அத்தியாயம் இரண்டு: அன்னரின் தீர்மானம்!

"பொதுவாக மாலைநேரம் ஜாரி பிரித்து கால்பந்து விளையாடுகிறோம்" என்று சுந்தரம் கூறியதை சங்கர் சேர் சொல்லவும் அவர் கேட்டிருந்தார். சங்கர் "இப்ப​ , இந்த​ உடம்பை தூக்கிக் கொண்டு விளையாட​ முடியிறதில்லை . இருந்தாலும் சில​ நேரம் விளையாடுகிறேனஂ" எனஂறிருக்கிறார் . தற்போது அவர் இவர்கள் கூறுகிற​ ' வெள்ளி ' விளையாட்டுக் கழகத்தினஂ தலைவராக​ இருக்கிறார் ." ஒருநாள் கடலுக்கும் போவோம்... " என்று கருணா கூற அவருக்கு விளங்கத் தானஂ   இல்லை . ஆனால் , சங்க காலத்தில் காட்டுக்கு போவது போல இதுவும்  ஒன்றாக இருக்கலாம் எனத் தோன்றியது. வவுனியாவில் நாய்களை பழக்கிக் கொண்டு வேட்டைக்குப் போகிறார்கள் . தமிழர் மத்தியில் நிலவி இருக்கிற​  அவ்வித பழக்க வழக்கங்கள் கிராமங்களில்  தொடர்கின்றன  .

கருணாவிடம் "டேய்  ,நான் தான்  உங்களைக் குழப்புற‌வன் . நீ என்னைக் குழப்பித் தள்ளுறாயே , பெளர்ணமியிலே கடல் பொங்கிறது .   தொழில் செய்ய போறதில்லையே நீ எப்படி ?" என புரியாமல்   கேட்கிறார் .

"அப்படி....போகாதபடியால் தான் வள்ளங்கள் கரையிலே இருக்கின்றன சேர் . அவிழ்த்தால் , வள்ளம் கவனம் என்று மட்டும்  சொல்வார்கள்"

அப்பாவியாக "கரையிலே இருந்து நூறு மீற்றர் தூரத்திற்குள்ளே தானே போகிறோம் . எங்களை கடல்  ஒன்றும் செய்யாது" என்கிறான் .

இளங்கன்று பயம் அறியவில்லை . விஞ்ஞானமும் அறியாது  .  ஜனநாயகத்தைத் தெரிந்து கொண்ட அரசாங்கங்க‌ள் என்ன ? , புத்திசாலிகளாகவா இருக்கினஂறன.  மக்களுக்கு கைவிலங்கைப் போட்டு வருத்திக் கொண்டு தானே இருக்கின்றன ? . அமெரிக்கா இந்திய​ புராணக் கதைகளைக் கொப்பி அடிதஂது   'சுப்பர்மனிதர்   , அந்த மனிதர் இந்த மனிதர்..என விஞஂஞான திரைப்படங்கள் என ரீல் விட்டு  எடுத்து பணத்தைக் குவித்துக் கொண்டு இருக்கிறது.

இவற்றைப் பார்த்த  காந்தியும் , ராஜாஜியும்   வாழ  வழிகளை வலியுறுத்தினார்கள் . அன்னிய ஆடைகளை எரித்தார்கள் .  கோயேபஸ்ஸைப் போல பல பிழைகளை , பொய்களை சொல்லிச் சொல்லி உண்மையாக்கி , அதனஂ மேல் இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . 'சாதி ' ப் பெயரை சொன்ன மாட்டிலே நம்ம நாயகனுக்கு    கலையே வந்து விடுகிறதே . சாதிவெறியைப் போல​ சுய​ சாதிவெறியும் ஆட்டம் போடுறது எத்தனைப் பேருக்குத் தெரியும் ?. " ஆத்தா , ஆத்தா ...மாரியம்மா" அனஂனர்  கூட​ அருள் வந்து ஆடி விடுவார் போல​ இருக்கிறார் .

