கலாநிதி அகிலன் கதிர்காமரின் உரையும், அண்மித்த இலங்கை நெருக்கடிகளும்! - ஜோதிகுமார் -

இன்றைய, இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, தற்போதைய எதிர்ப்பலைகளுக்கு எதிராக அவசர கால சட்டத்தை அமுல்படுத்தும் மாபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு இட்டு சென்றுள்ளது. எதிர்ப்பலைகள், அவசரகால சட்டம், ராணுவமயம், சுடுவதற்கான உத்தரவு – என தொடர்ந்த அரசியல் சுவாத்தியம் - இப்போது ரணிலின் பதவியேற்புடன் தன் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. இம்முதற்கட்டம் எவ்வழியில் தன் இரண்டாம் கட்டத்தை எய்தும் என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது. இந்நெருக்கடியானது, கடந்த காலத்தின் 1953 இன் பொருளாதார நெருக்கடியுடனும் அதையொட்டி எழுந்த 1953 இன் ஹர்த்தாலுடனும் ஒப்பிட்டு கதைக்கப்பட்டாலும், சாராம்சத்தில் இவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டே காணக்கிட்டுகின்றன – (இவை இரண்டிடை, பல ஒற்றுமைகள் காணப்படினும்). 1953 இல் டட்லி சேனாநாயக்காவின் அரசு, அரிசியின் விலையை மூன்று மடங்கால் அதிகரித்தது. – 25 சதத்தில் இருந்து 70 சதம் வரை. இன்றும் ஏறக்குறைய நிலைமை அப்படியே. இதற்கான காரணங்கள், இன்றை போலவே, அன்றும் சர்வதேச அளவில், வெவ்வேறு விதமாய், வெவ்வேறு விகிதாசாரங்களில் எழுந்திருந்தன. இருந்தும், இன்றைய நெருக்கடிக்கான காரணங்களாய் கொரோனாவை அல்லது உக்ரைன்-ரசியப் போரால் விளைந்த சர்வதேச எண்ணெய் நெருக்கடியை அல்லது ஒரு சுற்றுலா நெருக்கடியை காரணமாக தூக்கிப்பிடிப்பது அரச அல்லது அரச நிர்வாகிகளுக்கு சகஜமாகி விட்டது. உதாரணமாக, அண்மித்த ஓரு நேர்காணலில் கூட எமது முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் கப்ரால் திட்டவட்டமாக பின்வருமாறு கூறியிருந்தார்:
“தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்று பிரதான காரணியாக அமைந்தது. கொரோனா தொற்றுக்காக பல மில்லியன்கள் நிதியை மத்திய வங்கி செலவிட்டுள்ளது”. (வீரகேசரி நேர்காணல் : 01.05.2022) (இவர் புரியாமல் பேசுகின்றாரா, அல்லது அனைத்தையும் தெரிந்து கொண்டு “விடயங்களை காப்பாற்ற” இன்றைய ஏனைய ‘ஆளுமைகள்’ போல நடிக்க வருகின்றாரா என்பது வேறு விடயம்). இருந்தும், இப்படியாக பட்டியலிடப்படும் இந்நெருக்கடிகள் அனைத்தும் ஏதோ ஒரு வழியில் ஏனைய நாடுகளையும் பாதிக்கவே செய்தன என்பதும், அவை அவற்றிலிருந்து ஏதோ ஒரு வழியில் மீளவே செய்தன என்பதும் குறிக்கத்தக்கது. (அது இந்தியாவாக இருக்கட்டும் அல்லது இத்தாலியாக இருக்கட்டும்).


