர்ந்து அந்த செம்பாட்டு மண்ணிலேயெ கிடந்துபுரண்ட மனுஷன். மருமகள் விஷயத்தில் அத்தனை கோபம் அவருக்கு ஏற்பட காரணம் என்னவாயிருக்கலாம்?

பத்துவருஷங்களுக்கு முன்னே மனம் தாவிப்போயிற்று.

பத்து வருஷங்களுக்கு முன்னே யாழ்ப்பாணத்தில் வண்டிச் சவாரி இப்போது மாதிரியல்ல. இன்றைக்கு நகர வாசிகளைப் பிடித்து ஆட்டிவைக்கும் ரேஸ் பைத்தியம் அந்த நாளில் வண்டிச் சவாரி என்று கிராம வாசிகளைப் பலமாக ஆட்டிவைத்தது.

வண்டியிலே மாடுகளைப் பூட்டிவிட்டால் கிராமத்தில் அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்று கொஞ்சமும் வைத்தப் பார்க்கமாட்டார்கள். போர்க்களமேறிய வீரர்களைப் போலத் துடித்துக் கொண்டு நிற்பார்கள். அந்தச் சமயம் அவர்களுக் கிருப்பதெல்லாம் ஓரே ஒரு உணர்ச்சி. வெற்றியோ தோல்வியோ என்பதுதான்.

பொன்னுச்சாமி இதற்கு விதிவிலக்காகப் போய்விடவில்லை. அவரது மருமகனும் அவர்மாதிரியே ஒரு தீவிர சவாரிவாதியாக இருந்தான்.

வண்டிச் சவாரி

அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாளிரவு, செகசோதியான நிலவு காயும் காலம். யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற் பிரதேசத்தை பகல் வேளையில் தகிக்கும் வெய்யில் அக்கினக் குண்டமாகவே மாற்றிவிடும். வளர் பிறை காலத்த இரவுகளிலோ நிலை எதிர்மாறாகவிருக்கும். வெண்மணற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமிர்த கிரணங்களை வாரி இறைத்து அதை ஒரே குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக் கெட்டிய து}ரம் பாற் கடலைப்போலப் பரந்து கிடக்கும் ஒரே மணல் வெளி. அந்த மணல் வெளியை இரண்டாகப் பிளந்து செல்லும் தெரு வீதிவழியே நிலாக்காலத்தில் மாட்டு வண்டிப் பிரயாணம் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப் பொருத்தம் என்று சொல்லவேண்டும்.

வருஷம் முந்நு}ற்றி அறுபத்தைந்த நாளும் மண்கிண்டி தண்ணீர் இறைத்து களைபிடுங்கி அலுத்துப்பொகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும் அறுதலுக்கும் ஏற்ற ஓர் அருமையான பிரயாணம் இது. வழி நெடுகிலும் பூமியைத் தோய்க்கும் பால்போன்ற வெண்ணிலவு@ வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி இவைகளைக் கடந்துபோய் கோயிலை அடைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் வெண்மணல் திட்டியும் பால் நிலவும், தென்றற் காற்றும் தான். கூட. கோயிலிலிருந்து நாதசுரம் இன்னிசையைப் பிழிந்து மிதந்துவரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். மனித உள்ளத்தின் குது}கலத்துக்கு இன்னும் என்னவேண்டும்?

வருஷா வருஷம் வல்லிபுரம் கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக மகாசனங்கள் அள்ளுப்படுவதற்குக் காரணம் வேறொன்றுமல்ல, வல்லிபுரப் பெருமாள் பேரில் கொண்ட தீவிர பக்தி சிரத்தை தான் காரணமல்ல. எல்லாம் அந்த மணற்காட்டுக்கும் அங்கே எறிக்கிற வெண்ணிலவுக்கும் ஆடல் பாடலுக்கும் தான்! சுருக்கமாகச் சொன்னால் அன்றைய தினம் வல்லிபுரப் பெருமாளுக்குக்கூடக் கோயிலின் கர்ப்பக் கிருகத்துள்ளே அடைபட்டுக்கிடக்க மனம் வராது. தென்றலும் இன்னிசையும் வெண்மணலும் பால் நிலவும் சேர்ந்து வல்லிபுரக் கோயில் சுற்றுப் பிரகாரத்தை - பகலில் கண்கொண்டு பார்க்க முடியாத பாலைவனத்தை ஓர் அமர உலகமாகவே மாற்றி விடும்.

ஆமாம், மாசில் வீணை, மாலை மதியம், தென்றல் காற்று இளவேனில் பூங்குளம் - இவைகளை தெய்வத்துக்கே ஒப்பிட்டுப் பாடியவர்கள் புத்திசாலிகள் தான்.

