பதிவுகள் முகப்பு

பதிவுகள் வாசகர்கள், படைப்பாளிகள் கவனத்துக்கு!

விவரங்கள்
Administrator
நிகழ்ச்சி
30 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகளில் இனி வெளியாகும் படைப்புகள் அரசியல், இலக்கியம், சிறுகதை... போன்ற பிரதான பிரிவுகளில் ஏதாவதொன்றில் பிரசுரமாகும். தனித்தனி எழுத்தாளர்களின் பக்கங்களில் வெளிவராது என்பதை அறியத்தருகின்றோம். பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தரும் வாசகர்கள் இலகுவாக எழுத்தாளர்களின் பல்வகைப் படைப்புகளையும் கண்டு கொள்வதை இது இலகுவாக்கும் என நம்புகின்றோம்.

கூட்டு அறிக்கை: கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து எதிர்காலத்திற்கான ஒரு கூட்டணியை உருவாக்குகின்றன! - தமிழில் - நுண்ணறிவு எந்திரன் -

விவரங்கள்
Administrator
அரசியல்
30 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[கனடா பிரதமரின் அதிகாரப்பூர்வக் கூட்டு அறிக்கை பின்வருமாறு தமிழில் செயற்கை நுண்ணறிவு மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.]

அக்டோபர் 30, 2026, மாண்ட்ரியல், கியூபெக் - இன்று கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தலைவர்களாகிய நாம், மாண்ட்ரியலில் நடைபெற்ற எங்களது 21-வது உச்சிமாநாட்டில், பொதுவான செழிப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புப் பகுதியை உருவாக்குவதற்காக 'எதிர்காலத்திற்கான கனடா-ஐரோப்பிய ஒன்றியக் கூட்டணியை' (Canada-EU Alliance for the Future) தொடங்குகிறோம்.

கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வலுவான கூட்டாண்மை என்பது நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது மனிதத் தொடர்புகளின் பகிரப்பட்ட வரலாறு மற்றும் வலுவான பொருளாதார உறவுகளால் வடிவமைக்கப்பட்டு, நாம் பகிர்ந்து கொள்ளும் முக்கிய விழுமியங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது: ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு மற்றும் திறந்த, விதிகளின் அடிப்படையிலான சந்தைகள். நாம் மூலோபாய ரீதியாக முக்கியமான பங்காளிகளாகவும், நெருங்கிய நண்பர்களாகவும், அண்டை நாடுகளாகவும் விளங்குகிறோம்.

மேலும் படிக்க ...

டொராண்டோ புத்தக்கக் கண்காட்சி உரையாடல் ஒன்று எழுப்பிய பாலை பற்றிய சிந்தனைகள்... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் நடந்த டொரோண்டோப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் டிசெதமிழனும் (இளங்கோ), தேவகாந்தனும் மிகவும் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அருகில் நின்றபடியே அவர்கள்தம் உரையாடலை அவதானித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் உரையாடிக்கொண்டிருந்ததைப் புகைப்படமாகவும் எடுத்துக்கொண்டேன். அந்தப்புகைப்படம்தான் இந்தப் புகைப்படம்.

அப்படி என்னதான் அவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்?

'பாலையைப் பற்றிய டிசெதமிழனின் சந்தேகங்களுக்குத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார் தேவகாந்தன். அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளில் , நான் செவி மடுத்தவை வருமாறு:

'தொல்காப்பியர் நானிலமென்று நான்கு நிலங்களைப்பற்றியே குறிப்பிடுகின்றார். பாலையை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் கைக்கிளை , பெருந்திணை என்று மொத்தம் ஏழு திணைகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றார். தமிழகத்தில் ராஜஸ்தான் போல் பாலை நிலம் இல்லை.'

மேலும் படிக்க ...

ரஞ்சகுமாரின் “கோசலை” சிறுகதை: ஈழப் போரின் இருத்தலியல், தாய்மை மற்றும் துன்பியல் அழகியல் பற்றிய ஒரு வாசிப்பு - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
29 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

வாசிப்புச் சுருக்கம் (Abstract):

இவ்வாசிப்பு, ஈழத்துப் போரிலக்கியப் பரப்பில் ரஞ்சகுமார் எழுதிய “கோசலை” சிறுகதையில் வெளிப்படும் பிரதியிடைத் தொடர்பு (Intertextuality) மற்றும் தொன்மக் கட்டமைப்பு அவிழ்ப்பை (Deconstruction of Myth) விரிவாகக் கூர்ந்தாய்கிறது. கம்பராமாயணத்தின் ஆதிப் படிமங்களான இராமன், கோசலை, புனர்பூச நட்சத்திரம், மற்றும் காடேகுதல் போன்ற உன்னதக் காப்பியக் கூறுகள், 1980-களின் ஈழப் போர்ச் சூழலில் எவ்வாறு தவிடுபொடியாக்கப்பட்டு நவீன யதார்த்தத்திற்குள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன என்பதை இக்கட்டுரை நிறுவுகிறது.