என்னுடைய 'குரு' மயிலங்கூடலூர் பி நடராசன் நேற்று யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவர் காலமாகும் போது எண்பத்திரண்டு வயது. இளவாலைக்கும் கீரிமலைக்குமிடையில் இருக்கும் மிகச் சிறிய கிராமமான மயிலங்கூடலை ஈழத்து இலக்கிய உலகில் நிரந்தரமாய் பதிந்துவிட்ட நடராசன் ஆசிரியரை எனது மிகச் சிறிய வயதிலிருந்தே அறிவேன். அவரது'கூடலகம்' வீட்டைச் சூழ எனது தந்தை வழி உறவினர்கள் இருந்ததும், அருகிலிருக்கும் வைரவர் ஆலயம் தாய்வழி உறவினர்கள் சிலருக்கு குல தெய்வமாக இருப்பதும் மயிலங்கூடலுக்கு அடிக்கடி செல்ல காரணங்கள். மயிலங்கூடல் வைரவர் ஆலயத்தின் பொங்கல், மடையின் போது ஆசிரியரை கண்டுள்ளேன்.
மாஸ்ட்ர் சிவலிங்கம் காலமானார் எனும் செய்தியை முக நூலில் நேற்றுப் பார்த்தேன், அவசியம் சென்று பிரியாவிடை கூறவேண்டிய மனிதர் அவர், செல்லும் நிலையில்் நான் இல்லை , அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளாமை மிகுந்த வருத்தமே. பழுத்த ஓலைகள் விழுகின்றன, காலத்தின் நியதி அது.
இந்து கலாசார, நாகரிக, சமயவழிபாட்டு முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் உச்சகட்ட காலமாக 19ம் நூற்றாண்டினைக் குறிப்பிடலாம். இக் காலக்கட்டத்தில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர் கீழைத்தேய கலாசார, சமூக, சமய, இலக்கியங்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதன் காரணமாக தமது ஈடுபாடுகளையும் பங்களிப்பினையும் ஆற்றினர். இதற்காக மேலைநாட்டினர் இந்தியாவின் மொழியான சமஸ்கிருத மொழியினை கற்க தொடங்கினார்கள். அவர்கள் அவ் மொழியினை கற்றது மட்டும் அல்லமால் இந்துப்பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இலக்கியங்களை வெளியிட்டமை, மொழிபெயர்ப்பு பணியினை செய்தமை மற்றம் தொல்பொருள் ஆராய்ச்சி என்பனவற்றினையும் மேற்கொண்டனர்.
அறிவியல் அறிஞரும் , உடலியற் துறையில் இளமானிப்பட்டதாரியும், இளந்தொழிலதிபருமான நிவேதா பாலேந்திரா மொன்ரியலிலுள்ள மரினாபொலிஸ் கல்லூரியில் (Marianopolis College) தனது கல்வியைத் தொடரும் காலத்திலேயே ஊடகங்கள் பலவற்றின் , அறிவியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தவர். அதற்குக் காரணம் நீரில் கலந்துள்ள எண்ணெய்க் கசிவுகளைச் சுத்திகரிப்பதற்கான இவரது ஆய்வுகள்தாம். Pseudomonas fluorescens என்னும் நுண்ணுயிரின் ஒரு வகையினைப் பாவித்துப் பெறப்படும் இரசாயனப் பொருள் மூலம் இக்கசிவுகள் சுத்திகரிக்கப்படுகின்றன. பொதுவாக இவ்வகையான எண்ணெய்ச்சுத்திகரிப்புப் பொருட்கள் பெற்றோலியம் பொருட்களிலிருந்து பெறப்படுகின்றன. ஆனால் இவரது கண்டுபிடிப்போ நுண்ணுயிரியிலிருந்து பெறப்படுகின்றது. அத்துட ன் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதது என்பதும் குறிப்பிடத்தக்கது.

"நாங்கள் சமூகத்துக்கு எவ்வளவை கொடுக்கின்றோமோ அவ்வளவைத்தான் நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் ” எனச் சொல்லி வந்தவர்தான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவர் தமது இறுதிக்காலத்திலும், உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் அயராமல் இயங்கிய ஆளுமை.
முன்பு ஒரு காலத்தில் ஊருக்குள் நம்ப முடியாத செய்திகளை நம்ப வைத்ததில் தெருச்சித்திரங்களுக்கும் பங்கிருந்தது. பாடசாலை கழிவறைகள் தொடக்கம் தெரு மதகுகள் சிதிலமடைந்த மதிற் சுவர்கள் மயான மண்டபங்கள் போன்றன கரித்துண்டுகளாலும் பச்சிலைகளாலும் கிறுக்கர்களின் களமாகி கிறங்கடித்தன. அசுத்தமான இடங்கள் அவர்களுக்கு தடையாக இருந்ததுமில்லை. அசிங்கமான வார்த்தைகளுக்கு அவர்கள் தடை விதித்ததுமில்லை. வியப்பு – திகைப்பு – தவிப்பு – முறைப்பு – வெறுப்பு – கடுப்பு என பல உணர்வுகள் பாதிப்படைந்தவர்களிடம் மட்டுமல்ல அவற்றை பார்த்தவர்களிடமும் ஏற்பட வேண்டும் என்ற கற்பனையுடன் அந்த கிறுக்கர்கள் அநாமதேயமாகவே சிரித்தார்கள். - அந்த கிராமிய நினைவுகள் பலருக்கு இப்பொழுதும் மங்கலாக ஞாபக இடுக்குகளில் அப்பியிருக்கும்.
பெங்களூர், இந்தியாவில் தற்போது வசித்து வரும் திரு .கே.சங்கர் ஒரு இயந்திரவியற் பொறியியலாளர். சந்தைப் படுத்தலில் MBA பட்டம் பெற்றவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான கூட்டுஸ்தாபன அனுபவம் பெற்றவர். தற்போது தொழில்நுட்பம், நிர்வாகம், மனித வள அபிவிருத்தி ஆகியவற்ற்¢ல் நிபுணராகப் பணியாற்றி வருபவர். அத்துடன் ஊடக எழுத்தாளராகவும் , பேச்சாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர். அவர் வாழ்வின் வெற்றிக்கு அவசியமான ஆளுமை அபிவிருத்தி பற்றிய ஆக்கங்களைப் பதிவுகளில் தொடர்ந்து எழுதவிருக்கின்றார். இது அவரது முதலாவது ஆக்கம்.

இடம்: சதபி ஏல விற்பனைக் கூடம் (Sotheby's Auction House), லண்டன்; காலம்: ஆக்டோபர் 05, 2018



பிரச்சினையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம். கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் குடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