ஐம்பது வருஷத்துக்கு முந்திய பயண வண்டி ஒன்று. அதுகூட பெருமாளைச் சேவிக்கக் கிளம்பி விட்டது. அதைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது! ஒரு பெரிய குடும்பம் தாரளமாக வசிக்கக்கூடிய வீடு அது. மேல்மாடி கூட அதிலே இருக்கிறது. சட்டி பானை பெட்டி படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும் கீழேயும் ஊஞ்சலாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கோல் மெத்தை மேலே புருஷன் மனைவி தாய், பிள்ளை, பேரன் பேத்தி எல்லோரும் கூடியிருந்து கதைத்துச் சிரித்துக் குலாவுகின்றார்கள். அந்த மேல் மாடியிலே இரண்டொரு குழந்தைகள் து}ங்குகின்றன. கீழே ஒரு சிறு குழந்தைக்குப் பசி. அதற்குத் தாயார் சோறு பிசைந்து கொடுக்கிறாள். இன்னொன்று தனக்கு ஒரு உபகதை சொல்லும்படி அதன் பாட்டியைத் துன்புறுத்துகிறது! பாட்டி முகமலர்ச்சியோடு உபகதைக்குப் பதில் விடுகதை ஒன்று போடுகிறாள். இத்தனை வைபவங்களுடன் வண்டி ஊர்ந்து ஊர்ந்து போகிறது. உயர்ந்த ஐhதியான இரண்டு வெள்ளை வடக்கன் காளைகள் வண்டியை இழுத்துச் செல்லுகின்றன. இரண்டு காளைகளும் சாப்பிட்டுச் சாப்பிட்டுக்கொண்டே சாவகாசமாக வண்டியை இழுத்துப் போகும்படி வைக்கோலில் இரண்டு கத்தைகள் எடுத்து மாடுகளின் வாய் அருகே வண்டியின் நுகத்தோடு கட்டித் தொங்க விட்டிருக்கிறான் வண்டிக்காரன்.

ஆமைவேகத்தில் உல்லாசப் பிரயாணம் போகும் இந்தக் கர்நாடக புஷ்பக விமானத்தின் முன்னும் பின்னும் எல்லாம் வேகம் வேகமாகப் பறக்கின்றன. ஹ_ட் மடித்த மோட்டார்கள் பாட்டோடும் தாளத்தோடும் பாயந்து ஓடுகின்றன. அவற்றை பின்பற்றி சைக்கிள் வண்டிகள் ஒரு பக்கம் கிணுகிணுத்துக் கொண்டு ஓடுகின்றன. “அட பைத்தியங்களே! இந்த பொன் நிலவை விட்டு விட்டு எங்கே இவ்வளவு அவசரமாக ஓடுகிறீர்கள்? ஏன் அவசரம்?” என்று கேட்டுப் பரிகாசஞ் செய்வது போல் மாட்டுவண்டி ஆடி அசைந்து அவற்றுக்கெல்லாம் வழிவிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போகிறது. துடி மிகுந்த வாலிபப் பிள்ளைகளைக் கண்டால் வயசான பெரியவர்கள் ஒதுங்குவார்களே - அம் மாதிரி!

கால் நடைப் பக்தகோடிகள் பாட்டுக் கச்சேரி சிரிப்புக் கச்சேரி கூக்குரல் கச்சேரி குளறுபடி கச்சேரி எல்லாவற்றோடும் கூட்டம் கூட்டமாக யாத்திரை போகிறார்கள். வாலிபக் கூட்டம் வயசான கூட்டம் நடுத்தரக் கூட்டம் பஞ்சமர் கூட்டம் - இப்படிப்பல.

வழி நீளம் இப்படியே குது}கலம் நிறைந்த ஊர்வலம் இன்னும் சற்றே மேலே போனால் இயற்கை மோகனத்தினால் உற்சாகம் மேலிட்டு விட்ட கூட்டத்தினரைப்பார்க்கலாம். சுமார் அரைமைல் து}ரத்துக்கு வளைவு திருப்பம் எதுவுமில்லாத நேரிய தெரு. அதன் ஓர் அந்தத்தில் வாலிபத் தோற்றங்கொண்ட நு}ற்றுக்கணக்கான மொட்டை வண்டிகள் குவிந்துபோய் நிற்கின்றன.

சவாரிக்காரர்களிடையே பொருத்தம் பேசுவதும் அது முடிய இரண்டு இரண்டு வண்டிகள் ஒன்றின்பின் ஒன்றாக வந்து நிற்பதும் பிறகு ஓட்டம் பிடிப்பதும் வெகுநேரமாக நடைபெற்று வரும் சங்கதி.