மேலும், சீலன் மற்றும் குலம் ஆகிய இரு சகோதரர்களின் ஆளுமை முரண்பாடுகளை இருமை எதிர்வுகள் (Binary Oppositions) வழியாகவும், தன் பிள்ளைகளை இழந்து நிற்கும் தாயின் புலம்பல்களை இருத்தலியல் தவிப்பு (Existential Anguish) வழியாகவும் அணுகுகிறது. கைகளின் படிமவியல் மற்றும் ஈழத்து வட்டார வழக்கின் கலைச் செறிவை ஆராய்வதன் மூலம், “கோசலை” சிறுகதை காப்பிய வெற்றிவாதத்தை மறுதலித்து, போரின் அகப் பேரிழப்பையும் தாய்மையின் நிராயுதபாணியான இருத்தலியல் சாட்சியத்தையும் உலகிலக்கியத் தரத்தில் பதிவு செய்துள்ளதை இவ்வாசிப்பு வெளிப்படுத்துகிறது.

1

அறிமுகம்

1.1 முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகளவில் வெடித்துத்சிதறிய தேசிய இனப் போராட்டங்களுள், ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் அதனையொட்டி உருவான சமூக-அரசியல் கொந்தளிப்புகளும் உலகளாவிய கவனத்தைப் பெற்றவை. போர் என்பது வெறும் நிலப்பரப்பையும் அரசியல் அதிகாரத்தையும் மறுவரையறை செய்வதோடு நின்றுவிடுவதில்லை; அது மனித மனங்களின் எல்லைகளையும், குடும்பக் கட்டமைப்புகளையும், பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலின் சாஸ்வதமான படிமங்களையும் வேரோடு சிதைத்து மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது.

மேலும் படிக்க ...

நினைவுக் குளியல் (6) கனவுகளும் மாறிய நிஜங்களும்! -தேவகாந்தன்-

விவரங்கள்
-தேவகாந்தன்-
தேவகாந்தன் பக்கம்
29 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கிராமச் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு, பள்ளிக்கூட வசதிகள் ஏற்பட்டு அவர்களது குழந்தைகள் படிக்க நேரிட்ட காலத்திலும், அவர்கள் டொக்டராகவோ என்ஜினியராகவோ எக்கவுண்டனாகவோ வரவேண்டுமென்ற ஆசைகள் பெற்றோரிடம் பிறப்பதில்லை. குறைந்தபட்சம் கச்சேரியில் ஒரு எழுதுவினைஞர் வேலையோ, பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் ஒரு உபாத்தியார் வேலையோதான் கனவாக வரும். பெண்கள் மேலாக அதுகூட ஏற்படுவதில்லையென்றுதான் நினைக்கிறேன். எழுதவும், கூட்டிக் கழித்துப் பார்க்க ஏதோ கொஞ்சம் கணக்கும் படித்திருந்தால் போதுமென்பதுதான் கிராமத்தில் கல்வியால் எதிர்பார்க்கப்பட்டதின் உச்சபட்ச எல்லை.

அந்த எல்லைகள் அபூர்வமாக மீறப்படலாம். படிக்கிற பிள்ளைகளிடத்தில் பெற்றோரினது மாதிரியாவது கனவு வருமாவென்பது எனக்குத் தெரியாது. ஆனால் எட்டாம் வகுப்பில் நுழைவதன் முன்பாக எனக்கு ஒரு கனவு வந்தது. அது ஒரு சனிற்றறி இன்ஸ்பெக்டராக ஆகவேண்டுமென்ற கனவு.

தமாஷாக இல்லையா? இருக்கட்டும்! விளக்கமாக விஷயத்துக்கு வருகிறேன்.

முந்திய நூற்றாண்டில், அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டில், தொடர்ந்து வாந்திபேதி நோயினாலும், பின்னால் மலேரியா எனப்படும் காட்டுக் காய்ச்சலாலும் ஏற்பட்ட மனித அழிவு சுகாதார விஷயங்களில் கூடுதலான கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. அதிகமான சுகதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தொற்றுத் தடுப்பு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன. சில செல்வந்தர்களும் தமது சொந்தப் பணத்தில் இவ்வாறான உயிர்காக்கும் செயற்பாங்கில் இருந்திருந்தார்கள்.

மேலும் படிக்க ...

தாமரைச் செல்வியின் 'சுமைகள்' நாவல் - ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ரஞ்ஜனி சுப்ரமணியம்
29 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு இலக்கியப் படைப்பின் ஜீவன் என்பது காலத்தால் தன் வர்ணங்களையும் வாசனைகளையும் இழக்காது இருப்பதற்கு , அதே காலத்திற்குரிய மானுட வாழ்வியல் முறைகளும் , அவர்களின் உணர்வுகளும் எவ்வாறு இன்றைய வாசகருக்குள் கடத்தப்பட்டு உயிர்பெறுகின்றன என்பது முக்கியமானது. அவ்வாறான இயல்பான படைப்புகளில் அன்றும் இன்றுமான ஒப்பீடு மிகவும் சுவாரசியமாக அமைகின்றது.

அந்த வகையில் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் ஐம்பது வருடங்களைத் தன் அனுபவமாகக் கொண்டவரும் , புகழ்பெற்ற எழுத்தாளருமான தாமரைச்செல்வி அவர்களால் 1977 ம் ஆண்டில் எழுதப்பட்ட 'சுமைகள்' நாவல், இவ்வருடம் மறுபதிப்புக் கண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகின்றது.

முன்பு வாசித்தவர்களின் மறுவாசிப்புக்காகவும் , இன்றைய இளைய தலைமுறையினரின் புதிய வாசிப்பிற்காகவும் தன்னை முன்வைத்துள்ளது . அத்துடன் மூலப்பிரதியில் எதுவித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே பதிந்திருப்பது பாராட்டிற்கு உரியது .