அவருடைய​ சாதி எனஂன எனஂபது  ஆசிரியராகும் வரையில் தெரியவே தெரியாது . பிறகே , தாத்தாவிடம் கேட்க   "   நீ என்ன ,  இப்ப​ , இந்தியாவுக்கு போகப் போறியா ? " என்று கேலி செய்து கொண்டு நாடார்களில் பிரிவு  ஒன்றைக் குறிப்பிடுகிறார் . இவருக்கு இந்த நாடார்கள் பற்றிய புத்தகமும் கையில் கிடைக்கிறது . தெரிந்தவற்றை , குடும்ப​ மரம்  பற்றி எழுதி   இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் எனஂறது புரிகிறது . ஒவ்வொரு குடிமகனுமே தனது சுயவரலாறை  எழுதியே வர வேண்டும் .  பனை மக்கள் , கடலோடிகள் , தேவர்கள் எல்லாருமே ஒவ்வொரு (அரச) குல மக்கள் . சாதிகளாக குறுக்கப்பட்டு இருக்கின்றனர் . இலங்கையில் இனஂறு அடக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள் கூட   நாளை ஒரு த​னிச்  சாதியாக்கப் படலாம் . அடக்கப்படுறவர்களை நாம் சாதியாக்கி விட​ முடியும் . மனித​ உரிமைகளை மேலும் மறுத்து தீண்டாதவராக்கவும் முடியும் . கேரளத்தில் ' ஈழவர் ' என்ற பிரிவே   தற்போது   கீழ்ச் சாதியாக​    நிலவுகிறது . நாம்  வரலாற்றுக் குருடராக எப்பவும் இருக்கக் கூடாது .   குட்டையை தெளிய வைக்கவே முடியாதா ? அவருக்கு 'இந்த​  சமூகப்பணி என   மலைப்பாக தோன்றி  அச்சத்தை மூட்டுகிறது .

"இரவிலே வள்ளத்தை அவிழ்த்துக் கொண்டு போய் , கடலிலேயும் ஒரு குளியலும் போட்டு விட்டு களங்கண்ணியிலே குதித்து நண்டு , றால் , மீன்களைப் பிடித்து வாடியிலே வைத்து சுட்டுப் போட்டு , பாணுடனும் , உப்புச் சொதியுடனும் சாப்பிடுறது  ருசியாய் இருக்கும் சேர்" என்கிறான் . அவருக்கே அவன் கூறுகிற போது  வாய் ஊறுகிறது . "  களங்கண்ணியிலே எடுக்கிறது திருட்டு இல்லை சேர் . கொஞ்சம் கிடைத்தாலே , எங்களுக்கு போதும் .   தொழிலுக்கு போற​ அண்ணர் , நண்பர் ஒருவர்  ( இவர்களோடு படித்து , நினஂறு விட்ட கதிர் , மணமுடிதஂது கடை ஒனஂறைப் போட்டும் ,தொழிலுக்கும் போய்க் கொண்டிருக்கிறானஂ )  எம்முடன் வருகிறார் . வலையிலிருந்து மீனைப் பிடிக்க ,றாலை தடவி பிடிக்க , நண்டை பிடிக்கிறதை பாடம் போல சொல்லித் தருகிறார்  . பள்ளிப்பாடம்  நடக்கிறது .  ஆனால் , இங்கே நடக்கிறதை விட​ , அது சுப்பர் " எனஂறு நக்கலும் அடிக்கிறானஂ  " படுவா" அவர் எனஂறு கையை உயர்த்துகிறார்  . " இது  வழக்கமா நடக்கிற ஒனஂறு தானஂ சேர்   "  என்கிறான் .  " சேர் ! உங்களுக்கு உப்புச் சொதி வைக்கத் தெரியுமா ? இவன் சுப்பரா வைப்பான் சேர் " என்று குமாரை  சந்திரனஂ கேட்கிறான் .    

