கம்பராமாயணத்தில் எந்திரப்பொறியியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061
முன்னுரை
மனிதர்கள் செய்யும் வேலைகளை எந்திரங்களைக் கொண்டு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. மனிதர்கள் பல நாட்கள் செய்யும் வேலையை, எந்திரங்கள் சில மணிநேரங்களிலேயே முடித்து விடுகின்றன. இதனால் நேரத்தைச் சேமிக்க முடிகிறது. எந்திரங்களுக்குச் சோர்வு இல்லை. தொடர்ந்து வேலை செய்வதால் உற்பத்தித் திறனை அதிகரிக்கமுடியும். எந்திரங்கள் ஒரே அளவிலும், துல்லியமாகவும் வேலைகளைச் செய்யும். உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருட்களும் ஒரே தரத்தில் இருப்பதை உறுதி செய்கின்றன.மனித உயிர்களைப் பாதுகாக்கிறது. செலவும் குறைகிறது. மனிதனால் செய்யமுடியாத மிகக் கடினமானப் பணிகளை (கடலுக்கு அடியில் ஆராய்வது, விண்வெளிப் பணிகள்) போன்றவற்றைச் செய்ய எந்திரங்கள் தேவைப்படுகின்றன.
சங்ககாலத்திலேயே எந்திரப் பொறியியல் குறித்து செய்திகள் காணப்படுகின்றன.
பொருள்வயிற் பிரிவதற்கு எண்ணிய தலைவன் தலைவியிடம் சொல்வதற்கு அவளுக்கு அருகில் செல்கிறான். அவனது பிரிவைக் குறிப்பால் உணர்ந்த தலைவி வருந்தி, அவன் மீது சாய்ந்து கலங்குகிறாள். நான் பிரிவதில் விருப்பம் இல்லாதவளாய் மெல்ல மெல்ல என் அருகில் வந்து நீ எங்கே போகிறாய் என்று கேட்க முடியாமலும், போக வேண்டாம் என்று தடுக்க முடியாமலும் இருப்பாள். அத்தகைய அவள் சித்திரத் தொழில் அமைந்த பாவையொன்று எந்திரமற்று விழுந்ததைப் போல கலங்கி என் மார்பின் மீது சாய்ந்து விழுவாள்.


[இக்கனேடிய செய்திகள் செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை.]
எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களின் மறைவு குறித்து முதலில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மலையகத்தில் இருந்து ஒலித்த மூத்த எழுத்தாளரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. இவரது மறைவு மலையகத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் இழப்பாகும். இலக்கிய உலகில் இவரை ‘மூனாசீனா’ என்று சுருக்கமாக அழைத்தவர்கள் பலர்.

எழுத்தாளர்: திருமதி கீத்தாராணி பரமானந்தன் ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளர் கீத்தாராணி பரமானந்தன் அவர்கள் ஏற்கனவே கவிதைத் துறையில் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர். அந்தக் கவிதை அனுபவத்திலிருந்து சிறுகதை உலகிற்குள் அவர் மேற்கொள்ளும் முதல் முயற்சியே ‘சொல்லாத கதைகள்’.

ஈழத்து முற்போக்கு இலக்கிய உலகில் பஞ்சமர் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அழகியல் மற்றும் கருத்தியல் தளங்களில் பதிவுசெய்த முதன்மைப் படைப்பாளி தோழர் கே. டானியல் (1926–1986) ஆவார். அவர்தம் ‘வள்ளி’ சிறுகதையானது, சாதிய அமைப்பு மற்றும் முதலாளித்துவ வர்க்க உணர்வு ஆகியவற்றின் சிக்கலான குறுக்குவெட்டு உறவை (Intersectionality) மிக நுட்பமாகத் தோலுரித்துக் காட்டும் அமைப்பியல் பிரதியாகும். இக்கட்டுரை, நவீனத்துவத்திற்கு பிந்தைய விமர்சனக் கோட்பாடுகள், தனடோபாலிடிக்ஸ் (Thanatopolitics - மரண அரசியல்), இடவெளி அதிகாரக் கோட்பாடுகள் (Spatial Hegemony), மார்க்சிய அன்னியமாதல் (Alienation) மற்றும் உடலியல்-அழகியல் (Somatic Aesthetics) நுட்பங்களின் வழியே ‘வள்ளி’ சிறுகதையைச் சர்வதேச அளவிலான பேராய்விற்கு உட்படுத்துகிறது.




