கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் எழுத்தாளர் அரங்கம் 49 - எழுத்தாளர் தமிழ்நதி உரையாடுகின்றார்!



[எழுத்தாளர் டில்ஷன் மதுரங்க (Dilshan Madhuranga) தனது முகநூற் பக்கத்தில் இலங்கையின் கலை, இலக்கிய & அரசியல் ஆளுமைகளைப் பற்றி எழுது வருகின்றார். அதில் அவர் இலங்கையின் பெண் கட்டடக்கலைஞர்களில் முன்னோடியான மின்னெட் டி சில்வா பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையிம் தமிழாக்கமிது. தமிழ் மொழிபெயர்ப்பு - chatGPT]
மின்னெட் டி சில்வா (Minnette de Silva) இலங்கையின் முன்னோடிப் பெண் கட்டடக்கலைஞர். அவரைப்பற்றிய பய்னுள்ள் விரிவான ஆங்கிலக் கட்டுரையினை Dilshan Madhuranga தனது முகநூற் பக்கத்தில் எழுதியிருக்கின்றார். இலங்கையின் கலை, இலக்கிய, அரசியல் ஆளுமைகள் பற்றி இவர் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி, சாட்ஜிபிடியால் செய்யப்பட்ட இதன் தமிழாக்கம் இது. ]
மின்னெட் டி சில்வா, இலங்கை உருவாக்கிய மிகச் சிறந்த கட்டடக் கலைஞர்களில் ஒருவராவார். நிலைத்த கட்டடக்கலை (sustainable design) , காலநிலைக்கேற்ப வடிவமைப்பு, சமூகப் பங்கேற்பு, பிராந்திய அடையாளம் போன்ற கருத்துகள் பரவலாகப் பேசப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர் தமது கட்டடங்களின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் இக்கருத்துகளை ஆராய்ந்து வந்தார்.
1918 பெப்ரவரி 1ஆம் தேதி, அப்போது பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த சிலோனின் கண்டியில் மின்னெட் பிறந்தார். அரசியல், கலாசாரம், சமூகச் சீர்திருத்தம், சுதந்திரப் போராட்டம் ஆகியவற்றுடன் ஆழமாகத் தொடர்புடைய குடும்பச் சூழலில் அவர் வளர்ந்தார். அவரது தந்தையான ஜோர்ஜ் ஈ. டி சில்வா புகழ்பெற்ற வழக்கறிஞரும் அரசியல்வாதியுமாவார். அவர் சிலோன் தேசிய காங்கிரஸின் தலைவராகவும் பின்னர் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார். அவரது தாயார் ஆக்னஸ் டி சில்வா பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவரும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவருமாவார்.

கட்டுரையாளர்! - வி. துர்காஸ்ரீ, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் , திண்டுக்கல் , காந்தி கிராமம், இந்தியா - | நெறியாள்கை: முனைவர் சி.சிதம்பரம் -
முன்னுரை:
சங்க இலக்கியங்கள் அகம், புறம் என இரு பகுப்புகளை உடையது. இரண்டு பகுப்பிற்கும் அதற்கென திணை, துறைகள் இலக்கண நூலோரால் வகுக்கப்பட்டுள்ளன. அதனை முதன்மையாகக் கொண்டே எட்டுத்தொகை நூல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ள நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் வஞ்சித்திணையின் கீழ் துணைவஞ்சி என்ற துறையின் பெயரில் ஆறு பாடல்கள் உள்ளன. ஆனால் தற்போதுவரை கிடைக்கப்பெற்றுள்ள புற இலக்கண நூல்கள் எவற்றிலும் துணைவஞ்சி என்னும் இத்துறையானது சுட்டப்பெறவில்லை. இவ்வாய்வுக் கட்டுரை துணைவஞ்சி என்ற புறத்துறையின் விளக்கத்தினையும், எந்த அடிப்படையில் இத்துறை தோன்றியது என்பதையும் விளக்க முற்படுகின்றது.
Join Zoom Meeting | Meeting ID: 840 3358 1685 | Passcode: 638 419

தமிழகக் கோயிற்சிற்பங்கள் புலப்படுத்திநிற்கும் கரணங்களும் அவற்றின் மீளுருவாக்கமும்’
Time: Sep 12, 2026 09:00 PM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting | Meeting ID: 840 3358 1685 | Passcode: 638 419
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

[எழுத்தாளர் குறிப்பு - எழுத்தாளர் புனைபெயர்: ஜெயா (இயற்பெயர் : வீரபத்திரன்), ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவு மற்றும் ஆவணப்படத் தயாரிப்புத் துறையில் தடம் பதித்து வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு பணியாற்றி வரும் வீரபத்திரன், ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆவணப்படங்களை உருவாக்கி, சமூகப் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள கலாச்சாரம், மற்றும் மனிதர்களின் வாழ்க்கையைத் தன் லென்ஸ் வழியாகக் காட்சிப்படுத்தி வருகிறார். கதைச் சுருக்கம்: பதின்ம பருவத்து உணர்ச்சிவேகத்தில் தன் விருப்பமே பெரிதென நினைக்கும் ஒரு சராசரி பள்ளி மாணவன், தந்தையின் உழைப்பையும் அவமானத்தையும் நேரில் காணும்போது அடையும் முதிர்ச்சியையும், சுயமரியாதையை உணரும் தருணத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இச்சிறுகதை.]
மதுரையின் அந்தப் பழமையான ஓட்டு வீட்டில், காலை நேரத்துப் பரபரப்பு நிறைந்திருந்தது. தெருவில் ஒலிக்கும் பால் வண்டி மணியின் சத்தமும், காய்கறிக்காரரின் கூவலும் அந்த நாளின் தொடக்கத்தை அறிவித்தன.
அறையின் ஒரு ஓரத்தில், பழைய மர முக்காலியில் அமர்ந்து பித்தளைத் தம்பாளத்தில் கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தார் லட்சுமி பாட்டி. அருவாமனையின் 'கீச் கீச்' சத்தமும், நறுக்கிய காய்கள் தண்ணீரில் விழும் 'சொப் சொப்' சத்தமும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தன.
திடீரென வாசல் கதவு படாடீரெனத் திறந்தது. முதுகில் கனமான பள்ளிப் பையைத் தொங்கவிட்டபடி, முகம் முழுக்கக் கடுப்புடன் உள்ளே நுழைந்தான் 16 வயது மார்த்தாண்டம் (எ) மார்த்தா. சாக்ஸை உருவி வீசிவிட்டு, ஒரு பெருமூச்சோடு பாட்டியின் அருகில் பொத்தெனத் தரையில் உட்கார்ந்தான்.
"ஹப்பா... இந்த வீட்ல யாருக்குமே என் கஷ்டம் புரியல பாட்டி! உங்க பையன் ஏன் எனக்கு எப்போதுமே 'ஃபேவரா'வே இருக்க மாட்டேங்குறாரு?" என்று ஆத்திரத்துடன் புலம்பினான்.
வேல் டெக் ரங்க சங்கு கலைக் கல்லூரியின் (Vel Tech Ranga Sanku Arts College) 24-வது பட்டமளிப்பு விழா. ஆகஸ்ட் 22, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள வேல் டாக்டர் ஆர்.ஆர் மற்றும் டாக்டர் எஸ்.ஆர் கன்வென்ஷன் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் அ.வீ.க. சாந்தி வரவேற்புரை ஆற்றியதுடன், கல்லூரியின் சாதனைகள் குறித்த ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
இவ்விழாவிற்குக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவரான கர்னல். பேராசிரியர் வேல். டாக்டர் ஆர். ரங்கராஜன் மற்றும் நிறுவனத் தலைவி மற்றும் துணைத் தலைவரான டாக்டர் திருமதி சகுந்தலா ரங்கராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர் . கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் திருமதி. ரங்கராஜன் மகாலட்சுமி கிசோர் மற்றும் கல்லூரியின் அறங்காவலர் மற்றும் உதவி இயக்குனர் செல்வி எஸ்கந்தா கே. வேல், ஆகியோர் பட்டமளிப்பு விழாவை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.

ஈழத்து இலக்கிய உலகில் கிராமிய வாழ்வியலையும் புலம்பெயர் அனுபவங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் இயல்பான மொழியில் பதிவு செய்து வரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் காரைக்கவி கந்தையா பத்மானந்தன். அவரது காவோலை சிறுகதைத் தொகுப்பு, வெறும் கதைகளைச் சொல்லும் படைப்பாக மட்டுமன்றி, சமூக மாற்றங்களின் தாக்கத்தால் சிதைந்து வரும் உறவுகள், முதுமையின் தனிமை, புலம்பெயர்வின் உளவியல், மற்றும் தமிழரின் கிராமிய வாழ்க்கையின் நுணுக்கங்களை ஆழமாகப் பதிவு செய்யும் இலக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைத்தும் வாழ்க்கையின் உண்மையான அனுபவங்களிலிருந்து உருவானவை என்ற உணர்வை வாசகருக்கு அளிக்கின்றன. கற்பனையை விட எதார்த்தம் மேலோங்கி நிற்கும் இக்கதைகள், வாசகனைச் சிந்திக்கவும், சில நேரங்களில் மனதை கனக்கவும் செய்கின்றன.
முதுமை
மறக்கப்பட்ட மனிதர்களின் மௌனக் குரல் இந்தத் தொகுப்பின் மையக் கருக்களில் முதன்மையானது முதுமை வாழ்வு. குறிப்பாக தலைப்புக் கதையான "காவோலை" (கனகம்மாவின் வாழ்க்கை) முதுமையின் தனிமையையும், பிள்ளைகளுக்காக வாழ்ந்த ஒரு தாயின் இறுதிக்கால வேதனையையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறது.

கட்டுரையாளர்: - முனைவா். இரா.மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -20 -
முன்னுரை
மனிதன் ஒழுங்குபட வாழ்வதற்கு ஒழுக்கம், கல்வி, அறிவு, கலையுணா்வு ஆகியவை அவசியமானதாகிறது. சமுதாயத்தில் இயல்பாக வாழ்வதற்கு மனிதன் இந்நெறிமுறைகளை வகுத்துக் கொள்கிறான். இதில் தொடங்குதல், முடிவெடுத்தல், அமைப்புருவாக்கம் செய்தல், திரம்பட நடத்துதல் போன்றவை மனிதனின் நவீன செயற்திட்ட நடைமுறையாகும். இந்நடைமுறையில் தொடா்ந்து பயணிக்கப்படும்போது சிக்கல் ஏற்பட்டு இறுதியில் பெருவாழ்வு கிடைக்கிறது. அல்லது நவீன மாற்றத்தை எதிா்கொள்ள முற்படுகிறான். அத்தகைய அமைப்பாக்கத்தின் பின்புலத்தை வள்ளுவா் அறம், பொருள் இன்பம் என்னும் மூன்று அதிகாரத்திற்குள் வைத்து தெளிவுபடுத்தியிருப்பது சாலச்சிறந்தது. அதனை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
பின் அமைப்பின் தொடக்கம்
வள்ளுவா் வகுத்த சமூக அமைப்பாக்கத்தில் மனிதனுக்கான வாழ்க்கைப் பங்கு மரபுமைக்கு உட்பட்டதாகத் தென்படினும் நவீனத்துவத்தில் அதன் தேவையை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்மாதிாியாக இருக்கிறது. அதையே பின் நவீனத்துவத்தில் அதன் பின்புலத்தன்மை எவ்வாறு இருக்கிறது என்று ஆராயப்படுகிறது. இதனை, வள்ளுவா்,
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” (குறள் - 423)
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் அதன் உண்மை தன்மை எது? என்பதை முடிவெடுத்து ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்கிறாா். நவீனத்துவத்தில் சமகாலத்தில் நாம் கையாளும் பல கலைச்சொற்களை மாற்றீடு செய்து அதன் உண்மைத் தன்மையை ஊா்சீதப்படுத்தி முடிவெடுப்பதை பின்அமைப்பியம் காட்டுகிறது.