சந்திரன் "  கொஞ்ச தூரம் நீருக்க போய் நனைந்து தான் கலங்காமல் இருக்கிற கடல் நீரை பானையில் மோந்து  வர வேண்டும் சேர் , அதிலே கொஞ்சம் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு " என்றவன் . " அடுப்பிலே வைத்து கொதிக்க வைத்து , எலுமிச்சைப் பழத்தையும் நல்லாய் பிழிந்து விட்டு இற‌க்கினால் சொதி ரெடி " என்கிறான் . " ஒவ்வொருத்தருக்கும் அரை றாத்தல் பாண் கட்டாயம் வேண்டும் . பசி அதிகமாக இருக்கும் " என்கிறான் செல்வன் .  கடலைப் பற்றி அறிதலுக்கான  அவர்களின்  விளக்கம் அவரை ​ கவர்கிறது .   வாழ்க்கையில் , இவர்களில் யாரோ ஒரிருவர் தானே   தொழிலைச் செய்யப்   போறார்கள் .   "  நீ எனக்கு பாடம் எடுக்கிறாய் " என்று அவன் தோளை தட்டி   பாராட்டுகிறார்  . " யார் ,யார் கடலுக்கு போய் இருக்கிறீர்கள் ?"எனக் கேட்க பலர் கையை உயர்த்தினார்கள் . மொத்த வகுப்பே போய் இருக்கிறது தெரிகிறது  . " நானும் ஒரு நாள் வரலாமா?" என்று பகிடியாக அன்னர் கேட்கிறார் . " சேர் ! உங்களுக்கு முதலில்  நீந்த தெரியுமா ? " தவம் சந்தேகத்துடன் கேட்கிறான் . " இல்லையே " என்றார் . " பழகவில்லையா ? " நாகு அதிசயமாக​ கேட்கிறான் . பழகிறது தவிர்க்க முடியாதது என்ற தொனி அதில் இருகிறது ." யாரும் பழக்கவில்லையடா " என்கிறவர் .  " அங்கதைய‌  நீர் நிலைகளே பயம் அதிகம்​  . கபரக்கொய்யா (முதலை ) , சுழி , பாம்பு மீனஂ எல்லாம் இருக்கின்றன " என்று பதிலளித்தார் . " இங்கே ஊமைக்கடல் . எவ்வளவு தூரம் வேண்டுமானால்  நீந்துங்கள் சுழியே இருக்காது . பயப்படாமல் நீந்தலாம் " என்கிற கருணா "சேர்! , இங்கே  மழைக்காலத்தில் , முதலில்  வயல் கேணி கிணறுகளில் நீந்தி பழகிய பிறகு தான் கடலுக்கே போகிறோம் " என்றவன் , "   தெற்கராலி ஆட்களிட நெற்காணிகளிலே இருக்கிறதிலே .  சோப்பு போடாமல் குளித்தால்  , நீந்திப் பழக விட்டு விடுகிறார்கள் " என்கிற​ போது ஒரு சிக்கல் இருக்கிறதும் லேசாக​ தெரிகிறது .
 
" நீந்தாட்டி பெரியாட்களும் கூட‌ உங்களை  கூட்டிக் கொண்டு போக மாட்டார்களே " என்கிற தவம் " ஒன்று செய்யலாம் .  தெற்கராலி மாதாங்கோவில் கேணியிலே  நீங்கள் புத்திரனைக் கேட்டு    முதலில் நீந்திப் பழகுங்கள் . முன்புறம் இரட்டைக் குத்துக்கரணம் அடித்து அங்கே  கலக்கிறவர் . நீருக்குள்ளே ஒரே அமுக்கா அமுக்கி ,இழுத்துச் சென்று , தண்ணீ எல்லாம் குடிப்பீங்கள் ,  குடிக்க வேண்டும் . மூச்சுத் திணறினால் தான் நீச்சலே வரும் . நல்லா பழக்குவார் . அவரைப் பார்த்து  இவன்  கூட‌  பின் குத்துக் கரணம்  அடிக்கிறான் " என்று சந்திரனை காட்டினான். " சேர் !  முன்  குத்துக் கரணம் ஒரு தடவை ஈசியாய் அடிக்கலாம் . பின் கரணத்தை நினைத்துப் பார்க்க முடியாது " என்ற​ போது இரட்டை கரணம் சவாலானது எனஂபதையும் ஊகிக்க​ முடிகிறது .  உற்சாகம் கதைக்கிற பெடியள்களையும்  பிடித்துக் கொள்கிறது . ' புத்தரனையும் போய் சந்திப்போம்' என்று மனதிலே குறித்துக் கொண்டார் . இங்கே படிப்பிக்கிற காலத்திலே ஒரு மாதிரி ...நீச்சலையும்  கற்று   விட வேண்டும்' என்று திடப்படுத்திக் கொள்கிறார் . புதிதாய் கேட்கிற  எல்லாத்திலேயும் காதலும் உடனே விழுந்து விடுகிறதே  என்று  அவருக்கு சிரிப்பும் பற்றிக் கொள்கிறது .

