இவர்கள் மகாத்மாக்கள் - என் வாசிப்புப் பகிர்வு! - ஶ்ரீரஞ்சனி -

‘அறிந்திரன்’ என்றொரு சிறுவர் சஞ்சிகை இலங்கையில் வெளிவருகின்றது என அறிந்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அறிந்திரன், எனச் சொல்லும் அந்தத் தலையங்கமும், சிறுவர்களுக்கு அறிவை ஊட்டவேண்டுமென்ற எழுத்தாளரின் தாகமும் என்னைக் கவர்ந்திருந்தன. ஏதாவதொன்று சிறப்பாக இருக்கின்றதெனக் கருதும்போது, அதை நேரடியாகப் பாராட்டும் என் இயல்பு, கணபதி சர்வானந்தா அவர்களை FB messenger ஊடாக அணுக வைத்திருந்தது. முகம்தெரியாத அவருடனான பழக்கம் அவ்வகையில்தான் எனக்கு ஆரம்பமாகியிருந்தது. ஒரு சில மாதங்களின் பின்னர், இலங்கைக்குச் சென்றிருந்த நண்பர் ஒருவருக்கூடாக 12 அறிந்திரன் சஞ்சிகைகள் என்னை வந்தடைந்திருந்தன. அதன் பெறுமதிக்கான பணத்தைக்கூட அவர் வாங்க மறுத்துவிட்டார். பொருளின் பெறுமதியை உணர்ந்தவர்களுடன் அதனைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பாக அது இருந்திருக்கலாம். நானும் அதை உணர்ந்திருக்கிறேன் என்பதால் சந்தோஷமாக இருந்தது.
அந்தக் கட்டத்தில், கொரோனாவின் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் இருக்காததால், தமிழ் வகுப்புகள் (2021) மெய்நிகர் வழியில்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. அது, மாணவர்களின் மொழி ஆற்றலுக்கேற்ப அவர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சுழற்சி முறையில் குறித்த குழுவினருக்கு மட்டும் எவ்வித கவனச் சிதறலுமின்றிக் கற்பிக்கும் வாய்ப்பினைத் தந்திருந்தது. அதனால், தமிழ் மொழி ஆற்றல் மிக்க மாணவர்களுக்கு அறிந்திரன் சஞ்சிகையையும் அறிமுகம் செய்யக்கூடியதாக இருந்தது. கணபதி சர்வானந்தா அவர்களுடன் அதனை நான் பகிர்ந்துகொண்டபோது, அறிந்திரனில் பிரசுரிப்பதற்கு என் மாணவர்களின் ஆக்கங்களையும் அனுப்பும்படி கேட்டிருந்தார். அப்படியே அறிந்திரனில், அவர்களின் படங்களுடன் அவர்களில் சிலரின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருந்தபோது, அவர்களுக்கு அது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருந்தது.

மனித வாழ்வின் ஒரு கூற்றை, யாரேனும் ஒருவரின் பண்பை அல்லது செயலை, ஏதேனும் ஒன்றன் இயக்கத்தை அல்லது செயற்பாட்டை எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியத்தைக் கலைச்சுவை சிறிதும் குன்றா வண்ணம் வெளிப்படுத்துவதே சிறுகதையின் நோக்கம் எனலாம். இந்தச்சிறுகதைத் தொகுப்பின் சிறப்பம்சம் என்னவெனில்; இதில் இடம்பெற்ற பல கதைகள் மனிதவாழ்வில் நம்பிக்கை ஔி ஏற்றுவனவாக அமைந்துள்ளன. கதாபாத்திரங்கள் வாழ்க்கை எனும் பாதையில் செல்லும் வழியில் எதிர்ப்படும் தடைகளான பூட்டிய கதவு, எழும்பி நிற்கும் சுவர், தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சாளரத்தையும் சாத்திவிடும் உள்நுழையும் பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்றோ கடந்து செல்வதாக பல கதைகள் முடிவு பெறுகின்றன.



காஷ்மீரின் இரண்டாவது நாள் எங்கள் பயணம், “சொன்மார்” (Sonamarg) எனப்படும் பிரதேசத்தை நோக்கி இருந்தது. ஶ்ரீநகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி, பெரும்பாலும் பனிப்பாறைகளால் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும். வெயில் காலத்தில் பனிமலைச் சிகரங்கள் சூரிய ஒளியில் தங்கம் போல் மின்னுவதால் இதற்கு “சொன்மார்” — தங்கத்தாலான இடம் ( Golden meadow)— என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.


சாலையோரம் நடந்த சென்று கொண்டிருந்தான். ஒரு பதினாறு வயசு இருக்கும். பனி. அதிகாலை வேளையில் கொட்டி, வானம் இருண்டு போய் கிடந்தது. காரை நிறுத்தினேன். ஏற, உதவி செய்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறானாம். ஸ்டொக்ஹோம் செல்ல வேண்டும். நடந்தால், பஸ் காசும் மிஞ்சும். குறுக்கு வழியாக ஏறினால் நோர்வூட்டிலிருந்து பத்து நிமிசம்தான் எடுக்கும். விவரித்தான்: “அடியான அடி. எல்லோருமாய் சேர்ந்து தான்”. பஸ்ஸில் வரும் போது நடந்த அச் சம்பவம். “தூங்கும் போது, பக்கத்து சீட்டில், கையை விட்டு, - பதினஞ்சாயிரம். அப்படியே அடித்திருக்கிறான். அவனை அடியாய் அடித்து, நாவலபிட்டியில் இறக்கி விட்டார்கள்…”


அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
கல்லூரி வாழ்க்கையில்தான் எத்தனை ஆயிரம் கதைகள் இருந்தாலும்,மறக்கமுடியாத,மனசை விட்டுப் பிரிக்க முடியாத ஒரு கதைதான் இது. 1972 களில் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம்.கல்லூரி மைதானத்தில் துடுப்பாட்டப் போட்டி(Cricket Match)ஆரம்பித்துவிட்டால் போதும், மைதானத்தைச் சுற்றி ஆட்டத்தைப்பார்ப்போரின் எண்ணிக்கை நிறைந்து வழியும்.ஒரு மூலையில் கூட்டமாக இருந்து,Pongos ஐயும் வாசித்தபடி College College என்று ஒரு பகுதி ஓங்கி ஒலியெழுப்ப,மற்றைய பகுதி Hindu College என்று உரத்துக்கத்த,எங்களின் வேகப்பந்து வீச்சாளன் வசந்தனும் துள்ளிவந்து பந்தை வீச விக்கற்றும் பறக்க நாங்களும் துள்ளிக் குதிப்போம்.காற்றில் புழுதி கிளம்ப அரசமரத்தின் இலைகளும் சரசரக்க,நீலமும்,வெள்ளையும் கலந்த கல்லூரியின்கொடி காற்றில் அசைந்து, பெருமிதமாக வெட வெடத்துப் பறக்கும். நீலவர்ணம் நிறைந்த வானம்.வெக்கையைக் கக்கும் வெயில்.என்றாலும் கூட வசந்தனின் சிரிப்பின் ஒளிவீச்சு மைதானத்தை நிறைத்து நிற்கும்.இப்படித்தான் எங்களுடைய ‘டட்ட டாங்'எல்லோருக்கும் அறிமுகமானார்.


அழகான உடை பெண்ணின்







மனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.
