

[மார்ச் 14] ஜெர்மன் சமூகவியலாளரும் தத்துவஞானியுமான ஜூர்கன் ஹேபர்மாஸ் அவர்கள் தனது 96’வது வயதில் நேற்றுக் காலமானார். அவர் , நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் .
பொதுவெளி உரையாடல் குறித்தும் தகவல் தொடர்பு நடவடிக்கை குறித்ததுமான அவரது ஆழ்ந்த தத்துவார்த்தப் பணியின் மூலம், அவர் அரசியல், தத்துவம் , ஜனநாயகக் கோட்பாட்டை சிலாகித்து , நோய்வாய்ப்பட்ட முதலாளிய அமைப்பை ஆரோக்கியமாக்க முனைந்த வைத்தியர்தான் ஜூர்கன் ஹொபர்மாஸ் . பொதுத்துறை கோட்பாடு மற்றும் தகவல்தொடர்புச் செயல்பாடு குறித்த அவரது பணிகள் உலகளவில் அரசியல் தத்துவத்தையும் மக்களாட்சிக் கொள்கையையும் ஆழமாக வடிவமைத்தன. அவரது எழுத்துக்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, சர்வதேச அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஜெர்மனியில் அரசியல் , சமூகவியல் , பொருளாதாரம் , மனிதவள மேம்பாடு சார்ந்த சட்டவாத விவாதங்களிற் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தினார். ஜூர்கன் ஹோபர்மாஸ் அவர்கள் , நாசிகளின் கடந்த காலத்தை மறுவாய்வுக்குள் உட்டபடுத்தியது முதல் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு பற்றிய கேள்விகள் வரை அவரது பங்களிப்புகள் இருந்தன.
அவரின் முதன்மையான படைப்பாக "தகவல்தொடர்புச் செயல்பாட்டுக் கோட்பாடு(Theorie des kommunikativen Hand)”கருதப்படுகிறது.
பிராங்பேர்ட் பள்ளிக்குள் இரண்டாம் தலைமுறை விமர்சனக் கோட்பாட்டின் மிக முக்கியமான பிரதிநிதியாக ஹேபர்மாஸ் இருந்தார். இவ்வாறு அவர் தியோடர் அடோர்னோ , மக்ஸ் ஹோர்க்கைமர் போன்ற சிந்தனையாளர்களின் படைப்புகளை எளிமைப்படுத்தி புதிய புதிய தத்துவார்த்த உத்திகளை உருவாக்கினார். அதே நேரத்தில், அவர் விமர்சனக் கோட்பாட்டின் பாரம்பரியத்தை தனது தனித்துவமான வழியில் உருவாக்கினார் என்பதே இன்றைய உலகின் முக்கியமான பணி .
ஜெர்மனியின் ஹைடெல்பேர்க் நகரிலுள்ள பேராடும் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஹேபர்மாஸ் அவர்கள் 1964’ஆம் ஆண்டு கோதே பல்கலைக்கழக வளாகமான பிராங்பேர்ட்டில் தத்துவம் மற்றும், சமூகவியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார், இந்த பதவியை முன்னர் ஹோர்கைய்மர் வகித்தார் என்பது இங்கு ஈண்டு உரைக்கத் தக்கது ! 1968’ஆம் ஆண்டு அவர் ஆற்றிய தொடக்க உரை, அறிவும் நாட்டமும் (Erkenntnis und Interesse ) என்ற புத்தகத்திற்கு வழிவகுத்தது. 1968’ஆம் ஆண்டு மாணவர் கிளர்ச்சியின் போது, அவர் ஆரம்பத்தில் ஒரு ஆதரவாளராகக் கருதப்பட்டார்,எனினும் , பின்னய காலத்தத்து இயக்கத்தின் தீவிரமயமாக்கலுக்கு எதிராகத் திரும்பினார்.
அவரது முக்கியப் படைப்பாக 1981 இல் வெளியிடப்பட்ட தகவற் தொடர்பு நடவடிக்கையின் கோட்பாடு கருதப்படுகிறது. அதில், பகுத்தறிவு உரையாடல் மற்றும் , பொது விவாதம் மூலம் சமூக புரிதல் எழுகிறது என்ற கருத்தை ஹேபர்மாஸ் உருவாக்கினார். இந்தப் படைப்பு 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் மிகவும் செல்வாக்கு மிக்க தத்துவ வெளியீடுகளில் ஒன்றாகும்.
தனது இறுதி ஆண்டுகளில் கூட, ஹேபர்மாஸ் அரசியல் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கொசோவோ போர் குறித்தும் , மூளை உழைப்பு / ஆராய்ச்சி மற்றும் , மதத்திற்கும் , மதச்சார்பற்ற சமூகத்திற்கும் இடையிலான உறவு பற்றிய விவாதங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். உக்ரைனுக்கு எதிரான உருஷ்யாவின் போர் தொடர்பாகவும் பத்திரிகையில் (Süddeutschen Zeitung ) எழுதிய இரண்டு கட்டுரைகள் கவனத்தை ஈர்த்தன, அதில் அவர் சரியான நேரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வாதிட்டார். அவரது இழப்பு அறிதல் /ஆய்தல் உலகுக்கு பேரிழப்பாகும் !
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி