பதிவுகள் முகப்பு

பதிவுகள் இணைய இதழின் ஜூலை 2026 ,மாதப் புள்ளி விபரம்! பாவித்த மென்பொருள் - (cPanel) Awstats

விவரங்கள்
Administrator
நிகழ்வுகள்
30 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

cPanel - Awstats அறிக்கை காட்டும் இந்த புள்ளிவிவரங்கள், பதிவுகள் இணைய இதழ் மிகப் பெரிய அளவில் வாசகர்களைக் கொண்ட ஒரு முன்னணி ஊடகமாக இயங்கி வருவதை உறுதிப்படுத்துகின்றன.

ஒரே மாதத்தில் 338,000-க்கும் மேற்பட்ட தனித்துவமான வாசகர்கள் (Unique Visitors) பதிவுகள் தளத்திற்கு வந்திருப்பதும், 70 லட்சம் பக்கங்கள் (Page Views) வாசிக்கப்பட்டிருப்பதும், இணைய உலகத்தில் பதிவுகள் இதழுக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கைக் காட்டுகிறது.

இந்த எண்களின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப விபரங்கள் இதோ:

மேலும் படிக்க ...

எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் நூல்கள் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
29 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வர்க்கவிடுதலையே வர்ண விடுதலை என்று நம்பியவர் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
ஆய்வு
28 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அகஸ்தியர். நாவல் , சிறுகதை, நாடகம், கட்டுரை, திறனாய்வு , நாட்டுக் கூத்து , மிருதங்க இசை எனப் பன்முகக் கலை, இலக்கிய ஆளுமை மிக்க படைப்பாளி அவர். அவர் தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையைத் தான் நம்பும் தத்துவமாக வரித்துக்கொண்டவர் அவர். அவர் படைத்தது மக்கள் இலக்கியம். சமூக, வர்க்கப்பிரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த புரட்சிக் குரல் அவருடையது. இவ்விடயத்தில் எவ்விதச் சமரசங்களும் அற்று ச் செயற்பட்டார்.

ஆயுதங்களில் மிகச்சிறந்த ஆயுதம் எழுத்தாளரின் பேனா. மக்களைச் சிந்திக்கவைக்க, எழுச்சி கொள்ள வைக்க அதனால்தான் முடியும். தாம் வாழும் சமுதாயத்தைச் சுட்டெரிக்கும் அநீதிகளுக்கெதிராக தம் எழுத்துகளைப் பாவிக்கும் எழுத்தாளர்கள் சமூக, அரசியற் போராளிகள். அவ்விதமான போராளிகளில் ஒருவர்தான் எழுத்தாளர் அகஸ்தியரும். தான் பிறந்த மண்ணில் நிலவிய வர்ண, வர்க்க வேறுபாடுகளால் பல்வகைகளிலும் துன்புறும் மக்கள் நிலைகண்டு அவர் பேசாமல், மெளனமாக இருக்கவில்லை. எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து அந்திம காலம் வரையில் அவரது புரட்சிக் குரலை , எதிர்ப்புக் குரலை, எழச்சிக் குரலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன அவரது எழுத்துகள். அநீதி கண்டு பொங்கியெழுந்த அவரது ஆரம்ப கால முயற்சிகள் கவிதைகளாகவே இருந்தன.

மேலும் படிக்க ...

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதி! - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
28 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் ஆத்மாஜீவ் அவர்களின் இயற்பெயர் வி.சி. ராஜேந்திரன். 12.11.1966 ல் நெய்வேலியில் பிறந்தவர். 13 வயதில் பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நாடகம் எழுதி இயக்கி நடிக்கத் துவங்கியதில் ஆரம்பித்த இவரது எழுத்தார்வம், நாடகத்திலிருந்து சிறுகதைக்கும், கவிதைக்குமாக, இடம் பெயர்ந்தது.

நாடகத்துறையிலிருந்தபோது திரு. அஸ்வகோஷ் அவர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டு அவர் எழுதி புத்தகமாக வெளிவந்த நாடகம் ஒன்றை அவர் முன் னிலை யல் அரங்கேற்றியிருக்கிறார்.

படிக்கிறபோதே, 1980 களில் "ஆத்மா" கையெழுத்து இதழை ஆரம்பித்து, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மாதம் ஒரு இதழாக நெய்வேலி நூலகத்தில் வைத்தார். "ஆத்மா" பௌர்ணமி இலக்கிய கூட்டம் தொடர்ந்து நடத்தினார்.

1988-89ல் கணையாழியில் திரு.அசோகமித்ரன் பணியி லிருந்த சமயத்தில் ஒரு மாத காலம் அச்சு கோர்ப்ப வராகவும், புரூப் ரீடராகவும் அங்கு பணிபுரிந்திருக் கிறார்.

ஆத்மாஜி என்ற பெயரை "ஆத்மாஜீவ்" என்று நியூம ராலஜி யின்படி பெயர் மாற்றி தந்தவர் திரு. பிரமீள்.

வேர்கள் ராமலிங்கம், திரு. கோணங்கி, ரவி சுப்ர மணியம், இரா.நடராசன், பாவண்ணன், பிரம்மராஜன், நாகார்ஜூனன், கால சுப்ரமணியம் போன்ற பலருடன் நேர் மற்றும் கடிதத் தொடர்பும் கொண்டிருந்தார்.

1990 களில் "காலக்ரமம்" என்ற பெயரில் கவிதைகளுக் கான காலாண்டிதழ் ஆரம்பித்து சுமார் 15 இதழ்கள் வரை பல சிரமங்களுக்கிடையில் தொடர்ந்து நடத்தியவர். இவரது கவிதைகள் தமிழின் முக்கியமான சிறு பத்திரி கைகளில் வெளியாகியுள்ளன. கவிதைத் தொ குப்புக ளும் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க ...

இனியுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
24 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலஙகை அழகான எழில் மிகு தீவு! பெளத்த, இந்து, முஸ்லிம், மலே எனப் பல்லின மக்களும் வாழும் இந்து சமுத்திரத்தின் சொர்க்கம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவு. கடல் வளம், நில வளம், இயற்கை வளம் மிக்கதொரு நாடு.

