'நந்தலாலா' ஜோதிகுமார் பார்வையில் இலங்கை அரசியல் நகர்வுகள்! (பகுதி 1) - ஜோதிகுமார் -

16.11.2025, ஞாயிறு வீரகேசரி, தன் முன் பக்கத்திலேயே, பெரிய அளவில், இரு படங்களை வெளியிட்டது. முதலாவது படம்: இந்திய உயர்ஸ்தானிகர் (சந்தோஷ் ஜா சுமந்திரன்-சாணக்கியன் ஆகியோரை சந்தித்து அளவலாவுவது. இரண்டாவது: விடுதலை சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு சந்தித்து ‘சமஷ்டி'யை’ வலியுறுத்துவது. மேற்படி இரு படங்களும், ஒருபுறமிருக்க, ஜேவிபி அரசானது தான் நிறைவேற்ற போவதாய் கூறியுள்ள, புதிய அரசியல் அமைப்பில், 13வது திருத்தத்தை (அதாவது மாகாண சபையினை) உள்ளடக்குவதா அன்றி தூக்கி வீசுவதா என்று தீவிரமாய் சிந்தித்து வரும் இந்நிலையில் ‘சமஷ்டி’ உச்சரிக்கப்படுவது, முக்கியத்துவம் வாய்ந்தது.
மறுபுறத்தில், இந்தியாவை கத்தரிக்க வேண்டுமென்றால், 13ஐ கத்தரித்தாக வேண்டும் என்பது முதல் விதி. மேலும், தமிழ் மக்களை தொடர்ந்து கனவு நிலையிலேயே ஆழ்த்தி வைத்திருக்க வேண்டுமென்றாலும், முதலில் 13ஐ கத்தரித்தாக வேண்டும், என்பது இரண்டாவது விதி. இவ்விரு விதிகளுமே, எமது புலம்பெயர் அரசியலுக்கு உவப்பானது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், 13ஐ தூக்கியெறிவது, மறுபுறத்தில் ‘சமஷ்டி’யை உள்ளடக்கவே செய்யும். மொத்தத்தில், இவை அனைத்தையும் சுருக்கினால், அது சமஷ்டியா அல்லது 13 என்றா என்பதில்தான், ஒருவகையில், முடியும். இப்பின்னணியிலேயே, இவ்விரு சந்திப்புகளும் முக்கியத்துவம் பெறுவன.
ஆக, இவ் இழுபறிகள், அனைத்துமே, வடக்கு அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு உவப்பாக இருந்துள்ளதோ, அதுபோலவே, எமது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கும் இவ்விழுபறிகள், உவப்பானதாகவே இருக்கின்றன. காரணம், இந்நாட்டின், மாபெரும் அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவ் ஆட்சியை வலிதான முறையில் அவர்கள் தக்க வைத்து கொண்டதும் மேற்படி அரசியல் சார்ந்தது என்பதில் ஐயமில்லை.
மறுபுறம், இப்போக்குகள், அதாவது, சமஷ்டியை வலியுறுத்துவதும் (பொன்னம்பலம் குழுவினர்) மற்றும், இதற்கெதிராய் மாகாண சபைகளை அல்லது மாகாண சபை தேர்தலை வலியுறுத்தும் சுமந்திரன் போன்றோர், ஆகிய இருவருமே, இந்தியாவுக்கு இஷ்டப்பட்டவர்களாகவே தோற்றுவர். இருந்தும், இம்முரண்களை அடிப்படையாக கொண்டு, இயங்கும் இந்தியாவின் இந்திய-இலங்கை வெளியுறவு கொள்கையை கண்ணோட்டமிடுமிடத்து, அங்கே சிற்சில மாற்றங்கள் அண்மை காலங்களில் ஏற்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.





பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் ஒரு முக்கிய ஆளுமை. அவர் ஒரு கவிஞராக மட்டுமன்றி, மொழியியலாளராக, இலக்கியத் திறனாய்வாளராகவும் அறியப்படுகிறார். அவரது கவிதைகள் சமூக அரசியல் விழிப்புணர்வு, மனிதநேயச் சிந்தனைகள், மற்றும் மொழி பற்றிய ஆழ்ந்த பார்வை ஆகியவற்றைத் தாங்கி நிற்கின்றன. அவரது கவிதைகளை மெய்யியல், அழகியல் அடிப்படையில் அலசும் ஆய்வாக இது அமைந்துள்ளது.





“வருணன் மேய பெருமணல் உலகமும்” (தொல்.அகம்.5)

வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியென அயராதுழைத்த இலண்டன் சிவாப்பிள்ளை (சிவகுருநாதபிள்ளை - வயது 83) கம்போடியா - அங்கோர் நகரில் நடைபெற்ற 'கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன்" 1000 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டவேளை> சிந்திப்பதை நிறுத்திக்கொண்டமை அதிர்ச்சியையும் மிகுந்த கவலையையும் தருகிறது. அவரது பூதவுடல் லண்டனுக்கு எடுத்துவரவிருப்பதாகத் தெரியவருகிறது.

“செக்கூரட்ரி.... மதுரையிலயிருந்து வசந்தன் வந்தால், காம்பவுண்டுக்குள்ளை எலவுட்பண்ண வேண்டாம்.... இதோ உங்க ரூம்ல அவன் ட்ரெஸ்சு வெச்சிருக்கிற சூட்கேசை வெச்சிருக்கேன்.... இந்தா பாருங்க, உங்க டேபிள்ள ரூவா ஐயாயிரம் வெச்சிருக்கேன்....
எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் தென் திசையிலிருந்து கிழக்குத் திசையில் அதாவது நோர்வே பக்கம் இருந்தது .நோர்வேயையும் ஐஸ்லாந்தையும் பிரிப்பது அத்திலாந்திக் சமுத்திரம். இதைக் கடந்து தான் வைக்கிங் குழுவினர் அக்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் ஐஸ்லாந்து மட்டுமல்ல, கிறின்லாந்து மற்றும் அமரிக்காவரை சென்றார்கள். ஐஸ்லாந்தில் ஆயிரம் வருடங்கள் முன்பாக குடியேறினார்கள்







தமிழ்மொழி இனிமையானது. பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இலக்கியவளம், இலக்கணச் செழுமை கொண்டது. செம்மொழி அந்தஸ்து கொண்டது. சொல்வளம் நிறைந்தது. ஒரு சொல்லுக்கு பல பொருளும், பல சொல்லுக்கு ஒரு பொருளும் உடையது. இதுபற்றி தருவது நிகண்டுகளாகும். திவாகரநிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு என்று பல நிகண்டுகள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.கம்பராமாயணத்தில் இச்சொற்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்து குறித்து ஆராய்வோம்.
தேவனும் வாசுகியும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெளியே வந்த போது உபர்டாக்ஸி நின்று கொண்டிருந்தது. தன் கைபேசியை பார்த்து தேவன் ஓட்டி எண்ணை அந்த டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னான்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









