நினைவுக் குளியல் (6) கனவுகளும் மாறிய நிஜங்களும்! -தேவகாந்தன்-

கிராமச் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு, பள்ளிக்கூட வசதிகள் ஏற்பட்டு அவர்களது குழந்தைகள் படிக்க நேரிட்ட காலத்திலும், அவர்கள் டொக்டராகவோ என்ஜினியராகவோ எக்கவுண்டனாகவோ வரவேண்டுமென்ற ஆசைகள் பெற்றோரிடம் பிறப்பதில்லை. குறைந்தபட்சம் கச்சேரியில் ஒரு எழுதுவினைஞர் வேலையோ, பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் ஒரு உபாத்தியார் வேலையோதான் கனவாக வரும். பெண்கள் மேலாக அதுகூட ஏற்படுவதில்லையென்றுதான் நினைக்கிறேன். எழுதவும், கூட்டிக் கழித்துப் பார்க்க ஏதோ கொஞ்சம் கணக்கும் படித்திருந்தால் போதுமென்பதுதான் கிராமத்தில் கல்வியால் எதிர்பார்க்கப்பட்டதின் உச்சபட்ச எல்லை.
அந்த எல்லைகள் அபூர்வமாக மீறப்படலாம். படிக்கிற பிள்ளைகளிடத்தில் பெற்றோரினது மாதிரியாவது கனவு வருமாவென்பது எனக்குத் தெரியாது. ஆனால் எட்டாம் வகுப்பில் நுழைவதன் முன்பாக எனக்கு ஒரு கனவு வந்தது. அது ஒரு சனிற்றறி இன்ஸ்பெக்டராக ஆகவேண்டுமென்ற கனவு.
தமாஷாக இல்லையா? இருக்கட்டும்! விளக்கமாக விஷயத்துக்கு வருகிறேன்.
முந்திய நூற்றாண்டில், அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டில், தொடர்ந்து வாந்திபேதி நோயினாலும், பின்னால் மலேரியா எனப்படும் காட்டுக் காய்ச்சலாலும் ஏற்பட்ட மனித அழிவு சுகாதார விஷயங்களில் கூடுதலான கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. அதிகமான சுகதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தொற்றுத் தடுப்பு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன. சில செல்வந்தர்களும் தமது சொந்தப் பணத்தில் இவ்வாறான உயிர்காக்கும் செயற்பாங்கில் இருந்திருந்தார்கள்.



ஒரு இலக்கியப் படைப்பின் ஜீவன் என்பது காலத்தால் தன் வர்ணங்களையும் வாசனைகளையும் இழக்காது இருப்பதற்கு , அதே காலத்திற்குரிய மானுட வாழ்வியல் முறைகளும் , அவர்களின் உணர்வுகளும் எவ்வாறு இன்றைய வாசகருக்குள் கடத்தப்பட்டு உயிர்பெறுகின்றன என்பது முக்கியமானது. அவ்வாறான இயல்பான படைப்புகளில் அன்றும் இன்றுமான ஒப்பீடு மிகவும் சுவாரசியமாக அமைகின்றது.
அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் பாட்டி சொன்ன புராண, இதிகாசக் கதைகள்” என்ற நூலும், அண்மையில் நிகழ்ந்திருந்த ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் பெயரில், பண்டத்தரிப்பிலுள்ள ஜே. எஸ். அச்சகத்தினூடாக, கண்கவர் படங்களுடன் இதனை அவருடைய மகள் பபி இரவி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.

தேவதேவனின் சொல்லாளுகைத் திறனை அறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை பயணிக்கிறது. இதற்குத் தரவாக தேவதேவனின் ‘நல்லதோர் வீணை’ கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் சில கவிதைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சொல்லாளுகைக் குறித்தும் சொல்லாளுகைத் திறனாய்வு குறித்தும் கட்டுரையின் தொடக்கத்தில் தெளிகிறோம். பின்னர், சொல்லாளுகைக் கருவிகள் குறித்த தெளிவோடு, பரவலாக தேவதேவனின் கவிதைகளில் பயின்று வந்த சொல்லாளுகைக் கருவிகளை அடையாளம் காண்கிறோம். கையோடு, அவை வாசகரிடத்தில் ஏற்படுத்தும் விளைவு குறித்தும் ஆராய்கிறோம். முடிவாக, தேவதேவன் தன் கவிதைகளில் எத்தகைய சொல்லாளுகைக் கருவிகளின் வழி, வாசக எதிர்வினையைக் கட்டமைக்கிறார் என்று தொகுத்து காண்கிறோம். இவ்வாய்வுக் கட்டுரையில் சொல்லாளுகை அனுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.