இருட்ட தொடங்கி விட்டது. டீ நகர் பஸ் ஸ்டான்டில், இறங்கி, மறைவாக, சற்று இருட்டில் ஓரமாய், நிறுத்தப்பட்டிருந்த ஷேர் ஆட்டோவை நெருங்கி விசாரித்த போது, அது பாண்டி பஸார் செல்லாது என்று தெரிவித்தார்கள். பனகல் பார்க் வரை செல்லலாம். பெட்ரோல் பங்குடன் நீங்கள் இறங்கி நடக்கலாம் என்று அறிவுரையும் வழங்கினார்கள். மீண்டும் பஸ் ஸ்டேன்டை நோக்கி ஓடினேன். மூச்சு வாங்கியது. ஒரு பஸ் கிளம்பி சென்றது. இன்னுமொரு பஸ் நிறுத்தப்பட்டது. ட்ரைவரும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக இறங்கி கொண்டிருந்தனர். ‘உட்காரு’ என்று கூறிவிட்டு, எனது கேள்விக்கு பதிலளிக்காமல், எங்கேயோ சென்றனர். டீ குடிப்பதற்காக இருக்கும். மனிதர்களுக்கு களைப்புத்தான். பகல் முழுவதும் இந்த பயங்கர வெயிலில் ஓட்டியிருப்பார்கள். ஜன்னல் வழியாக, அமர்ந்தப்படி பார்வையை செலுத்தினேன். ஷேர் ஆட்டோ நிரம்பிக் கொண்டிருந்தது. சுற்றிவர ஒளிர்ந்து கொண்டிருந்த, நியான் விளக்குகள் இருளை பகலாக மாற்றிக் கொண்டிருந்தன. பாதை அங்கே நான்காக பிரிந்து கொண்டிருந்தது. சந்தி. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாய், நெருக்கி அடித்தபடி சென்றன. வேலை முடிந்து வருபவர்கள், கடைகளுக்கு சென்று வருபவர்கள் என பஸ் மெது மெதுவாக நிறைய தொடங்கியது. எனக்கு முன் சீட்டில், ஓர் பெண்ணும் பிள்ளைகளும். பக்கத்து சீட்டில், களைப்புடன் அமர்ந்திருக்கும், ஒரு கூலி வேலை செய்யும் பெண். மெலிந்த தோற்றம். பற்களில் காவி ஏறி இருந்தது. சேலையை ஏனோ தானோ என்று சுற்றி இருந்தாள். உஷ்ணத்தால் அவள் முகம் வியர்த்து, பிசு பிசுத்து, பளபளத்தது. எனது முகமும் அதே போன்று இருக்கக்கூடும். சற்று நேரத்தில், ஒரு சோளப் பொறி விற்பவன், நின்றிருந்தவர்களை தள்ளியபடி தண்ணீர் போத்தலுடன், கூவியபடி வந்தான். இவளும் தன் பையை திறந்து, ஒரு சிறிய போத்தலை வாங்கிக் கொண்டாள். தாகமாயிருக்கும். காலையில் இருந்து உழைத்த பணம் இப்படி பறிபோகிறதே - நான் வருத்தப்பட்டேன். இருந்தும் அவ்வளவு உஷ்ணம். இந்த மாலையிலும் இவ்வளவு. பகல் அடித்த வெயிலில், கிளம்பிய சூடு இன்னும் தணிந்த பாடில்லை. வியர்வையும் பிசுபிசுத்து, வழிகின்றது. மழை வந்தாலும் வரும் - அவ்வளவு புழுக்கம்.
இப்போது இவள் பக்கமாய், ஒரு இள நங்கை ஏறி அமர்ந்து கொண்டாள். இவளும், ஏழ்மையில் அடிபட்டவள்தான். மெலிந்த தோற்றம். ஒரு குழந்தை வேறு. குழந்தைக்கு மூன்று, நான்கு வயதிருக்கும். ஓர் இருபது வயதையே இவளுக்கு மதிப்பிடலாம். அல்லது பதின்வயதுக்காரி என்றாலும் பொருந்தக்கூடியதுதான். ஒரு சிறுமி எனலாம். அவ்வளவு சிறிய உடம்பு - கருத்தவள் - சின்னஞ்சிறு கூரிய முகம். இந்த இளவயதில் திருமணம் முடித்து, குழந்தையையும் பெற்றிருக்கின்றாள்?