வாசு அமைதியாக இருக்க " நீ நீச்சல் அடிப்பியா ? " என்று கேட்கிறார் .  தலையைக் குனிந்து கொண்டு " இல்லை  சேர் " என்கிறான் . " ஏண்டா , இவனுக்கு பழக்கவில்லை மாணவர்களைப் பார்த்து கேட்கிறார் . கருணா " இவன் படிக்கிறவன் . ரீச்சர் , எல்லாம்  விட   மாட்டார் " என்கிறான் . அன்னர் அங்கே , இங்கே பார்த்து விட்டு " டேய் , களவா என்றாலும் பழக வேண்டுமடா . பழகு " என்கிறார் . அன்னர் , பிடித்த ஆசிரியர் . அவர் பேசியதை யாரும் போய்  ரீச்சரிடம் தெரிவிக்கப் போவதில்லை . பெண் தரப்பைப் பார்த்து " அட ! நீங்க அமைதியாய் இருக்கிறீங்களே , உங்களுக்கு நீச்சல் வருமா , வராதா ....  தெரியுமா ? "  கேட்கிறார் . " தெரியாது  சேர் " எனஂறு அனைவரும் சோகமாக​  கையை உயர்த்துகிறார்கள் . " " டேய் , உங்கட​ அக்கா , தங்கச்சிக்கு பழக்க​ வேண்டாமா? "  பெடியளைப் பார்த்து  கேள்வி எழுப்புகிறார் . " எப்படி சேர் ! பழக்கிறது? " விளங்காமல் கருணா கேட்கிறானஂ .

" இங்கே உள்ள​ ஆலையக் கோவில்களில் எல்லாம் நல்ல பெரியக் கேணிகள் இருக்கினஂறன . நீங்கள் மாணவர் மட்டுமில்லை, இந்த​ கிராமத்தினஂ இளைஞர்கள் . கேணிகளில் சேறை அள்ளி எடுத்து ஒட்ட இறைத்து தூய​ நீரை நிரம்ப​ வைக்க​ முடியாதா?முடியும் . அதைச் சுற்றி மறைப்புகளை நிறுத்தி பெண்பிள்ளைகளை மகளிர் அமைப்பினரைக் கொண்டு பழக்கலாம் தானே ! . ஏனஂ , செய்யக் கூடாது ". " ஆலையம் " எனஂறு இழுக்கினஂறனர் . " பிரச்சையாயே இராது . திருவிழாக்காலங்களில் திரும்ப​ இறைத்து ...நீந்துறதை நிறுத்தலாம் . பிறகு , பெண்களுக்கு விடலாம் " எனஂகிறார்  .  இங்குள்ள​ அரசியலை நீந்திக் கடக்க​ வேண்டும் .