இந்த நாட்டுக்கு இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம். முள்ளிவாய்க்கால் வேண்டாம். இதுவரை நடந்த துயரங்களால் துவண்டு போயிருக்கிறது நாடு.இவற்றிலிருந்து மீண்டு வருவது எதிர்கால வளத்துக்கு மிகவும் அவசியம்.

இதுவரை இனவாதத்தால் மூழ்கடித்த அரசியல்வாதிகள் மூலையில் கிடக்கும் சூழல். இன்றுள்ள அரசு, கடந்த கால அரசுகள் இதுவரை இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகச் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த இனரீதியிலான அழிவுகளுக்கு, படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்பதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கலாம்.

மேலும் படிக்க ...

வளையாபதியில் வாழ்வியல் அறம்! - முனைவர் ம.சியாமளா -

விவரங்கள்
- முனைவர் ம.சியாமளா -
ஆய்வு
24 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர் ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி -1), குரு நானக் கல்லுரி (தன்னாட்சி), சென்னை. -


முன்னுரை

நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமெனில் நாமும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். அந்த வகையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அறிவுறுத்த வேண்டி, ஒரு நல்ல நெறிமுறைக்குட்பட்டு பல நல்ல கருத்துக்களை நல்வாழ்விற்காக கூறும் இலக்கியத்தில் வளையாபதியும் ஒன்று. அவை, ஒரு சமண சமயக் வழிகாட்டுதல்களாக எடுத்துரைக்கின்றது. வளையாபதி என்னும் காப்பியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைத்திடவில்லை.

வளையாபதி - காலமும் கருத்தும்

வளையாபதி சமண சமயச் சார்புடைய காப்பியம் என்ற கருத்துண்டு, இது சீவக சிந்தாமணி எழுந்த காலத்தில் எழுந்தது என்றும் கூறுவர். இதன் காப்புச் செய்யுள் சிந்தாமணிக் காப்பின் கருத்தை அடியொற்றி அமைத்துள்ளது. மேலும், காப்புச் செய்யுளின் கருத்தைக் கொண்டு வளையாபதி சிந்தாமணிக்கு முற்பட்டது என்பாரும் உண்டு. எவ்வகையாயினும் வளையாபதி எழுந்த காலம் ஆய்வுக்குரியதாகவே அமைகிறது. வளையாபதி சமண சமயம் பற்றியது. இந்நூலை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. செய்யுளின் பண்புகளைக் கொண்டு இதனை இயற்றியவர் புலமைப் பண்புமிக்க நல்லிசைப் புலவர் எனத் திண்ணமாகக் கூறலாம் என சோமசுந்தரனார் தெரிவிக்கிறார். மேலும் அடியார்க்கு நல்லார், இளம்பூரணர் அரும்பதவுரையாசிரியர். பரிமேலழகர் முதலிய உரையாசிரியர் பெருமக்கள் வளையாபதி செய்யுளை மேற்கோளாக எடுத்திருப்பதனாலும் இந்நூல் தமிழ்மரபு மாறாக இயன்றதொரு நல்லிலக்கியம் எனவும் கூறுகிறார்.

மேலும் படிக்க ...

மண்ணும் சொல்லும்: மஹ்மூத் தர்வீஷின் கவித்துவ இயக்கவியலும் , எம்.ஏ. நுஃமானின் மொழிபெயர்ப்பு அரசியலும்! (பகுதி 3) - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
24 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் 3: மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு: வடிகட்டலும் விசுவாசமும் (The Translation of Translation: Filtered Aesthetics)

முதல் இரண்டு அத்தியாயங்கள் தர்வீஷின் கவிதை உலகிலுள்ள அரசியல் மற்றும் அழகியல் அடுக்குகளைத் தேடிக் கண்டறிந்தன என்றால், இந்த மூன்றாம் அத்தியாயம் நமது ஒட்டுமொத்த விமரிசன ஆய்வின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையப் போகிறது.

ஏனெனில், இங்கு நாம் கவிஞரைத் தாண்டி, மொழிபெயர்ப்பாளரான பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் உழைப்பையும், அவர் எதிர்கொண்ட சவால்களையும், 'மொழிபெயர்ப்பின் அரசியல் மற்றும் ஒழுக்கவியல்' கோட்பாடுகளின் பின்னணியில் சர்வதேசத் தரத்தில் அலசப் போகிறோம்.

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தனது முன்னுரையில் மிகவும் நேர்மையாகவும், அறிவுஜீவிக்குரிய ஒழுக்கத்தோடும் ஒரு பிரதான உண்மையை ஒப்புக்கொள்கிறார்:

"நான் அறிந்தவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தர்வீஷின் கவிதைகள் எவையுமே அரபு மூலத்திலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டவை அல்ல... ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாகவே தர்வீஷும் தமிழுக்கு அறிமுகமாகி இருக்கிறார். அவ்வகையில் நமது மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புகள் தான்."

கோட்பாட்டுத் தளத்தில் இதனை 'இரண்டாம் நிலை மொழிபெயர்ப்பு' (Indirect or Secondary Translation) என்று அழைப்பார்கள். புகழ்பெற்ற ஜெர்மன் மெய்யியலாளரும் கோட்பாட்டாளருமான வால்டர் பெஞ்சமின் (Walter Benjamin) தனது The Task of the Translator (மொழிபெயர்ப்பாளனின் பணி) என்ற புகழ்பெற்ற கட்டுரையில், மொழிபெயர்ப்பு என்பது மூலப் பிரதியின் 'மறுவாழ்வு' (Afterlife) என்று குறிப்பிடுவார். மூலப்பிரதி தன் உடலை (சொந்த மொழியை) இழந்து, வேறொரு மொழியில் ஆன்மாவாக மறுபிறவி எடுக்கிறது.

மேலும் படிக்க ...

