மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்! சோக்ரடீஸும் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸும்! (5) - ஈழக்கவி -

ஒன்பது
நீங்கள் நம்பமாட்டீர்கள். நான் கூறுகிறேன். சிறந்த மனிதத்துவம்
என்பது உங்களிடமும் மற்றவர்களிடமும் கேள்வி எழுப்புவதுதான். - சோக்ரடீஸ் -
சோக்ரடீசின் மெய்யியல் விசாரணை சிறைகூடத்தில் எவ்வாறு இருந்தது என்பதனை ‘சிந்தனைக் களமாகிய சிறைக்கூடம்’ என்ற அடிப்படையில் அலசியுள்ளார். மரண தண்டனைக் கைதியாக முப்பது நாள்கள் சோக்ரடீஸ் சிறையில் வாழ்ந்தார். சிறையில் நடந்தவைகளை திரைகாவியம் போல நூலாசிரியர் காட்சிபடுத்தியுள்ளார். சோக்ரடீஸ் அவரது நண்பன் கிரீட்டோ ஆகியோருக்கிடையிலான உரையாடல் நாடகப்பாணியில் தரப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் இன் பேச்சு முழுவதும் மெய்யியல் விசாரணையே வியாபித்திருந்தது. நாடும் சட்டமும், ஆன்மாவும் மரணமும், நல்ல மரணம், தெய்வத்திற்கு நேர்த்திக் கடன். நீட்சே, சடமும் அகமும், ஒர்பிக்வாதிகளின் மரணக் கோட்பாடு, நப்ஸ்-சுயம், ரூஹ், சித்திலெப்பை: ரூஹ் போன்ற மினிதலைப்புகளில் சோக்ரடீஸ் இன் மெய்யியலை ஒப்பாய்வு செய்துள்ளார். சோக்ரடீஸ் நஞ்சை உட்கொள்ள முன்னும் பின்னும் நிகழ்ந்தவைகளை ஒரு திரைப்படத்தின் இறுதி காட்சிபோலவே நூலாசிரியர் சித்திரித்துள்ளார். மாதிரிக்கு சில வரிகள் வருமாறு,
நாங்கள் அனைவரும் அதுவரை அழுகையைக் கட்டுப்படுத்தியே அங்கு நின்றுகொண்டிருந்தோம். அவர் நஞ்சுக் கோப்பையை கையில் ஏந்தியதையும் அதைக் குடித்ததையும் பார்த்தபோது, எங்களால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இத்தனை பேர் அழுதுகொண்டிருக்கும் போது, சோக்ரடீஸ் மட்டும் அழாமல், அமைதியாக இருந்தார்……. சோக்ரடீஸ் தனது கால்கள் கனத்து மரக்கும்வரை நடந்து கொண்டிருந்தார். பிறகு அவர் தரையில் படுத்துக்கொண்டார். இப்போது காவலாளி அவருடைய பாதத்தையும் கால்களையும் பரிசோதித்தான். பாதத்தில் கிள்ளிவிட்டு வலி தெரிகின்றதா என்று அவன் கேட்டான். வலி தெரியவில்லை என்று சோக்ரடீஸ் பதில் சொன்னார். கால்களில் இருந்து உடலின் மேற்பாகம்வரை உடலைத் தொட்டுப் பரிசோதித்தான். உடம்பு குளிரடைந்து விறைத்துப் போயிருந்தது. பிறகு சோக்ரடீஸ் தாமே தமது உடலைத் தொட்டுப் பார்த்து விட்டு நஞ்சு இதயத்தை போய்ச் சேர்ந்ததும் உயிர் பிரிந்துவிடும். என்றார். முடிவைத் தீர்மானிக்கும் விதியின் கைகள் தொலைவில் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. அடிவயிறுவரை இப்போது குளிர்படர்ந்திருந்தது. அவர் தமது கடைசி வார்த்தைகளைக் கூறுவதற்குத் தயாரானார்…….