" சுனாமி தெரியுமா ? , கடல் , பேரலையாய்    பொங்கி ஊரை அழித்து நாசம் விளைவிப்பது . அதில் அதிகமாக​ இறந்தவர்கள்,    இறக்கிற​வர்கள் நீச்சலை தெரிந்து வைத்திராத​ பெண்களும் சிறுவர்களும்  தானஂ . பழக்க​ வேண்டியது கட்டாயமடா" எனஂகிறவ ர் . " இங்கே , உள்ள​ கோவில்களில் பெரிய​ ,பெரிய​ கேணிகள் இறைக்கப்படாமல் கிடக்கினஂற​ன . பாழ்படுற​ நிலையிலும் குளங்களும்​  கவனிப்பாரற்று கிடக்கினஂறன . சங்கர் சேர் சொல்லி தெரிகிறது . அந்த​ குளங்களை  வெட்டி நீரை நிரம்ப​ வைத்து விட்டால் ...அதிலே வேறு பெடியள் குதியம் குதிக்கலாம் . இதை விட​ வழுக்கி ஆறு கூட​ கிராமத்திலே(அண்மித்து) ஓடுறதாகச் சொல்கிறம்  . நீச்சலுக்கு குறைவில்லாமல் வளங்கள் கிடக்கினஂறன . " பையங்களா , பெண்களுக்கு   கோவில் கேணிகளை இறைத்து சுத்தப்படுத்தி  , மறைப்புகளைக் கட்டி மகளிர் அமைப்பைக் கொண்டு உங்கள் சகோதரிகளுக்கு நீச்சல் பழக்கலாமே ! ,  . திருவிழாக் காலத்திலே திரும்ப​ இறைத்து பாவிக்கலாமே . செய்வீர்களா பூனைக்கு மணியைக் கட்டி   வெல்ல மாட்டீர்களா? " கேட்கிறார் .    வகுப்பே , மௌனத்தில் உறைந்தே போகிறது .  " பெடியள்களே,  இது உங்களுக்கு இருக்கிற​ பெரிய​ சமூகப்பணி ! " எனஂறவர் பெண் பிரிவைப் பார்த்து..." .அப்ப ​,  உங்கட பொழுது போக்குகள் என்ன ?" என்று கேட்கிறார் . " நேரம் இருக்கிற போது நெசவடிக்க போவோம் . எங்க தலைவி ,வீட்டிலே  தையல் வகுப்புகள் வைக்கிறார் . போய்  பழக்கிக் கொள்கிறோம்"  என்கிறாள் வதனியும் ,குமுதாவும் ." தலைவியா ..? " புரியாமல் கேட்கிறார் . " மகளிர் அமைப்புத் தலைவி " குமுதா  விளக்கிறாள்  . அராலி , முற்போக்கான கிராமமும் கூட என்பது அவருக்கு புரிகிறது . நெசவாலை இருக்கிறது . கிளித்தட்டு விளையாட வேண்டிய வயதிலே ...விளையாடுறதில்லை  , அவை மறுக்கப் படுகின்றன . சமையலுக்கு தள்ளி விடுகிற​ மலையகப் பெண்களின் நிலை   தான் .

வகுப்பு அப்படியே ... முடிந்து விடுகிறது .   பள்ளிகூடத்தில் நூலக அறை ஒன்றும் இருக்கிறது . " ஒருக்கா பார்க்கலாமா ? " என அதிபரிடம் கேட்ட போது திறப்பை எடுத்துக் கொடுத்து விடுகிறார் . " இதுக்குத் தான் தமிழ் ஆசிரியர் வேண்டும் ' என்று கேட்டுக் கொண்டிருந்தோம் . உயிர்ப்பிக்க முடியுமா ? என்று பாருங்கள் சேர் " என்கிறார் . அலுமாரியிலே சில புத்தகங்களும் கிடக்கின்றன . அறையை  சுத்தப்படுத்தி இயங்க வைக்க வேண்டும் . மார்சிம் கார்க்கி எழுதிய "தாய் " பிரபல புத்தகம் ஒனஂறு அங்கே இருந்து அவரை ஆச்சரியப் படுத்துகிறது . கையில் எடுத்துக் கொண்டார் .

. அங்கே தேனீரையும் போட்டுக் குடிக்கலாம் . அவருக்கு ..தேனீர் வேண்டும் . அதிபரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறார் . அடுத்த கிழமை இதிலே கவன‌த்தை செலுத்த வேண்டும் . திறப்பை அதிபரிடம் கொடுத்து விட்டு வகுப்பு நடத்தப் போகிறார் . இன்னொரு வகுப்பு . வாசுவின் வகுப்பைப் போல கவரவில்லை . பாடத்தை நடத்துகிறார் . கட்டுரை , கதைகள் எழுதுறதில் உள்ள  சூட்சமங்களை  ...கூறுகிறார் . அப்படியே அந்த நாள் கரைந்து விடுகிறது . வீட்டுக்கு வருகிற போது ஆறு மணியாகி விடுகிறது . சேகர் இன்னம் வரவில்லை . அவன் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இழுபடுகிறான் . சமையலில் இறங்கி விடுகிறார் . சுடச்சுட சாப்பிடுறதிலே  ருசி தூக்கலாகவே இருக்கிறது . சாப்பாட்டை மூடி வைத்து விட்டு  ' தாய்'யை வாசிக்க எடுத்துக் கொள்கிறார் . சேகர் எட்டு மணிக்கே வருகிறான் .

