வாசிப்பும், யோசிப்பும் 374: கவிஞர் இந்திரனின் நெடுங்கவிதை 'சாம்பல் வார்த்தைகள்' - வ.ந.கிரிதரன் -
இன்று பழைய புத்தகங்களைத் தேடியபோது கவிதைப்புத்தகமொன்று அகப்பட்டது. நெடுங்கவிதையது. பெயர் " சாம்பல் வார்த்தைகள்:. கலை, இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்களின் நெடுங்கவிதை நூல். யாளி பதிவு வெளியீடு. வெளியிட்ட ஆண்டு ஜனவரி 1994. அட்டைப்பட வடிவமைப்பு ஏ.கோபாலன். நூல் வடிவமைப்பை இந்திரனே செய்திருக்கின்றார்.
வாழ்க்கைக்கடலின் அலைகளால் நம்பிக்கைக்கரைகள் அரிக்கப்பட்ட நிலையில் நம்பிக்கை இழந்திருக்கின்ற கவிஞரின் வலியினை மொழி கொண்டு வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர். ஆனால் அதனை அவர் நேரடியாக யதார்த்தரீதியில் தன்னை , தன் நம்பிக்கையின்மையை , தானடைந்த வலியினை உங்களுக்குக்கூறவில்லை. மாறாக கனவுகளையும், கற்பனைகளையும் பற்றிக்கொண்டு அவற்றினூடு அதனை வெளிப்படுத்துகின்றார். இரக்கத்தை யாசிக்கின்றார். ஆனால் அதே சமயம் அவ்விரக்கத்தை யாசிப்பது யாரிடமிருந்து என்பதில் கவிஞர் குழம்பியிருக்கின்றார்.
இக்கவிதையின் மொழி எத்தகையது? கனவுகளையும் கற்பனைகளையும் பற்றிக்கொண்டு ஆழ்மனபடிவுகளை யதார்த்தத்துக்குக் கொண்டு வருவதால் 'மிகையதார்த்த' மொழியாகவே எனக்குப் படுகின்றது. மிகையதார்த்த மொழி மானுடரின் யதார்த்த இருப்பை, இருப்பின் முரண்களை, அநீதிகளை , இவற்றின் காரணமாகக் கவிஞர் அடைந்த வலியினை உங்களுக்குப் புரிய வைக்கின்றதா என்பதைக் கவிதையை படிக்கும் நீங்கள்தாம் கூறவேண்டும்.
ஆனால் கவிஞரை வேதனை அடைய வைப்பவை எவை? கவிஞரின் வலிக்குக் காரணமானவை எவை? அவர் வாழும் யதார்த்த உலகின் அவர் மீதான தாக்கம், அத்தாக்கத்தின் விளைவாக அவரைடைந்த வேதனை, வலி , இவற்றையே மிகையதார்த்த மொழியில் நெடுங்கவிதையாக்கியிருக்கின்றார் கவிஞர் இந்திரன். உண்மையில் நவீன இந்தியா , மநு தர்மம் இவற்றை இந்நெடுங்கவிதை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றது.



அண்மையில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் இலாபநோக்கற்று இயங்கும் ஓராயம் அமைப்பின் காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் யாழ் மாவட்டத்தில் நிலவும் நல்ல தண்ணீர்ப்பற்றாக்குறை பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்கள். அத்தருணத்தில் எனக்கு அண்மையில் பார்த்த காணொளியொன்றின் நினைவு தோன்றுகின்றது. இந்தியக் கிராமமொன்று உப்புத்தண்ணீரை நல்ல தண்ணீராக்கியது பற்றிய காணொளியது. குருகிராம் என்னும் வட இந்தியக் கிராமமொன்று எவ்விதம் நல்ல தண்ணீரைப் பெற்றது என்பது பற்றியது. அவர்கள் என்ன செய்தார்களென்றால்.. நல்ல தண்ணீர் ஓடும் கால்வாயின்றிலிருந்து குழாய்வழியாக நல்ல தண்ணீரைப்பெற்று சிறு குளமொன்றை உருவாக்கினார்கள். அவ்விதம் குளம் உருவாக்கப்பட்டுச் சில மாதங்களின்பின் அக்குளமானது அப்பகுதியிலிருந்த உப்புத்தண்ணீரை நீக்கி நல்ல தண்ணீராக்கிவிட்டது.
மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் அவர்கள் மறைந்த செய்தியினை எழுத்தாளர் யோ.புரட்சி அண்மையில் முகநூலில் பகிர்ந்திருந்தார். பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் வே.ம.அருச்சுணன். அவரது படைப்புகள் பல 'பதிவுகள்' இதழில் வெளியாகியுள்ளன. சமுதாயப்பிரக்ஞை அவரது எழுத்துகளில் படர்ந்திருக்கும். மலேசியத் தமிழர்களின் உரிமைக்காய் அவை குரல்கொடுக்கும். மலேசியத் தமிழர்கள்தம் வரலாற்றை அவை பதிவு செய்யும், அவரது 'வேர் மறந்த தளிர்கள்' என்னும் நாவலும் பதிவுகள் இதழில் தொடராக வெளியாகியுள்ளது. அந்நாவலுக்கு முன்னுரையொன்றும் கேட்டு அனுப்பியிருந்தேன். நூல் வெளியானதா என்பது தெரியவில்லை. அவரது மறைவு பற்றிய மேலதிகத்தகவல்களைப் பெற இணையத்தில் தேடிப்பார்த்தேன். எவையும் அகப்படவில்லை. அருச்சுணனின் மறைவு பற்றிய மேலதிக விபரங்களை அறிந்த மலேசிய நண்பர்கள் எனது மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். எனது மின்னஞ்சல் முகவரி: 
இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 ) காலப்பகுதியில், நான் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன். சார்வாகன், அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனனே சொன்னார்.
ஜூன் 03 கலைஞர் கருணாநிதி பிறந்த தினம்
கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொரோனா காலகட்டமாதலால் ஆரவாரமின்றி கடந்து சென்றிருக்கின்றது. திமுகவினர் ஆட்சியிலிருக்கும் இச்சமயத்தில் வழக்கமான சூழல் நிலவியிருக்குமென்றால் இடம்பெற்றிருக்கக் கூடிய ஆரவாரத்தை நினைத்துப்பார்க்க முடிகின்றது.








கீதாரி நாவலின் ஆசிரியர் சு.தமிழ்ச்செல்வி கவிதையில் தொடக்கமாகி, சிறுகதையில் நடைபழகி, நாவலில் விருச்சமாகி நின்கின்றார். பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். குறிப்பிடத்தகுந்த தற்காலப் பெண்ணிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவரின் படைப்புகள் பல கல்வி நிறுவனங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ள சிறப்பிற்குரியன. அந்த வகையில், ஆசிரியரின் அறிமுகச் செய்திகளையும், கீதாரி நாவலின் கதைச் சுருக்கத்தையும், விமர்சனத்தையும் இக்கட்டுரையில் காணலாம்.
பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் காலத்திலேயே எது அழகு என்பது குறித்த தேடல் தொடங்கிவிட்டது. அழகு குறித்த இத்தேடலைத் தத்துவ சாத்திரத்தின் ஒரு பகுதியாகவே உலகம் முழுவதும் இன்று வரை வளர்த்து வந்திருக்கிறார்கள். இத்தகைய தத்துவார்த்தத் தேடலை ‘அழகியல்’ (AESTHETICS) என்று பெயர்சூட்டி வளர்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழில் இது நிகழவில்லை. தமிழ் அழகியல் எனும் ஒரு துறையை நாம் வளர்த்தெடுக்கவில்லை. தொல்காப்பியர் என்கிற ஒருவரை நாம் ஓர் இலக்கணவாதியாகத்தான் இனம்கண்டிருக்கிறோமே தவிர, அவரை ஓர் அழகியல்வாதியாக நாம் இனம்காணவில்லை. சம்ஸ்கிருதத்தில் ‘நாட்டிய சாஸ்திரம்’ எழுதிய பரதமுனியை அழகியல் வாதியாக புரிந்துகொள்வதுபோல, காஷ்மீரத்தைச் சேர்ந்த அபினவகுப்தர் ஓர் அழகியல்வாதியாக அடையாளம் காணப்படுவதுபோல, ஐந்திணைக் கோட்பாடுகளை விரிவாக விளக்கியிருக்கும் தொல்காப்பியரைத் தத்துவார்த்த முறையில் நாம் ஆராயத் தவறிவிட்டோம். தொல்காப்பியர் ஓர் அழகியல்வாதி என்பதைத் தமிழர்களாகிய நாம் சொல்லத் தவறுகிறபோது, அவர் எப்படி ஓர் உன்னதமான அழகியல்வாதி என்பதை மலையாளக் கலை இலக்கியவாதியான அய்யப்பப் பணிக்கர்தான் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.
இலங்கை வடபுலத்தில் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்ஷ்மி தம்பதியரின் மூத்த புதல்வனாகப் பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்தார். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், அவுஸ்திரேலியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய “தமிழ்த் தேசிய பற்றாளர்". 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார். அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுத்து நூலாக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே காலத்தை கடத்திவிட்டு, எதிர்பாராமல் உடல்நலம் பதிப்புற்று மறைந்துவிட்டார்.

இனக்குழு மக்களின் வாழ்க்கைவட்டச் சடங்குகளுள் மரபு, பண்பாடு, நம்பிக்கை, சமூகம் மற்றும் குறியீட்டு நிலைக்கான பன்பரிமாணங்களை உட்செறித்ததாக இறப்புச்சடங்குத் திகழ்கின்றது. ஆன்மா மற்றும் உடல் எனும் இருநிலைகளை மையமிட்டு நிகழ்த்தப்படும் இறப்புச் சடங்கில் அவ்வினக்குழு மக்களின் நம்பிக்கையே முன்னிலை வகிப்பதோடு அச்சடங்கின் போக்கினையும் தீர்மானிக்கின்றது எனலாம். இறப்புச்சடங்கார்ந்த எல்லா சடங்கியல் வினைகளும், அச்சடங்கிற்குரிய புழங்குபொருட்களும் அச்சடங்கின் மரபு மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியின் நிலைக்களனாகவும், மரபு மற்றும் பண்பாட்டினைக் காக்கும் பெட்டகமாகவும் திகழ்கின்றன. அவ்வகையில் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட, தொன்மையான வாழ்வியலைக் கொண்டு விளங்கும் நீலகிரி, படகர் இன மக்களின் இறப்புச் சடங்கில் மரபு, பண்பாடு, மரபறிவு, சடங்கியல், குறியீடு, புனிதம், சமூகம், தொன்மை, வழிபடுபொருள் மற்றும் வாழ்முறை போன்ற பன்பரிமாண கூறுகளைத் தன்னுள் உட்செறித்துள்ள தொன்மையான புழங்குபொருளாக ‘ஆப்பி’ விளங்குவதை நிறுவுவதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









