'பதிவு'களில் அன்று - சுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003! ஒரு குறிப்பு! - றஞ்சி (சுவிஸ்) -
[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50
புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் முகமாக 1990இல் ஜேர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தா¢த்து சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சந்திப்புகளை நடாத்தி வருகின்றது. ஜரோப்பாவில் வாழும் பெண்கள் மட்டுமன்றி இலங்கை, இந்தியா அவுஸ்திரேலியாவிலிருந்தும்கூட பெண்கள் வந்து கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்திருக்கிறது. சுவிஸில் மூன்றாவது தடவையாக நடைபெறும் பெண்கள் சந்திப்பின் 22வது தொடர் ஒக்டோபர் மாதம் 11ம் திகத§ சுவிஸ் சூ¡¢ச் நகா¢ல் நடைபெற்றது. இச் சந்திப்பு தனது 13வது வருடத்தை பூர்த்தி செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச் சந்திப்பில் பெண்ணியச் சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், அனுபவப் பகிர்வுகள், விமர்சனங்கள் என்பன இடம்பெற்றன.
வழமைபோல் சுய அறிமுகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. ”தமிழ்ப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் கலாச்சாரமும் பெண்களும்” என்ற தலைப்பில் பிரான்ஸைச் சேர்ந்த பரிமளா தனது கருத்தை வெளியிட்டார் அவர் கூறும்போது சகல பெண்களும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கின்றோம், வெள்ளை இனப் பெண்களாக இருந்தால்கூட. குறிப்பாக வறிய வெள்ளை இனப் பெண்கள், ஆபிரிக்கப் பெண்களைவிட இந்திய, இலங்கைப் பெண்கள் கலாச்சாரத்தினால் கூடுதலாக ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இந்திய இலங்கைப் பெண்கள் 'தாலி' என்ற பதத்தை வைத்து சென்ரிமென்டாகவும் பெண் ஒடுக்குமுறைக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளார்கள். பண்டைய காலத்தில் மாடுகளை தங்களுடைய மாடுகள்தாம் என அடையாளம் காண்பதற்காக நிறம் பூசிய கயிறுகள் மூலம் கட்டுவர். அதேபோல்தான் இந்தத் தாலியும் என்று கூறினார். கலாச்சாரத்தை பெண்கள் மட்டும்தானா கட்டிக்காக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். தாய்வழிச் சமூகம் இருந்த காலத்தில் பெண்கள் கடின உழைப்பாளிகளாகவும் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தாய்வழிச் சமூகம் மாறி தந்தைவழிச் சமூகம் வந்தபின் அவர்கள் பெண்களை அடக்குவதற்காக தாலி, சாமர்த்திய சடங்கு, பொட்டு பூ நகை போன்ற அடையாளங்களை வேண்டுமென்றே கலாச்சார சின்னங்களாக திணித்து பெண்களை அடிமையாக்கியுள்ளனர். இவ்வாறாக தனது கருத்துக்களை முன்வைத்தார் பா¢மளா. கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது மட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் அமைந்தது.

ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளவர். தமிழக அரசு நாவல் பரிசு, கோவை வில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசுகள் பெற்றவர். 'பொருளின் பொருள் கவிதை' என்ற கட்டுரை நூல், வீடு பேறு, ஞானக்கூத்து, காடன்மலை முதலிய மீன்று சிறுகதைத் தொகுப்புகள், 'பறளியாற்று மாந்தர்' என்ற புதினம் ஆகியவற்றின் படைப்பாளி. தமிழின்பால் அபரிமிதமான அபிமானம் கொண்டவர். எண்பதுகளில் 'மூன்றில்' என்ற சிற்றிதழின் நிறுவனர்- ஆசிரியர் மற்றும் 'மூன்றில் ' என்ற இலக்கிய அமைப்பின் வாயிலாக பல நல்ல புத்தகங்களையும் வெளியிட்டவர். இத்த்னை சிறப்பிற்கும் உரிய திரு. மா.அரங்கநாதனுக்கு 17-04-01 அன்று சென்னையில் இலக்கிய ஆர்வலர்களால் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. திரு.ச.சீ.கண்ணனை அடுத்து அமர்நதா, 'வெளி' ரெங்கராயன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மா.அரங்கநாதனின் படைப்புத் திறனுக்கான பதில் மரியாதையாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது. 
அன்பினிய "பதிவுகள்" ஆசிரியர் நண்பர் திரு.வ. ந.கிரிதரன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் - கடந்த 20,21,22 ஜனவரி -2004 தேதிகளில், சாகித்ய அகாதெமியின் சார்பில்,நெல்லை ம.சு.பல்கலையில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு ( Three Days Seminar on 'LITERARY CRITICISM' at MSU, Thirunelveli ) நடந்தது. ம.சு.பல்கலையின் ஆங்கிலத்துறைப் பேராசிரியரும், வானம்பாடிக் கவிஞரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக் குழுத் தலைவரும் ஆன முனைவர் பாலா (ஆர்.பாலச்சந்திரன்) அவர்களின் முன் முயற்சியில் கருத்தரங்கு வெகுசிறப்பாக நடந்தது.





சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய ஆண்டு விழா அதன் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் வெங்கட் ரமணன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


யப்பானின் நான்கு பிரதான தீவுகளில் சிறியதான குய்சு தீவிலிருந்து மீண்டும் ஒசாகா நகரை நோக்கி செல்வதற்கு ஹொன்சு (Honshu) யப்பானின் பிரதான தீவை நோக்கி கடலில் கப்பலில் சென்றோம். இது , இரவு முழுவதும் யப்பானின் மேற்கு பகுதியான பசுபிக் சமுத்திரத்தில் செல்லும் பயணம். கப்பலில் அறைகள், ஹொட்டேல் போன்று வசதியாக இருந்தது. இரவு மற்றும் காலை உணவும் அந்த மூன்று தளங்கள் கொண்ட கப்பலிலே கிடைத்தது.
இடதுசாரிகளின் பழம் பெரும் தலைவரான, சண்முகதாசனின் நூற்றாண்டு மலர் வீரகத்தி தனபாலசிங்கத்தால் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுரைகளில் ஒன்றில், ‘சிறு தீப்பொறியானது பெரும் காட்டுத் தீயை உருவாக்கிவிடும்’ என்ற வரியும் வந்து போகின்றது. ரஷ்யாவின் ‘இஸ்கரா’ (தீப்பொறி) முதல், இந்திய விடுதலை இயக்கத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ வரை (பாரதி) ‘தீ’, அவ்வவ் காலப்பகுதியில், அவ்வவ் மனிதருக்கு மிக நெருக்கமாய் இருந்துள்ளதுதான். பிரமித்தியூஸ் கூட, நெருப்பை, கடவுள்களுக்கு தெரியாமல் திருடி மக்களுக்கு சேர்ப்பித்தான் என ஐதீகம் கூறுகின்றது. இப்படி அறிவை மனிதர்களுக்கு கொடுக்க, சம்பந்தப்பட்ட மனிதர்கள், கொடுத்த விலையானது அபரிமிதம் என்றாலும், இப்பாரம்பரியம் இன்னும் தொடரவே செய்கின்றது என்பதனையே வீரகத்தி தனபாலசிங்கத்தின் தொகுப்பும் ஒரு வகையில் எமக்கு பறை சாற்றுவதாய் உள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.

புலவி என்பது காதலில் ஏற்படும் ஊடல் அல்லது செல்லக் கோபம் ஆகும். இது தம்பதியரிடையே தோன்றும் ஒரு குறுகிய காலப் பிரிவைக் குறிக்கிறது. இந்த ஊடல், கூடலின்பத்தை அதிகரிக்கவும், காதலின் ஆழத்தை மேலும் சிறப்பிக்கவும் உதவுகிறது. திருவள்ளுவர், காமத்துப்பால் கற்பியலில் உள்ள 'புலவி' அதிகாரத்தில், இந்த ஊடலின் நுணுக்கங்களை விவரித்துள்ளார். 
தமிழரது அரசியல் சமூக பண்பாட்டு வரலாறு தொடர்பான முக்கியத்துவம் மிக்க பல நூல்களை வெளியிட்டுவரும் கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை, கடந்த வருடம் (2024) ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலைச் செம்பதிப்பாக வெளியிட்டது. பதிப்பு வரலாற்றில், இதுவரை எட்டுப் பதிப்புகளைக் கண்ட இந்த நூல், திருத்திய செம்பதிப்பு எனும் புதிய பதிப்போடு ஒன்பதாவது பதிப்பினையும் கண்டுள்ளது. மலையக நூற்பதிப்பு வரலாற்றில் இந்த நூல் மாத்திரமே ஒன்பது பதிப்புகளைக் கண்ட நூல். இது ஒரு வரலாற்றுச் சாதனை. மகிழ்வு தரும் விடயமுங்கூட.
எம் மண்ணழகு.





மலையன் பெற்றோர் யார்? என்பது குறித்த சர்ச்சை மீண்டும் பேசுபொருளாக மாறியது. அந்த ஆண்டின் பிறந்தநாள் விழாவின்போது தான் அது நடந்தது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