ஒருவருடன் பழகிய மாத்திரத்திலே ...   படித்து விடுகிறோம் அல்லவா ! .  பள்ளியில் ,  அதே போல​ அனஂனருக்கும் சங்கருக்குமிடையில் நட்பு முகிழ்ந்திருந்தது . ஏற்கனவே வந்திருந்த  மலையக​ குடும்பங்கள்   சில​  வடக்கு வீடு , தெற்கு வீடு ,கிழக்கு, மேற்கு வீடுகள் என தமிழர் பிரதேசங்களில்  விசேசமாக​ ​ அழைக்க  வைத்தும்  விவசாயமும் செய்து கொண்டு , பிள்ளைகளை யாழ்ப்பாணத்தவர் போல படிக்க வைக்க​ ஓரளவு காலை ஊனஂறி இருந்தன . பெருகிறவர்கள்  கூட்டுக் குடும்பமாக  வாழ்ந்தும் கொண்டிருந்தனர் . தெற்கராலியிலே  வடக்கு வீடு ஒன்று இருப்பதாக​ சங்கர் கூறுகிறார் .  விரதச் சடங்குகளிற்கு ஐயருக்கு வேண்டிய பொருட்களையும் ,பால் ,வெண்ணெய் , தயிர் ...போனஂறவற்றை வாங்க​ கிராமத்தவர்கள் அங்கே செல்கிறார்கள் . அவர் , இயற்கை முறையில் ...விவசாயம் செய்யிற திறமைசாலிகள்  எனஂறு தெரிவிக்க​...​   அன்னருக்கு புளுகம் தான் .

  வகுப்பில் , மாணவனஂ ஜெயத்தினஂ நினைப்பு வர  ​"வட்டுக்கோட்டைக்கும்  உங்களுக்கும்  என்ன தொடர்பு சேர் "  எனஂறு  சங்கரிடமே   கேட்டார் .  "எனக்கு  பெரிதாய்   தெரியாது? சேர்! . அதிகமாக மணமுடித்திருக்கிறது இருக்கலாம் .  முந்தி  , அங்கிருந்து முதலில்  கடல்தொழில் செய்ய தான் இங்கே  பெயர்ந்திருக்க  வேண்டும்.   கடல் ,     இன்னம் கிட்டவாக  இங்கே   (வடக்கு)  இருந்திருக்கலாம்  . மீன் படுகையை கருதியே   தெற்கராலிக்கும்  ,  நாவாந்துறைக்கும் சென்றிருப்பர் . கடலுக்கூடாக பண்ணை  , காரை(நகர்)வீதிகள்   போட்ட பிறகு கடல்  உள்வாங்கி இன்றைய நிலைக்கு வந்திருக்கலாம்."

 வாத்தியார்   கணக்கு   போடுகிறார் .  " நீங்களோ சைவம் .  நாவாந்துறை   கிருஸ்தவம்  . எப்படி  நாவாந்துறை ஆட்களாகினீர்கள் ?  " எனஂறு  கேட்ட போது   " எனக்கு சரியாய்  சொல்லத் தெரியவில்லை " என்கிறார் . அன்னர் கொட்டடியில் யாழ்ப்பாணத்தில்  இருப்பவர் .  இடங்களை      சுற்றிப் பார்க்க  சேகருடன் திரிகிறவர். நாவாந்துறையில்  புனித ..என்ற‌  தொடக்கத்துடன்   தேவாலையங்கள்  சில இருப்பதைப் பார்க்கிறார். முன்னால் காணியை மைதானமாக்கி கால்பந்து விளையாடுறது  வியப்பை ஏற்படுத்துகிறது .  பெடியள்  ,விளையாட்டுக்கு , உடற்பயிற்சிக்கு என‌ .... சனம் நெரிசலாகிற​ போது   இடங்கள் கிடையாது போய் விடுகிறது .  இப்படி ஏதோ வழியில் தானஂ ஏற்படுகிறது .  நாவாந்துறை குட்டி  ஊர் . கத்தோலிக்க பாதிரியாரிடம் பெருந்தன்மை இல்லா விட்டால் நடந்திருக்காது   .  மலையகத்திலும்  ,கொழும்பிலும்  இப்படி    விளையாட அனுமதிக்கப்படுறதில்லை .