அத்தியாயம் இரண்டு: நகரத்து அணில்!
சுதந்திரன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ' மாநகர் விரிந்து கிடந்தது. தெற்காகத் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'கனடா வாத்து'க் கூட்டமொன்று V வடிவில் பறந்துகொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில கூட்டமாகக் கடுகிச் சிறகடித்து மறைந்தன. அவன் வசித்து வந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றிலிருந்து மெல்ல மெல்ல இறங்கிய கறுப்பு அணிலொன்று புஸ் புஸ்ஸென்று வளர்ந்திருந்த வாலை ஆட்டியபடி மெல்ல அவனைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்தது. பின் ஏதோ திருப்தி அடைந்ததுபோல் தன் காரியத்தில் மூழ்கி விட்டது. புல் மண்டிக்கிடந்த தரையில் உனவு தேடும் அதன் வேலையில் மூழ்கிவிட்டது. சுதந்திரன் சிறிது நேரம் அதன் அசைவுகளைப் பார்த்து நின்றான். ஒரு கணம் அந்த அணில் பற்றிய சிந்தனைகள் அவன் சிந்தையில் ஓடின. இந்த அணிலின் இருப்பு எவ்வளவு சிறியது என்று நினைத்துக்கொண்டான். இந்த மரம்,இதனைச் சுற்றியுள்ள சிறு பிரதேசம் .. இவையே இதன் உலகம். மரத்திலுள்ள கூடும், மரத்தைச் சுற்றியுள்ள அயலுமே அதன் உலகம். ஒவ்வொரு நாளும் தன் இருப்புக்காக உணவு தேடுவதே அதன் முக்கிய பணி. அவ்விதம் இருப்பைத்தக்க வைப்பதற்கு முயற்சி செய்கையில் அதனைப் பலியெடுத்துத் தம் இருப்பைத்தக்க வைக்கும் ஏனைய உயிரினங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அது மிகவும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வைக்கு மிகவும் எளிமையாகத் தென்படும் அதன் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டான் அவன். அந்த எண்ணத்துடன் மீண்டும் அந்த அணில்மேல் பார்வையைத் திருப்பியபொழுது இப்போது அந்த அணில் அவனது இதயத்தை மிக நெருங்கி வந்து விட்டிருந்தது.
இதற்கிடையில் மாடப்புறாக்கள் சில அணிலுக்கு அண்மையில் பறந்து வந்தமர்ந்து இரை தேடத்தொடங்கின. அப்புறாக்களைத் தொடர்ந்து சிட்டுக்குருவிகள் சிலவும் பறந்து வந்து புறாக்களின் அருகாமையில் இரைதேடத்தொடங்கின. புறாக்களுக்கும் ,சிட்டுக்குருவிகளுக்குமிடையில் ஒருவித நட்புரீதியிலான புரிந்துணர்வு, அன்பு இருப்பதாக அவன் இவ்விதம் அவற்றை ஒன்று சேரக் காண்கையில் உணர்வதுண்டு. சிட்டுக்குருவிகள் அமைதியான சுபாவம் மிக்க புறாக்களின் அருகாமையில் ஒருவித பாதுகாப்பு கலந்த உணர்வினை உணரக்கூடுமென்றும் அவனுக்குத் தோன்றியது. இச்சமயம் பார்த்து சீ கல் என அழைக்கப்படும் வெண்ணிறக் கடற்பறவைகள் சில கீச்சிட்டபடி சிறகடித்துப் பறந்தன.

["இந்த விமர்சனம் Melbourne print and Press என்ற இலக்கிய பதிப்பாளர்கள் எனது அசோகனின் வைத்தியசாலை இன் ஆங்கில மொழிபெயர்ப்பு (Pre-editorial translation) பார்த்து அனுப்பியது " - நடேசன்]
ஒரு மருத்துவமனைக்குள் விரியும் புலம்பெயர் வாழ்க்கை
நோயல் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை* ஒரு கால்நடை மருத்துவமனையைப் பற்றிய நாவல் மட்டுமல்ல. புலம்பெயர்ந்த மனிதன் ஒருவன் புதிய நாட்டில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ள மேற்கொள்ளும் அகமும் புறமுமான பயணத்தைப் பேசும் நாவல் இது.
மெல்பேர்னில் இயங்கும் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையே கதையின் பிரதான களம். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் கால்நடை மருத்துவரான சிவநாதன் சுந்தரம் பிள்ளையின் பார்வையில் அந்த உலகம் நமக்கு அறிமுகமாகிறது.
புதிய நாடு; புதிய பணிச்சூழல்; புதிய மனிதர்கள்; புரிந்துகொள்ள முடியாத சில சமூக நடைமுறைகள்; பணியிட அரசியல்; இனரீதியான ஒதுக்கல்கள் — இவற்றின் மத்தியில் தனது தொழில்சார் கண்ணியத்தையும் தனிமனித அடையாளத்தையும் விட்டுக்கொடுக்காமல் வாழ முயலும் ஒருவரின் அனுபவமே நாவலின் அடிநாதமாக இருக்கிறது.

அவர்கள்
பூமியின் பழைய நகரத்தை
அகழத் தொடங்கியபோது
முதலில் கிடைத்தது
ஒரு பிளாஸ்டிக் பாட்டில்.
அதன் மீது
ஒரு மங்கிய எழுத்து:
“தண்ணீர்.”
ஆய்வாளர்
அதைப் பார்த்து
நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்.
“இவர்கள்
தண்ணீரையும்
பாட்டிலுக்குள்
அடைத்திருக்கிறார்கள்.”
அவருக்குப் பக்கத்தில்
நின்றிருந்த மாணவன் கேட்டான்:
“ஏன்?”
ஆய்வாளர்
தோள்களை உயர்த்தினார்.
“இன்னும் தெரியவில்லை.”
அவர்கள்
மேலும் தோண்டினர்.
ஆயிரக்கணக்கான
சிறிய பிளாஸ்டிக் பொருட்கள்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டவை.
மீண்டும் பயன்படுத்தப்படாதவை.
சில நிமிடங்களுக்காக
உருவாக்கப்பட்டவை.
பல நூற்றாண்டுகளுக்காக
மண்ணில் தங்கியவை.