டொரோண்டோ நூலகத்தின் சேகரிப்புப் பிரிவுக்கு எழுத்தாளர்கள் நேரடியாக நூல்களை விற்பது பற்றி எழுதியிருந்தேன். உடனடியாக மூத்த சேகரிப்பு நிபுணர் (Senior Collections Specialist) நிக்கோல் கோக்கர் (Nicole Coker) பதில் அனுப்பியிருந்தார். மிகவும் பயனுள்ள பதில், உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.


20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1930–1940கள்) ஈழத்துத் தமிழ் புனைவுலகம், தென்னிந்திய அச்சு ஊடகங்களின் பெருக்கத்தினால் ஏற்பட்ட அழகியல் ஆதிக்கத்திற்குச் (Cultural Hegemony) முகங்கொடுக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் இருந்தது. இக்காலகட்டத்தில், தமிழ்நாட்டின் வணிகச் சஞ்சிகைகளின் தழுவல் போக்கிலிருந்து விலகி, ஈழத்துக்கே உரிய மண்வாசனை, நிலப்பரப்பு, வர்க்கக் கட்டமைப்புகள் மற்றும் வாழ்வியல் சிக்கல்களை முதன்மைப்படுத்தி "சுதேசியச் சிறுகதை மரபை" (Indigenous Short Story Tradition) வடிவமைத்த முதன்மை இலக்கியச் சிற்பியாக அ.செ. முருகானந்தன் (1921–1998) திகழ்கிறார்.
சங்கக் கால தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை வாழ்ந்து வந்தனர். அதன் விளைவாக எழுந்த படைப்பிலக்கியமே சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களின் மூல ஆதார நூலகவே பார்க்கப்பட வேண்டும். அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் பண்பாட்டு நெறியோடு வாழ்ந்து வருவதே இலக்கியங்கள் மூலம் நன்கு உணர்த்துக் கொள்ள முடியும்.

[ எழுத்தாளர் வாசுகி நகுலராஜாவின் பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய நூல் வெளியிட்டு நிகழ்வில் எழுத்தாளர் க.நவம் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]




ஒரு மனிதன் தனது வாழ்க்கைக்கான கனவுகளைத் தானே உருவாக்குகிறானா? அல்லது வரலாறும் அரசியலும் சமூகமும் பொருளாதாரச் சூழலும் அவனுக்கான வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கின்றனவா? இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு, ஈழத்திலிருந்து கனடா வரையிலான ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை மட்டுமல்லாமல், போர், இடப்பெயர்வு, புகலிடம், அடையாளத் தேடல், மனித உறவுகள், இலட்சியங்கள் ஆகியவற்றின் சிக்கலான ஊடாட்டத்தையும் பதிவு செய்யும் நாவலாகப் பொ. கருணாகரமூர்த்தியின் ‘கனவுகளின் வரைபடம்’ அமைகிறது.

இலக்கியம் என்பது காலத்தின் அசைவுகளுக்கேற்பத் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக் கொள்ளும் ஒரு ஜீவநதி. அது தேங்கி நிற்கும் தேக்கமன்று; புதிய நதிகள் வந்து சங்கமிக்கும் போதெல்லாம் தனது ஆழத்தையும் அகலத்தையும் பெருக்கிக் கொள்ளும் ஓயாத பெருவெள்ளம். மனித குலத்தின் ஆதி மொழியிலிருந்து இன்றைய மின்னனு யுகத்தின் கணினி வரிகள் வரை, கதையாடலின் வடிவம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் புதிய இலக்கிய வடிவங்களும், உத்திகளும், அழகியல் கோட்பாடுகளும் மொழியை உயிர்ப்புடன் வைப்பதுடன், மனித மனத்தின் விவரிக்க முடியாத ஆழங்களை அளந்தறியும் கருவிகளாகவும் செயல்படுகின்றன.
அஜர்பைஜானின் தலைநகர் பாகுவிலிருந்து எங்கள் அடுத்த பயணம் ஷமகி (Shamakhi) என்ற பழமையான நகரத்தை நோக்கி இருந்தது.