‘தி ஒடிஸி’ ஆங்கிலத் திரைப்படம் பார்த்த அனுபவப் பகிர்வு. - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
22 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடா ஒன்ராறியோவில் வோன் பகுதியில் உள்ள சினிப்ளெக்ஸ் திரையரங்கில் ‘தி ஒடிஸி’ (The Odyssey’) முதல் நாள் முதல்காட்சி பார்ப்தற்கு எனது வாசகர் வட்ட நண்பர் ஒருவர் அழைத்திருந்ததால், அந்தப் படத்தைச் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் காட்சிக்கான சீட்டுக்கள் விற்பனையாகி முடிந்திருந்தன. அவரும் கனடிய தமிழ் திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர். அவருக்காக அவர் தயாரித்த படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதியிருக்கின்றேன். இப்படியான பிரபலமான பிரமாண்டமான படங்கள் வெளிவரும் போது சென்று பார்ப்பது வழக்கம். பொதுவாக எனக்கு நேரம் கிடைக்கும் போதுதான் படம் பார்ப்பேன், ஆனால் இம்முறை முதல் நாளே பார்க்க (17-7-2026) அவர் மூலம் சந்தர்பம் கிடைத்ததால் சென்று பார்த்தேன். பல்லின மக்களாலும் திரையரங்கம் நிறைந்து இருந்தது. படம் முடிந்தபின் அவர்களில் சிலருடன் இந்தத் திரைப்படம் பற்றி உரையாடவும் முடிந்தது.

இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பல காவியங்கள், காப்பியங்களைப் படித்திருப்பார்கள். இவற்றில் சில திரைப்படங்களாகவும் வெளிவந்திருந்ததையும் பார்த்திருப்பார்கள். வாசிப்பு அனுபவம் காட்சி மொழி அனுபவத்தைவிட முக்கியமானது என்பதையும் புரிந்து கொண்டிருப்பார்கள். மொழி மாற்றம் செய்யப்பட்ட கதை என்றால் அங்கேயும் பொதுவாகத் தளர்வுக்கு இடமுண்டு. வாசிப்பு அனுபவம் என்பது கதை ஓட்டத்தைப் பார்த்து மிகுதியை நாங்கள் கற்பனை செய்து பார்ப்பது. காட்சி மொழி என்பது நெறியாள்கை செய்பவரின் கற்பனையில் உதித்ததைக் காட்சி மொழியில் பார்ப்பது. சில நேரங்களில் நாங்கள் நினைத்ததைவிட வித்தியாசமாக இருக்கிறதே என்று பாராட்டுவோம், சில நேரங்களில் காட்சிகளில் கருத்து முரன்பாடு ஏற்படும் போது அலுத்துக் கொள்ளுவோம். ஆனால் சரியோ பிழையே ஒவ்வொருவருடைய திறமையும் கட்டாயம் பாராட்டப்பட வேண்டும். அந்த வகையில் இந்தப்படத்தின் சில சிறப்பு அம்சங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

மேலும் படிக்க ...

மண்ணும் சொல்லும்: மஹ்மூத் தர்வீஷின் கவித்துவ இயக்கவியலும் , எம்.ஏ. நுஃமானின் மொழிபெயர்ப்பு அரசியலும்! (பகுதி 2) - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
20 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் 2: எதிர்ப்பின் அழகியலும் சீற்றத்தின் மொழியும் (The Aesthetics of Resistance and Rhetoric of Rage)

2.1 அரசியல் கருத்துநிலையும் மதச்சார்பற்ற மார்க்சியப் பார்வையும் (Ideological Landscape and Secular Marxism)

மஹ்மூத் தர்வீஷ் வெறும் உணர்ச்சிவசப்பட்ட தேசபக்தக் கவிஞர் மட்டுமல்ல; அவர் ஆழமான அரசியல் மெய்யியல் (தத்துவப்) பின்னணி கொண்ட ஒரு மார்க்சியப் போராளி. பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தனது அறிமுக உரையில் தர்வீஷின் அரசியல் நிலைப்பாட்டை மிகத் துல்லியமாக வரைமுறைப்படுத்துகிறார்: 1961 இல் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தர்வீஷ், பலஸ்தீனப் பிரச்சினையை வெறும் மதப் பூசலாகவோ அல்லது இனவாத மோதலாகவோ பார்க்கவில்லை. மாறாக, அதை ஒரு வர்க்கப் பிரச்சினையாகவும், உலகளாவிய ஏகாதிபத்திய-சியோனிச ஆக்கிரமிப்பாகவுமே அணுகினார்.

இடதுசாரிச் சிந்தனையாளரான பிரான்ட்ஸ் ஃபனோன் (Frantz Fanon) தனது The Wretched of the Earth நூலில் குறிப்பிடுவதைப் போல, ஆக்கிரமிப்பு என்பது ஒடுக்கப்பட்டவர்களின் பண்பாட்டையும் வரலாற்றையும் சேர்த்தே சிதைக்கிறது; அதற்கு எதிரான பண்பாட்டுத் தற்காப்பு என்பது தவிர்க்க முடியாமல் 'மதச்சார்பற்ற தீவிரத் தன்மையைக்' (Secular Radicalism) கோரி நிற்கிறது.

தர்வீஷ் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுவதை நுஃமான் பதிவு செய்துள்ளார்:

"நான் மதம் சார்ந்த தனித்தன்மையையும் அடிப்படைவாதத்தையும் நிராகரிக்கின்றேன். பலஸ்தீனம் எப்போதும் முஸ்லிம், கிறிஸ்தவ, யூத நாடாகவே இருந்து வந்துள்ளது."

மத அடிப்படைவாதத்தை நிராகரிக்கும் இந்த இடதுசாரிச் சிந்தனையே தர்வீஷின் எதிர்ப்புக் கவிதைகளுக்கு உலகளாவிய மானுடப் பொதுத்தன்மையை (Universal Humanism) வழங்குகிறது. அவரது சீற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது அல்ல; அது ஒட்டுமொத்த மனித அடக்குமுறைக்கு எதிரானது.

மேலும் படிக்க ...

