திருப்பூர் சிறுகதைகள்! - சுப்ரபாரதிமணியன் -
- திருப்பூர் சிறுகதைகள்! - தொகுப்பாசிரியர் - பொன் குமார்! விலை ரூபாய் 300 ( 95787 84322 ) -
தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் கதைகளை மாவட்ட வாரியாக தொகுப்பாக்கி வெளியிட்டு வருகிறார் சேலம் பொன் குமார் அவர்கள். உழைப்பும் பணச் செலவும் கொண்டது. பெருமை கொள்ளத் தக்கது.
இந்த்திருப்பூர் சிறுகதைகள் தொகுப்பை பொன் குமார் சிறப்பாக தொகுத்து அளித்திருக்கிறார். இந்த தொகுப்பை ஆர் சண்முகசுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அதை தவிர ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் நாடக முடிவு என்ற சிறுகதை கூட உள்ளது அவரின் முத்திரையும் கொங்கு பிரதேச வாழ்க்கையும் எளிமையான காதல் வாழ்க்கையும் சொல்கிற கதை ..
0
அம்பிகா குமரன் கதை திருப்பூர் சென்னை என்று இரண்டு தளங்களில் பயணப்படுகிறது குடும்ப சூழ்நிலையில் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறுவது என்று நுணுக்கமான சில விஷயங்களை கொண்டு வந்திருக்கிறார். கடைசியில் அலைகள் வந்து கரைதொட்டு செல்லும். அலைகள் வித்யா மனதிலும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்குகிறது வித்தியா கண்ணீரால் கணவனை திட்டத் தொடங்கியிருந்தாள் என்று முடிகிறது இந்த கதை அப்படித்தான் மனதில் அலையாய் வந்து அடித்துக் கொண்டிருக்கிறது.