அருண்மொழிவர்மனின் 'துணைக்கோடல்' நேர்காணல்களின் தொகுப்பு பற்றிய பார்வை! - வ.ந.கிரிதரன் -

அண்மையில் டொராண்டோவில் வெளியான எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் நூல்களிலொன்று 'துணைக்கோடல்'. ஆளுமைகள் பலருடனான அருண்மொழிவர்மன் நடத்திய நேர்காணல்களின் தொகுப்பு. நூல் ஆளுமைகளின் தோற்றங்களை வெளிப்படுத்தும் கோட்டோவியங்களுடன் , சிறப்பாக வடிவமைக்கப்பட்டு 'தாய்வீடு' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
நூலின் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆளுமைகள் பலரின் ஆளுமைகளைப் பல்வேறு கோணங்களில் அறிந்திட எம் சிந்தனை விருத்திக்கு அவற்றைத் துணையாகக் கொள்ளக்கூடிய நேர்காணல்களை உ ள்ளடக்கிய நூலுக்கு மிகவும் பொருத்தமான பெயர்.
நூலில் எங்குமே ஏன் நூலுக்குத் துணைகோடல் என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிக் குறிப்பிடாதது ஆச்சரியத்தைத் தந்தது. 'துணைக்கோடல்' நூல் பற்றிய தனதுரையில் துணைக்கோடல் அறிவு சார்ந்த அறநெறியையும், அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ளல் என்று எழுத்தாளர் ப.ஶ்ரீஸ்கந்தன் குறிப்பிட்டார். இறுதியில் நூல்கள் பற்றிய தனது கருத்துகளைக் கூறிய எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான க.சண்முகலிங்கம் அவர்களும் 'துணைக்கோடல்' என்னும் சொல்லுக்கு அர்த்தம் என்ன? ஏதாவது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா என்று தன் சந்தேகத்தைத்தான் எழுப்பியிருந்தார். திருக்குறளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் திருக்குறளின் 45ஆவது அதிகாரம் 'பெரியாரைத் துணைக்கோடல்' என்பதை அவர் தவற விட்டது ஆச்சரியத்தைத் தந்தது.
துணைக்கோடல் என்றால் துணையாகக் கொள்ளல் (கோடலுக்குக் கொள்ளல் என்றும் அர்த்தமுண்டு). பல்துறைகளைச் சேர்ந்தவர்களின் அனுபவத்தால் விளைந்த அறிவு முத்துகளைத் துணையாகக் கொண்டு எம் அறிவின் எல்லையைக் கூட்டுபவை இவ்விதமான ஆளுமைகளுடனான நேர்காணல்கள். அவ்வகையில் துணைக்கோடல் கவித்துவம் மிக்க, சிந்தனையை விரிவடைய வைக்கும் சிறப்பான தலைப்பு. அதனால்தான் 'பெரியாரைத் துணைக்கோடல்' என்னுமோர் அதிகாரத்தை வள்ளுவர் திருக்குறளில் உள்ளடக்கியுள்ளார். பெரியாரைத் துணையாகக் கொள்ளல் என்பதே பெரியாரைத் துணைக்கோடல் என்னும் சொற்பதத்தின் அர்த்தம். இங்கு பெரியாரை என்னும் போது அவர்தம் அறிவுரையை, நட்பைப் பெற்றுக்கொள்ளல் என்பதையே அவ்வதிகாரத்திலுள்ள குறள்கள் கூறுகின்றன என்று உரையாசிரியர் பலரும் கருதுகின்ன்றனர். ஆட்சியாளர் தொடக்கம் சாதாரண மானுடர் வரை பெரியாரைத் துணைக்கோடல் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதை வற்புறுத்தும் அதிகாரம்.
அண்மைக்காலத்தில் நான் வாசித்த நூல்களில் என்னைக் கவர்ந்த நூல்களில் ஒன்றாக இந்நூலைக் குறிப்பிடுவேன். பொருளாழம் பொதிந்த சொற்கள், ஆளுமைகளின் நேர்மையான எண்ணங்களின் வெளிப்பாடு, நாமறியாத அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்கள், பல்துறை சார்ந்த அவர்கள்தம் சிந்தனை வீச்சு இவையெல்லாம் இந்நேர்காணல்களில் என்னைக் கவர்ந்தவை. நேர்காணல்களில் இவை நன்கு வெளிப்படும்படி வினாக்களைத் தொகுத்திருப்பது அருண்மொழிவர்மனின் ஆளுமையை வெளிப்படுத்துகின்றது.
இந்நேர்காணல்களுக்காக அருண்மொழிவர்மன் குறிப்பிட்ட ஒரு துறையிலிருந்து ஆளுமைகளைத் தெரிவு செய்யாமல் பல்துறைகளைச் சார்ந்து தெரிவு செய்திருக்கின்றார். அது ஒரு திறமையான அணுகுமுறை. பல்துறைகளைச் சார்ந்து தெரிவு செய்திருந்தாலும், அவ்வாளுமைகளின் பங்களிப்பு எவ்விதம் தமிழ் மொழிக்கு உறுதுணையாக விளங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தேர்ந்தெடுத்திருக்கின்றார். அது நூலை வாசிக்கையில் மொழிசார்ந்த புத்துணர்வையும், ஆர்வத்தையும் தருகின்றன.