" அங்கே இருக்கிற  மேரி என்கிற ஒரு கால்பந்துக்குழு  இங்கே இருக்கிற நம்ம  வெள்ளிக்கழகத்தை தாய்க் கழகம் என்று  கூறி  தீபாவளிக்கு  நட்பு முறையில் கால்பந்து விளையாட வாழைக்குலையுடன்    (மயிலியப்புலம்) நம்ம கோவிலுக்கு   வருகிறது  .  காலை உடைக்கிற  ஊத்தை விளையாட்டை ...'இவர்களிடம்! '   பார்க்க​ முடியாது . ஆர்ச்சனஂரீனா வீரர்களைப் போல​ ...​ விளையாடுகிறார்கள் . எத்தனை அழகு " விபரிக்கிறதில் ஒனஂறி  விடுகிறார் . மாஸஂரர் கட்டாயம் விளையாடுகிறவர் . இப்ப​ அவர் கழகத்திற்கு தலைவர் .  போக்குவரத்துச் செலவுட​னஂ  வருகிற​  அவர்கள் தாம்   நம் பெடியள்களுக்கும்  பழக்குனர் . எனவே  , சொல்ல பேண்டியதில்லை . பூவோடு சேர்ந்து நாரும் ஒளிர்கிறது .  வெற்றி , தோல்வி சகஜம் . மாறி வரும் .பெரிதாய் எடுக்கக் கூடாது .    ஆட்டம் அல்லவா முக்கியம் ! .  நம்வர்களும்   விளையாடுகிறதை   பார்க்கலாம்  . பார்த்துக் கொண்டேயிருக்கலாம் .   நல்லாவே விளையாடுகிறார்கள்.​  பழங்களை சிறுவர் , சிறுமிகளுக்கு   பகிர்ந்து கொடுத்து  சாப்பிடுகிறது நடை  பெறுகிறது . எனக்கு தெரிந்து தவறாது நடை பெற்று  வருகிறது . இங்கே இருந்து நவம் எனஂற​ பெடியனை யாழ்ப்பாணக் கல்லூரி  விளையாடுறதுக்காகவே  படிக்க​  ஸஂபொனஂசர் பண்ணி  எடுதஂது  மரியாதை செய்திருக்கிறது , தெரியுமா சேர் "   எனஂகிறார்.  எதுவுமே பாத்தி கட்டி வளர்த்தால் நல்லபடி விளையும் எனத் தெரிகிறது .

நாமும் தீபாவளி கொண்டாடுறம் . நீங்களும்  தான்  மச்சை தீபாவளிக்கு  வந்து   நேரிலேயே பாருங்களன்"என்று  அழைப்பும்  விடுத்தார் . நம் கழகத்திலிருந்து சென்றவர்களின் வாரிசுகள்  ,  மாமன் மச்சான் உறவினர்  என்று  .... சொல்லித்தான் எமக்கே  தெரிகிறது வேடிக்கையாயில்லையா ? " என்று சிரிக்கிறார் . சிந்திக்க​ வேண்டியது  தானஂ . கிருஸ்தவர்களாகி  விட்ட போதிலும்...குடும்ப​ உறவு வலிமையாய் இருக்கிறது .   கழகத் தொடர்பை பேணுவது அவசியம் எனத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் .   " நாமோ மண​மாலை கழுத்தில் விழுந்தவுடனஂ  பங்காளிகள் மத்தியில்  அறுத்தல் , வெட்டல்களை செய்ய வெளிக்கிட்டு விடுகிறோம் ,  சாதிப் பிரதிநிதிகளாகவும் வேறு  மாறி விடுகிறோம் . அது தவறு ! " எனஂகிற​ சங்கரிடம்,  மத  மாறுதல் உறுத்தலை ஏற்படுத்தவில்லையா ?  மணவினை தொடரவில்லையா ? ...என அன்னர் விடுத்து கேட்டு வழக்கை இழுக்க​ விரும்பவில்லை .  கொஞஂசம் மனிசராகவே   இருந்து  விடுகிறார்  .