இம்மானுவேல் காண்ட் : அழகியல் கோட்பாடு! - பா.பிரதாரிணி -

விவரங்கள்
பா.பிரதாரிணி
அறிவியல்
20 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1724 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இம்மானுவேல் காண்ட் ஒரு முக்கியமான சிந்தனையாளர் எனலாம். அறிவின் மீதான இவரது கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. தனக்கு முன் நிலவிய அறிவின் மீதான கோட்பாடுகளை இவர் நிராகரித்தார். காண்டுக்கு முந்தைய தத்துவவாதிகள் தங்களைச் சுற்றி இருந்த உலகத்தை தங்கள் கண்களால் காண்பதை உண்மை தோற்றம் என்று நம்பினார்கள். காண்ட் அதைக் கேள்விக்குள்ளாக்கினார். ‘ஒரு பொருளை நாம் கண்களால் பார்ப்பது வேறு, அது இயல்பில் இருப்பது வேறு’ என்றார் அவர். ஒரு மரத்தை நாம் மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் அது மஞ்சள் வண்ணத்தில் தெரியும். ஆனால், மரத்தின் அசல் தோற்றம் மஞ்சளாக இராது. கண்களால் காண்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இப்படி, பெறும் அறிவின் மேல் சந்தேகத்தைக் கிளப்பியதால் இவரது கோட்பாட்டைச் சந்தேக வாதம் என்றும் சொல்வதுண்டு.

சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் உள்ள வேற்றுமை பகுத்தறிவு சார்ந்ததே அன்றி உளநெகிழ்ச்சி சார்ந்ததல்ல. இது ஒரு மனிதனின் உள்ளார்ந்த மனநிலை. சரி, தவறு, நல்லது, கெட்டது போன்ற பாகுபாடுகள் தத்துவமானது பகுத்தறிவுக்கும், அனுபவவாதத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தடுமாறுவதைக் குறிக்கிறது.

மேலும் படிக்க ...

“சட்டியை உடைக்காமல் பேய் வெளியேறப் போவதில்லை” - மீண்டும் வெடித்தது அமெரிக்க - ஈரான் போர்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
Administrator
ஜோதிகுமார்
18 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

“வீட்டை விட்டு அகலும் பேய், வீட்டு சட்டியையும் உடைக்காமல் அகலாது” என்பது சிங்களக்  கிராமியப் பழமொழி. இதனையே உக்ரைனிய-ஈரானிய போரில் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. சிறப்பாக, ஈரானிய போரில் அமெரிக்காவின், உலக ஆதிக்கம் இப்படியான ஒரு முடிவை எட்டித்தான் முற்று பெறும் என்றால், அது, அப்படியே விதி வசம் பூண்டதாய் இருக்கட்டும்.

ஈரானின் மீது, இரண்டாவது தடவையாக, இன்று கோர தாக்குதல்களை தொடங்கி உள்ள அமெரிக்கா, ஈரானில், கொமெய்னியின், இறுதி கிரியைகளுக்காக நின்றிருந்த 200 லட்சம் மக்களின் கோபங்களை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. பெண்கள், சவ ஊர்வலத்தில் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் பொறுத்து, ஊடகங்கள், ட்ரம்பிடம் வினவிய போது, அது போலி செய்தி வகைப்பட்டது (Fake News)) என்று கூறிவிட்டார் மனிதர். இதனுடன் நிறுத்தாமல், தனது முதலாவது தாக்குதலை விட, தனது இரண்டாம் தாக்குதலை, தீவிரப்படுத்தினார் ட்ரம்ப்.

அவரது, வழமையான “ஈரானிய நாகரிகத்தை கற்காலத்துக்கு அனுப்பி வைப்பேன்” என்ற கூற்று உண்மையாகி விடுமோ என்று பலரும் பயந்திருந்த போது, ஈரானிய பதில் தாக்குதல்களும் அனேகமாக துவங்கி விட்டன. தொடர்ந்து, போர் நிறுத்தத்தில் இருந்து தான் வாபஸ் பெறுவதாகவும் இன்று ஈரான் அறிவித்து முடித்து விட்டது.

பஹ்ரேன், குவைத், கட்டார், சவுதி ஆகிய நாடுகளின், அமெரிக்க தளங்களின் மீது, அதி உக்கிரமான தாக்குதல்களை நடத்திய ஈரான், இவ்வகையில் புதிதாய் இன்று ஜோர்டனையும் (பிந்திய செய்திகளின் பிரகாரம், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது) உள்ளடக்கி கொண்டுள்ளது.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் சுற்றுப்புற சூழலியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி -
ஆய்வு
17 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,


முன்னுரை

மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு ஐந்து வகையான ஏற்பாடுகள் உள்ளன. அவை நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்றுதொடர்பு கொண்டுதான் வலம் வர இயலுமே, தவிர்ந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அடையும். கம்பராமாயணத்தில் சுற்றுப்புறசூழலியல் குறித்து நாம் ஆராய்வோம்.

நான்கு வகையான சுற்றுச்சூழல் மாசுபாடு

நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய நான்கும் மாசுபாடு அடைகிறது.

1.நிலமாசுபாடு.
2.நீர்மாசுபாடு.
3.காற்று மாசுபாடு.
4.ஆகாய மாசுபாடு.

சுற்றுச்சூழல்-விளக்கம்

சுற்றுச்சூழல் என்பது பூமியில் உள்ள இயற்கை வளங்கள், உயிரனங்களை உள்ளடக்கியதாகக் கொள்ளப்படுகின்றது.

மேலும் படிக்க ...