அரை நூற்றாண்டுக்கு முந்திய கிராமிய வாழ்வியலும் அன்றைய மனித மனக்கோலங்களும் சம்பிரதாயங்களும் நம் முன்னே அன்று உள்ளவாறே காட்சிப்படுத்தப்படும் இவரது எழுத்து நடையின் மூலம், காலத்தின் சுவடுகளில் மீள நடப்பது போல ஒரு உணர்வினை வாசகன் பெறமுடியும்.

மேலும் படிக்க ...

பாட்டி சொன்ன புராண, இதிகாசக் கதைகள்! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
ஶ்ரீரஞ்சனி
29 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் பாட்டி சொன்ன புராண, இதிகாசக் கதைகள்” என்ற நூலும், அண்மையில் நிகழ்ந்திருந்த ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் பெயரில், பண்டத்தரிப்பிலுள்ள ஜே. எஸ். அச்சகத்தினூடாக, கண்கவர் படங்களுடன் இதனை அவருடைய மகள் பபி இரவி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.

இதிகாசம் என்பது ‘இவ்வாறு நிகழ்ந்தது’ என்ற பொருளைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. புராணங்கள் என்பவை கடவுள்கள், அவர்களின் தோற்றம், செயல்கள், சமய மரபுகள் உள்ளடங்கலான பல்வேறு செய்திகளை எடுத்துரைப்பவையாகும். அரிச்சந்திரன்–சந்திரமதி, சத்தியவான்–சாவித்திரி ஆகிய இரு கதைகளும் இந்த நூலில் புராணங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்பாடு எந்த அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்பது எனக்கு விளங்கவில்லை.

அந்த இரு கதைகளுடன், இதிகாசக் கதைகளான இராமர்–இராவணன், கௌரவர்கள்–பாண்டவர்கள் ஆகியவையும், காப்பியக் கதைகளான கோவலன்–கண்ணகி, மணிமேகலை–துறவு ஆகியவையும், துஷ்யந்தன்–சகுந்தலை கதையுமாக மொத்தம் எட்டுக் கதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

கேலிச்சித்திரம்: சுருட்டு சுப்பரின் திருகுதாளங்கள்! - AI & VNG -

விவரங்கள்
- AI & VNG -
சமூகம்
28 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பொப் பாடகர் நித்தி கனகரத்தினத்தின் 'கள்ளுக்கடைப்  பக்கம் போகாதே' பாடலின் வரிகளைப் பாடி கள்ளுக்குடித்து மகிழ்கின்றார் சுருட்டு சுப்பர். சித்திர உருவாக்கம் : AI & VNG  [* மது அருந்துவது, சுருட்டு பிடிப்பது உடலுக்குத்  தீங்கு விளைவிக்கும்]

தேவதேவனின் சொல்லாளுகைத் திறன் (நல்லதோர் வீணை கவிதைத் தொகுப்பை முன்வைத்து) - மு. இராமர் மாசானம், முனைவர் பட்ட ஆய்வாளர் -

விவரங்கள்
- மு. இராமர் மாசானம், முனைவர் பட்ட ஆய்வாளர் -
அரசியல்
25 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: மு. இராமர் மாசானம், முனைவர் பட்ட ஆய்வாளர் (ORCID ID - 0009-0003-3769-0623)  | நெறியாளர்: முனைவர் க. மாரியப்பன், உதவிப் பேராசிரியர், தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை, திராவிடப் பல்கலைக் கழகம், குப்பம், ஆந்திர பிரதேசம் – 517425 [9486863620, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]


ஆய்வு சுருக்கம்:

தேவதேவனின் சொல்லாளுகைத் திறனை அறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை பயணிக்கிறது. இதற்குத் தரவாக தேவதேவனின் ‘நல்லதோர் வீணை’ கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் சில கவிதைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சொல்லாளுகைக் குறித்தும் சொல்லாளுகைத் திறனாய்வு குறித்தும் கட்டுரையின் தொடக்கத்தில் தெளிகிறோம். பின்னர், சொல்லாளுகைக் கருவிகள் குறித்த தெளிவோடு, பரவலாக தேவதேவனின் கவிதைகளில் பயின்று வந்த சொல்லாளுகைக் கருவிகளை அடையாளம் காண்கிறோம். கையோடு, அவை வாசகரிடத்தில் ஏற்படுத்தும் விளைவு குறித்தும் ஆராய்கிறோம். முடிவாக, தேவதேவன் தன் கவிதைகளில் எத்தகைய சொல்லாளுகைக் கருவிகளின் வழி, வாசக எதிர்வினையைக் கட்டமைக்கிறார் என்று தொகுத்து காண்கிறோம். இவ்வாய்வுக் கட்டுரையில் சொல்லாளுகை அனுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

