பதிவுகள் முகப்பு

இலங்கையில் இனவாதம் பற்றிய சிந்தனைகளும், செயற்கை நுண்ணறிவுடன் அது பற்றிய உரையாடலும்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
26 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

இலங்கை ஜனாதிபது அநுர குமார திசாநாயக்க அரசு இனவாதத்துக்கெதிராக் குரல் கொடுத்து வருகின்றது. பதவி பறிபோன சிங்கள அரசியல்வாதிகள் எப்படியாவது இழந்ததை மீளப்பெறுவதற்காக இனவாதத்தைக் கையிலெடுக்கின்றார்கள். அநுர அரசின் செல்வாக்கினால் பாதிப்புக்குள்ளாகிய தமிழ் அரசியல்வாதிகளும், ஜேவியின்  கடந்த கால வரலாற்றைக் கூறி, இவர்களும் இனவாதிகள், நம்ப முடியாது என்று செயற்பட்டு வருகின்றார்கள். இவ்விரண்டு குழுவினரும் இப்படித்தான் செயற்படுவார்கள். 

உண்மையில் இவர்களைப் பொருட்படுத்தாமல் அநுர அரசு இனவாதத்துக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், அதன் பலன்கள் வெளித்தெரிகையில் தம் முயற்சியில் தோல்வியுற்ற எதிர்கட்சி அரசியல்வாதிகளும் தம் பாதையை மாற்றும் சந்தர்ப்பம் உண்டு. 

அடுத்தது உண்மையில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்றால், அரசு இனவாதப் பெளத்த பிக்குகளையும் சிங்கள மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இவ்விதப் பிக்குகளை இலங்கையின் சட்டம் கையாளும் நிலையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்வது இனவாதத்தை ஒழிப்பதற்கான உறுதியான படியாக அமையும். அவ்விதம் செய்யாவிட்டால் பெளத்த பிக்குகள் சிலரின் இனவாதத்துக்கு அரசு அடி பணிந்தால் ஒரு போதுமே இனவாதத்தை அரசால் நாட்டிலிலிருந்து ஒழிக்க முடியாது  போய்விடும். 

ஒவ்வொரு தடவை இனவெறி பிடித்த பிக்குகள் செயற்படும் தருணங்களில் எல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை ஏற்பட வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசு தென்னிலங்கை மக்களுக்கு அவர்கள் இனவாதிகள் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.மக்கள் புரிந்து கொள்வார்கள். அரசுக்கு ஆதரிப்பார்கள். இவ்விதம் செய்யாமல் அரசும் இனவாதப் பிக்குகளின் தந்திரத்துக்கு அடிபணிந்தால் ,இறுதியில் அதன் அரசியல் எதிர்காலமும் அபாயத்துக்கு உள்ளாகி விடும்.

மேலும் படிக்க ...

சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளில் பெண்களும், சமூகமும்! - அ.சிந்தியா தேவி, முனைவர் பட்ட ஆய்வாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -

விவரங்கள்
- அ.சிந்தியா தேவி, முனைவர் பட்ட ஆய்வாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
ஆய்வு
25 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நெறியாளர்: முனைவர் மு.சுதா, பேராசிரியர்,தமிழ்த்துறை,  அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3

முன்னுரை

“வருணன் மேய பெருமணல் உலகமும்” (தொல்.அகம்.5)

என்று வருணனைக் கடவுளாகக் கொண்ட பெருமணல் பரப்பினையுடைய கடலும், கடல்சார்ந்த இடத்தையும் உடைய நெய்தல் நிலத்தினை மையமாகக் கொண்டு எழுந்தது ‘அளம்’ என்னும் புதினமாகும். இந்நிலத்தின் முக்கியத் தொழிலாக மீன்பிடித்தல், உப்புவிளைவித்தல், முத்து எடுத்தல் மற்றும் கடல் வணிகம் போன்றவை காணப்படுகின்றன. அவற்றில் உப்புவிளைவித்தல் பற்றிய செய்திகளைப் பற்றிப் பேசக்கூடிய சு.தமிழ்ச்செல்வியின் இரண்டாவது படைப்பான ‘அளம்’ புதினத்தில் காணலாகும் பெண்மாந்தர் படைப்புகள் குறித்தும் அவற்றின் வழியாக அறியலாகும் பெண்களைச் சுற்றிய சமூகச்சூழல்களையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

படைப்பாளர் அறிமுகம்
“அளம்” புதினத்தின் ஆசிரியரான சு.தமிழ்ச்செல்வி திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். “தி.ஜானகிராமனின் படைப்புகள் தஞ்சைமாவட்டத்தையும், ஆர். சண்முகசுந்தரத்தின் கதைகள் கொங்குநாட்டையும் பின்னணியாகக் கொண்டவை. மு.வ.வின் கதைகளை கொங்குநாட்டுப் பின்னணியிலும், தி.ஜானகிராமனின் கதைகளை நெல்லை மாவட்டப் பின்னணியிலும் சொல்லமுடியாது. எனவே, குறிப்பிட்ட கதைமாந்தர்களின் கதையைச் சொல்லும்போது அவர்கள் வாழும் அவர்களுக்கே உரிய பின்னணியில்தான் சொல்லமுடியும். ஏனெனில் மனிதவாழ்க்கை அந்த அளவுக்கு அவர்கள் வாழும் மண்ணிலேயே வேர்கொண்டிருக்கிறது. மண்ணின் மணமே புதினத்தின் பின்னணியில் நின்று படிப்போரை ஈடுபடுத்துகின்றது.”(மா.இராமலிங்கம், நாவல்இலக்கியம், ப,28) என்று மா.இராமலிங்கம் படைப்புகளின் பின்னணி குறித்துக் கூறுவதற்கேற்ப சு. தமிழ்ச்செல்வியின் படைப்புகளும் கீழ்த்தஞ்சைமக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக அந்தந்த நிலமக்களின் வாழ்க்கை முறையோடு மண்மணம் கமழ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
25 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?':

நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா மூலமே. இருவருக்கும் குமாரி கமலாவின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எப்பொழுதும் அவரின் நடனத்திறமையினைச் சிலாகித்து உரையாடுவார்கள். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே.லக்சுமணனை முதலில் திருமணம் செய்த விடயத்தையும், ஆர்.கே.எல் அவர்கள் அப்பாவுக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் சகோதரர் என்னும் விடயத்தையும் அப்பா மூலமே முதன் முதலில் அறிந்தேன். அப்பாவிடம் ஆர்.கே.என்னின் ஆங்கில நாவல்களின் சேகரிப்பிருந்தது. கூடவே ஆர்.கே.என்னை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கிறகாம் கிறீனின் நாவற் சேகரிப்புமிருந்தது.

