2

விவசாயிகள், தொழிலாளிகள், புரட்சிகள், பாதுகாப்பரண்கள் - இவை,அனைத்துமே கிளிம்மின் வாழ்நிலைக்கு ஒவ்வாததாக இருக்கின்றன. போதாதற்கு, ஒரு வகையில், இவற்றின் ஒட்டு மொத்த பிம்பமாய் அல்லது உருவகமாய் திகழ முற்படும் மார்க்சிஸ்டுகள் பொறுத்தும், அவன் தன் அந்தரங்கத்தில், ஏளனமும் ஒரு வகை வெறுப்பும் கலந்த உணர்வினைக் கொண்டவனாய் இருக்கின்றான். ஒரு பாத்திரம், மார்க்சிஸ்டுகள், பொறுத்த தன் கருத்தைக் கூறும்:

“அவர்களிடம் நீ அறத்தைப் பற்றியோ அல்லது வாய்மைகள் பொறுத்தோ கதைப்பது என்பது உனது நேரத்தை வீணடிக்கும் செயல்தான். அறம் என்ற, அப்படியான ஒன்று அவர்களிடம் இல்லவே இல்லை. அப்படியே இருந்தாலும் கூட, அது ‘அவர்களது’ அறங்களாக அல்லது அவர்களது‘வாய்மைகளாக’ மாத்திரமே இருக்கின்றது. அவர்கள் நம்புகிறார்கள்: உ;ன்னை விட, என்னை விட அவர்களிடம் அதிகளவில், உண்மையான மனித நேயம் இருப்பதாக… ஒரு, ‘தனி மனிதனைப்’ பற்றி; அதாவது ஒரு தனி ;நபரை’ பொறுத்து அவர்களிடம் நீ கதைப்பது என்பது உதவாத ஒரு விடயமாகிறது. நேரத்தை வீணடிப்பது. “மனிதன்”– அது பிற்பாடு என்கிறார்கள் அவர்கள். முதலில், சுயமான முளைத்தலுக்காய், மண் பண்படுத்தப்படட்டும். பின்னரே ‘மனிதன்’! நீ கூறும், ‘மனிதன்’ என்பவன் யார்? அவன் எங்கிருக்கிறான் என்று கேட்கிறார்கள். கூறுகிறார்கள்: இருப்பது எல்லாம் வெற்று அடிமைகள். மண்டியிட்டு, அல்லது நன்றாய், நீட்டிசா~;டாங்கமாய் வணங்கத் தெரிந்த அடிமைகள்… அவ்வளவே…”

ஆனால் கிளிம்மின் நிலைமையோ வேறு வகையில் தர்க்கிக்கின்றது. லட்சோப லட்ச மக்கள் இதே ஆதிக்க சக்திகளின் முன் வெறுமனே தம்மைச் சமர்பித்து, மண்டியிடத்தானே செய்கிறார்கள் என்பதே, அது. இருந்தும், அவ்வப்போது, அவனது நினைவில் நெருடும் இன்னும் ஒரு விடயம்: ‘சரி. அப்படி என்றால் இந்த மக்கள் போராளிகள் எனப்படுவோர்? இவர்கள் வெறும் கற்பனைப் பிரியர்களா – அல்லது நூல்கள் - வெறும், அச்சடித்த காகித நூல்கள் - இவர்களுக்கு இந்தளவிற்கு திராணியை தருகின்றதா…? பாதுகாப்பு அரண்கள், கட்டுகின்றார்களாம்… கட்டினால் என்ன? சுடத்தானே செய்வார்கள்?   “இரண்டு மூன்று டசின் மனிதர்கள்…ம்… வரலாற்றை தோற்றுவிக்கின்றார்களாம்!”– அவன் மனம் தொடர்ந்து ஏளனத்துடன் எக்காளமிடும்.