கட்டுரையாளர் - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
முன்னுரை
சுக்ரீவனின் மனைவி ருமை.முக்கியப் பாத்திரமான ருமை கம்பராமாயணத்தில் நேரடியாக யாருடனும் பேசவில்லை. யாரும் நேரடியாக அவளிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கதாப்பாத்திரமே நூலின் அடிப்படையைப் பேசவைக்கிறது.பேசாமடந்தையே அதிகமாக நினைக்கப் படுகிறாள். கதை தொடர்ந்து செல்ல அடி நாதமாக இருந்தது இந்த ருமையே. கம்ராமாயணத்தின் அடி நாதம் பிறர் மனைவியை விரும்பக் கூடாது என்பதாகும். இதன் மூலம் கம்பர் ஒருவித புது உத்தியைக் கையாண்டுள்ளார் என்பதை இக்கட்டுரையின் வழி நாம் ஆராய்வோம். .
உருமை குறித்த அறிமுகம்
நட்புக் கோட் படலத்தில் இராமனுக்கு, சுக்ரீவன் கனிகளையும், கிழங்குகளையும் விருந்தாக உண்ணக் கொடுத்தான். அப்போது சுக்ரீவனைப் பார்த்து இராமன், ’பொருந்தும் நல்லற வாழ்க்கைக்கு இன்றியமையாத மனைவியை நீயும் பிரிந்துள்ளாயோ’ என்று வினவினான்.
“பொருந்து நன் மனைக்கு உரியபூவையைப்
பிரிந்துளாய்கொலோ நீயும்பின் என்றான்“
(நட்புக் கோட்படலம் 112)
வாலியின் பெருமை குறித்துக் கூறும் அனுமன்
அனுமன் பதிலாக இராமனிடம், வாலியின் பெருமைகளைக் கூறி நாட்டை விட்டு துரத்தியதையும் கூறினான். பின்னும் இச்சுக்ரீவனுக்கு உருமை என்று பெயர் பூண்ட மனைவியாகிய கிடைப்பதற்கு அரிய அமிழ்தத்தையும் அந்த வாலி விரும்பி கவர்ந்து கொண்டான்.இச்சுக்ரீவன் செல்வத்தையும், மனைவியையும் துறந்து இருந்தான். நடந்த செயல் இதுவாகும் என்று சொல்லி முடித்தான்.

பொருளடக்கம்
பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்:
கல்விப்புல அறிமுகம்
நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில், மெய்யியலும் (தத்துவமும்) அறிவியலும் கவித்துவத்தோடு இணையும் புள்ளிகள் மிகவும் அரிதானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சுப்பிரமணிய பாரதியார் வேதாந்தச் சிந்தனைகளையும், 'சக்தி' மற்றும் 'காலம்' பற்றிய தத்துவார்த்த வினாக்களையும் தமிழ்க் கவிதையியலுக்குள் கொண்டுவந்தார். அதற்குப் பிந்தைய சூழலில், அறிவியல் மனநிலையையும், நவீன இயற்பியலின் பிரபஞ்சவியல் (Cosmology) விதிகளையும் தமிழ் நவீன கவிதையின் அக-புறப் பரிமாணங்களுக்குள் இயல்பாக நெய்த படைப்பாளிகளில் வ.ந. கிரிதரன் முதன்மையானவர்.

மொழிபெயர்ப்பாளர்: ஜெ. கார்த்திக், உதவிப்பேராசிரியர்(தமிழ்), மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை
இனிமையுள்ள ஆஃப்டன் நதியே, பசுமைநிறக் குன்றுகளுக்கு இடையே அமைதியாகப் பாய்ந்து செல்,
அமைதியாகப் பாய்ந்து செல், உன் புகழ் பாடும் பாடலை நான் பாடுகிறேன்!
உன் முணுமுணுக்கும் சிற்றோடையின் அருகில் என் மேரி தூங்கிக் கொண்டிருக்கிறாள்.
இனிமையான ஆஃப்டன் நதியே, அமைதியுடன் பாய்ந்து செல், அவளது கனவைக் கலைத்துவிடாதே!
பள்ளத்தாக்கில் எதிரொலிக்கும் மாடப்புறாவே,
முள்ளுள்ள புதரில் கீழ்ச் சிறகடித்துப் பாட்டுப் பாடும் பறவைகளே!
ஆள்காட்டிப் பறவையே, உன் அலறலை நிறுத்திக் கொள்.
துயிலும் என் அழகியைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்!
இனிமைகொண்ட ஆஃப்டன் நதியே, உனக்கு அருகிலுள்ள மலைகள் எவ்வளவு உயர்ந்தவை,
தெளிந்து வளைந்து செல்லும் சிற்றோடைகளின் பாதைகளால் தொலைவிலிருந்தே அவை தெரிகின்றனவே!
நடுப்பகல் சூரியன் உயரும் போது நான் தினமும் அங்கே அலைந்து திரிகிறேன்!
என் ஆட்டுமந்தைகளும் என் மேரியின் இனிமையான குடிலும் என் பார்வையிலே உள்ளன.