“எனது தந்தையிடம் ஒரு துப்பாக்கி இருந்தது… அக்கம் பக்கம் ஏழெட்டு ஊர்களிலும், ஒவ்வொரு துப்பாக்கி. ஒரு நாற்பது பேராய், ஒன்று கூடி, கிளம்பி விடுவோம்… மான் வேட்டைக்கு… காலையில் புறப்பட்டால், மாலையாகி விடும்… காடுகளில் கடும் தாகத்துடன் அலைந்து திரிவோம்… ஒவ்வொருவர் முதுகுகளிலும், ஒரு சிறு மூட்டை, களி தொங்கும்… தண்ணீர் கிடைக்காது… பகல் உணவுக்கு தண்ணீரை தேடி அலைவோம்… ஒரு முறை ஒரு மானை வேட்டையாடியாகி விட்டது. கூறு போட்டுக் கொண்டிருந்தோம். எனது நண்பன் கண்ணைக் காட்டினான்…. ஈரலை மெதுவாக கடத்தி விட்டேன்… பின் நன்கு சுட்டு திண்றோம்… நன்றாய் இருந்தது… விசாரித்தார்கள், ஈரலை காணோமே என்று. அடியான அடி –அப்பாத்தான்…”.


எங்கள் பயணத்தில், சேற்றுக் குழிகளிலிருந்து மீத்தேன் எரிவாயு வெளியேறும் இடத்தைப் பார்ப்பதற்காக, பாகுவிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபுஸ்தானுக்கு (Gobustan) சென்றோம். இப்படியான சேற்று எரிமலைகள் உலகில் அரிதானவை. உலகிலுள்ள சேற்று எரிமலைகளில் பெரும் பகுதி அஜர்பைஜானில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எங்கள் பயண அட்டவணையில் இப்படியொரு இடத்தைத் தவறவிட முடியுமா?

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக வேந்தராக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் நியமனமாகியிருக்கும் செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்த பதிவை எழுதுகின்றேன். பேராசிரியர் சி.மௌனகுரு, கல்வி, கலை,இலக்கிய ஊடகத்துறையிலும் பங்காற்றி, பேராதனை, யாழ்ப்பாணம், கிழக்குப்பல்கலைக்கழகம் முதலானவற்றில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்திருப்பவர். கடந்த காலங்களில் ஓய்வுநிலைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கும் சி. மௌனகுரு அவர்கள் தான்சார்ந்த கலைத்துறையில் குறிப்பாக கூத்து, நாடகம் முதலானவற்றில் சாதனைகள் புரிந்தவர்.



எதிர்வரும் 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு, லெ.முருகபூபதியின் "ஒரு பத்திரிகையாளனின் இலக்கியப் பயணம்" என்னும், பவளவிழா மலரும், நோயல் நடேசனின், "சாந்தா குரூஸ் தேவதை", "நாலுகால் சுவடுகள்", தாத்தாவின் வீடு" ஆகிய மூன்று நூல்களும், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தினால் வெளியிடப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


ஆ. மாதவன் அவர்களுக்கு நான் வாசகராகத்தான் ஆரம்பத்தில் அறிமுகமானேன். அவரின் கதைகளின் எதார்த்தப் போக்கில் திருவனந்தபுரம் மக்களின் அனுபவங்களும் பிரத்தியேகமாக இருந்தன .ஆனால் அவர் முன்னர் திராவிட இயக்கப் பத்திரிகைகளில் அதிகம் எழுதியவர் என்பதால் ஒரு வகை ஒவ்வாமை இருந்தது. ஆனால் பின்னால் அவருடைய படைப்புகளில் இருந்த்த் தீவிரம் அந்த பாதகமான அம்சங்களை விலக்கி விட்டது