முதலாவது எதிர்ப்பலை ஒடுங்க – நொறுக்கப்படும் பாதுகாப்பரண் - ராணுவத்தினரால் நெருப்பிட்டு அகற்றப்படுகின்றன வீதியிலிருந்து. அதில் இறுக்கப்பட்டிருந்த உறைபனி, உருகி, எரிந்த சாம்பலுடன் கலந்து, தெருவழியாக மெதுவாக ஓடும். இதனை தன் மாடியில் இருந்து ரசித்துப் பார்க்கும் கிளிம், தனக்குள் முணுமுணுப்பான்: “பனிபுகாரில், இதுவும் ஓர் ஓவியத்தைப் போல…”

இப்படியாய், அந்நியப்பட்டு, தன்னை சுற்றி குறித்த ஓர் வேலியை அமைத்துவிடும் அவன், தனக்குள்ளாகவே ஓர் தீர்மானத்தை பெற்று கொள்கிறான்.: “உயரத்தில், கயிற்றில் நடப்பது போல், நடக்கின்றேன், நான். உண்மைத்தான் - இந்த நாளாந்த நிகழ்வுகள் - நடைமுறைகள் யாவும் என் வாழ்க்கைக்கு எவ்வகையிலும் ஒவ்வாதவை… ஊறு விளைவிப்பவை…”

இருந்தும், இதுவரை, அதாவது இப்பாதுகாப்பு அரண்கள் ராணுவத்தினரால் அடித்து நொறுக்கி அகற்றப்படும் வரை -இவன், இப்பாதுகாப்பரணின் சூத்திரதாரி என அந்நகரின் சில வட்டங்களிலேயும், ‘எமது தோழர்’ என்று இன்னும் சில வட்டங்களிலேயும் மரியாதையுடன் நினைக்கப்படுபவன் தான் இவன். இருந்தும்; இந்த கணங்களில் கூட, அவன் தனக்குள்ளாகவே, அந்தரங்கமாய், வன்மத்துடன் முணு முணுத்துக் கொள்ளும் பாடல்: “பொறு…பொறு…நான் என் பாடலைப் பாடும் வரை…’ என்பதாகும். ஒரு வகையில் பார்ப்போமானால்: கிளிம்மின், அத்தகைய ஓர் பாடலை நோக்கிய – அல்லது அப்பாடலின் உருவாக்கத்தை நோக்கிய, பயணமாக கூட, இந்நாவல் கட்டமைக்கப்படுகிறது எனலாம். அதாவது, ‘கயிற்றின் மேல் நடப்பது’ அல்லது ‘தன் பாடலை’ பாடுவதற்கான சரியான ஒரு தருணத்தை எதிர்பார்த்து காத்து நிற்பது –அல்லது இவை பொறுத்த கணிசமான பிரக்ஞையை உள்ளடக்கி கொள்வது, என்பவனாக ஒட்டுமொத்தத்தில், கிளிம் கால நகர்வில், நடக்க தொடங்குகிறான்.

இத்தகைய ஒரு பிரக்ஞையின் தவிர்க்க முடியாத – அல்லது தருக்க ரீதியான மறுபக்கமாக–அப்பிரக்ஞை மேற்கூறியவாறு, ஓர் தத்துவத்தை தனக்காக தேடுகின்றது – தனது இருப்பை நியாயப்படுத்தி கொள்ளவும் அல்லது தனது இத்தகைய பிரக்ஞைக்கான – ஓர் பலத்தை, ஓர் நம்பிக்கையை, தேடி கொள்ளவும். இது, நாவலின் சித்தரிப்புகளுக்கு மேலும் பலம் சேர்க்கின்றது. இது தொடர்பில் சிந்தனையில் ஆழும் கிளிம்முக்கு சமயங்களில் தட்டுப்படும்: தான்,பெரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட, சரித்திரபூர்வமான, தனித்துவமான, தத்துவச்செழுமை மிக்க ஏதோ ஒரு அதிமுக்கிய உண்மையை எட்டிப்பிடித்து விட்டாற் போல். மேலும், இவ் உண்மையானது, இதுவரை தன்னைப் பற்றி பிடித்திருக்கும் அனைத்து சுற்று சூழல் முரண்களில் இருந்தும், தன்னை சுற்றி கிடக்கும், அனந்த நூல்களின் தத்துவங்கள்-கருத்தாக்கங்கள் என்பவற்றில் இருந்தும் தன்னை காப்பாற்றி விடுவித்து, உயரே தன்னைப் பாதுகாப்பாய் நிலைநிறுத்திவிடும், என்றும் கணிக்கின்றான் அவன். இருந்தும் ஏதோ ஒரு சக்தி, அவனது இத்தகைய சிந்தனைத் தொடரை அவனளவில் பூரணப்படுத்தி,– அவ்உண்மையை சென்றடைய முடியாமல் அவனைத் தடுத்து விடுகிறது. அச்சிந்தனைச் சங்கிலியின் இறுதிக் கண்ணி வரை, அவனால் சிந்தித்துத்தெளிந்து அதை முழுமையாக்க முடியாமல் போகின்றது. ஏதோ ஒன்று அவனை அப்படி முடியாமல் செய்து விடுகின்றது – அல்லது ஒடுக்கி விடுகின்றது.