மண்ணும் சொல்லும்: மஹ்மூத் தர்வீஷின் கவித்துவ இயக்கவியலும் , எம்.ஏ. நுஃமானின் மொழிபெயர்ப்பு அரசியலும்! (பகுதி 1) - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
16 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தத்துவார்த்த அறிமுக உரை (Comprehensive Introduction)

1. நுழைவாயில்: உலக இலக்கியப் பரப்பில் எதிர்ப்பின் அழகியல் (The Aesthetics of Resistance)

இருபதாம் மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக இலக்கியப் பரப்பில், ஒடுக்குமுறைக்கு எதிரான கவிதை மொழி என்பது வெறும் சொற்களின் சேர்க்கையாக இருக்கவில்லை. அது வரலாற்றின் சிதைவுகளுக்குள் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் அசைக்க முடியாத கூட்டு நனவிலியாக (Collective Unconscious) விளங்கியது. லத்தீன் அமெரிக்காவின் பப்லோ நெருடா, கியூபாவின் நிக்கோலஸ் கியென், ஆப்பிரிக்காவின் லியோபோல்ட் செங்கோர் மற்றும் நுகுகி வா தியாங்கோ போன்ற ஆளுமைகளின் வரிசையில், மத்திய கிழக்கின் ஆகப் பெரும் தத்துவார்த்தக் குரலாக ஒலிப்பவர் பலஸ்தீனத்தின் தேசியக் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆவார்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பில், சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட (Internally Displaced) ஒரு சமூகத்தின் இருத்தலியல் துயரத்தை, உலகளாவிய மானுடப் பொதுத்தளத்திற்கு நகர்த்திய பெருமை தர்வீஷுக்குரியது. கவிதை என்பது அழகியல் இன்பம் தரும் ஒரு நுகர்வுப் பொருள் அல்ல; மாறாக, அது காலனிய மற்றும் சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் மேலாதிக்கச் சொல்லாடல்களை (Hegemonic Discourses) உடைத்தெறியும் ஒரு 'பொருளாயுதக் காரணி' (Material Weapon) என்பதை அவரது ஒட்டுமொத்த கவித்துவத் தடமும் நமக்கு நிரூபித்துக் காட்டுகிறது.

2. தமிழ் அறிவுச்சூழலும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் கொடையும் (The Tamil Intellectual Context)

தமிழ் இலக்கியச் சூழல், குறிப்பாக ஈழத்து இலக்கியப் பரப்பு, தசாப்த காலங்களாகப் போர் மற்றும் இடப்பெயர்வின் வலிகளைத் தன் சொந்தக் குருதியில் அனுபவித்த ஒன்று. இத்தகையதொரு சூழலில், பலஸ்தீனத்தின் ஆகப் பெரும் எதிர்ப்புக் குரலான தர்வீஷை தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகம் செய்ததன் மூலம், பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பண்பாட்டுப் பரிமாற்றத்தை (Cultural Exchange) நிகழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க ...

இத்தாலியப் பயணத்தொடர் இத்தாலியப் பயணம் (3 & 4) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
16 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

3

நகரம் 1916 ஆம் ஆண்டின் முதல் யுனெஸ்கோ நிறுவனத்தால்  அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் நகரமாக உள்ளது. சுற்றி வர திராச்சை தோட்டங்கள் சுற்றியிருக்கும் நிலப்பரப்பில், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த நகர், கோட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.

அக்காலத்தால் வந்த இந்த ரஸ்கனி (Tuscany)என்ற ,இதே  பிரதேசத்தில் பிறந்த (Piazza Pio 11) பாப்பண்டவரின் பேரில்  அவர் பின்பு பாப்பாண்டவராகியபின் (Pope Pius II),  இந்த மாதிரி நகரம் கட்டப்பட்டது

பாப்பாண்டவரின் வேண்டுகோளின் பேரில், பேர்னாடோ (Bernardo Rossellino) என்ற கட்டடக் கலைஞரால் நிறைவேற்றப்பட்டது. அந்த இடத்திலிருந்த ஊரின்  அமைப்பை மாற்றி, புதிதாக இந்நகரத்தை மனிதவுணர்வுத் தத்துவம்  (Humanist Philosophy) அடிப்படையாகக் கொண்ட முதலாவது நகரமாக அமைக்கப்படுகிறது. இங்கு மக்கள் கூடும் பிரதேசம், அதைச் சுற்றி மக்கள் வாழும்  இடங்களாக இந்த நகரம் உருவாக்கப்பட்டது.

ஆரம்பக் காலத்தில் அரச மாளிகைகள்,பிரபுக்களின் வசிப்பிடங்கள் மற்றும் முக்கிய இடங்கள் தவிர்ந்தவை எல்லாம், சாதாரண மக்கள் வாழ்வது  குடிசை போன்ற அமைப்புகளாகவே இருந்தது. ஐரோப்பாவில் முக்கியமாக இத்தாலியில் 15ம் நூற்றாண்டுகளில் உருவாகிய மறுமலர்ச்சி யுகம் உருவாக கத்தோலிக்க  பாப்பாண்வரகளது பங்கு மிகவும் முக்கியமானது. இதுவே (Humanist Philosophy) பிற்காலத்தில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஓவியம்,சிற்பம், கட்டிடக்கலைகள் வளர்ச்சியடைந்தது மேலும் பல்கலைக்கழகங்கள் பல நகரங்களில் தோன்றக் காரணமாகும்.

மேலும் படிக்க ...

காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்கள்! - முனைவர் கு.வளர்மதி -

விவரங்கள்
- முனைவர் கு.வளர்மதி -
அரசியல்
15 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர் - - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -


முன்னுரை

இன்றைய உலகில் பெண்களின் பங்கு மகத்தானது. ‘மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வாக்கினை ஏற்ற பல தலைவர்களுள் அண்ணல் காந்தியடிகளும் ஒருவர். பெண்ணைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என திருவள்ளுவரும், வருங்காலம் பெண்ணுடையது தான் என வினோபாஅடிகளும் கூறுகின்றனர். அடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் ஆன்மா ஒன்றே. இருவருக்கும் உணர்வுகளும் ஒன்றே. ஒருவர் மற்றவர் உதவியின்றி வாழமுடியாது. ஆண் காலங்காலமாக பெண் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பினும், ஆடவரிடையே தோன்றிய மகான்கள் பெண்ணை ஆணுக்குச் சமமென்றே மதித்திருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் பங்கு கணிசமானது என்பதை மறைக்க முடியாது. காந்திய அடித்தளத்தில் பெண் முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிமாணங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: தன்னலம் கருதாத சிவராசா மாஸ்டர்! இலங்கை ஆசிரியர் சங்கத்தில் அர்ப்பணிப்புமிக்க தோழர்! - முருகபூபதி -  

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள் ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.
அதனைப்படித்தவேளையில் சிவராசா மாஸ்டர் அவர்களுடனான முதல் சந்திப்பும், அவருடனான தொடர்பாடல்களும்தான் நினைவுக்கு வந்தது. அவர் குறித்த அஞ்சலியுடன், இந்த நனவிடைதோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஆயுதக்கிளர்ச்சி நடந்தது. அக்காலப்பகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – கலாநிதி என். எம். பெரேரா மற்றும் பீட்டர் கெனமன் ஆகியோர் தலைமை தாங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சமசமாஜக்கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த கூட்டணி அரசு பதவியிலிருந்தது.