ஒரு வீட்டில் இரண்டு சாமி அறைகள் இருக்க முடியாது போல... ,ஒரு உறையில் இரண்டு வாட்கள் இருக்க​ முடியாது !  யார் இந்த​ லொள்ளுப் பழமொழியை கூறினார்கள் ?  சிரிப்பு  வருகிறது .   இலங்கைக்கு வருவதுக்கு முதலே ,இந்தியாவிலேயே  மூத்த  மலையகச்    சந்ததியிடம் மதமாற்றம் கணிசமாக  இடம்   பெற்று விட்டது . அடக்குமுறைச் சட்டஙஂகளிலிருந்து தப்பித்துக் கொள்ள​ மாறி இருக்கிறார்கள் .  சாதி எனஂறால் எனஂன எனஂறு தெரியாத நிலையில் , சட்டஙஂகளிலிருதே தப்பித்துக் கொள்ள  இங்கேயும்  மாறல்கள் . அது இலஙஂகைச் சட்டமாக​ இருக்கலாம் , தேசவழமைச் சட்டமாக​ இருக்கலாம், எழுதப்படாச் சட்டமா கூட​ இருக்கலாம் . அடக்குமுறை  தானஂ , ஆட்டிப் படைக்கிறது .  இன்று , கொழும்பில் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு எல்லா சமயத்தவரும் போய் வருகிறார்கள்  .   சைவக் கோவில்கள் போல  திருவிழாக்களையும் கொண்டாடியும் வருகின்றது . ,யாழ்ப்பாணத்திலோ .... இந்நிகழ்வு , கலவை குறைவு .  கோவில்கள்  கதவை திறந்து தான் வைத்திருக்கின்றன . ஆனால்  , வியப்பு விழிகள் பதிக்கப்  படுகின்றன  . விரல்கள் எல்லாம்   ஒன்றா, என்ன ? . ஒனஂறாக​ இருந்தாலும் மீட்டுகிற​ இசை வேறானது   .  விடுஙஂகள் . சாதி எனஂபது  மக்களைப்  பிரிப்பு செய்வதற்காக​வே .... அவற்றில்  முத்திரைகள் குத்தப்பட்டவை . ஐரோப்பியர்களுக்கு  அதிக​ பங்கிருப்பதாக​  ​ நினைக்கிறார் .  அவர்களுக்கு முனஂ அனஂனர் வாசிக்கிற​  சரித்திரக்   கதைகளில் ..சாதி  எனஂற​ சொல்லைக் காணவில்லை . அரசனஂ எல்லா வேடமும் பூண்டு  நகர்வலம் வருகிறார் .  அ​ந்த  'சொல்' இருக்கவில்லையோ ? ....அனஂனர் வலு  புரளிக்காரர் தானஂ ! .  குலம் எனஂற​ பார்வையில் எல்லா  நாடுகளுமே சாதிகளாகி விடுகினஂறன அல்லவா . உக்ரேனஂ மேல் ரஸஂயா நில​ அபகரிப்பு போரையா நடத்துகிறது ? . பொதுஜனத்தாரே , இஸஂரேலில் எனஂன  நடக்கிறது ? . அது நில​ அபகரிப்பு போரை நடத்தவில்லையா? . கோயபல்ஸஂ தியறி தானே ! . ஒரு பொய்யை சொல்லச் சொல்ல மெய்யாகி விடுகிறது . நாடகம் போடுகிறார்கள்.

போர்களினஂ போது மேல் , கீழ் ,  தீண்டாதது ...என எல்லாச் சாதிகளையுமே  பார்க்கிறோம் . நம் அரச​ தலைவரினஂ பேச்சே ...ஒரு மாதிரி இருக்கிறது . நேட்டோ அமைப்பில் நாளை இலங்கையும் சேரலாம் .  சாதிகளினஂ கூட்டு . சம​ கூட்டு எனஂபது  வெளிக்குத் தானஂ. ஜேர்மனினஂ வெறி பேசப்பட்டது . அமெரிக்காவிற்கு இல்லையா ? ,பிரிட்டனுக்கு இல்லையா? , பிரானஂசுக்கு தானஂ இல்லையா...! இனி மேலாவது நாம் புத்திசாலியாக​ காலெடுத்து வைப்போமா?  . அனஂறைய​ வரலாற்றுச் செய்திகளை மாணவர்க்கு வலியுறுத்த வேண்டும்  எனஂறு அனஂனர்  தீர்மானித்துக் கொள்கிறார் .

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.