இன்று எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'சுமைகள்' நாவலின் புதிய பதிப்பு என்னை வந்தடைந்தது. அதற்காக அவருக்கு என் நன்றி. எழுபதுகளின் இறுதியில் வாசித்த நாவல்களிலொன்று 'சுமைகள்'. அப்பொழுது வீரகேசரி பிரசுரமாக வெளியான நாவல்களில் பலவற்றை வாசித்திருக்கின்றேன். அ.பாலமனோகரனின் 'நிலக்கிளி', வ.ந.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்ச்ப் பறவைகள்', செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' , கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை', தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை', சொக்கனின் 'செல்லும் வழி இருட்டு' , கதைக்கனிகள் சிறுகதைத்தொகுப்பு ஆகியவை அவற்றுள் அடங்கும்.
காலங்கள் மாறலாம். மானுடர் வாழும் சமூக, அரசியல் , பொருளாதார மற்றும் தொழில் நுட்பச் சூழல்கள் மாறலாம். சூழல்கள் எவையாயினும் காதல், உறவுகளுக்கிடையிலான பாசம், இருப்புக்காக உழைக்கும் நிர்ப்பந்தங்கள் உருவாக்கும் மானுட உணர்வுகள் மாறுவதில்லை. அதனால்தான் சங்கம் மருவிய காலத்துப் பெருங்காப்பியமான சிலப்பதிகாரத்தை இன்றும் பெரு விருப்புடன் வாசிக்கின்றோம், இருபதாம் நூற்றாண்ட்டுத் தமிழ்ப் புனைகதை உலகில், திரைப்பட உலகில் சிலப்பதிகாரம் ஏற்படுத்திய பாதிப்பால் உருவான படைப்புகள் நிச்சயம் பல நூறைத்தாண்டு. சிலப்பதிகார மாந்தர் வாழ்ந்த சூழல் வேறு, நாம் வாழும் சூழல் வேறு. இன்றும் அக்காப்பியம் எம்மைக் கவர்வதன் காரணம் மேற்படி மானுட உணர்வுகளை அவை வெளிப்படுத்துவதே.
தாமரைச்செல்வியின் 'சுமைகள்''எழுபதுகளில் எழுதப்பட்டிருக்கலாம். கதைககளம் பரந்தனைச் சார்ந்த மண்ணாக இருக்கலாம். ஆனால் கதாபாத்திரங்களின் உணர்வுகள் எமக்கும் உரியவவை. அதனால்தான் நாவல் முதல் வாசிப்பிலேயே எம்மைக் கவர்கின்றது.
நாவலில் வரும் செந்திலைப்போன்ற இளைஞர்கள் எங்குமிருக்கின்றார்கள். அவனைச் சார்ந்த குடும்ப உறவுகளை ஒத்த உறவுகள் எங்குமிருக்கின்றார்கள். அவனைப்போல், அவன் குடும்பத்தவரைபோல் இருப்புக்கான நிர்ப்பந்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் எங்குமிருக்கின்றார்கள். இதனால் வாசிக்கும் எவரும் தம்மையொத்த நாவலின் பாத்திரங்களின் உணர்வுகளுடன் ஒன்றிப்போய் விடுவார்கள். உதாரணமாக அப்போது எனக்குப் பதின்ம வயதின் இறுதிக்காலம். செந்திலின் குடும்பத்தில் ஐந்து சகோதரர்கள். மூத்த அண்ணன், அக்காமார் இரண்டு, துடுக்குத்தனம் மிக்க தங்கை. என் குடும்பத்தில் அக்கா, தம்பி, தங்கைமார் இருவர். நாவலில் செந்தில் தந்தையை இள வயதில் இழந்து விடுகின்றான். நானும் அப்பொழுதுதான் இழந்திருந்தேன். பல்கலைக்கழகம் செல்வதற்காகக் காத்திருந்த காலகட்டம். செந்திலின் உணர்வுகளை அவனையொத்த, என்னையொத்த இளைஞர்கள் பலரும் அடைந்திருப்போம். அது நாவலின் வெற்றிக்குக் காரணம்.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுக்கு இயல்விருதா? எழுத்தாளர் நடேசன் கேள்வி!
எழுத்தாளர் நடேசன் தனது முகநூற் பக்கத்தில் தனது சந்தேகமொன்றினைத் தெரிவித்துள்ளார். அது: "சில காலங்கள் இயல் விருது சிறந்த சிலருக்கு சென்றிருக்கிறது. ... ஒரு சந்தேகம் ஓவியம் எப்பொழுது இலக்கியம் வடிவத்தில் வந்தது?"
இவரது கேள்வி இம்முறை 2025ஆம் ஆண்டுக்குரிய தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது ஏன் ஓவியரான ட்ராட்ஸ்கி மருதுவுக்குக் (மருதப்பன் மருது) கொடுக்கப்பட்டது என்பது பற்றியது.
இயல்விருது என்பதிலுள்ள இயல் என்பது தமிழ் மொழியின் எழுத்துகளை, மொழியைக் குறித்தாலும் , தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது தமிழ் மொழிக்கான விருதாகத்தான் நான் கருதுகின்றேன். தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த எவருக்காகவும் அவ்வமைப்பு விருது கொடுப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. ஓவியர் ட்ராட்ஸ்கியின் ஓவியங்கள் தமிழ் மொழியில் வெளிவான இலக்கியப் படைப்புகளுக்கு உயிரூட்டியிருக்கின்றன. அவ்வகையில் அப்படைப்புகளுடன் பின்னிப் பிணைந்தவை. இயல் விருது நூல்களுக்குக் கொடுக்கப்படுவதால் அது நூல்களில் வெளியான ஓவியங்களையும் உள்ளடக்கியது. ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள் தமிழ் மொழியிலான அச்சூடகங்கள் பலவற்றில் வெளியாகியுள்ளன. அவ்வகையில் அவரது ஓவியங்கள் வெளியான புனைவுகள், அல்புனைவுகளை அவரதம் ஓவியங்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
அப்படைப்புகளுக்கு உயிரூட்டிய ஓவியங்களை வரைந்தவர் என்னும் அடிப்படையிலும் அவர் விருதுக்குப் பொருத்தமானவரே.
அடுத்தது ஓவியர் ட்ராட்ஸ்கி மருது வரைவதுடன் நின்று விடவில்லை. ஓவியம் பற்றிய கட்டுரைகள் பல எழுதியிருக்கின்றார். அவர் எழுதிய ஓவியங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு 'கோடுகளும் வார்த்தைகளும்' என்னும் பெயரில் நூலுருப்பெற்றுள்ளது. ஆக, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது எழுத்துப்பங்களிப்பும் செய்துள்ளார். ஆக இதற்காகவும் அவர் இவ்விருதுக்குப் பொருத்தமானவரே.