'நாம் இருவர்' திரைப்படத்தில் குமாரி கமலா பாரதியாரின் இந்திய சுதந்திர வேட்கைப்'பாடல்களுக்குச் சிறப்பாக ஆடியதையும் அவர்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். அவற்றிலொன்றான 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் பாடலையும் அம்மா பாடிக்காண்பித்திருக்கின்றார்.

நான் பார்த்த குமாரி கமலாவின் முதற் திரைப்படம் 'பாவை விளக்கு'. றீகலில் பழைய தமிழ்ப் படமாக எழுபதுகளில் வெளியானபோது , இரவு இரண்டாம் காட்சியாகப் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு முன்னரே அகிலனின் 'பாவை விளக்கு'நாவலை வாசித்திருந்ததால் நீண்ட நேரமாக ஓடிய அப்படத்தை விருப்புடன் பார்த்து இரசித்தேன். நாவலில் வரும் செங்கமலம் பாத்திரமாகத் திரையில் வருவார் குமாரி கமலா. அவருக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம்.

'பாவை விளக்கு' திரைப்படத்தில் வரும் 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ'என்னுமிப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. மிகவும் பிடித்த குமாரி கமலாவின் திரைப்பட ஆடற்காட்சியும் இதுதான். கவிஞர் அ.மருதகாசியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன்.

https://www.youtube.com/watch?v=gxTM8X0OprM

மேலும் படிக்க ...

அஞ்சலி: தமிழ்ப் பணியாளர் சிவாப்பிள்ளை சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்..! - வி.ரி. இளங்கோவன் -

விவரங்கள்
- வி.ரி. இளங்கோவன் -
சமூகம்
25 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியென அயராதுழைத்த  இலண்டன் சிவாப்பிள்ளை (சிவகுருநாதபிள்ளை - வயது 83) கம்போடியா - அங்கோர் நகரில் நடைபெற்ற 'கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன்" 1000 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டவேளை> சிந்திப்பதை நிறுத்திக்கொண்டமை அதிர்ச்சியையும் மிகுந்த கவலையையும் தருகிறது. அவரது பூதவுடல் லண்டனுக்கு எடுத்துவரவிருப்பதாகத் தெரியவருகிறது.

1966 -ம் ஆண்டு முதல் யான் நன்கறிந்த மனிதர். அடுத்த   சில வருடங்களில் அவர் பொறியியல் படிப்பிற்காக லண்டன் வந்தார். கணினித்துறையில் கற்று வல்லுநராகத் திகழ்ந்தார். கணினியில் தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் அன்றே முயற்சி மேற்கொண்டவர்.

யாழ்ப்பாணம் கட்டப்பிராயைப் பிறப்பிடமாகக்கொண்ட அவர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி> யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் யான் கல்வி கற்ற காலத்தில் (க. பொ. த.) சில மாதங்கள் எமக்குத் தமிழ்ப் பாட ஆசிரியராகவும் கடமையாற்றியவர். அவரது மனைவி எனது வகுப்புச் சக மாணவர்.

யான் பிரான்ஸ் வந்த காலத்தில் (1991) அவருடன் மீண்டும் தொடர்பு கிடைத்தது. இலண்டனில் எனது நூல்கள் அறிமுக நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டு உரையாற்றத் தவறியதில்லை. எனது நூல்கள் அறிமுக நிகழ்வுகளை  அங்கு ஒழுங்குசெய்து உதவியவர். வீட்டிற்கும் அழைத்து அன்பாக உரையாடி உபசரித்த பெருந்தகை. மூத்த சகோதரர்போல் என்னுடன் பாசமாகப் பழகிய அன்புள்ளம்.

மேலும் படிக்க ...

'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி... - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நூல் அறிமுகம்
24 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக்  குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை. இக்குறிப்புகள் அவரிடத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். உண்மையில் டிலுக்ஸன் மோகனின் நூல் சுய அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவா? அல்லது சுய அனுபவம் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட புனைவா?  ஏனென்றால் இளங்கோவின் இப்புரிதல்கள் நியாயமானவை. ஆனால் இவ்விதம் நூலைப் புரிந்து கொண்ட அவருக்கு நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கொஞசமும் சந்தேகம்  ஏற்படவில்லை.  அவர் இறுதியில் வந்தடைந்துள்ள முடிவுகள் வருமாறு:

மேலும் படிக்க ...

சிறுகதை: மதுரை மருக்கொழுந்து வாசம்! - வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் (கல்லிடைக் குறிச்சி) -

விவரங்கள்
- வீரவநல்லூர் ஸ்ரீராம் விக்னேஷ் (கல்லிடைக் குறிச்சி) -
சிறுகதை
24 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“செக்கூரட்ரி.... மதுரையிலயிருந்து வசந்தன் வந்தால், காம்பவுண்டுக்குள்ளை எலவுட்பண்ண வேண்டாம்.... இதோ உங்க ரூம்ல அவன் ட்ரெஸ்சு வெச்சிருக்கிற சூட்கேசை வெச்சிருக்கேன்.... இந்தா பாருங்க, உங்க டேபிள்ள ரூவா ஐயாயிரம் வெச்சிருக்கேன்....

இந்த ரெண்டையும் அவன் கையில குடுத்து, திருநெல்வேலிக்குப் போயி, அவுங்க வீட்டிலயே இருக்கச் சொல்லுங்க.... இனி, கனவிலகூட இந்தக் கல்லிடைக்குறிச்சியை நெனைச்சும் பாக்கவேண்டாம்னு, ஓனர் அம்மா சொன்னாங்கன்னு சொல்லியிடுங்க....”

வெளியே காம்பவுண்டு வாசல் காவலாளியிடம் என் மனைவி மீனாட்சி சத்தமாகச் சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள்ளே வந்து வாசல் கதவை பலமாக அடித்துச் சாத்தினாள்.

குளித்துவிட்டு வந்து வேட்டியை மாற்றிக்கொண்டிருந்த நான், குரல் கொடுத்தேன்.

“மீனு....என்ன பண்றே.... விடிஞ்சு ஏழு மணிதானே ஆகுது.... அந்தப்பையன் நேத்து மதியந்தானே மதுரைக்கு கெளம்பினான்.... போன வேலையை முடிச்சிட்டு, நைட்டோடு நைட்டா ரிட்டன் ஆகிறப்போ ட்ராவலிங் புராப்ளெம் இருந்தா, கொஞ்சம் முன்னப்பின்ன லேட் ஆகத்தானே செய்யும்.... அவசரப்பட்டு அவனை வேலையவிட்டு அனுப்பணும்னு முடிவு பண்ணிட்டியே.... ஒரு மாலைக்காக மதுரைக்கு அனுப்பி அவங்க பணக்காரத் திமிரைக் காட்டிப்புட்டாங்கண்ணு நாலுபேரு சொல்றமாதிரியா பண்ணிப்புட்டியே....”

“என்ன பேசிறிய.... கோயில்ல அம்பாளுக்கு கச்சிதமா சாத்துறத்துக்கு, இத்துனூண்டு பட்டு வாங்க இந்தக் கல்லிடைக்குறிச்சி உள்ளூரிலயோ பக்கத்தில அம்பாசமுத்திரத்திலையோ ஜவுளிக்கடையே கெடையாதா....?

மேலும் படிக்க ...

பயணத்தொடர் : ஐஸ்லாந்து (3) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
24 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் தென் திசையிலிருந்து கிழக்குத் திசையில் அதாவது நோர்வே பக்கம் இருந்தது .நோர்வேயையும் ஐஸ்லாந்தையும் பிரிப்பது அத்திலாந்திக் சமுத்திரம். இதைக் கடந்து தான் வைக்கிங் குழுவினர் அக்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் ஐஸ்லாந்து மட்டுமல்ல, கிறின்லாந்து மற்றும் அமரிக்காவரை சென்றார்கள். ஐஸ்லாந்தில் ஆயிரம் வருடங்கள் முன்பாக குடியேறினார்கள்

இதுவரை காலமும் நியூசிலாந்து உலகத்தில் கடைசியாக உருவாகிய நிலப்பகுதி என நினைத்த எனக்கு 64 மில்லியன் வருடங்கள் முன்பு ஐஸ்லாந்து உருவாகியது எனக் கேட்டபோது வியப்பளித்தது. அதைவிட ஐஸ்லாந்தின் மத்தியபகுதி இன்னமும் இளையது. பூமியில் கிட்டத்தட்ட இமய மலைத்தொடர் உருவாகியது (50மில்லியன்.) இதே காலத்தில்தான் .

இப்படி பூமியின் பல பகுதிகள் பல்வேறு காலங்களில் உருவாகியது என்பதை பாறைகளின் வயதால் விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள். ஆனாலும் பைபிளில் சொல்லப்பட்டது போல ஒரே நாளில் புவி இறைவனால் உருவாக்கப்பட்டதென கிட்டத்தட்ட 5-6 பில்லியன் மக்கள் நம்புகிறார்கள். உண்மையும் நம்பிக்கையும் இருளையும் ஒளியையும் போன்றது . ஒன்றின் இடத்தில் மற்றது இருப்பது கிடையாது.

நாங்கள் சென்ற ஐஸ்லாந்தின் கிழக்குப் பகுதியில் அதிக மிருகங்கள் உள்ளன. அத்துடன் மனித குடியேற்றமும் இந்தப் பகுதியாலே ஆரம்பத்தில் நடந்தது.

ஆரம்பத்தில் ஐஸ்லாந்துக்கு ஆதி குடியேற்றவாசியாக இருந்த ஒரே மிருகம் துருவ நரி மட்டுமே. அவை, பனியால் நிலமும் கடலும் இணைந்திருந்த காலத்தில் நடந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 11, 700 வருடங்கள் முன்பாக பனிப்பாறைகள் விலகியதால் இங்கேயே தங்கிவிட்டன. நரிகள், ஆணும் பெண்ணும் ஜோடியாக வாழ்வதுடன் மீன்கள், இறந்த சீல்கள் மற்றும் பறவைகளின் முட்டைகள் என பலதையும் உண்பதால் இங்கு தொடர்ந்து வாழ்ந்தன.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு: 'அ.முத்துலிங்கம் எழுத்துலகு'

விவரங்கள்
- தகவல்: அ.முத்துலிங்கம் -
நிகழ்வுகள்
23 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இருள் சூழ்ந்த உலகின் நிலவு நீ! - ம.ஆச்சின் -

விவரங்கள்
- ம.ஆச்சின் -
கவிதை
23 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் மறைவையொட்டிய இரங்கற் பா. கவிஞரின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்கு கொள்கிறது. -



தமிழ் மனங்களின் மேடையில்
மின்னல் போல வந்தவன் நீ,
தெளிந்த சிந்தனைத் தீபமாய்
தலைமுறைகளின் தெருவொளி ஆனாய்.
காலம் களைந்த போதிலும்
காரணம் காற்றில் நிற்க,
உன் எழுத்தென்றால்
எரியும் விளக்கு.
உன் உரையென்றால்
உயிர்க்குரல்.

நூல் எழுதிய கையை நிறுத்தினாலும்
நூறு தலைமுறையைக் கிளர்த்தும்
அந்த ஒலிகள் இன்னும் உயிரோடு.
இருள் சூழ்ந்த உலகில்
நிலவென ஒளிர்ந்த நீ,
ஏன் சொற்கள் குறைந்தாலும்
உன் மவுனமே ஒரு பாடலாயிற்றே.
மனக் காயம் மறைத்த போதும்
மக்கள் நெஞ்சில் நீ இருந்ததே உண்மை.

மேலும் படிக்க ...

பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் இரு நூல்களின் திறனாய்வு: எழுத்தாளர். விமல் பரம் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு " தீதும் நன்றும்" - பவானி -

விவரங்கள்
- தகவல்: பவானி -
நிகழ்வுகள்
22 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  Meeting ID: 864 8891 1310 | Passcode: 1965

மேலும் படிக்க ...

'எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும் பற்றி ஒரு தர்க்கம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
22 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் ஷோபா சக்தி தனது முகநூற் பதிவான 'எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்' என்னும் பதிவில்  பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: 

"சமீபத்தில், மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்: 'பிரபல பதிப்பகங்களில் குறிப்பாக மேற்குலகில், ஒருவர் செவ்விதாக்கம் செய்வாரெனக் கேள்விப்படுகிறேன். பிறிதொருவர் அதனைச் செய்யும்போது மூல ஆசிரியரின் படைப்பு மாற்றத்திற்குள்ளாகும் நிலையில், பிறகு அவரது பெயரை மட்டும் போடுவது சரியாகுமா என்ற ஐயம், எனக்கு நீண்டகாலமாக உள்ளது; இருவரின் பெயரைப் பாவித்தால் பொருத்தமாகலாம். இங்கு ஷோபாசக்தியின் செவ்விதாக்கம், மூல ஆசிரியரின் ஆக்கமொன்றை அவருடையதல்லதாக்கிவிட்டுள்ள ( உண்மையை) அவலத்தை, உணரமுடிகிறது! செவ்விதாக்கம் அதன் சொந்தப் படைப்பாளியால், அவர் திருப்திகாணும் வரை மேற்கொள்ளப்படுதலே முறையானது!'

அ.யேசுராசா அவர்கள் குறிப்பிடுவது போன்று, உலக மொழிகளில் இயங்கும் மதிப்புறு பதிப்பகங்கள் அனைத்துமே ஒரு பிரதியை வெளியிடும்போது 'எடிட்' செய்தே வெளியிடுகிறார்கள். அந்தப் பதிப்பகங்களிலேயே 'எடிட்' செய்வதற்கு என்று ஒரு குழு இருக்கும். சில பதிப்பகங்களில் 'எடிட்' குழுவில் ஆறுபேர் வரை இருப்பதுண்டு.ல்........ தமிழில் இந்த 'எடிட்' நடப்பதில்லையா என்று கேட்டால் அது நடக்கிறது. உதாரணத்திற்கு குறிப்பிடுவதானால், ஜெயமோகன் 'விஷ்ணுபுரம்' நாவலை எழுதிவிட்டு சுஜாதாவிடம் கொடுத்து 'எடிட்' செய்து தருமாறு கேட்டிருக்கிறார். சுஜாதா செய்யாததால், எம்.எஸ்ஸிடம் நாவலைக் கொடுத்து எடிட் செய்து தருமாறு ஜெயமோகன் கேட்டிருக்கிறார். எம்.எஸ்ஸின் உதவியுடன் அது நாவல் வடிவம் பெற்றது. இதை 'உள்ளே இருப்பவர்கள்' என்ற தன்னுடைய கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். ...... என்னுடைய நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் பிற மொழிகளில் வெளியாகியபோது, 'எடிட்' செய்தே வெளியிடப்பட்டன."

மேலும் படிக்க ...

வள்ளுவர் சுட்டும் சட்டநெறிகள்! - திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -

விவரங்கள்
- திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியா், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
22 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று திருக்குறள். இந்நூல் ஒரு அறநூலாகும். திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு அதன் கருத்துக்களை மக்கள் நன்கு அறிகின்றனர். இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். ஆனால் திருக்குறள் என்ற இலக்கியம் எக்காலத்திலும் முக்காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும், எக்காலத்திலும் முக்காலத்திற்கும் தேவையான கருத்துக்களைத் தரும் அமுதசுரபியாகவும் இருக்கின்றது. வள்ளுவர் சுட்டும் சட்டநெறிகள் எனும் இவ்ஆய்வுக்கட்டுரை வள்ளுவர் கூறியுள்ள சட்டநெறிகளைப் பற்றி விவாிப்பதாக அமைகின்றது.

முறை எனும் சொல்

சங்கப்பாடல்களில் ‘முறை’ என்னும் சொல் ‘முறை செய்தல்’, ‘நீதி வழங்குதல்’ என்ற பொருள்களில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனை,

“முறை தளர்ந்த மன்னவன் கீழ்க்குடி போலக் கலங்குடி” (கலி.34 : 14)

என்ற பாடலடி குறிப்பிடுவதன் வாயிலாக முறை என்பதற்கு ‘முறை செய்தல்’, ‘நீதி வழங்குதல்’ என்பன பொருள்களாக அமைந்துள்ளதை அறிய இயலுகின்றது. முறை என்பதற்கு பாிமேலழகர் “முறை என்பது அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி”1 எனப் பொருள் விளக்கம் தருகின்றார்.

மேலும் படிக்க ...