இதோ ஒரு சோடி பொருந்திவிட்டது. மொய்த்துப்போய் நின்ற ஜனக்கூட்டம் கலைகிறது. வண்டிகள் இரண்டு முன்னே வந்துவிட்டன. மாடுகள் பூட்டியாயின. குத்து}சி சவுக்கு துவரங்கம்பு எல்லாம் அவரவர் கைக்கு வந்துவிட்டன. வண்டி ஓட்டுகிறவர்கள் ஆசனங்களில் ஏறி மாட்டின் நாணயக் கயிற்றைப் பிடித்துவிட்டார்கள். குதிரையில் ஏறிய ராஜகுமாரனது கம்பீரமும் ஓய்யாரமும் அவர்களிடம் இப்போது காணப்பட்டன. அவ்விடத்தில் அதாவது சவாரி ரசிகர்களின் மத்தியில் இது வரையில் இல்லாத ஒரு ஆரவாரமும் பரபரப்பும் இப்பொழுது. ஏனென்றால் சவாரி உலகில் பிரபல நட்சத்திரங்களான சுட்டியன் சோடியும் பூச்சியன் சோடியும் பொருந்திவிட்டன. இது சாதாரணமாக நடைபெறகூடியக் காரியமல்ல.

சரி. இதோ எல்லாம் ஆயத்தம்.

“சின்னத்தம்பி” என்று ஒரு செருமல் செருமினான் முன் வண்டிக்காரச் சாரதி. “ஓம், ஓம்! எல்லாம் தெரியும் வென்று தருகிறேன் பயப்படாதே” என்றுமௌ;ளப் பதில் கொடுத்தான் அதே வண்டியில் சவுக்கும் கையுமாக நின்ற ஒருவன்.

வண்டிகள் கிளம்பிவிட்டன. கடகடவென்ற முழக்கத்தோடு ஒன்றையொன்று சருவிக்கொண்டு புழுதி எழும்ப அந்தர பவனியில் பறக்கின்றன. சவுக்குகள் ஙொய் ஙொய் என்று கீச்சிடுகின்றன. இதோ? அதோ? குத்து}சிக்காரன் வண்டியில் சவகாசமாகக் குப்புறப் படுத்துக்கொண்டு மாடுகளுக்கு ஊசி ஏற்றினான் அது போதாதென்று கருதியபோது அவைகளின் வாலைப்பிடித்து வாய் கூசாமல்கடித்தான். மாட்டின் முதுகிலே துவரங்கம்புகள் சடார் சடார் என்று விழுந்தன. வண்டிகளில் நின்றவர்களும். தெருவிலே அக்கம் பக்கத்தில் நின்றவர்களும் தங்கள் தங்கள் பக்க ஆதரவை கூச்சல் போட்டும் சீட்டி அடித்தும் தெரிவித்தார்கள்.

நுகப் பூட்டுக்குள்ளே அகப்பட்டுக்கொண்டு விட்ட மாடுகள் மனிதனுடைய இத்தனை து}ண்டுதல்களுக்கும் மத்தியில் அந்நேரத்தில் அவற்றால் செய்யக்கூடிய ஒன்றே ஒன்றை அவற்றின் பலங்கொண்டமட்டும் சக்தி அடங்குமட்டும், செய்தன. அதாவது, கால்களை நிலத்தில் வைக்காமல் பாய்ந்து பாய்ந்து ஓடின!

கழுத்தில் வெள்ளைப் புள்ளிவிழுந்த பின் வண்டி மாடுகள் - இவைதான் பூச்சியன்களோ? - முன் வண்டியை விலத்திவிடுகிற சமயம் இரண்டு வண்டிகளும் விடாப்பிடியாக ஓடுகின்றன. பார்ப்பதற்குக் கண்கொள்ளாத காட்சி தெருவோரத்திலும் மரத்திலும் மட்டையிலும் தொங்கிக் கொண்டு நிற்பவர்களின் கூச்சல் வானமுகட்டைப் பிளக்கிறது.

ஓட்டப் பந்தயம் ஒரு முடிவுக்குவரும் சந்தர்ப்பம். பின்னுக்கு நின்று வந்த பூச்சியன்கள் சுட்டியன்களை…. இதோ… இதோ இன்னும் ஒரு நிமிஷத்தில்… சவுக்கு ஒன்று “ஙொய்” என்றது. பூச்சியன் வண்டிச் சாரதி “ஐயோ!” என்று குழறிக்கொண்டு கீழே விழுந்தான். பூட்டாங்கயிறு அறுந்து மாடுகள் நிலை தளர வண்டி மல்லார்ந்தது.

இக்குறுநாவலை முழுமையாக  வாசிக்க:

1. https://www.noolaham.net/project/02/168/168.pdf

2. https://www.noolaham.net/project/02/168/168.htm