ஆயுதம் ஏந்திய இயக்கமாக ஜனதா விமுக்தி பெரமுன உருவாகி, அதில் அங்கம் வகித்த ஏராளமான சிங்கள இளைஞர்களினால், அந்த கிளர்ச்சி எழுச்சிகொண்டது. எனினும் அரசின் அடக்குமுறையினால் அந்தப்போராட்டம் முறியடிக்கப்பட்டு, பலர்கொல்லப்பட்டனர், மேலும் பலர் சிறைவைக்கப்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை, போகம்பர, மகஸின், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட பல பிரதேசங்களில் அமைந்திருந்த சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் கொழும்பில் நீதியரசர் அலஸ் தலைமையில் குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நடைபெற்றது. அக்காலப்பகுதியில் இலங்கை ஊடகங்களில் அந்த விசாரணைகள் தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இன்று போல், அக்காலப்பகுதியில் உடனுக்குடன் செய்திகளை படிப்பதற்கான ஊடக சாதனங்கள் இருக்கவில்லை.

மேலும் படிக்க ...

கரிசல் மண்ணின் உயிர்த்துடிப்புடன் கூடிய மொழியில் யதார்த்தவாதப் படைப்புகளைத் தந்தவர் பூமணி !

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
14 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சில நாட்களுக்கு முன்புதான் இங்குள்ள டொரோண்டோ நூலகக் கிளையொன்றிலிருந்து எழுத்தாளர் பூமணியின் ஐந்து நாவல்களை உள்ளடங்கிய 'பூமணி நாவல்கள்' தொகுப்பினை, நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது, இரவல் வாங்கி வந்திருந்தேன். நேற்று அவரது மறைவு செய்தி வருகிறது, ஆழ்ந்த இரங்கல்.

தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானதோர் ஆளுமை. யதார்த்தவாதப் பாணியில், கரிசல் மொழியினை உயிரோட்டம் மிக்கவையாகப் புனையப்பட்டவை இவரது புனைவுகள்.

இந்திய மத்திய அரசின் சாகித்திய அமைப்பின் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். தனது 'கருவேலம் பூக்கள்' கவிதையைத் திரைப்படமாக்கி இயக்கியவர். 'அசுரன்' திரைப்பட மூலக் கதையும் இவருடையதுதான். அது இவரது 'வெக்கை' நாவலின் தழுவல்.

மேலும் படிக்க ...

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு சாதனை விருது - 2026! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
14 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 33 வருடங்களாக கனடாவில் இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்தகால சாதனைகளுக்காக ‘பிகைன்ட் மீ இன்ரநாசனல் மீடியாவால்’ 2026 ஆம் ஆண்டுக்கான சாதனை விருதான ‘லெஜன்ட் அன்ட் ஐகோன்’ (டுநுபுநுNனு’ளு ரூ ஐஊழுNளு) விருது கொடுத்துப் பாராட்டப் பெற்றது. இந்த நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமை 20-6-2026 ஆம் ஆண்டு, ரொறன்ரோ மக்னிக்கல் வீதியில் உள்ள பிரைட்டன் மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட சாதனையாளர்கள் சிலரும் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக புற்றுநோய் தடுப்பு சிறப்பு வைத்தியர்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. நிறுவனங்களுக்கான சிறப்பு விருது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு வழங்கப்பெற்றது.

மேலும் படிக்க ...

சனாதன தர்மம் பற்றிச் செயற்கை நுண்ணறிவுடன் நீண்டதோர் உரையாடல்! உரையாடியவர் வ.ந.கிரிதரன்

விவரங்கள்
உரையாடியவர் வ.ந.கிரிதரன்
நேர்காணல்
14 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
- சனாதன தர்மம் பற்றிச் செயற்கை நுண்ணறிவுடன் நீண்டதோர் உரையாடல்!  உரையாடியவர் வ.ந.கிரிதரன். -
அண்மையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி சனாதன எதிர்ப்பு  பற்றித்தெரிவித்த கருத்துகள் தமிழகத்துக்கப்பால், பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தன. ஆர்ப்பாட்டங்கள் பல உதயநிதிக்கெதிராக எழுந்தன. இந்நிலையில் சனாதனம் பற்றிய சரியான புரிதலை அறிய வேண்டும் என்னும் அவாவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவுடன் நடத்திய விரிவான உரையாடலிது. 
 
என் பல கேள்விகளுக்கு விரிவாகத் தனது கருத்துகளை எடுத்துரைத்தது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் கருத்துகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில் உள்ள உண்மை எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வுரையினை முழுமையாக வாசிக்கும் உங்களில் எவருக்காவது அவற்றில் முரண்பட்ட கருத்துகள் இருந்தால் அறியத் தரலாம். அது காத்திரமான  தர்க்கத்துக்கு வழி வகுக்கும்.
 
செயற்கை நுண்ணறிவு
 
சனாதன தர்மம் என்றால் என்ன
 
சனாதன தர்மம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும், இதற்கு "நிலையான தர்மம்", "நித்திய ஒழுங்கு" அல்லது "மாறாத நெறிமுறை" என்று பொருள். இது மனிதர்களால் உருவாக்கப்படாத, காலத்தைக் கடந்து எப்போதும் நிலைத்திருக்கும் இயற்கையின் அடிப்படை விதிகளையும் ஆன்மீகக் கொள்கைகளையும் குறிக்கிறது. நவீன காலத்தில், இது இந்து சமயத்தின் மற்றொரு பூர்வீகப் பெயராகவும், அதன் வாழ்க்கை முறையாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க ...