எந்த ஒரு தத்துவத்தை அவன் இப்படியாக அடைந்து விட பிரயத்தனப் படுகின்றான்? அப்படி இவனை காப்பாற்றி விடக்கூடிய ஒரு தத்துவம் எங்கே வாழ்கின்றது? எந்த ஒரு சக்தி அவனது சிந்தனை சங்கிலியை முழுமையாக்க முடியாமல் தடை செய்வது? கிளிம்மின் தத்துவ தேடல் முகம் கொடுக்கும் சிக்கல்களில், இதுவும் ஒன்றாகின்றது. இத்தகைய ஓர் சூழ்நிலையிலேயே அவன் குமோவ் என்ற ஓர் பாத்திரத்தையும் சந்திக்க நேர்கிறது.

குமோவ்,பரிபூரண சுதந்திரத்தை – அல்லது பரிபூரண விடுதலையை நாடுபவனாக இருக்கின்றான். கடவுளுக்கும் அப்பால் - அறிவு, தர்க்கம் - இவை இரண்டுக்கும் அப்பால் - தனது அக உலகின் அல்லது அக மனதின் தர்க்கத்திற்கு இசைவாக – அவனது தேடல் கட்டமைக்கப்படுகிறது. மனிதனானவன் முதலில் தன்னை கண்டுப்பிடித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பின்னரே மற்றது. இதற்கு தேவைப்படுவது, முதலில், ஒரு பிரபஞ்சப் பார்வையே, என்று முடிவு செய்கிறான் அவன்.

மற்றவை அனைத்தும் - முக்கியமாக ஆஐஊசுழுஊழுளுஆ– என்பவை அனைத்தும் - அவனது –அதாவது, இந்த மனிதனது கண்டுப்பிடிப்புகளே. மனிதன் ஆயுஊசுழுஊழுளுஆ பார்வையை கொண்டிருக்கும் போதே அவன் தன்னையும், தன் பரிபூரண விடுதலையையும் ஒன்று சேர கண்டுணர முடியும், என்பது அவனது முடிவு. குமோவ் அபிப்பிராயப்படக் கூடிய இப்பிரபஞ்ச விடுதலை அல்லது பிரபஞ்சப் பேரொளியின் தரிசனம் என்பது எமது தமிழ் இலக்கிய உலகில் நெடுங்காலமாய் வாசம் செய்து வரும் ஒரு கீற்றுதான். கிளிம்முக்கு இவ்வாதங்கள் குறைபாடுடையனவையாகத் தோன்றினாலும், கிளிம்மினது அப்போதைய உணர்வு நிலையுடன் ஒத்துப்போவதை கிளிம் இனம் கண்டு கொள்கிறான். இருந்தும் கிளிம் கோரக்கூடிய தத்துவம் அல்லது அரசியல் இதனுடன் மட்டும் மட்டுப்பட்ட ஒன்றல்ல, என்பதனையும் மறுபுறமாய் கிளிம் தெளிவாகவே புரிந்து கொள்கின்றான். ஆக கேள்வி: யார் இந்த கிளிம்? அவன் தேடும்,அல்லது அவனை சாந்தப்படுத்தக் கூடிய அந்த தத்துவம் தான் என்ன? அவனது பாடல் யாது?

[ தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.