தமிழ் இலக்கியத்தில் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, பெண்களின் அனுபவங்கள், குடும்ப உறவுகளின் சிக்கல்கள், வறுமை, போர், இடம்பெயர்வு போன்றவற்றை இயல்பாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்த படைப்பாளிகளில் தாமரைச்செல்வி குறிப்பிடத்தக்கவர். அவரது படைப்புகள் வாசகனை வெறும் கதையைப் படிக்க வைப்பதல்ல; வாழ்வை நேருக்கு நேர் எதிர்கொள்ளச் செய்கின்றன. அந்த வகையில் சுமைகள், மனித வாழ்க்கையின் வெளிப்படையான சுமைகளை மட்டுமல்லாது,
சொல்லப்படாத மனச்சுமைகளையும், குறிப்பாக பெண்கள் அமைதியாகச் சுமந்து செல்லும் பொறுப்புகளையும் ஆழமாக ஆராயும் சமூக யதார்த்த நாவலாகத் திகழ்கிறது.
நாவலின் தலைப்பே அதன் மையச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. "சுமைகள்" என்பது உடலில் சுமக்கப்படும் பாரம் மட்டுமல்ல; மனதின் அழுத்தங்கள், உறவுகளின் பொறுப்புகள், பொருளாதாரக் குறைபாடுகள், சமூகத்தின் எதிர்பார்ப்புகள், பாலின அடிப்படையிலான அநீதி, நிறைவேறாத கனவுகள் ஆகிய அனைத்தும் மனிதன் சுமக்கும் மறைமுகப் பாரங்களாக இந்நாவலில் உருவகப்படுத்தப்படுகின்றன.
எழுபதுகளில் எழுத்தாளர்
தாமரைச்செல்வி அவர்கள் படைத்து வெளியிட்ட இந்த நாவல், இன்று மறுபதிப்பாக மீண்டும் வாசகர்களின் கைகளில் தவழ்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் வாழ்வியல், சமூகப் பின்னணி, பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவற்றை உயிரோட்டத்துடன் பிரதிபலிக்கும் இந்நாவல், அந்தக் காலத்தின் கண்ணாடியாக மட்டுமன்றி, இன்றைய சமூக மாற்றங்களை அளவிடும் ஓர் அரிய அளவுகோலாகவும் திகழ்கிறது.

கட்டுரையாளர்: முனைவா் பா.பொன்னி, இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி ( தன்னாட்சி ), சிவகாசி
புலப்பாட்டுநெறி என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கேட்பவாின் மனதில், பேசுபவா் தன்னுடைய கருத்தைப் பதிய வைக்கும் முயற்சி ஆகும். தமிழறிஞா்களிடம் தொடக்க காலம் முதற்கொண்டே புலப்பாட்டுத்திறன் குறித்த சிந்தனை இருந்து வந்துள்ளது. கருத்தினை வெளிப்படுத்தும் முறைகளில் படைப்பாளா்கள் பல்வேறு வகையான உத்தி முறைகளைக் கையாண்டுள்ளனா். அவ்வகையில் புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் அவா்களின் பெண்கள் தொடா்பான கருத்துப் புலப்பாட்டு நெறியினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
புலப்பாட்டு நெறி அகராதிகள் விளக்கம்
புலப்பாட்டு நெறி குறித்து அகராதிகள் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றன. புலப்படுத்துதல் என்பதற்கு 'விளங்கப் பண்ணுதல்"( மதுரைத்தமிழ்ப்பேரகராதி,ப.263 ) என மதுரைத் தமிழ்ப் பேரகராதி விளக்கம் தருகின்றது. புலப்படுத்துதல் என்ற சொல்லிற்கு மெய்யப்பன் தமிழ் அகராதியும் 'தெரிவித்தல்' ( மெய்யப்பன் தமிழ் அகராதி,ப.861 ) எனப் பொருள் தருகின்றது . நர்மதாவின் தமிழ் அகராதி 'விளங்கிடச் செய்தல்(cause to be understood)' ( நா்மதாவின் தமிழ் அகராதி, ப.669 ) எனப் பொருள் தருகின்றது. பொருள் விளங்கிடச் செய்யும் ஒரு முயற்சியே புலப்பாடு என்ற விளக்கத்தினை இதன்வழி அறியமுடிகிறது.
புலப்பாட்டு நெறி அறிஞா்கள் விளக்கம்
டி.எஸ்.எலியட் புலப்பாட்டு நெறியினை "ஒரு கருத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து ஆராய்ந்து மீண்டும் ஒன்று சேர்த்து மதிப்பீடு செய்வதைக் குறிக்கும் சொல் புலப்பாட்டு நெறியாகும். புலப்பாட்டு நெறியாளர் அன்றாடப் பேச்சு வழக்கினைக் காட்டிலும் கலைநயம் மிகுந்த செயற்கையான மொழியினைப் பயன்படுத்துவர்" ( நெல்லை க.சுப்பிரமணியன், மேலைநாட்டுப்புலப்பாட்டு நெறி,பக்.3-4) என்று குறிப்பிடுகிறார். எனவே புலப்பாட்டுநெறி புலப்பாட்டு மெய்ம்மையோடு புனைவும் கலந்த கோட்பாடாதலை அறிய முடிகிறது.
[பிரதமர் அலுவலக ஊடகத் தொடர்பு ( PMO Media Relations:) : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இந்த ஆவணம் பின்வரும் இணையதள முகவரியிலும் கிடைக்கிறது: https://pm.gc.ca ]
[ஆகஸ்ட் 24, 2026, லேவிஸ், கியூபெக்] வேகமாக மாறிவரும் இவ்வுலகில், கனடா ஒரு புதிய பாதையை வகுத்து வருகிறது. நாம் உள்நாட்டில் நமது வலிமையைக் கட்டமைத்து வருகிறோம், வெளிநாடுகளுடனான நமது வர்த்தக உறவுகளைப் பன்முகப்படுத்துகிறோம், மேலும் நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்கிறோம். கனேடியப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்லும் துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்துப் பாதைகள் முதல், நமது வர்த்தகப் பாதைகளைத் திறந்து வைத்திருக்கும் கப்பல்கள் வரை, மிகவும் வலுவான, தற்சார்பு கொண்ட ஒரு நாட்டின் அடித்தளத்தை நாம் அமைத்து வருகிறோம்.
ஏற்கனவே உள்ள வர்த்தக உறவுகள் சோதிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் கனடா சும்மா இருக்கவில்லை. நாம் வேகமாகச் செயல்பட்டு, புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றி, எந்தவொரு தனிப்பட்ட கூட்டாளியையும் சார்ந்திருக்கும் நிலையைத் தனித்துக் குறைத்து வருகிறோம்.
அதனால்தான், பிரதமர் மார்க் கார்னி, கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இன்று அறிவித்தார். சாண்டியர் டேவி கனடா (Chantier Davie Canada Inc.) நிறுவனத்துடன் இணைந்து கனேடிய கடலோரக் காவல்படைக்காக (Canadian Coast Guard) ஆறு புதிய பனி உடைப்புக் கப்பல்களை (Icebreakers) உருவாக்க கனேடிய அரசு 11 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீடு கனடாவின் உள்நாட்டுக் கப்பல் கட்டும் தொழிலை வளர்ப்பதுடன், முக்கியமான வர்த்தகப் பாதைகளைத் திறந்து வைத்திருக்கும் நமது திறனை வலுப்படுத்துகிறது, மேலும் நமது மூலோபாயத் தன்னாட்சியையும் (Strategic autonomy) உறுதிப்படுத்துகிறது.

சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ‘நூல்களின் சங்கமம்’ என்ற நூல்களின் கண்காட்சி - 2026 ரொறன்ரோ ரப்ஸ்கோட் வீதியில் உள்ள தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் பல எழுத்தாளர்கள் தங்கள் நூல்களைக் காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தனர். அரங்க மேடையில் நூல்களை வெளியிடவும், அறிமுகம் செய்யவும் சந்தர்ப்பம் கொடுத்ததால் சில எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தனர். எதிர்பார்த்ததைவிட அதிக இலக்கிய ஆர்வலர்களும், இளையோரும், மாணவர்களும் கலந்து கொண்டதால், மண்டபம் நிறைந்திருந்தது.

கதவுகளைத் திறந்திருக்கவேண்டாமே.
அன்றும்,
சுவாரஷ்யமாக இணையத்தில்
மூழ்கியிருக்க,
மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது.
கோபத்துடன் இறங்கிவந்தேன்.
வெளியில் நிற்கையில்
அழகாக ரசித்ததுதான்.
மகளும் ஆசையாய் உணவிடுவாள்.
மாடியறையில் வந்து தங்கிக்கொண்ட
அப் பூனையை
தடிகொண்டு
அதட்டிக் கலைத்தாள்.
முரண்டு பிடித்தது.
ஒவ்வொரு அறையாக ஒளிந்துகொண்டு
விளையாட்டுக்காட்டியது.
எவ்வளவுதான் அது அலைக்கழித்தாலும்
அதனை வருத்துவதில் மனது உடன்படவில்லை.
'இருந்து போகட்டுமே'
என்றேன்
மனைவியுன் முறைப்பையும் மீறி
மகள் மகிழ்ந்தாள்.
இலங்கை இளைஞர்க்குச்
சவால்கள் கூடிப் போய் விட்டிருக்கின்றன .இயல்பாக வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் . யாழ் இளைஞர்களுக்கு 77 ம் ஆண்டிலேயே போர்ப்பிரகடனம் விடப்பட்டு விட்டது . திரவியத்திற்கு மங்கலாகத் தெரியத் தொடங்கியது 84ம் பகுதியிலே தான் . 'முடியுமா , சண்டியக்குழுக்களாக நிற்கிற இலங்கைப்படைகளை எதிர்த்து நிற்க முடியுமா? ' . சுய வட்டத்திலே நிற்க முடியாத அவன் போர்க்கோலம் பூண்டு தைரியமாய் நிற்க முடியுமா ? 'முடியாது' என்று சொல்வதை விட 'முடியும் !' என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்பது தான் தர்மம் . நிற்கிற போதே நிலமையை ஒரு அலசு அலச முடியும் . இலங்கை சபிக்கப்பட்ட படுகொலைகளின் தேசம் .
நாம் அயலவர்களை விரோதமாக, குரோதமாகப் பார்க்கவில்லை . ஆனால் , ' காணாமல் போனோர்களுக்காக நீங்களும் குரல் எழுப்ப வேண்டாமா? ஏன் எழுப்புவதில்லை?' என்றே ஆச்சரியம் . இஸ்ரேல் பாலஸ்தீன நிலங்களில் நடத்துற தாக்குதலின் போதும் புலம்பெயர்ந்தவர்கள் சமயத்தில் , பாதிக்கப்பட்டவர்கள் நடத்துற எதிர்ப்பு நிகழ்வுகளுக்கு எதிராக கொடி பிடித்து மட்டை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் . மன அளவிடைகள் சமதரத்தில் இல்லாமல் கிடக்கின்றன . உளவியல் ரீதியில் சோர்வடையச் செய்யும் வாழ்வின் நீட்சியில் ( வாழ்தல் தொடர்பான) நம்பிக்கைகளை இழந்து விடவே கூடாது . முன் எதிரே , எதிரிக்கெதிராக போராட வேண்டிய அவசியம் என்றுமில்லாது கூடிக் கிடக்கிறது . திணிக்கப்பட்டிருக்கிறது .

வணக்கம்! கனடாத் தொல்காப்பிய மன்றத்தினால் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்கம் நகரின் பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளியில் (Bill Hogarth Secondary School) “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க கொண்டாட-பரவலாக்க வேண்டும்” என்னும் பொருண்மையில் நடாத்தப்படவுள்ளது.