“கறிமுசா’: (ஓடை – iii) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
12 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“தங்க வேலாயுதபுரம்” – “அங்குதான் காணி வாங்கி இருக்கின்றேன். காட்டு தொங்கல். யானைகள் அலைந்து திரியும் காட்டு தொங்கல்”.

கிட்டத்தட்ட ஐந்து வருட காலத்தின் பின் இவனுடன் மீண்டும் பயணிக்கின்றேன்.

இந்த நான்கைந்து வருடங்களில் இவனில் எவ்வித மாற்றத்தையும் கண்டேனில்லை. அண்மையில் கூட முல்லை நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்று கண்ணீர் வடித்து விட்டு வந்திருந்தான்: “இடத்தை விட்டு வெளியே வரவே மிகுந்த கஷ்டப்பட்டு போனேன். இரண்டு மணி நேரம் குடும்பத்தாருடன் ஆட்டோவில்… அவ்வளவு சனம் அப்பிப்போய் இருந்தது”. கேட்டிருந்தேன்: “மற்ற நினைவேந்தல் தினங்களுக்கு நீங்கள் செல்வதில்லையா?

“இல்லை. மாவீரர் நாள்தான் என்னை உலுக்கி பிடிக்கும் தினம். எனது அருமை தோழர்கள் - இதயத்தை வருடும் எனது நண்பர்கள் - தங்கள் இன் உயிரை வந்த இந்த பெருநாள் - அடடா எப்படிப்பட்ட தோழர்கள்! எப்படிப்பட்ட வாழ்க்கை அது…”.

ஆனால் ‘காணிக்குச் சென்று வருவோமா’ என்பதே அவனது முதல் கோரிக்கையானது. ஒருவேளை தான் மிக அண்மையில் வாங்கி போட்டிருந்த அந்தக் காணியை எனக்குக் காட்ட அவன் ஆசைப்பட்டிருக்க கூடும் - அல்லது அவனுக்கே அங்கே செல்ல வேண்டிய ஒரு தேவையும் எழுந்திருக்கலாம். இருந்தும் இவை அனைத்தும் நான் சம்பந்தப்படாதது. ஆனால் உடனடியாக ஒப்புக் கொண்டேன். ‘காட்டு தொங்கல்’ என்ற பதத்தால் நான் பெரிதும் கவரப்பட்டேன்.

‘கடல் குளிப்பு’ என்று ஏற்கனவே நிச்சயித்திருந்த அன்றைய தினத்தை மாற்றி இவனுடன் புறப்பட்டேன்.

மேலும் படிக்க ...

எஸ்.ஜானகி - தன் கூவலை நிறுத்திய இசைக்குயில்!

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
12 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அடுத்தடுத்துத் தமிழ்த்திரையுலகின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா என்று இன்று தென்னிந்தியாவின் இசையரசி என்றழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகியை இழந்திருக்கின்றோம். இவர் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பங்குபோட்டுக்கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.

இசை, நடிப்பு, எழுத்து, பாட்டு, பேச்சு எனப் பல் துறைகளில் எம் இன்பதுன்பங்களில் பங்கு பற்றும் கலைஞர்கள் தம் கலைப்படைப்புகள் மூலம் எம் வாழ்வில் பின்னிப்பிணைந்தவர்கள். எம் இருப்பில் அவர்களுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. இவர்கள் மறைந்தாலும் இவர்கள் வழங்கிய கலைப்படைப்புகளுக்கு அழிவில்லை. அவை நிரந்தரமானவை. அவ்வகையில் தாம் சிறந்து விளங்கிய கலைகளூடு இவர்கள் மானுட சமுதாயத்தின் வரலாற்றில் தொடர்ந்தும் பயணிப்பார்கள்.

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை மற்றும் பாலியல்ரீதியிலான அழுத்தங்கள், வன்முறைகள் பற்றியும்...

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
11 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.

பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அதிகாரம் தலைவிரித்தாடும் அனைத்துத் துறைகளிலும் இந்நிலை இருப்பதை அறிந்திருக்கின்றோம். அரச உதவிகளில் தங்கியிருக்கும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மீது அவ்வுதவிகளை வழங்குவதற்குப் பொறுப்பான அரசியல் அதிகாரிகளால் பாலியல் ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அரசியல்வாதிகளால் இவ்வித அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததை அறிந்திருக்கின்றோம். இப்பொழுது அதிகமாகப் பல்கலைக்கழகங்களில் இவ்விதமான அழுத்தங்கள் மாணவிகள் மீது பிரயோகிக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
10 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி.  இப்பாடலை யு டியூப்பில் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=EmO3UvN7Cl4  ' வ.ந.கிரிதரன் பாடல்கள் ' சானலை 'Subscribe' செய்வதன் மூலம் உங்கள் வாசலுக்குப் புதிய பாடல்கள் விரைவாக வந்து சேரும். உங்கள் ஆதரவு 'சான'லின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருக்கும்.]


சக்தியும் , பொருளும்!  

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

பொருளென்று ஒன்றும் இல்லை என்றுகூறும்
பவுதிகத்தின் வழிநின்று பார்த்தால் கண்ணே!
அடிப்படைத் துணிக்கைகளும் சக்தியன்றோ கண்ணம்மா!
சக்தியின் நாட்டியமா நம்மிருப்பும் கண்ணம்மா!

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

மேலும் படிக்க ...

ம.ஆச்சின் கவிதைகள் (முன்னாள் தமிழ் நாடு தொல்லியல் துறை மாணவர்) -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
09 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. தொல்லியல் அறிஞர் எஸ். ராஜகோபால்: மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக் கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவர்!