'பொங்குதமிழ்' எழுத்துரு மாற்றியை இலவசமாக , அனைவரும் பாவிக்கும் வகையில் வழங்கிய சுரதா யாழ்வாணனின் கணித்தமிழுக்கான பங்களிப்பு முக்கியமானது. பதிவுகளின் இணைய இதழின் ஆசிரியனான நான் இன்றுவரை அதனைப் பாவித்து வருகின்றேன். ஒருகுறியில் அனுப்பாமல் , பாமினி போன்ற ஏனைய எழுத்துருக்களில் அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதற்கு நான் பாவிப்பது 'பொங்குதமிழ்' உருமாற்றியைத்தான்.
'அலை' யேசுராசாவின் கலை, இலக்கியக்கருத்துகளை வெளிப்படுத்தும் நேர்காணல் கருத்துகள் முக்கியமானவை. முற்போக்கு எழுத்தாளர்களுடனான கருத்து முரண்பாடுகள் அவர்கள்தம் கலை, இலக்கியச் சிந்தனைகள், அரசியல் பற்றியது எனக்குறிப்பிடும் யேசுராசா செ.கணேசலிங்கனின் நாவல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவரது 'நீண்ட பயணம்' முக்கியமானது என்று பாராட்டுகின்றார். செ.க ஆரம்பத்தில் தன் உணர்வுகளை நேர்மையாகப் பதிவு செய்து எழுதிய படைப்பு அது என்றும், பின்னர் அவர் எழுதிய பல நாவல்கள் கட்சி அரசியலுக்குள் சிக்குப்பட்டு அதற்கமைய எழுதியவை என்றும் தன் விமர்சனத்தை முன் வைக்கின்றார்.
பேராசிரியர் நா. சுப்பிரமணியன் தன் ஆசான் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை பற்றி தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் பயனுள்ளவை. பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளையின் ஆய்வுச் சிறப்பு, சாசனவியலில், குறிப்பாகச் சாசனத்தமிழில் அவரது புலமை என்பவற்றை வெளிப்படுத்தும் கருத்துகள் அவை. தமிழர் காலகட்டத்தை அவர் இயற்கை, அற, சமய , தத்துவ & அறிவு நெறிக்காலங்களாகப் பிரித்திருப்பது பற்றி, சாசனங்களில் காணப்படும் பண்டைத்தமிழரின் பேச்சு மொழி பற்றியெல்லாம் சிறப்பாக எடுத்துரைக்கும் கருத்துகளை உள்ளடக்கிய நேர்காணல்.
எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எஸ்.கே.விக்கினேஸ்வரின் கலை,இலக்கியச் சிந்தனைகள், பங்களிப்புகள் , பல்கலைக்கழகக் காலத்துக் காந்திய அமைப்புச் செயற்பாடுகள் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கின்றேன். அவரது தமிழர் போராட்ட அமைப்பு ரீதியிலான அனுபவங்களை ஓரளவே அறிந்திருந்த எனக்கு மேலும் பல தகவல்களைத் தருகின்றது தொகுப்பில் இடம் பெற்றுள்ள நீண்ட நேர்காணல்.
தொகுப்பிலுள்ள ஏனைய நேர்காணல்கள் எழுத்தாளர் குறமகள், சிலம்புக்கலை வல்லுநர் ஆதிசிலம்பம் பத்மகுமார், கலை, வரலாற்று விரிவுரையாளரும், கவிஞருமான பா.அகிலன் & திராவிடவியல் மற்றும் தொல்லியல் அறிஞர் ஆர்.பாலகிருஷணனுடனானவை. குறமகளின் சொந்த வாழ்பனுபவங்களை, கலை, இலக்கிய அனுபவங்களை நேர்காணல் வெளிப்படுத்துகின்றது. சிலம்புக்கலை வெறும் தற்காப்புக்கலை மட்டுமல்ல, தமிழர்தம் பண்பாட்டுடன் இணைந்த கலை என்பதைக் கனடாவில் சிலம்புக் கலையைக் கற்பித்துவரும் ஆதிசிலம்பம் பத்மகுமாரின் நேர்காணல் மூலம் எடுத்துரைக்கின்றது. மரபுரிமைச் சின்னங்கள் பேணப்படுதலின் அவசியத்தை வலியுறுத்துவதுடன், அவற்றை ஆவணப்படுத்துவதிலும் செயற்பட்டும் வருபவர் பா.அகிலன். இவற்றிலான அவரது அனுபவங்களையும் , அவரது கவிதைப் பங்களிப்பையும் அவருடனா நேர்காணல் மூலம் அறிய முடிகின்றது. திராவிடவியல் மற்றும் தொல்லியல் அறிஞர் சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகத்தை அடித்தளமாகக் கொண்டது என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் எடுத்துக்காட்டி வருபவர். சங்க இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழர்தம் வாழ்வை, வரலாறு, தொல்லியல் , இடப்பெயர் ஆய்வுகளூடு அணுகும் ஆய்வாளர் இவர். இவர்தம் வாழ்பனுபவங்களை,ஆய்வு முயற்சிகளை வெளிப்படுத்தும் நேர்காணல் இவருடையது.
பல்துறை ஆளுமைகளின் வாழ்வனுபவங்கள் மூலம் அவர்கள்தம் சாதனைகளை, எதிர்கொண்ட சவால்களையெல்லாம் கற்றுக்கொள்ள முடிகின்றது. ஏனைய துறைகளைப்பற்றிய அவர்கள் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்நேர்காணல்களைத் துணையாகக் கொண்டு எம் சிந்தனையை விசாலமாக்கியிருக்கின்றது அருண்மொழிவர்மன் நடத்திய நேர்காணல்களின் தொகுப்பான 'துணைக்கோடல்'. அதற்காக அவருக்கும், சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்ட தாய்வீடு பதிப்பகத்துக்கும் வாழ்த்துகள்.



நமது இதிகாசமான மகாபாரதத்தில் வரும் சகோதரச் சண்டையின் வடிவத்தை, கிரேக்கர்களின் தொன்மக் கதைகளிலும் நாம் பார்க்க முடிகிறது. கிரேக்கர்களின் கதைகளிலிருந்து சிலவற்றை வியாசர் கடன் வாங்கி எழுதியிருப்பாரோ என்ற சந்தேகம்கூட, ரஷ்யாவின் எல்லையருகே ஜோர்ஜியாவில் உள்ள கஸ்பேஜி (Kazbegi) மலையின் அடிவாரத்தில் நின்றபோது எனக்கு ஏற்பட்டது.



முகிலுக்கு …வாழ்வின் நிலயாமையை வசந்தனின் சாவு மறுபடியும் நினைவு கொண்டிருந்தது .இங்கே தான் இருந்தான், ஈழம்போல் தூரத்திலு மில்லை . அவன் இறந்தது கூட அவனுக்கு தெரியாமலே போய் விட்டிருக்கிற தே .அது அவனை துயரப்படுத்துகிறது . வந்த புதிதில் தந்தையோடு வசந்தன் தங்கி இருந்த கீழ்வீட்டிற்கு நிறைய தடவை போய் வந்திருக்கிறான் .

சென்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் ரொறன்ரோவில் உள்ள தமிழிசைக் கலா மன்றத்தில் மொழியியல் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் நூற்றாணடு விழா கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து, கனடா பண் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து வரவேற்பு நடனமும், கனடா, அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு அவர்களின் வரவேற்புரையும் இடம் பெற்றன.

"அப்பா என்னும் பெருவெளி” என்ற படைப்பின் மையத்தில் எனக்குத் தெரிவது ஒரு தந்தையின் மரணம் அல்ல; தந்தை இறந்த பிறகும் மகனுக்குள் தொடர்ந்து வாழும் ஒரு தந்தையின் இருப்பியல்.
கட்டுரையாளர்: முனைவர்.கு.செல்வஈஸ்வரி - , தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. 
தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரிஸ்டராகப் பயிற்சி பெற்றுள்ள சுசித்ரா விஜயனின் ‘Midnight's Borders: A People's History of Modern India (2021)’ என்ற ‘கள ஆய்வு’ நூலை, ‘நடுநிசி எல்லைகள் நவீன இந்தியாவின் மக்கள் வரலாறு’ என்ற தலைப்பில் ஞான வித்யா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். இந்நூலை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அண்மையில் ஏற்பட்டது. இந்திய எல்லைகள் பிரச்சினைபற்றி செய்திகள் வாயிலாக மேலோட்டமாக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்திய தேசிய உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து - அந்த மக்களின் பிரச்சனைகளை வாசித்தபோது மனதை அறுக்கும் காட்சிகளாக என்னால் பார்க்க முடிந்தது.

‘ஞானக் கிறுக்கு’வென தமிழில் சொல்லப்படுவதை என் சின்ன வயதில் நான் கேட்டிருக்கிறேன். பெரிய வகுப்பு படித்த, படித்துவிட்டு வேலையில்லாமலிருந்த பல அண்ணன்மார்கள் சிலவேளைகளில் அதுபற்றி சிரித்துச் சிரித்துப் பேசுவது இன்றுமெனக்கு ஞாபகம். பாரதியார் அவ்வாறானவர். வளர்ந்த பின்னால் அவரையே நான் ஞானக் கிறுக்காகக் கொண்டாடியதுமுண்டு.
கட்டுரையாளர்: - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 - 



“வலி” என்ற சொல் மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், அதன் பின்னால் மனித உடலையும் மூளையையும் உள்ளடக்கிய மிகச் சிக்கலான உயிரியல் செயல்முறை இருக்கிறது. காயம் ஏற்பட்டால் வலி வருகிறது; நோய் ஏற்பட்டால் வலி வருகிறது; அழற்சி ஏற்பட்டாலும் வலி ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் காயம் குணமாகிவிட்ட பின்னரும் வலி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க உட
உள்ளங்கள் திருந்திட உள்ளங்கள் உயர்ந்திட
எழுத்தாளரும், கலை, இலக்கியத்திறனாய்வாளருமான வெங்கட் சாமிநாதன் அவர்களுடனான தொடர்பினை எனக்கு ஏற்படுத்தித் தந்தது பதிவுகள் இணைய இதழ்தான். பத்து வருடங்களுக்கும் அதிகமாக ம், அவர் மறையும் வரை அவர் பதிவுகள் இணைய இதழுக்கு எழுதிக்கொண்டிருந்தார். அவரது நினைவு அவ்வப்போது தோன்றி மறைவதுண்டு. இன்றும் அவ்விதமே தோன்றியது. அப்போது என் மின்னஞ்சல்களில் அவர் எழுதியவற்றை மீண்டும் பார்த்தேன்.
எழுத்தாளர்கள் கூடுகை / விருது வழங்கும் விழா 20/10/26 மாலை நடைபெற்றது. சேவ் அலுவலகம், 5 ஐஸ்வர்யா நகர், கேஎன்பி காலனி, திருப்பூர் ( தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம் அருகில்). தலைமை: வியாகுலமேரி ( இயக்குனர் சேவ் ).