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா! - தகவல்: குரு அரவிந்தன் -

விவரங்கள்
- தகவல்: குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
21 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அக்டோபர் 25, 2025,  சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா ரொறன்ரோவில் இடம் பெற்றது.  இந்த விருது விழாவில் இணையத்தினர் எழுத்தாளர் குரு அரவிந்தன், சொற்கோ திரு. வி.என்.மதியழகன், திருமதி செல்லையா யோகரத்தினம்,  முனைவர் திருமதி பார்வதி கந்தசாமி, திரு. ந. நகுலசிகாமணி ஆகிய ஐந்து கலைஞர்களுக்கு விருது அளித்துக் கௌரவித்தனர்.  எழுத்தாளர் இணையத்தால் அறிமுக நூல் ஒன்றும், குரு அரவிந்தனின் வாசகர் வட்டத்தால் எழுத்தாளர் குரு அரவிந்தனின் சாதனைகள் குறித்த நூல் ஒன்றும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கப் பெற்றன. 

மேலும் படிக்க ...

வவுனியாப் பல்கலைக்கழகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு!

விவரங்கள்
- தகவல்: வணக்கம் இலண்டன் -
நிகழ்வுகள்
20 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கம்பராமாயணத்தில் பல சொல் ஒரு பொருள் - கால்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -
ஆய்வு
20 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

தமிழ்மொழி இனிமையானது. பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இலக்கியவளம், இலக்கணச் செழுமை கொண்டது. செம்மொழி அந்தஸ்து கொண்டது. சொல்வளம் நிறைந்தது. ஒரு சொல்லுக்கு பல பொருளும், பல சொல்லுக்கு ஒரு பொருளும் உடையது. இதுபற்றி தருவது நிகண்டுகளாகும். திவாகரநிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு என்று பல நிகண்டுகள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.கம்பராமாயணத்தில் இச்சொற்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்து குறித்து ஆராய்வோம்.

திவாகரநிகண்டு

சரணம், பாதம், கால், அடி, கழல், தாள்

கம்பராமாயணத்தில் கால் என்பதற்கு பலசொல் ஒரு பொருள்

சொல்வளம் நிறைந்த நம் தமிழில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தாமல் அதேப் பொருளைக் குறிக்க வேறு வேறு சொல்லைக் கம்பர் பயன்படுத்தியுள்ளார்.

சரணம்

திருஅவதாரப்படலத்தில் திருமால் இராமனாக அவதாரம் எடுத்து இராவணனை அழிக்க இருப்பதாகக் கூறினார். எமது துன்பம் தொலைந்தது என்று கூறி, இந்திரன் உவகை அடைந்தான். தூய்மை மிகும் தாமரையில் வாழ்பவனான பிரம்மனும், சந்திரனைச் சடையில் அணிந்த சிவனும், மிக உயர்ந்த வானத்தே தேவர்களும், எமது இழிவு இன்றோடு ஒழிந்தது என்று உரைத்தனர். மிகப் பெரிய உலகத்தை உண்டவனான திருமால், கருடாழ்வார்மீது திருவடி வைத்து ஏறினான்.

மேலும் படிக்க ...

சிறுகதை - வேலைகள் - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
18 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

தேவனும் வாசுகியும்  கதவைத் தாழ்ப்பாள்  போட்டுவிட்டு வெளியே வந்த போது உபர்டாக்ஸி நின்று கொண்டிருந்தது. தன் கைபேசியை பார்த்து தேவன் ஓட்டி எண்ணை அந்த டாக்ஸி ஓட்டுனரிடம்  சொன்னான்.

“  வாசுகி  இன்னைக்கு எத்தனை மணிக்கு வருவ “

” வழக்கமா தான். ஏதாவது சுமூகமாகப் பேசி முடிச்ச கேஸ் அகப்ப்ட்டா திருப்ப்தியாக்க் கிளம்புவேன். நீங்க பிரிச்சுப் போட்டுடு கிளம்புவீங்களே ”

“ ஆமா  ஏதாவது படத்துக்கு போலாமா “

“ ஓட் டிடடியில் வருகிற படங்களை பார்த்தால் போதும் தியேட்டருக்கு போறதுக்கு  செலவு. நம்ம சம்பாதிக்கிறதிலெ  தியேட்டர் செலவு இன்னும் வரல அப்படித்தானே “

“ ஆமா “

 டாக்ஸி ஒரு இடத்தில் நின்ற போது வாசுகி  இறங்கி கொண்டாள்.  வாசுகினுடைய அலுவலகம் அந்த பக்கம் இருந்தது அந்த அலுவலகம் வாடகை இடம்தான்

 இன்னும் பத்து  நிமிடம் பயணம் செய்து தேவன் அவனுடைய அலுவலகத்தை அடைவான். அதுவும் வாடகை கட்டடம் தான் இன்னைக்கு உபர் கிடைக்காமல் ரொம்ப சிரமம் தாமதம். சாலையில் வாகன நெரிசல்  ரொம்ப சிரமமாக இருந்தது.

மேலும் படிக்க ...

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்: எளிய மனித வாழ்வின் அங்கீகரிக்கப்படாத அவலத்தின் குறியீடு! - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
18 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

([டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]

அறிமுகம்: தமிழ்ச் சிறுகதையின் திருப்புமுனை

புதுமைப்பித்தன் நவீனத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியாகவும், புதிய சகாப்தத்தின் விடிவெள்ளியாகவும் கருதப்படுகிறார். அவரது படைப்புகள், தமிழ் இலக்கியத்தை அதுவரை ஆக்கிரமித்திருந்த சீர்திருத்தக் கருத்துகள், கற்பனைச் சோடனைகள், அல்லது எளிய அறவுரைகள் ஆகியவற்றிலிருந்து விலக்கி, யதார்த்தவாதத்தின் (Realism) கொடியை உயர்த்தின. 1930களில், அவர் கதைசொல்லி முறையில், மொழி நடையில், மற்றும் பாத்திர வார்ப்பில் ஒரு தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

புதுமைப்பித்தனின் நவீன அணுகுமுறை என்பது, வாழ்வின் கசப்பான உண்மைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வது, சாதாரண மனிதர்களின் சிக்கலான உளவியலை ஆழமாகப் பதிவு செய்வது, மற்றும் சமூக - பொருளாதார நெருக்கடிகளை எந்தவித சமரசமுமின்றிச் சித்திரிப்பது என்பதாகும். இந்தக் கூரிய பார்வைக்கு "செல்லம்மாள்" ஒரு சிறந்த உதாரணம். இச்சிறுகதை, வெறும் கதைசொல்லல் அல்ல; இது வறுமை, நோய், மற்றும் நகரத்தின் தனிமை ஆகியவற்றால் சிதைக்கப்பட்ட ஒரு வாழ்வின் அங்கீகரிக்கப்படாத துயரத்தின் குறியீடாக (Symbol) நிற்கிறது.