புதுக்கவிதை எனக் கவிதை புதிய பரிணாமமடைந்து தமிழ்ச் சூழலில் நிலைத்து பல்லாண்டு கால வரலாற்றைக் கண்டுவிட்டது. இவை நவீனமாகி தற்போது கவிஞர்களால் பல்வேறு உத்திகளைக் கைக்கொண்டு இயற்றப்பட்டு வருகின்றன. இக்கவிதைகள் உருவாக்கத்தில் கவிஞர்களால் சில பல கலையாக்க உத்திகள் கையாளப்படுகின்றன. இத்தகைய கலையாக்கப் படைப்பில் சொல்லாளுகையின் பங்கு இருப்பது தவிர்க்க இயலாதது. ஆசிரியர் முனைந்து, திட்டமிட்டுச் செய்யாவிட்டாலும் கலைப்படைப்பின் உட்கூறுகளாக இவற்றை நாம் கவிதைகளில் காணலாம். இவை கவிஞரின் தனித்தன்மையைக் காட்டக்கூடியவை. வாசகர்களை கவிதையின் பால் ஈர்க்க, அரிய பல கருத்துக்களை எளிய மொழியில் கொண்டுபோய்ச் சேர்க்க, குறிப்பிடத்தக்க எதிர்வினையை உருவாக்க என கவிதையின் நோக்கைப் பொறுத்து இவை அமையும். தேவதேவன் கவிதைகளை சொல்லாளுகைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, தேவதேவனின் சொல்லாளுகைத் திறனை அறிவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை திகழ்கிறது. இவ்வாய்வானது, கவிதைகளில் இடம்பெறும் உத்திகளை அடையாளம் காண்பதோடு மட்டும் நிற்காமல் அவற்றின் சொல்லாளுகைச் செயல்பாட்டை ஆராய முற்படுகிறது. இதன் வழி, ஒரு குறிப்பிட்ட கவிஞர் தன் கவிதைகளில் கொள்ளும் மொழியும் பொருளும் எத்தகைய வாசக எதிர்வினையை உருவாக்குகிறது என்பதை அறிய முடியும்.

மேலும் படிக்க ...

அனைவருக்கும் தொல்காப்பியம் - சான்றிதழ்ப் படிப்பு (அடிப்படை நிலை) - தகவல்: சுகந்தன் வல்லிபுரம் -

விவரங்கள்
- தகவல்: சுகந்தன் வல்லிபுரம் -
நிகழ்ச்சி
25 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இணைய வழித் தொடர் வகுப்பு: சிறுவர்க்கான தொல்காப்பியம்! (அடிப்படை நிலை) - தகவல்: சுகந்தன் வல்லிபுரம் -

விவரங்கள்
- தகவல்: சுகந்தன் வல்லிபுரம் -
நிகழ்ச்சி
25 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

செம்மணிப் புதைகுழி: இடைக்கால அறிக்கை மீதான சந்தேகங்களும், சர்வதேச விசாரணையின் அவசியமும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
25 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செம்மணிப் புதைகுழி பற்றிய இடைக்கால அறிக்கை இவ்விடயத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், திசை திருப்பும் வகையிலும் அமைந்திருப்பது வெளிப்படை. முதலில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்:

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச, 1995–1996 இல் யாழ்ப்பாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றார். இது முக்கியமான விடயம். இதனடிப்படையில்தான் செம்மணிப் புதைகுழி தோண்டப்படுதல் ஆரம்பமானது.

மேலும் படிக்க ...

டொரோண்டோ பெரும்பாகத்திலுள்ள நூலகங்களுக்கு உங்கள் நூல்களை விற்க விரும்புகின்றீர்களா? - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டொரோண்டோ நூலகத்தின் சேகரிப்புப் பிரிவுக்கு எழுத்தாளர்கள் நேரடியாக நூல்களை விற்பது பற்றி எழுதியிருந்தேன். உடனடியாக மூத்த சேகரிப்பு நிபுணர் (Senior Collections Specialist) நிக்கோல் கோக்கர் (Nicole Coker) பதில் அனுப்பியிருந்தார். மிகவும் பயனுள்ள பதில், உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

நூலகத்துக்கு விற்க விரும்பும் நூல்கள் பற்றிய விபரங்களை , எனக்கு வந்த ஆங்கில மின்னஞ்சலை இப்பதிவின் இறுதியில் தந்திருக்கின்றேன். பாவித்துப் பயன் பெறுங்கள். கீழுள்ளது அம்மின்னஞ்சலின் தமிழாக்கம்.

From:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
To:Navaratnam Giritharan
Thu, Oct 22 at 3:10 p.m.

வணக்கம் நவரத்தினம் கிரிதரன்,

டொராண்டோ பொது நூலகத்தின் (Toronto Public Library) சேகரிப்பில் உங்களது புத்தகத்தைச் சேர்ப்பது குறித்த உங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

இதற்கான அதிகாரப்பூர்வ சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்கள் 'சுயவிவரப் பதிப்பாளர்களுக்கான தகவல்' (Information for Self-Published Authors) என்ற வலைப்பக்கத்தில் கிடைக்கின்றன. புத்தகம் எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், சுயவிவரப் பதிப்பாளர்கள் அனைவருக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும்.

மேலும் படிக்க ...

நமது வரிப்பணம், பிறநாட்டுப் புத்தகங்கள்: கனடாத் தமிழ் நூல்களை நூலகங்கள் ஏன் அதிகம் வாங்குவதில்லை? - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
சமூகம்
22 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நண்பர் Alex EraviVarma 'கல்வியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் தமிழறிஞரான டாக்டர் டி. சங்கர சரவணனுடன் "உலகெலாம் தமிழோசை" என்ற தலைப்பில் ஒரு சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்' பற்றியொரு முகநூற் குறிப்பினை இட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது:

"கனடாவில் அல்லது ஈழத்தில் வெளியிடப்பட்ட நாவல்களை ஏன் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்ய முடியவில்லை என்று அங்கிருந்த சில எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் கேள்வி எழுப்பினர்."

இந்தியாவை நோக்கிக் கேள்வி எழுப்புவதற்கு முன், டொரோண்டோ , மிஸ்ஸிஸாகா , பிராம்டன் , மார்க்கம் போன்ற தமிழர்கள் அதிகமான அளவில் வாழும் பகுதிகளிலுள்ள நூலகங்களில், எம் வரிப்பணத்தில் பணி புரியும் தமிழ் அதிகாரிகளிடம் இந்தக் கேள்வியை வையுங்கள்.

மேலும் படிக்க ...

ஒருங்கிணைந்து வலுவான கனடாவை உருவாக்க ஆல்பர்ட்டா மக்கள் எடுத்த முடிவு குறித்து பிரதமர் கார்னி அவர்களின் அறிக்கை அக்டோபர் 20, 2026, ஒட்டாவா, ஒன்டாரியோ! - நுண்ணறிவு எந்திரன் -

விவரங்கள்
- நுண்ணறிவு எந்திரன் -
அரசியல்
21 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஒருங்கிணைந்து வலுவான கனடாவை உருவாக்க ஆல்பர்ட்டா மக்கள் எடுத்த முடிவு குறித்து பிரதமர் கார்னி அவர்களின் அறிக்கை
அக்டோபர் 20, 2026, ஒட்டாவா, ஒன்டாரியோ! -


“அக்டோபர் 19 அன்று, ஆல்பர்ட்டா மக்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்தனர். அவர்கள் ஒற்றுமையையும், ஒன்றிணைந்து செயல்படுவதையும், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வதையும் தேர்ந்தெடுத்தனர். அனைத்திற்கும் மேலாக, ஆல்பர்ட்டா மக்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்தனர்.

அனைத்து கேள்விகள் மீதான வாக்குகளும் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் வேளையில், பிரிவினை என்ற முதன்மையான கேள்விக்கு இன்று இரவு கிடைத்துள்ள முடிவுகள், ஆல்பர்ட்டா மக்களும் அனைத்து கனடியர்களும் ஒரு புதிய நோக்கத்துடனும் உயர்ந்த லட்சியத்துடனும் இணைந்து முன்னோக்கிச் செல்வார்கள் என்பதைக் காட்டுகின்றன.

மேலும் படிக்க ...

ஈழத்து சிறுகதை பகுப்பாய்வு (03)  அ.செ. முருகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜாஉரிமை”: மெய்யியல், சமூக-அரசியல் விமர்சனப் பகுப்பாய்வு!  - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
20 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன்]

1

20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1930–1940கள்) ஈழத்துத் தமிழ் புனைவுலகம், தென்னிந்திய அச்சு ஊடகங்களின் பெருக்கத்தினால் ஏற்பட்ட அழகியல் ஆதிக்கத்திற்குச் (Cultural Hegemony) முகங்கொடுக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் இருந்தது. இக்காலகட்டத்தில், தமிழ்நாட்டின் வணிகச் சஞ்சிகைகளின் தழுவல் போக்கிலிருந்து விலகி, ஈழத்துக்கே உரிய மண்வாசனை, நிலப்பரப்பு, வர்க்கக் கட்டமைப்புகள் மற்றும் வாழ்வியல் சிக்கல்களை முதன்மைப்படுத்தி "சுதேசியச் சிறுகதை மரபை" (Indigenous Short Story Tradition) வடிவமைத்த முதன்மை இலக்கியச் சிற்பியாக அ.செ. முருகானந்தன் (1921–1998) திகழ்கிறார்.

அவர் வெறும் கதையாசிரியர் மட்டுமல்லர்; ஈழத்து மறுமலர்ச்சிக் காலத்தின் இலக்கிய அடித்தளமிட்ட முன்னோடியும், பாட்டாளி வர்க்க அடையாள அரசியலின் முக்கிய வினையூக்கியும் (Catalyst of Identity Politics) ஆவார்.

அ.செ.மு. அவர்கள் பீஸ்மன், யாழ்ப்பாடி, நீலாம்பரி, பூராடன், போர்வீரன், பாரத்துவாசி, முருகு உட்பட 15க்கும் மேற்பட்ட புனைபெயர்களில் ஒரே காலகட்டத்தில் இயங்கினார். இது வெறும் பெயர்களை மறைத்து எழுதும் தந்திரம் (Pseudonymity) அல்ல; மாறாக, மேலைநாட்டுப் போர்த்துகீசியக் கவிஞர் பெர்னாண்டோ பெசோவா (Fernando Pessoa) முன்வைத்த 'ஹெட்டிரோனிமி' (Heteronymity) கோட்பாட்டிற்கு இணையான கலைச் செயல்பாடாகும்.

மேலும் படிக்க ...

சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாடு! - முனைவர் கா.சுரேஷ் -

விவரங்கள்
- முனைவர் கா.சுரேஷ் -
ஆய்வு
19 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்! - முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல், கோயம்புத்தூர் – 14. 


சங்கக் கால தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை வாழ்ந்து வந்தனர். அதன் விளைவாக எழுந்த படைப்பிலக்கியமே சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களின் மூல ஆதார நூலகவே பார்க்கப்பட வேண்டும். அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் மனிதன் பண்பாட்டு நெறியோடு வாழ்ந்து வருவதே இலக்கியங்கள் மூலம் நன்கு உணர்த்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு மக்கள் இனமும் தன்னுடைய நிகழ்காலத்திய சமூக, அரசியல் கலாச்சாரச் சூழ்நிலைக்கு ஏற்ப, தன்னுடைய பண்பாட்டு வேர்மூலங்களைத் தேடி இனங்காண முற்படுவதும், பாரம்பரியப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ளவும் இலக்கியங்கள் மூல ஆதாரங்களாக விளங்குகின்றன. இன்றைய சமூகத் தேவையை முன்னிட்டு ஒரு தேசிய இனத்தின் கடந்த காலப் பண்பாட்டு பாரம்பரியப் பெருமையை இன்றைய நவீன நாகரிகம்டைந்த மக்கள் உணர்ந்து கொள்ளும் பொருட்டு பண்டைய இலக்கியப் படைப்புகளை ஆதாரமாகக் கொண்டு பண்பாட்டுப் பெட்டகமாகச் சங்க இலக்கியங்களில் காணமுடியும்.

அறிவியல், தொழில்நுட்பம், பொருளியல், கலை இலக்கியம் முதலிய துறைகளைச் சார்ந்த பருண்மையான மற்றும் அரூபமான படைப்புகளும், அரசியல், நீதி, நிர்வாகம், குடும்பம், உறவுமுறை, சமயம் முதலிய நிறுவனங்களும் மனித சமுதாயத்தின் பண்பாட்டுப் படைப்புகளாகும். சமூகத்திற்குரிய இவ்வனைத்து வகைப்பண்பாட்டுப் படைப்புகளும் அச்சமுதாயத்தின் சமூகப் பண்பாட்டை ஒருவர் புரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய மிகவும் இன்றியமையாத தரவுகளாகச் சங்க இலக்கியங்கள் கருதுகிறது. இச்சங்க இலக்கியப் படைப்பின் வழி தமிழரின் பண்பாட்டினை எடுத்துரைப்பது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் படிக்க ...

இல்ஹான் ஒமர் மீதான ( Ilhan Omar ) டிரம்பின் "அதிர்ச்சியூட்டும்" அணுகுமுறையைக் கடுமையாகச் சாடினார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா!

விவரங்கள்
Administrator
அரசியல்
19 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Occupy Democrats [முகநூல் சமூக'ப் பக்கத்தின் ஆங்கில முகநூற் பதிவின் தமிழாக்கம் இது. தமிழாக்கியது கூகுள் AI. [சரி , பிழை பார்த்தவர் - கிரிதரன். இவ்விதமான ஒரு வேற்றுமொழிப் பதிவை அல்லது கட்டுரையை  மனிதர் ஒருவர் மொழிபெயர்க்க நேரம் அதிகம் எடுக்கும், அதைச் செயற்கைத் தொழில் நுட்பம் மூலம் மொழிபெயர்த்து விட்டு, மூலத்துடன் ஒப்பிட்டு, சரி , பிழை பார்த்து, பிழைகள் இருந்தால் திருத்தம் செய்வது மொழிபெயர்ப்புக்கான காலகட்டத்தை மிகப்பெரிய அளவில் குறைக்கும்.

இம்மொழிபெயர்ப்பின் ஆங்கில மூலம் , இம்மொழிபெயர்ப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது. ஒப்பிட்டுப் பாருங்கள். அமெரிகக் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் , ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கக் காங்கிரஸ் பெண் உறுப்பினரான, சோமாலியாவைப் பூர்விகமாகக் கொண்ட இல்ஹான் ஒமர் பற்றிய கருத்துகள் இன்றுள்ள அமெரிக்க அரசியல் சூழலில் முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் அதிகாரம் முழுவதையும் பாவித்து, சட்டத்தை வளைத்து, எப்படியாவது இலஹான் ஒமரை அமெரிக்காவிலிருந்து , குடியுரிமையை நீக்கி, வெளியேற்ற வேண்டுமென்ற குறிக்கொளில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பராக் ஒபாமாவின் இந்நிலைப்பாடு முக்கியமானது. வரவேற்கத்தக்கது.]

செயற்கை நுண்ணறிவு தமிழாக்கம் செய்த பதிவு கீழே:

இல்ஹான் ஒமர் மீதான ( Ilhan Omar ) டிரம்பின் "அதிர்ச்சியூட்டும்" அணுகுமுறையைக் கடுமையாகச் சாடிய பராக் ஒபாமா – இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அமெரிக்கர்கள் பொறுத்துக் கொண்டால், அடுத்த இலக்காக மாறுவதில் இருந்து யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை!

மேலும் படிக்க ...

சமதர்மச் சிந்தனையாளர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி! - க.நவம் -

விவரங்கள்
- க.நவம் -
இலக்கியம்
18 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ எழுத்தாளர் வாசுகி நகுலராஜாவின் பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய நூல் வெளியிட்டு நிகழ்வில் எழுத்தாளர் க.நவம் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]


‘Friends, Romans, Countrymen! Lend me your years! I come to bury Caesar; not to praise him. The evil that men do lives after them. The good is often interred with their bones. So, let it be with Caesar!

உலகமகா கவிஞன் ஷேக்ஸ்பியரது ஜூலியஸ் சீசர் நாடகத்தில், ரோமாபுரிச் சக்கரவர்த்தி சீசர், அவரது நண்பன் ப்ரூட்டஸால் முதுகில் குத்திக் கொலை செய்யப்பட்ட தருணத்தில், சீசரின் இன்னொரு நண்பன் மார்க் அன்ரனி நிகழ்த்திய, சீசருக்கான இறுதிப் புகழாஞ்சலியின் முதல் வரிகளே, இவை!

சீசர் தனது கடைசிக் கணத்தில் திரும்பிப் பார்த்து, ”You too, Brutus! / நீயுமா Brutus!” எனக் கூறியவாறுதான் உயிர் துறந்தவர்.

அன்று முதல் இன்றுவரை, ”துரோகம்” எனும் உடனிருந்து கழுத்தறுக்கும் ஈனச் செயலை, அச்சொட்டாகச் சுட்டிநிற்கும் சொற்றொடராக, இந்த ’You too, Brutus!’ பயன்படுத்தப்பட்டு வருகின்றது!

மேலும் படிக்க ...

ஒரு டொரோண்டோ நகரவாசியின் 'கோல்டென் மைல் மீளமைப்பு' (ReNew Golden Mile) திட்டம் பற்றிய அக்கறை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
16 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

டொரோண்டோ மாநகரசபை அண்மையில் ReNew Golden Mile திட்டம் பற்றிய சுற்றுச் சூழல் மதிப்பீட்டை முடித்திருந்தது. அது பற்றிப் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டிருந்தது. அது பற்றிய எனது ReNew Golden Mile திட்டம் பற்றிய அக்கறைக்குரிய கருத்துகள் இவை. இவை இத்திட்டம் பற்றி எண்ணியதும் எழுந்த எண்ணங்களின் தொகுப்பு.

நகரத் திட்டமிடலின் முக்கிய தத்துவம்

நவீன நகராட்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அடிப்படை நோக்கம், தற்போது வாழும் நகர மக்களின் வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியானதாகவும், மலிவானதாகவும், நிதி ரீதியாக நிலையானதாகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும். ஒரு நகரத்தின் வடிவமைப்பு மனித மகிழ்ச்சி, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் கட்டமைப்பு நல்வாழ்வைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அது வெறும் கட்டுமான நிறுவனங்களின் லாபத்திற்காகவோ அல்லது நகராட்சி வரி வருவாயை அதிகரிப்பதற்காகவோ கட்டுப்பாடற்ற வணிக இயந்திரமாகவோ இருக்கக்கூடாது.

மேலும் படிக்க ...

ஆன் கார்சன்: செவ்வியல் மரபின் மறுவாசிப்பும், சமகால இலக்கியத்தின் புதிய வடிவங்களும்! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
16 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பண்டைய கிரேக்கத்தின் சிதைந்த சொற்களிலிருந்து சமகால மனிதனின் உடைந்த உள்ளம் வரை; கவிதையிலிருந்து மெய்யியல் வரை; மொழிபெயர்ப்பிலிருந்து புதிய இலக்கிய வடிவங்கள் வரை—ஆன் கார்சனின் படைப்புலகம் இலக்கிய வகைமைகளின் எல்லைகளை மறுபரிசீலனை செய்ய நம்மை அழைக்கிறது.

2026 ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று கனடியக் கவிஞரும், கட்டுரையாளரும், செவ்வியல் அறிஞரும், மொழிபெயர்ப்பாளருமான ஆன் கார்சன் (Anne Carson) இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பது, சமகால இலக்கியத்தின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கான மைல்கல்லாகும். ஸ்வீடிஷ் அகாடமி, அவருடைய படைப்புலகம் செவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடலில் ஈடுபட்டு, சமகால இலக்கியத்திற்குப் புதிய வடிவங்களை உருவாக்கிய துணிச்சலான, புதுமையான படைப்பாக்கம் எனப் பாராட்டியுள்ளது.

இந்த விருது ஒரு தனிப்பட்ட நூலின் வெற்றியை மட்டும் அங்கீகரிக்கவில்லை.  கவிதை, உரைநடை,  இலக்கிய விமர்சனம், செவ்வியல் மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் காட்சிக்கலை ஆகியவற்றின் எல்லைகளைத் தாண்டி, இலக்கியம் எவ்வாறு தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள முடியும் என்பதைச் சோதித்துவரும் நீண்டகாலப் படைப்புச் செயல்பாட்டிற்கான அங்கீகாரமாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “வ. அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு : இந்தியவியல் — திராவிடவியல் குறித்த உரையாடல்கள்..” - ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்ச்சி
15 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு 62 - யுகங்களின் குரல் "கவிஞர் மீரா" பதிவும் பகிர்வும்

விவரங்கள்
- இலக்கியவெளி -
நிகழ்ச்சி
15 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 |Passcode: 12345

மேலும் படிக்க ...

கனவுகளின் வரைபடம்: சிதைந்த கனவுகளும் தொடரும் வாழ்வும்! பொ. கருணாகரமூர்த்தியின் நாவல் குறித்த ஓர் இலக்கியத் திறனாய்வு! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
நூல் அறிமுகம்
15 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு மனிதன் தனது வாழ்க்கைக்கான கனவுகளைத் தானே உருவாக்குகிறானா? அல்லது வரலாறும் அரசியலும் சமூகமும் பொருளாதாரச் சூழலும் அவனுக்கான வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கின்றனவா? இந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு, ஈழத்திலிருந்து கனடா வரையிலான ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை மட்டுமல்லாமல், போர், இடப்பெயர்வு, புகலிடம், அடையாளத் தேடல், மனித உறவுகள், இலட்சியங்கள் ஆகியவற்றின் சிக்கலான ஊடாட்டத்தையும் பதிவு செய்யும் நாவலாகப் பொ. கருணாகரமூர்த்தியின் ‘கனவுகளின் வரைபடம்’ அமைகிறது.

இந்நாவலை ஒரு தனிமனிதனின் வாழ்க்கை வரலாறாக மட்டும் அணுகிவிட முடியாது. அது ஒரு காலத்தின் சமூக அரசியல் அனுபவங்களையும், போரினால் திசைமாறிய ஒரு தலைமுறையின் கனவுகளையும், புகலிட வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் அகப்புற முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் புனைவுப் படைப்பாக விரிகிறது. தனிமனித வாழ்வின் வழியாக ஒரு சமூகத்தின் வரலாற்றையும், சமூக வரலாற்றின் வழியாகத் தனிமனிதனின் மனப்போராட்டங்களையும் வெளிப்படுத்துவதிலேயே இந்நாவலின் முக்கியத்துவம் தங்கியுள்ளது.

யோகபுரம்: இயற்கையும் மனிதர்களும்

நாவலின் தொடக்கம் வன்னிப் பிரதேசத்தின் யோகபுரம் என்ற கிராமத்திலிருந்து விரிகிறது. அங்குள்ள அத்திமரம், நீர்ப்பாசனம், மரவகைகள், இயற்கையின் இயல்புகள், பாலியாற்றங்கரையோர மக்களின் வாழ்க்கை எனப் பல்வேறு கூறுகளின் வழியாக அந்த மண்ணின் வாழ்வியல் வாசகருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இயற்கையை வெறும் பின்னணியாகப் பயன்படுத்தாமல், அது மனிதர்களின் வாழ்க்கையோடு எவ்வாறு இணைந்திருக்கிறது என்பதை எழுத்தாளர் நுணுக்கமாகப் பதிவு செய்கிறார்.

மேலும் படிக்க ...

ஆய்வு: மரப்பசு புதினத்தில் பாலியல்சிக்கல்கள்! - முனைவா் பா.பொன்னி -

விவரங்கள்
- முனைவா் பா.பொன்னி -
ஆய்வு
15 அக்டோபர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், இளங்கலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம், மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி. -


பாலுணர்வு மனித வாழ்வில் இன்றியமையாத இடம் வகிக்கின்றது. பாலுணர்வு சமூகத்தால் மிகுதியும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையால் மனிதன் பல்வேறு சூழல்களில் தன்னுடைய பாலியல் வேட்கைகளை முழுவதுமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். அவ்வாறு மனதில் தோன்றிய இன்ப உணர்வு நிறைவேறாத நிலையில் மனிதன் பலவகையான உணர்வுகளுக்கு ஆட்படுகின்றான் என்பா். அவ்வகையில் தி.ஜானகிராமன் அவா்களின் மரப்பசு புதினம் மனிதா்களின் மனதில் ஏற்படும் பாலியல் தொடா்பான சிக்கல்களை விளக்குவதாக அமைகிறது. அவற்றுள் அம்மணி பாத்திரத்தின் பாலியல் தொடர்பான உளச்சிக்கல்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. 'சாந்தா குருஸ் தேவதை'! - கிறிஸ்டி நல்லரெத்தினம், மெல்பேர்ன் -
  2. பயணத்தொடர் (4): அஜர்பைஜான் 4 : ஷமகியிலிருந்து ஜோர்ஜியா எல்லை வரை! - நடேசன் -
  3. இந்திய இலக்கியங்களில் இராமாயணத் தொன்மம்! - ப. அமுதலட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர் -
  4. ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் ,சட்டமும்! - நந்திவர்மப்பல்லவன் -
  5. வாழ்த்துகள்: பவளவிழா காணும் எழுத்தாளர் முருகபூபதி!
  6. வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா.
  7. ஈழத்து சிறுகதை பகுப்பாய்வு (02): அதிகாரக் கூண்டும் ஆத்மார்த்த விழிப்பும் - மருதூர்க்கொத்தனின் ‘உத்தியோக நாற்காலி’ சிறுகதையில் மனசாட்சி, அழகியல் மற்றும் பிரதேச அடையாளங்களின் விமர்சனப் பகுப்பாய்வு! - ஏ.எச்.எம் நவாஷ் (ஈழக்கவி) -
  8. சமரழகிகள் சமர் புரியும் வகையில் விழிப்புணர்வு அவசியம்! - நந்திவர்மப்பல்லவன் -
  9. நனவிடை தோய்தல்! - வ.ந.கிரிதரன் -
  10. தமிழ் இலக்கியங்களில் பெண்ணியச் சிந்தனையும் சமூக விடுதலையும்! - முனைவர் அ ஸ்ரீதேவி & மு. கல்பனா -
  11. தமிழ் இலக்கியங்களில் பெண்களின் உரிமைப் போராட்டமும் சமூகப் பரிணாமமும்! - முனைவர் அ ஸ்ரீதேவி & மு. நித்யா -
  12. சுந்தரிமணியனின் ‘நெற்றிக்கண்’ சிறுகதைத் தொகுப்பு ஒரு பருந்துப்பார்வை! -தமிழ்மாமணி பழனி.சோ.முத்துமாணிக்கம் -
  13. கம்பராமாயணத்தில் எந்திரப்பொறியியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -
  14. கனடிய அரசியல் செய்திகள்! தமிழில் நுண்ணறிவு எந்திரன் -
பக்கம் 2 / 137
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி