கம்பராமாயணத்தில் தாரை! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -

* 'டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG -
முன்னுரை
தாரை என்ற சொல்லுக்குக் ’கண்ணின் மணி’ என்று பொருள் தருகிறது திவாகரம்.தாரை, கிட்கிந்தை நாட்டின் வானரகுல அரசன் வாலியின் மனைவி.சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளதையும், உன் உயிரை எடுப்பதற்காகவே அவன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையவர்கள் கூறினர் என்று சொன்னாள். இளையபெருமாள் கோபத்துடன் வருவதைக்கண்டு, தவறு செய்த வானரர்களைக் கடிந்து பேசிவிட்டு, தானே நேராக இலட்சுமணனிடன் சென்று இதமாகப்பேசி, அவன் கோபத்தைத் தணித்து, சுக்ரீவன் மீது பிழை இல்லை என்று புரியவைத்து, ஒரு ராசமாதாவாக நடந்துகொண்டாள். தாரையின் அழகு, புத்திசாலித்தனம்,அமைதி,தவறு செய்தவரிடத்து கண்டிக்கும் மனநிலை, வானர குலத்தைக்காக்க அவள் செய்யும் முயற்சி, வாலி இறந்ததால் கைம்மைத் தோற்றம் என்று பன்முகத்தன்மை கொண்ட தாரை குறித்துக் கம்பராமாயணம் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
தாரை
அமிழ்தம் போன்ற மூங்கிலின் இயல்பை தன்னிடத்தில் கொண்டவள். சுக்ரீவன் போருக்கு வா என்று அழைத்ததனால் வாலியின் வாயினின்றும் புகை உண்டாகக், கண்ணினின்றும் தோன்றுகின்ற தீயில் தன் கூந்தல் தீயப் பெற்றவளாய் போர் செய்வதற்குச் செல்லும் வாலியை இடையில் தடுத்து விளக்கினாள்.
வேறு பெருந்துணையைப் பெற்றமையைக் கூறல்
சுக்ரீவன் முன்னாளில் நின் தோள் வலிக்குத் தோற்று வருத்தமடைந்து ஓடினான். அத்தகையவன் இப்பொழுது பெரிய உடல் வன்மையைப் பெற்றானில்லை, அப்படி இருக்க, அவன் திரும்ப உன்னுடன் போர் செய்வதற்கு வந்த இச்செயலானது, வேறு பெருந்துணையைப் பெற்றமையாலாகும் என்று கூறினாள்.
துணையாக வந்தவன் இராமனே
வாலி தன்னுடன் யாரும் போரிட்டு வெல்ல முடியாது என்று பல காரணங்களைக் கூறிய போது தாரை, வாலியை நோக்கி அரசே, இராமன் என்பவன் அந்தச் சுக்ரீவனுக்கு இனிய உயிர்த் துணையாகப் பொருந்தி, உன் உயிரைப் பறிப்பதற்காக வந்துள்ளான் என்று நம்மிடம் அன்புடையவர்கள் கூறினார்கள் என்று சொன்னாள்.



- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.



சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.





மதியத்துக்குப் பின்பாக , பஹல்காம் நகரின் மத்தியப் பகுதியில் வாகன நெரிசலில் நாங்கள் வந்த வாகனம் நத்தையைப் போல் மெதுவாக நகர்ந்தது. அச்சமயம், பாதையோரத்தில் ஒருவரின் குரலும் சைகைகளும் என் கவனத்தை ஈர்த்தன. உயரமான பெண் ஒருவர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரது வெள்ளைச் சட்டை, சேற்றில் உழுது வீடு வந்த விவசாயியின் தோற்றத்தை நினைவூட்டியது. அந்தக் காட்சி என்னுள் ஒரு கலவர உணர்வை உருவாக்கியது— இங்கு ஏதோ அசாதாரணமான ஒன்று நடந்திருக்க வேண்டும்.





ஊரின் வாசம்


ஏனைய இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பிடும்போது சிறுகதைக்கு வீரியம் அதிகம்; குறைந்த பக்க எண்ணிக்கைக்குள் ஆழமான மனப் பதிவை ஏற்படுத்தக்கூடியது. ஒரு கதையைப் படிக்கும்முன் இருந்த மனநிலையிலிருந்து அக்கதையைப் படித்து முடித்தப்பின் வேறொரு மனநிலைக்கு மாற்றக்க்கூடியது; கதைக்கும் வாசகனுக்கும் இடையே சொல்லால் சொல்லப்படாத இடைவெளியை விட்டு அவனோடு உறவாடிக்கொண்டே இருப்பது; அமைதியாய் இருக்கும் வாசகனின் சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்வது; கிளர்ந்து கிடக்கும் வாசகனின் சிந்தனையை அமைதியுறச் செய்வது. இவ்வாறாக படைக்கப்படும் சிறுகதை பொழுதுபோக்கு அம்சம் குன்றியும் பொதுபுத்தியில் ஊறிக்கிடக்கும் ஒரு சிந்தனைக்கு மாற்றாக இன்னொரு சிந்தனையை விதைக்கும் தன்மை கொண்டது.

உயிர் சுருட்டி கனிமொழி செல்லத்துரை என்பவரால் எழுதப்பட்ட நாவல். 2025 இல் வெளியான இந்நாவல் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்துள்ளது. கதைக்களம் என்று சொல்லுவதை விட வேதாரண்யத்தின் நிலவியல் வரைபடமாக இந்நாவல் உள்ளது என்றால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், வேதாரண்யம் பகுதியில் உள்ள மக்களின் ஒரு குறிப்பிட்ட காலகட்ட பண்பாட்டு எச்சங்களை ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ளது இது.
அவனுடைய பார்வை கனகவல்லிக்குப் பிடிக்கிறதில்லை . '' அதிலே இருக்கிற ஒரு வெறி சுடுகிறது ,. எதையும் கூறுகிற அம்மாவிடம் வந்து கூறினாள் . '' எடியே ! நான் உங்க அப்பரைப் பார்க்கிறதுக்கும் , நீ பார்க்கிறதும் வேற மாதிரி இருக்கிறது அல்லவா , திட்டி , புறு புறுத்தாலும் என்னுடையதில் என்ன இருக்கும் சொல்லு ..'' என்று உணர்ச்சிப்படாமல் கேட்ட்டார். ''அன்பு இருக்கும் '' என்று இழுக்க , '' அதில்லையடி ,நாம ஒரே பட்ஜ் ! . நமக்குள் ஒரு சமநிலை இருக்கும் . உனக்கும் அவனுக்கும் பல வயசு .வித்தியாசம் , அதனால் குழப்பமடைகிறாய் . நல்ல வேலை , வாழ்க்கைக்கு ...அத்திவாரம் . அதன் மேலே தான்டி கனவுகள் வரையிறது நடக்கிறது . இப்பத்தைய பெடியள் நீரிலே மூழ்கிற படகுகள் மாதிரி பாலையிலே நிற்கிறாங்கடி . வெளியேற முடியாத முடக்கு, சந்திகள் அனேகம் . . உன்னிலே ஒரு விருப்பம் வந்திருக்கிறது .கிடைக்க மாட்டாய் எனத் தெரியும் . எனவே வெறித்துப் பார்க்கிறான் .. இந்த இனப்பிரச்சனை .. அவனையும் பாதிக்கிறதடி ‘’ என்கிறார் .

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