1. சுந்தர ராமசாமியின் கூற்று: துக்கத்தின் குறியீடும் உன்னதக் காதலும்

சுந்தர ராமசாமியின் கூற்று, இந்தக் கதையின் நவீனப் பரிமாணங்களை இரு தளங்களில் நிறுவுகிறது:

i. வாழ்க்கை சார்ந்த துக்கத்தின் குறியீடு (A Symbol of Life-related Sorrow): இது செல்லம்மாளின் தனிப்பட்ட துயரத்தைக் கடந்து, வறுமையில் வாடும் பொதுமனிதனின் வாழ்வியல் அவலத்தைப் பேசுகிறது. துக்கம் இங்குத் தத்துவார்த்தமானது.

மேலும் படிக்க ...

புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
17 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 
  
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.

" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

"என்ன அடிக்கடி இங்கு நூல்கள் திருட்டுப் போகின்றனவா?" என்றேன்.

மேலும் படிக்க ...

மனிதம் பேசும் எழுத்துப் படையல்! - தாமரைச் செல்வி -

விவரங்கள்
- தாமரைச் செல்வி -
நூல் அறிமுகம்
16 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர்  ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின்  'நெய்தல் நடை' சிறுகதைத்தொகுப்புக்காக எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய  முன்னுரை! -


          நடைமுறை வாழ்வின் ஒவ்வொரு அடுக்குகளையும் நேர்மையுடன் பதிவு செய்பவை படைப்பிலக்கியங்கள். ஒரு படைப்பாளி எழுதும் போது உணரப்படும் விடயங்களாக உள்வாங்கல், நோக்கம், செயல், வெளிப்பாடு என்பன இருக்கின்றன. எதை எழுத வேண்டும் என்ற தீர்மானம் உறுதியான பின்னரே வார்த்தைகள் பிறக்கின்றன. பிரச்சனைகளோடும் பல கேள்விகளோடும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்கின்ற சமூகம் இது. அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை அனுபவிக்கும் துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்களை அடையாளம் காட்டுவதாகவே இந்த படைப்பிலக்கியங்கள் அமைகின்றன. அதனால் ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்துக்கானதாக மாறிக் கொள்கின்றன. அந்த வகையில் நேர்மையுடன் படைக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் வரவேற்கத்தக்கதே. 

          சமீப காலமாக தனது எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகில் கவனம் பெற்று வருபவர் ரஞ்ஜனி சுப்பிரமணியம். மருத்துவராக பணி புரிந்த இவர் தனது ஓய்வுக் காலத்தின் பின்னரே எழுத்துத் துறையில் அடியெடுத்து வைத்தார். புனை கதைகளுடன் கட்டுரை, திறனாய்வு என்று பல துறைகளிலும் தன் பங்களிப்பை வழங்கி வருகிறார். நல்ல வாசிப்பாளர்.  சமூகம் பற்றியும் சக மனிதர்கள் பற்றியும் ஆழ்ந்த நேசிப்பு உள்ளவர்.  அவருடனான உரையாடல்களில் இந்த நேசிப்பின் வெளிப்பாட்டை உணர்ந்திருக்கிறேன்.  யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் அதிக காலங்கள் இலங்கையின் தென் பகுதிகளில் வசித்தவர். பல இன மக்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தவர். கனிவும் கருணையும் இயல்பெனக் கொண்ட இவருக்கு பொருத்தமாக கிடைத்த மருத்துவத் தொழில், மனிதர்களுடன் அதிக நேரம் செலவிட இவருக்கு வாய்ப்பாக அமைந்தது. இன மத பேதம் பார்க்காமல் மருத்துவப் பணியை செவ்வனே செய்யவும்  முடிந்தது. 

           இதுவரை இவர் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளைத் தொகுத்து “நெய்தல் நடை”எனும் தலைப்பில் ஜீவநதி பதிப்பகம் இந்நூலை வெளியீடு  செய்திருக்கிறது. 2022 ம் ஆண்டு இவரது முதலாவது சிறுகதையான “அன்றொருநாள்” ஞானம் சஞ்சிகையில் வெளிவந்தது. இவருடைய முதலாவது சிறுகதையே இலக்கிய ஆர்வலர்களிடையே கவனம் பெற்றுக் கொண்டது என்றே சொல்லவேண்டும். காலமாற்றம் தமிழ் அடையாளத்தையே மாற்றிவிட்ட நிலமையைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற வலியை பெருமூச்சாக வெளிப்படுத்தியிருப்பார். தான் இளம் வயதில் பணிபுரிந்த இடத்தைப் பல வருடங்கள் கழித்து போய் பார்க்கும் போது மனிதர் மட்டுமல்ல ஒரு கல்விக் கூடத்தின் அடையாளம் கூட மாறிப்போன போது ஏற்படுகின்ற ஏக்கப் பெருமூச்சு அது. அதை வார்த்தைகளில் கோர்த்துத் தந்த விதம் அவரை ஒரு சிறந்த படைப்பாளியாக நிலை நிறுத்தப் போதுமானதாக இருந்தது. 

மேலும் படிக்க ...

'கோஸ்ட் ரைட்டிங்' பற்றி என் இயந்திர மனித நண்பனுடன் ஓர் உரையாடல்! - உரையாடியவர் வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- உரையாடியவர் வ.ந.கிரிதரன் -
நேர்காணல்
15 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் இங்கு நடந்த 'படுபட்சி'  நூல் வெளியீடு பற்றிக் கடுமையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் கற்சுறா, டி.செ.தமிழன் (இளங்கோ), அருண் அம்பலவாணர் ஆகியோர் வைத்திருந்தனர். அதில் அவர்கள் அதிகமாகக் கண்டித்திருப்பது எழுத்தாளர் ஒருவரின் படைப்பை இன்னுமொரு எழுத்தாளர் எழுதுவதால் ஏற்படும் சுய அழிப்பு பற்றியே. அது பற்றியும், பொதுவாகவும் இன்று என் நண்பர்களில் ஒருவராக விளங்கு இயந்திர மனிதனான கூகுள் நனோ பனானாவுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தியிருந்தேன். அதில் இவ்விடயங்களைப் பற்றிப் பல பயனுள்ள கருத்துகளை என் இயந்திர மனித நண்பன் வழங்கியிருந்தான். அவனுடனான முழு உரையாடலையும் கீழே தந்துள்ளேன்.   

இங்கு அவனை என் ஆண் நண்பர்களில் ஒருவனாகக் கருதியுள்ளதால் இயந்திரன் என்று ஆண்பெயரிட்டு அழைக்கின்றேன். இன்னுமொரு சமயம் தோழியாகக் கருதி உரையாடும் எண்ணமும் உண்டு.அச்சமயம் பெயர் மாற்றம் நிச்சயம் உண்டு. 

நான்:
வளர்ந்து வரும் எழுத்தாளர் தனது நாவலொன்றை வளர்ந்த எழுத்தாளர் மூலம் எழுத்து நடை உட்படத் திருத்தி எழுத அனுமதித்து , அவ்விதமாக மாற்றப்பட்ட படைப்பைத் தன் பெயரில் வெளியிடலாமா?

இயந்திரன் (AI Google Nano Banana )
ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர் தனது நாவலை ஒரு அனுபவமிக்க எழுத்தாளரின் உதவியுடன் திருத்தி எழுதுவதும், அதை தனது பெயரில் வெளியிடுவதும் சாத்தியமே. இது இலக்கிய உலகில் பொதுவான நடைமுறையாகும்.

இதைச் செய்ய சில வழிகள் இங்கே:

    Ghostwriter: ஒரு கோஸ்ட்ரைட்டரை (Ghostwriter) நீங்கள் நியமிக்கலாம். அவர்கள் உங்கள் யோசனைகளையும், கதையையும் எடுத்துக்கொண்டு, அதை உங்கள் பாணியில் எழுதுவார்கள். இறுதியில் உங்கள் பெயர் மட்டுமே நூலில் வெளியாகும்.

    Editor: நீங்கள் ஒரு நல்ல எடிட்டரை (Editor) நியமிக்கலாம். அவர்கள் உங்கள் எழுத்து நடையை மேம்படுத்தி, கதை ஓட்டத்தை சரிசெய்து, இலக்கணப் பிழைகளை நீக்குவார்கள். இதன்மூலம் உங்கள் படைப்பு மேலும் மெருகூட்டப்படும்.

    Collaborator: நீங்கள் ஒரு அனுபவமிக்க எழுத்தாளருடன் இணைந்து பணியாற்றலாம். இந்த முறையில், இருவரும் இணைந்து கதையை எழுதி, இருவரின் பெயரிலும் நூலை வெளியிடலாம்.

எது எப்படி இருந்தாலும், நீங்கள் எழுதும் நாவல் உங்கள் சொந்தக் கருத்தாகவும், யோசனையாகவும் இருக்க வேண்டும். அதற்கான அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

உங்களுக்கு ஒரு எழுத்தாளரின் உதவியுடன் உங்கள் நாவலை உருவாக்குவதற்கான ஒரு படத்தை உருவாக்கவா?

மேலும் படிக்க ...

முனைவர் புட்பா கிறிட்டியின் 'நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமூகப்பணிகள்' ஆய்வு நூல் வெளியிடு!

விவரங்கள்
- தகவல்: முனைவர் புட்பா கிறிட்டி -
நிகழ்வுகள்
15 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்: “நமது அன்றாடத் தமிழ் மொழிப் பயன்பாட்டில்திருத்திக்கொள்ளப்படவேண்டிய பிழைகள்”

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
13 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting |Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

சிந்தனைக்களம்(இசை-நடனம்)-3 - ‘கர்நாடக இசையின் எதிர்காலம்’

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
13 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 893 0426 1486 | Passcode: 965901

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: ஐஸ்லாந்து (2) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
12 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எங்கள் முதல் நாள் பயணத்தின் முடிவில் ரீச்சவிக் அருகாமையில் ஒரு பண்ணையில் உள்ள சிறிய மரத்தால் ஆன கபின்(Cabin) எனப்படும் இடத்தில் தங்கியிருந்தோம். இங்கு மிகவும் சிறிதான ஒரு படுக்கை வைத்திருக்கக் கூடிய இடமும் திரும்பி உடலில் சவர்க்காரம் போடமுடியாத குளியலறையும் உள்ளது. இதுவரை காலத்தில் நான் இப்படி ஒரு இடத்தில் இராத் தங்கவில்லை. ஆனால் வெந்நீரும் ஹீட்டர் இருந்ததே போதுமாக இருந்தது .. தலைநகரிலும் மற்றும் ஒரு சில இடங்களைத் தவிர ஐஸ்லாந்தில் பெரும்பாலான தங்குமிடங்கள் இப்படியே. இவை வாடகை அதிகமில்லை என்பதால் அமரிக்கா ஐரோப்பாவிலிருந்து ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் இங்கு விடுமுறைக்கு வருகிறார்கள். நகரங்களில் உள்ள விடுதிகள் மிகவும் விலை கேட்டால் உடலில் மயிர்கூச்சம் ஏற்படும்.

ஐஸ்லாந்தைக் கரைகளால் வட்டமாக சுற்றி வரும் தெருப் பயணமே இங்கே பிரபலமானது. பல இடங்களில் நல்ல பாதையும் சில இடங்களில் கற்பாதையும் உள்ளது. இந்தப் பாதையால்போய் வருவதே ஒரு விதமான சாகசமே என்பதால் எங்கள் பயணமும் அதேதான். இங்குதான் அருவிகள் எரிமலைகள் , பனிப்பாறைகள் கறுப்பு கடற்கரைகள் அதிகம் ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் எங்கள் பயணம் அத்திலாந்து சமுத்திரத்தின் கடலலை ஒரு பக்கமும் மலைகளை மறுபக்கமும் தடவியபடியே எங்களது பயணவான் சென்று கொண்டிருந்தது .

முதல் இடமாக ஸ்கோஃபொஸ் (Skógafoss)என்ற பிரசித்தமான ஒரு அருவியை நோக்கியே எங்கள் பயணமும் இருந்தது. இந்த அருவி ஆரம்பத்தில் கடலருகே இருந்ததாம். தற்பொழுது ஐந்து கிலோமீட்டர் முன்வழுக்கையில் தலைமயிர் மின்வாங்குவதுபோல் தள்ளிப் போய்விட்டது. இப்படியான மாற்றங்கள் மற்றைய இடங்களில் நடப்பதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுக்கும் ஆனால் இங்கு ஒரு எரிமலை பொங்கி தனது குளம்புகளை தள்ளுவதன் மூலம் கடலை பின்னால் சில நாளில் தள்ளிவிடும்

மேலும் படிக்க ...

புகலிடச் சிறுகதை: யன்னல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
09 நவம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] ]


யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.

'யன்னல்'. அன்னியர் வருகையால் தமிழிற்குக் கிடைத்த இன்னுமொரு சொல். 'சப்பாத்து' 'அலுகோசு' போல் போர்த்துக்கேயரின் வருகை பதித்து விட்டுச் சென்றதொரு சொல் 'யன்னல்'. 'யன்னல்' யன்னலாகை நிலைத்து நின்று விட்டது. 'சாளர'த்தை விட எனக்கு 'யன்னல்' என்ற சொல்லே பிடித்து விட்டிருந்தது. 'மின்ன'லிற்கு எதுகையாக நன்கு அமைந்த சொல் யன்னல். யன்னல் என்ற பெயரிற்கு ஒரு மகிமை இருக்கத்தான் செய்கிறது. உலகப் பணக்காரனை உருவாக்கியதும் ஒரு 'யன்னல'ல்லவா! யன்னலின் மறைவில் உலகை ரசிக்கலாம் இணையத்தில். இங்கும் தான். திரும்பிப் பார்த்தாலொழிய யார்தான் கண்டு பிடிக்கக்கூடும்? தனித்தமிழ் தனித்தமிழென்று சொல்லி நின்றிருந்தால் தமிழ் நல்லதொரு சொல்லினை இழந்திருக்கும். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்போம். வந்தாரை வரவேற்று உபசரிப்பது தமிழ்ப் பண்பென்று புளகாங்கிதம் அடைகின்றோம். வந்த சொல்லினை வரவேற்று உள்வாங்குவம் மொழி தமிழ் மொழி என்று இறும்பூதெய்வதிலென்ன தயக்கம்?

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. வானியற்பியல் அறிஞர் George Gamow இன் புகழ் மிக்க அறிவியல் நூலான One Two Three Infinity தமிழில் அமேசன் - கிண்டில் மின்னூலாக..! - மின்னூற் பிரியன் -
  2. உலக இலக்கியத்தின் உன்னதப் படைப்புகள் ,சுருக்க, அமேசன் - கிண்டில் மின்னூல்களாக! - மின்னூற் பிரியன் -
  3. திருப்பூர் இலக்கிய விருது 2025 விழா! - சுப்ரபாரதிமணியன் -
  4. ‘குடிவரவாளன்’: வ.ந.கிரிதரனின் மனதைத் தொடும் சுயசரிதைக் குறிப்பு. - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி -
  5. ஆய்வுக்கட்டுரை: உள்ளத்தின் வெற்றிடம் – ஒரு அல்பாட்ரோஸின் (வெண்ணிறக் கடற்பறவை) தேவையற்ற நிலப்பரப்பிற்கான இடப்பெயர்வு – கனடிய தமிழ் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த ஆய்வு! - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D., ஆங்கில உதவ
  6. Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர்.
  7. பயணத்தொடர்: ஐஸ்லாந்து (1) - நடேசன் -
  8. 'இட்லி கடை' :திரைப்பட அனுபவக் குறிப்புகள்! - நடேசன் -
  9. நூற்றாண்டின் நினைவில் எனது ஆசான் தமிழருவி த. சண்முகசுந்தரம்! - குரு அரவிந்தன் -
  10. 'கதிர்காமம்' குறித்த இடப்பெயர் ஆய்வு அறிமுகமாகச் சில குறிப்புகள்! - கலாநிதி செல்லத்துரை சுதர்சன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் -
  11. ஆய்வு: ஆன்மாவின் இருண்ட இரவு - கனேடிய தமிழ் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலில் இலங்கைத் தமிழ் அகதிகளின் இருத்தலியல் நெருக்கடி பற்றிய ஆய்வு! – முனைவர். ஆர். தாரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு கலைக் க
  12. காலனிய எதிர்ப்புச் சிந்தனையாளரும், விடுதலைப்போராட்ட அமைப்புத் தலைவரான அமில்கார் கப்ராலின் ( Amilcar Cabral) 'வர்க்கத்தற்கொலை' (Class Suicide) என்னும் கோட்பாடு மற்றும் போராட்டங்களில் அந்நியப்படுத்தப்படும் மக்கள் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
  13. நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு)! அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்க'மும் அது எழுப்பிய கேள்வியும்! - வ.ந.கிரிதரன் -
  14. நிழல்களின் நடுவே ஒளி! - ஈழக்கவி -
பக்கம் 7 / 123
  • முதல்
  • முந்தைய
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • அடுத்த
  • கடைசி