மண்ணின் மடியில் மறைந்த சரித்திரத்தைக்
கண்ணின் ஒளியால் கிளறி எடுத்தவரே!
திண்ணிய பாறைத் திருவுடம்பில் தூங்கியநற்
பண்ணிய கதைகளைப் பாரறியச் செய்தவரே!
​தமிழி எனும்மூத்த தாயவளின் தொன்சுவட்டைப்
அமிழ்தனைய கையால் அசைத்துப் படித்தவரே!
புதையுண்ட காசுகளின் பொன்னான மாண்பையெல்லாம்
சபையேறி அன்று சாற்றி உரைத்தவரே!
​வீர நடுகல்லில் விம்மியெழுந்த வீரர்களைச்
சீரான நெஞ்சோடு இங்கு எழுப்பி நிறுத்தியவரே!
'ஆவண' ஏடெல்லாம் உம்முடைய முத்திரையே!
யாவருளர் ஐயா இனிமேல் உம்மைப்போல்?
​கல்லெழுத்தைத் தேடிக் களம்நோக்கி ஓடியநற்
காலடிகள் ஓயக் காரணம்தான் ஏனோ?
எல்லோர்க்கும் அச்செழுத்தைக் கற்றுத் தந்துவிட்டுச்
சொல்லாமல் கொள்ளாமல் சோகமாய் மறைந்ததென்ன?
​மௌனப் பழமையின் மாமொழியைப் பெயர்த்தவரே!
இன்றுநீரே ஏனோ மௌனமாய் ஆகிவிட்டீர்?
தொன்மை வரலாற்றைத் தொட்டுப் படித்தவரே!
இன்று வரலாறாய் நீரே மாறிவிட்டீர்!
​பாறை எழுத்துக்கள் தேய்ந்து அழியலாம்...
பாரில் உம்புகழ் என்றும் அழியாதே!
கண்ணீரில் மூழ்கிக் கசிந்துருகி நிற்கின்றோம்...
நெஞ்சில் நிலைத்தெழுந்த கல்வெட்டே நீரே!                       

மேலும் படிக்க ...

இத்தாலியப் பயணம்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
08 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எல்லாப் பாதைகளும் ரோமாபுரியை நோக்கிச் செல்கின்றன என்ற வாசகம், அக்காலத்து ரோம ராச்சியத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே, நாங்கள் ஏற்கனவே கட்டார் வழியாகச் செல்ல திட்டமிட்டிருந்த எங்களது இத்தாலியப் பயணம் திசை மாறியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டிருந்த போரின் காரணமாக மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் எங்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவே நினைத்திருந்தோம். ஆனால், இறுதி இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய கிழக்கைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல் வந்தது: “புறப்படுங்கள்” என்ற அறிவிப்பு.

அவர்களின் திட்டமிடலின்படி, எங்கள் பயணம் மெல்போர்னிலிருந்து தென் பசிபிக் சமுத்திரத்தைத் தாண்டி, சிலி நாட்டின் தலைநகரமான சாண்டியாகோ சென்றது. அங்கிருந்து தென் அமெரிக்கக் கண்டத்தைக் குறுக்காகக் கடந்து, அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேலாக பறந்து ஸ்பெயின் தலைநகரமான மாட்ரிட் சென்று, பின்னர் ரோம் சென்றடைந்தோம்.

சில நிமிடங்களில் பயணம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் தள்ளப்பட்டோம். ஒரு வருடத்திற்கு முன்பே பணம் செலுத்தி பதிவு செய்த பயணத் திட்டம் என்பதால் குழப்பம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் வரலாற்று நாயகர்களான ஜு லியஸ் சீசர்(Julius Caesar) மற்றும் மார்க் அந்தனி(Mark Antony) நினைவுக்கு வந்ததுடன் அவர்கள் எனது கையை பிடித்து அழைத்தது போன்ற நினைப்பு என்னிடம் எழுந்தது. சியாமளாவின் சம்மதமும் கிடைத்ததால், பயணத்தைத் தொடர முடிவு செய்தோம்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. படித்தோம் சொல்கின்றோம்: மாவை நித்தியானந்தனின் இரண்டு நாடகங்கள்! - முருகபூபதி -
  2. சிறுகதை: மாறவேண்டியது யார்? - பாலமுருகன். லோ -
  3. FeTNA இன் 39ஆவது மாநாடு! - ஶ்ரீரஞ்சனி -
  4. சிறுகதை: யானைகளும் மனிதர்களும் - ஜோதிகுமார் -
  5. இணையத்தில் இருந்து: ஆர்வமுள்ள மனதை வளர்த்தல் - டேவிட் அட்டன்பரோவின் 100 ஆண்டுகள் - டிஜி -
  6. நனவிடை தோய்தல்: அந்தக்காலத்து அரிக்கன் லாம்பு! - இந்து லிங்கேஸ் -
  7. நீலகிரி படகர்களின் தொல்மரபில் சங்கக் கூறுகள் - ‘மதிலு’ – ‘அக்க பக்க’ – ‘ஏகித்து கட்டோது’! - முனைவர்.கோ.சுனில்ஜோகி -
  8. நீலகிரி படகர்கள் எனும் ஆயர்கள்! - முனைவர்.கோ.சுனில்ஜோகி -
  9. அரங்க முகாமைத்துவம் : நாடக தயாரிப்பு திட்டங்கள் அடிப்படையில் மாணவரை நிர்வகித்தல்! - பா.பிரதாரிணி -
  10. எழுத்தாளர் தாமரைச்செல்வியின் படைப்புலகம் பற்றிய எனது பார்வை! - பவானி சற்குணசெல்வம் ( நெதர்லாந்து) -
  11. டிஜிட்டல் காலனியத்துவமும் 'தரவுமயமாக்கலுக்கு' எதிரான உடலும்: மஹ்மூத் தர்வீஷின் கவிதை வெளிவழியே ஓர் அல்காரித எதிர்ப்பு மெய்யியல் ஆய்வு! - ஏ.எச்.எம் நவாஷ் (ஈழக்கவி) -
  12. பெண்ணுரிமைப் புரட்சி: பாரதியாரும் பாரதிதாசனும்! - முனைவர் அ. கார்வண்ணன்
  13. நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை! - ஊர்க்குருவி -
  14. சிங்கத்தின் கண்கள்! - ஜோதிகுமார் -
பக்கம் 1 / 130
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி