எழுத்தாளர் விமல் பரம் எழுதிய "தீதும் நன்றும்" சிறுகதைத்தொகுப்பு மீதான ஒரு திறனாய்வு! - பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து -

மனித வாழ்வின் ஒரு கூற்றை, யாரேனும் ஒருவரின் பண்பை அல்லது செயலை, ஏதேனும் ஒன்றன் இயக்கத்தை அல்லது செயற்பாட்டை எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியத்தைக் கலைச்சுவை சிறிதும் குன்றா வண்ணம் வெளிப்படுத்துவதே சிறுகதையின் நோக்கம் எனலாம். இந்தச்சிறுகதைத் தொகுப்பின் சிறப்பம்சம் என்னவெனில்; இதில் இடம்பெற்ற பல கதைகள் மனிதவாழ்வில் நம்பிக்கை ஔி ஏற்றுவனவாக அமைந்துள்ளன. கதாபாத்திரங்கள் வாழ்க்கை எனும் பாதையில் செல்லும் வழியில் எதிர்ப்படும் தடைகளான பூட்டிய கதவு, எழும்பி நிற்கும் சுவர், தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சாளரத்தையும் சாத்திவிடும் உள்நுழையும் பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்றோ கடந்து செல்வதாக பல கதைகள் முடிவு பெறுகின்றன.
அடுத்தது, இக்கதைகளின் ஓட்டம் எந்த இடத்திலும் தங்கு தடையின்றி போகிறது. இக்கதைகள் முறையாக எடுத்துத் தொடுத்து முடிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பக்கபலமாக அவருடைய எளிய சொல்லாடல்கள் வசன அமைப்புகள் அமைந்தமை சிறப்பு; வாசகன் எந்தச் சிரமமும் இன்றி கதாசிரியர் சொல்ல வந்ததைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற பல கதைகள் "நம்பிக்கைதான் வாழ்க்கை" என்பதை வலியுறுத்தி நிற்கின்றன. இந்த நம்பிக்கை வாழ்வில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மற்றும் துயரங்களை கடந்து செல்ல உதவுவதுடன் எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும், வாழ்க்கையை முன்னேற்றிச் செல்ல தேவையான நம்பிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இந்த நம்பிக்கை, ஒரு நபரை செயலில் இறங்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், இறுதியில் வெற்றியை அடையவும் தூண்டுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த உந்துதல் சக்தியாக இங்கு வெளிப்படுகிறது.





காஷ்மீரின் இரண்டாவது நாள் எங்கள் பயணம், “சொன்மார்” (Sonamarg) எனப்படும் பிரதேசத்தை நோக்கி இருந்தது. ஶ்ரீநகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதி, பெரும்பாலும் பனிப்பாறைகளால் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும். வெயில் காலத்தில் பனிமலைச் சிகரங்கள் சூரிய ஒளியில் தங்கம் போல் மின்னுவதால் இதற்கு “சொன்மார்” — தங்கத்தாலான இடம் ( Golden meadow)— என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.


சாலையோரம் நடந்த சென்று கொண்டிருந்தான். ஒரு பதினாறு வயசு இருக்கும். பனி. அதிகாலை வேளையில் கொட்டி, வானம் இருண்டு போய் கிடந்தது. காரை நிறுத்தினேன். ஏற, உதவி செய்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறானாம். ஸ்டொக்ஹோம் செல்ல வேண்டும். நடந்தால், பஸ் காசும் மிஞ்சும். குறுக்கு வழியாக ஏறினால் நோர்வூட்டிலிருந்து பத்து நிமிசம்தான் எடுக்கும். விவரித்தான்: “அடியான அடி. எல்லோருமாய் சேர்ந்து தான்”. பஸ்ஸில் வரும் போது நடந்த அச் சம்பவம். “தூங்கும் போது, பக்கத்து சீட்டில், கையை விட்டு, - பதினஞ்சாயிரம். அப்படியே அடித்திருக்கிறான். அவனை அடியாய் அடித்து, நாவலபிட்டியில் இறக்கி விட்டார்கள்…”


அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
கல்லூரி வாழ்க்கையில்தான் எத்தனை ஆயிரம் கதைகள் இருந்தாலும்,மறக்கமுடியாத,மனசை விட்டுப் பிரிக்க முடியாத ஒரு கதைதான் இது. 1972 களில் யாழ்.இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம்.கல்லூரி மைதானத்தில் துடுப்பாட்டப் போட்டி(Cricket Match)ஆரம்பித்துவிட்டால் போதும், மைதானத்தைச் சுற்றி ஆட்டத்தைப்பார்ப்போரின் எண்ணிக்கை நிறைந்து வழியும்.ஒரு மூலையில் கூட்டமாக இருந்து,Pongos ஐயும் வாசித்தபடி College College என்று ஒரு பகுதி ஓங்கி ஒலியெழுப்ப,மற்றைய பகுதி Hindu College என்று உரத்துக்கத்த,எங்களின் வேகப்பந்து வீச்சாளன் வசந்தனும் துள்ளிவந்து பந்தை வீச விக்கற்றும் பறக்க நாங்களும் துள்ளிக் குதிப்போம்.காற்றில் புழுதி கிளம்ப அரசமரத்தின் இலைகளும் சரசரக்க,நீலமும்,வெள்ளையும் கலந்த கல்லூரியின்கொடி காற்றில் அசைந்து, பெருமிதமாக வெட வெடத்துப் பறக்கும். நீலவர்ணம் நிறைந்த வானம்.வெக்கையைக் கக்கும் வெயில்.என்றாலும் கூட வசந்தனின் சிரிப்பின் ஒளிவீச்சு மைதானத்தை நிறைத்து நிற்கும்.இப்படித்தான் எங்களுடைய ‘டட்ட டாங்'எல்லோருக்கும் அறிமுகமானார்.


அழகான உடை பெண்ணின்







மனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









