தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (4) - மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?
'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்பின் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.
'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.
'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"
'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'
'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."
'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'
'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாயடி.'
'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."
'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'
"எப்படி கண்ணா? எமக்கு வெளியே விரிந்து கிடக்கின்றது நாம் காணும் இப்பிரபஞ்சம். இவ்வுலகம். இப்புற உலகு மாயை என்று எப்படிக் கூறுவது கண்ணா?'

வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (14/10/2022) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு பிரதான 8.00 மணிச் செய்திக்குப் பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில்(www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் 264 ஒலிபரப்பாகும்.


சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள் " கூட்டிச் சென்றான். வாடகையில் 'ராஜ' களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும் . வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது . அந்த காலத்தில், முருகைக்கற்களை வைத்து சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த இதே போன்ற வீட்டை திருத்தி புது வீடாக்கி இருக்கிறார் . " பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! " .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப் போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி ,பாலத்தடியிலே இருந்த கிறிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக 'கொல கொல'த்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் . அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது ...இப்ப இல்லை . உள்ளுக்க ஒரு அழுகை இருக்கிறது . 

தம்மை பதவியில் இருந்து நீக்கியதில் அமெரிக்கா நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தது என்று இம்ரான் கான் பகிரங்கமாக தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவரது அமைச்சர்களில் ஒருவர் (Mifta Ismail) ஏற்கனவே இம்ரான்கான், பெப்ரவரியில் அறிவித்திருந்த மக்களுக்கான உதவி பொதியை உடனடியாக வாபஸ் பெற்றுவிட்டு IMFஇன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அது பிரயோகிக்கும் ஓர் பொறிமுறையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஓர் கோரிக்கையின் பின்னணியிலேயே இம்ரானின் பதவிபறிப்பு நிகழ்ந்தேறியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் (22.04.2022). பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு முந்தைய அரசு, 25 கோடி டொலரை, துண்டு விழும் தொகையாக அறிவித்திருந்தது. அது பின்னர், 1.3 ட்ரில்லியன் பாகிஸ்தான்-ரூபாயாக வளர்ச்சி கண்டிருந்தது என்பது அறிந்த ஒன்றே. IMFஇன் கோரிக்கைகளில் ஒன்று, 21 ரூபாயாக இருந்த பெற்றோலின் விலையை, பாகிஸ்தான், உடனடியாக 134 ரூபாவாக மாற்றியமைக்க வேண்டும் என்பதனையும் உள்ளடக்கும். 

அப்பாவை இழந்து ஒரு வருடமாகி விட்டது. அதன் தாக்கம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை. அன்று நடந்த விபத்திலிருந்து அம்மா மீண்டு வந்ததே அதிசயம். அவளின் உடல்நிலை முழுமையாக குணமாகவில்லை பெரும்பொழுது படுக்கையிலேயே கழிகிறது.




சில மாதங்களுக்கு முன்னர், நியூசிலாந்திலிருந்து ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது, “கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார். அதன்பிறகு, எனது மனைவி மாலதி, “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..? “ எனக்கேட்டார். “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத் தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிட்டார்களா.. ? “ எனக்கேட்டேன். “ இது குதர்க்க வாதம் “ என்றார் மனைவி.






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