“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும் “ “ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும். சம்பளம் இல்லாத வேலை செய்பவர்களாக அவர்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. இயந்திரப் பயன்பாடு பெண்களுடைய உணர்வுகளை மழுங்கடித்து விடக் கூடாது “ என்று அமெரிக்க வாழ் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் பெண்கள் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் குறிப்பிட்டார் ( இவரின் டைரி, அமெரிக்காவில் சாதி ஆகிய நூல்கள் முக்கியமானவை. இரண்டும் பாரதி புத்தகாலயம் வெளியீடு )
என் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு, 2020 ஏப்ரலில் Costa Ricaவுக்குப் போகலாமென எங்கள் நான்குபேருக்குமான விமானச் சீட்டுகளையும் மூத்த மகள் கொள்ளவனவு செய்திருந்தா. ஆனால், அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகச் சொல்லிக்கொள்ளாமல் வந்த கொரோனா எங்களின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. சரி, அறுபத்தைந்தாவது பிறந்தநாளுக்காவது அங்கு போகவேண்டுமென நினைத்தோம். ஆனால், அதைவிட மேலான சந்தோஷங்களைத் தருகிறேன் என வாழ்க்கை முன்வந்தது. கர்ப்பமடைந்திருக்கும் மூத்த மகளும், மருத்துவப் பயிற்சியில் இருக்கும் சின்ன மகளும் கொஞ்சக் காலத்துக்குப் பயணம்செய்ய முடியாதென்றானபோது, தானாவது எங்காவது என்னைக் கூட்டிச்செல்வது வேண்டுமென மற்ற மகள் விரும்பினா.
நதி பயணத்தில் மிற்றன்பேர்க் என்ற சிறிய நகரம் தரிப்பாக இருந்தது . இதுவும் பவேரியா பகுதியில் உள்ள பழைய நகரம் ஒன்றாகும் இங்கு குடியேற்றம் ரோமர்களது காலத்திற்கு முந்தியதென்றாலும் அதனது எச்சங்கள் இங்கு இல்லை. மத்திய காலத்தின் எச்சங்களே தற்பொழுது காணப்படுகிறது.
வசிகரன் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி ஆக்காட்டி வெளியீடாக வந்துள்ளது. வசிகரன் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் சூழலியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கின்றார். தொண்டைமானாற்றையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பகைப்புலமாகக் கொண்டமைந்த மரபுரிமைச் சின்னங்கள் தொடர்பான 'கரும்பவாளி' என்ற ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். அவர் எழுதிய ‘நோவிலும் வாழ்வு’ என்ற கவிதைத்தொகுதி போருக்குப் பிந்திய தலைமுறையினர் வாழ்வைப் பார்க்கும் கோணத்தைப் பேசுவதாக அமைந்துள்ளது.
இன்று கவனயீர்ப்புப் பெறும் சமகால ஈழத்துக் கவிஞர்களுள் இக்பால் அலியும் ஒருவராவார். இவர் ஓர் ஊடகவியலாளராக தன்னை அடையாளப்படுத்தும் அதேவேளை நாடறிந்த கவிஞராகவும் அறியப்படுகிறார். ஓர் ஊடகவியலாளன் தன்னைச் சுற்றி நிகழும் அசாதாரண சம்பவங்களை செய்திகளாக்குவது போல ஒரு கவிஞனும் தான் காணும் சமூக மாற்றங்களை தன் கவிதைகளுக்குள் பாடுபொருளாக்குகின்றான். இவ்வகையில் இக்பால் அலியின் கவிதைகளை நோக்கும்போது ஓர் ஊடகவியலாளனுக்குரிய செய்திப் பார்வையும், நுணுகிய நோக்கும்; இவரின் கவிதைகளில் இயல்பாய் இணைவதோடு சமுதாயப் பற்றுமிக்க கவிதா ஆற்றலும் அதனை மொழிவயப்படுத்துவம் திறனும் இவரிடம் ஒருங்கே அமைந்துவிடுகின்றன.
இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.

சங்க இலக்கியத் நூல்களான எட்டுத்தொகையில் ஒன்று பதிற்றுப்பத்து ஆகும். 'ஒத்த பதிற்றுப்பத்து’ என்ற அடைமொழி கொண்ட பதிற்றுப்பத்து சேரர் மன்னர்களின் வாழ்க்கையையும், அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. புறப்பொருள் பற்றிய செய்திகளைத் தொகுத்துரைப்பது அகவற்பாக்களால் ஆனது. புறநானூறுக்கும், பதிற்றுப்பத்துக்கும் ஒரு வேற்றுமை உண்டு. முடி மன்னர் மூவரையும், வேளிர் முதலிய பிறரையும் பற்றிய பாடல்களின் தொகுதி கொண்டது புறநானூறு. ஆனால் பதிற்றுப்பத்தோ சேரமன்னர்களையே பற்றிய பாடல்களின் தொகுதி எனலாம். அத்தகைய சேரநாட்டின் வளம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சந்திரனில் ‘நீலப்பிசாசு’ என்று சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்த செய்தியை வாசித்த போது, பலரும் பதட்டப்பட்டார்கள். மனிதர்களைச் சந்திரனில் குடியேற்ற அமெரிக்கா முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அங்கு பிசாசு குடிகொண்டிருக்கிறதா என்ற பயமும் ஒருபக்கம் எழுந்தது. இது உண்மையா, சந்திரனில் பிசாசு இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். எட்டாம் வகுப்பில் என்னிடம் கல்வி கற்கும் சில மாணவர்களுக்கும் இந்த சந்தேகம் இருந்ததால், இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தனர். மேலை நாட்டவருக்கும் இந்தப் பேய், பிசாசுகளில் நம்பிக்கை இருப்பதால்தான், கலோவீன் தினத்தைப் பிரமாண்டமாக இங்கே கொண்டாடுகின்றார்கள். சின்னப் பிசாசா அல்லது பெரிய பிசாசா? எப்படி இந்த நீலப்பிசாசு சந்திரனுக்கு வந்தது?
உண்மைகள் என்றும் உவப்பானவை அல்ல !
தற்போது ,ஆரம்ப இளைஞர் அமைப்பில் இருந்தவர்கள் சிதறி , சிலர் சேர்ந்து தோழர்களாகி இயக்கங்ககளை உருவாக்கியும் , சேராது தனிப்பட நட்பு வட்டத்துடன் இயங்கிறதென மக்களுக்குத் தெரியாத பல அமைப்புகள் இருந்தன. தலைவர்களாக உருவெடுத்திருப்பவர்கள் ஒருத்தர் வீட்டிலே ஒருத்தர் தலைமறைவாகி இருந்த காலமும் இருந்தது . அச்சமயம் , வீட்டுப்பிள்ளையாக .. சகோதராக அரவணைக்கப்பட்டவர்கள் . இப்ப என்னப் பிரச்சனையோ ...? எதிரியாகி , சார்ப்பாக நின்றதிற்கு அல்லது தெரியாத ஒரு காரணத்திற்காக ..சுட்டு த் தள்ளும் செய்திகள் நகரை பரபரப்பாக்கி விடுகிறது . விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள் ...இப்படி விரயமாக சாகிறது வருத்தமாக இருக்கிறது .

ஷம்பாலா 2019 - இல் வெளியான நாவல். தமிழவன் அவர்களால் எழுதப்பெற்ற இந்நாவல் ‘ஓர் அரசியல் நாவல்’ என்ற கோணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாவலில் கூறுகின்ற அரசியல் மக்களுக்கு எந்த விதமான சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கிறதா? அல்லது பயனற்றதாக இருக்கிறதா? என்பதை நாம் பார்ப்போம். இந்நாவல் இரண்டு வகைக் கதைப்போக்குகளைக் கொண்டுள்ளது. ஒன்று பேராசிரியர் அமர்நாத் எனபவரது எழுத்தும் சிந்தனையும் அரசால் உளவு பார்க்கப்படுகிறது. அமர்நாத் என்பவர் ஒரு எழுத்தாளர். சிந்தனையாளர், அறிவுஜீவி, முற்போக்காளர் என்ற அடையாளத்துடன் விளங்குபவர். அதனால்தான் அவர் சிந்தனைப் போலீசால் கண்காணிக்கப்படுகிறார். எப்படியெல்லாம் கண்காணிக்கப்படுகிறார்? எதற்காக கண்காணிக்கப்படுகிறார்? அதனால் அமர்நாத் அடைந்த வேதனை - மனநிலை என்ன? அவர் குடும்பம் அனுபவித்த அவல நிலை என்ன? சிந்தனை எப்படியெல்லாம் தடம் மாறுகிறது. தன் வாழ்வை எப்படி? நகர்த்திச் செல்கிறார். குடும்பத்துக்காக என்ன செய்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த கண்காணிப்பை மீறி அதிகாரத்தை உடைத்து எப்படி செயல்படுகிறார் என்பதையும் பார்க்கலாம்.

தாயாய் இருப்பாள் தாரமாய் இருப்பாள்

அனைத்துலக மகளிர் தினத்திற்காய்த் துணிவுடன் போராடி, அளப்பரிய தியாகங்களை மேற்கொண்ட அனைத்துப் பெண்களையும் இவ்வேளை நினைவுகூர்ந்து தலைசாய்த்து வணங்குகின்றேன்.

மனதின் சாளரங்கள் திறப்பதற்கு மாமனிதர்களின் தத்துவங்கள் உதவுவது போல, சில வாசிப்புகளும் உதவுவதை அவள் அறிவாள். இறுகியிருந்த எண்ணங்கள் சிட்டுக் குருவிகளைப் போல சிறகடித்துப் பறக்கவும் , இனிய சங்கீதம் எங்கும் நிறைக்க வல்லதும் வாசிப்பு என்பதை மறுக்க முடியாது.

ஆழ் மனத்திரைக்குள் பதிந்திருக்கும் பக்கங்களைப்புரட்டிப் புரட்டி மறுபடியும் அப்புத்தகத்தை வாசிப்பதில் அத்தனை சுகம்!அதற்குள்தானே நிரம்பிக்கிடக்கின்றன அத்தனையாயிரம் கதைகள்?ஓடி ஓடி களைத்துப்போகும் வாழ்வெனும் வட்டத்திற்குள் அவற்றைப்பகிர்ந்திட எமக்குத்தான் நேரமில்லையே!எப்போதாவது முதுமைக்கு நரையழகாகும் பருவத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வாழ்வின் புதிய பயணத்தை ஆரம்பிக்கும்போதுதான் கதை சொல்லியாக இது கைகூடும் என்றால் அதுவும் ஆனந்தம்தான்!அதற்கும் அப்பால் ஞாபகங்களை கரைந்துவிடாது காத்திட பக்கங்களைப்புரட்டிப்பார்ப்பதும்கூட மனநலத்திற்கான ஆரோக்கியமும்கூட !

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








