
கவிதை அறிமுகம்: இக்கவிதை கிரேக்கத்தின் பழம் பெரும் உறுதிப்பாட்டு வாதத்தை (Stoicism) அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நம்முடைய எண்ணங்கள், செயல்கள் மற்றும் எதிர்வினைகள் ஆகியவற்றை நம்மால் முறைப்படுத்த முடியும். நமது கட்டுப்பாட்டில் அடங்காத பிறர் கருத்துக்கள், காலநிலை, மற்றும் எதிர்காலம் போன்றவற்றை நம்மால் முறைப்படுத்த இயலாது. எனவே அவற்றைத் தக்க முறையில் புரிந்து அப்படியே ஏற்றுக் கொண்டு நடுநிலையோடு இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் சமமாகப் பாவித்து வாழும் ஞானியின் மனநிலையைப் பெற முயற்சிக்க வேண்டும் என்பதே இத்தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு.
எனவே 1841 இல் எமிலி பிரான்டே எழுதிய இக்கவிதை அவரின் ஞானி(ஸ்டாயிக்) மனநிலையை காட்சிப்படுத்துகிறது எனக் கொள்ளலாம்.
கவிதை:
பொருளதன்மேல் எம்மின் விருப்பு அருகியதே
பெருஅன்பினை எள்ளிப் பரிகசிப்பேன் யான்
உருபுகழ் எமக்கு வெறுங் கனவே!
வருகாலை மறைந்திடும் அதுவே!
ஒருவேளை நான் பிரார்த்தித்தால், அந்த
ஒரேயொரு பிரார்த்தனை என்அதரத்தை எனக்காக
அசைத்திடும், 'யான்சுமக்கும் இதயத்தை விட்டொழிய
இசைந்து நல்கிடு சுதந்திரத்தையென'.
ஆம், இலக்கை நோக்கி விரைந்திடு நாட்களில்
மலங்கி மன்றாடிக் கேட்பது அவ்வளவே
'இருப்பிலும் இறப்பிலும் பிணைப்பிலா எனதுயிர்
பெரு துணிச்சலுடன் சகித்திடல் வேண்டுமென'.
The Old Stoic - Emily Bronte
Riches I hold in light esteem,
And Love I laugh to scorn;
And lust of fame was but a dream,
That vanished with the morn:
And if I pray, the only prayer
That moves my lips for me
Is, “Leave the heart that now I bear,
And give me liberty!”
Yes, as my swift days near their goal:
‘Tis all that I implore ;
In life and death a chainless soul,
With courage to endure.'
– Emily Bronte
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.











