k_panjangakm.jpg - 6.46 Kbநாகரத்தினம் கிருஷ்ணாசிமொன் தெ பொவ்வார் எழுதிய 'இரண்டாம் பாலினம்' 1949ம் ஆண்டே வெளிவந்திருந்தது, எனினும் 1970 ஆண்டிலேதான் பெண்கள் விடுதலைக்கான இயக்கம் பிரான்சு நாட்டில் தொடங்கியது.  பிற மேற்கத்திய நாடுகளைப் போன்றே அறிவியலிலும்; பெரும் புரட்சியை நடத்திக்காட்டி ஆண்டவர்களைச் சிரச்சேதம் செய்வித்து இனி நாங்கள் அடிமை இல்லையென வெகுண்டெழுந்த மக்களை அரசியலிலும், மனித வாழ்க்கையை நேர்த்தியாகச் சொல்வதுமட்டுமல்ல அதனை மரபுகளிலிருந்து விடுவிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் என கலை இலக்கியத்திலும் மெய்ப்பித்து காட்டிய பிரான்சு நாட்டில் கூட பெண்கள் எழுபதுகள்வரை அடிமைகளாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்றே இதற்குப் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. பிரான்சுபோன்ற ஒரு வளர்ந்த நாட்டில், தனி மனிதச்சுதந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டிருக்கிற நாட்டில் எழுபதுகளில் ஆரம்பித்துவைத்த பெண் விடுதலைக்கான இயக்கம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறதா என்றால் இல்லை. இருபத்தோராம் நூற்றாண்டிலும்பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது, இன்றும்கூட தங்கள் உரிமைகளை வற்புறுத்த, பாசாங்கு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சமுதாயத்தை தட்டி எழுப்ப சற்று தீவிரமான வழிமுறைகளை சில பெண்ணியக்கங்கள் பின்பற்றுகின்றன. கடந்த அரைநூற்றாண்டாக அவர்கள் கையாண்ட வழிமுறைகள் எவ்வித பலனையும் தர இல்லை, இந்நிலையில் சில பெண்கள் சற்று முகம்சுளிக்கும் வகையில் போராடினால்கூட அதனை நியாயம் என கொள்ளவேண்டியிருக்கிறது. 

 

 மேற்கத்திய நாடுகளில் அண்மைக்காலத்து புள்ளிவிவரகணக்குகள் கூட சமூக அமைப்பில் இருபாலினங்களில் வழக்கம்போல பெண்பாலினம் முடங்கிகிடப்பதாகவே தெரிவிக்கின்றன. இச்சூழலில் கல்வியில் பின்தங்கிய, மரபுகளில் ஊறிய, மதம் சாதி கட்டமைப்புகளில் முடங்கிக் கிடக்கிற இந்தியாபோன்ற நாடுகளில் 'பெண்ணியக்கம்', 'பெண்விடுதலை' போன்ற சொல்லாடல்கள் தரும் புரிதல் குறித்து அதிகம் யோசிக்கவேண்டியிருக்கிறது. 'இங்கே பத்தினிபெண் என்றால் கணவன் சோரம் போக: அவனைக் கூடையிற் சுமந்தேனும் பரத்தை வீட்டிற்குக் கொண்டுசெல்ல தெரிந்தவள், அவன் கொழுத்து ஊர் மேய்ந்தால் ஊரை எரிக்கக் கடமைப் பட்டவள்,  அவன் தவறு இழைத்து உயிர்விட்டால், இவளும் உயிர்விட்டு மறுகணம்  சொர்க்கம் செல்லும் சூட்சமம் அறிந்தவள். இவர்களின் எச்சங்களாக வாழ்கிற இந்தத் தலைமுறை பெண்களின் நிலமை என்ன? வெகுசன பத்திரிகைகளில் ஆண்கள் குற்றங்களை அடக்கி வாசித்து அல்லது வாசிக்காமலேயே, பெண்கள் குற்றத்தை பெரிது படுத்தி செய்தியாக்குவதையும்; தொலைக்காட்சி தொடர்களில் எருமைமாடுகளைக் குடும்பப்பெண்ணாகச் சித்தரிப்பதையும்; திரைப்படங்களில் பெரிய நடிர்களில் ஆரம்பித்து கதாநாயகியின் விரல் கனம் இல்லாதபையன்கள்வரை  அவளிடம் 'நான் ஆண்பிள்ளை டீ' என்பதையும் பார்க்கிறோம். ஆகவேதான் பத்தாம்பசலித் தனமான நெறிகளில் குளிர்காய்கிற இந்தியச் சமுதாயத்தில் பெண்ணியக்கோட்பாடுகள் குறித்து பேசுவதும் எழுதுவதும் அவசியமாகிறது.  

 க.பஞ்சாங்கம் அடிப்படையில் ஒரு மார்க்ஸியவாதி. இயல்பாகவே மார்க்ஸியவாதிகள் பிறரைக்காட்டிலும் விளிம்பு நிலை மக்களிடத்தில் அதிகம் அக்கறைகொண்டவர்கள். விடுதலை, புரட்சி போன்ற சொற்களில் அதிகம் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள். எனவே 'பெண் விடுதலை' சார்ந்து பஞ்சாங்கம் எழுதுகிறபோதும், உரையாற்றுகையிலும் நமக்கு வியப்பைத் தரவில்லை. பஞ்சாங்கத்தின் எழுத்தும் சரி, அவர் பேச்சும் சரி ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஓர் ஒற்றை இயக்கமாக, சோர்வின்றி, உரத்து, எவற்றுடனும் எவருடனும் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்பட்டு வந்திருக்கிறதென்பதையும் நாம் அறிவோம். க. பஞ்சாங்கத்தின் 'நவீன இலக்கிய கோட்பாடுகளுக்கு முன்னுரை எழுதிய 'பாரதிபுத்திரன்' என்ற நண்பர் "பஞ்சு துணிவானவர். தன் அறிவுக்கும், உணர்விற்கும் என்றும் நேர்மையானவர்", என்று கூறி "இனம், மொழி, வர்க்கம், பால் ஆகிய நிலைகளில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட தமிழினம், தமிழ்மொழி, தலித்துகள், உழைப்பாளர்கள், பெண்கள்' என்று அவர் உழைப்புத் தளங்களைப் பட்டியலிடுகிறார்.

 பெண்கள் சார்ந்து, பெண்ணியம் என்ற பொருள் சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் அதிகம்.பெண்களில் பெண்களுக்காக கவிதையன்றி கதையாடலில் பெண்ணுரிமைக்கான எழுத்தென்று 'அம்பை' எழுத்தைசொல்லவேண்டும். வேறு பெண்களிடத்தில் இன்றுவரை அத்தகைய மூர்க்கத்தை கண்டதில்லை. பத்தாம் பசலி மனிதர்களிடையே 'ரௌத்திரம் பழகத்'  தெரிந்த பெண்கள் ஒரு தேவை. ஆண் படைப்பாளிகளில் பெண்ணுரிமைக்கு தம்து எழுத்தை உபயோகித்தவர் பிரபஞ்சன். அதன்பிறகு க.பஞ்சாக்கத்திடம் அத்தகையதொரு செயல்பாட்டைக் காண்கிறேன். பிரபஞ்சன் பேச்சுக்கும் க.பஞ்சாங்கம் பேச்சுக்கும் அடிப்படையில் வேற்றுமை இருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சனின் வாதங்கள் சமூக அறத்தை அடிப்படையாகக் கொண்டவை. க.பஞ்சாகத்தின் வாதங்கள் அறத்தோடு சாட்சிகளையும் தடயங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

 'தமிழ் இலக்கியச் சூழலில் பெண்ணிய கோட்பாடுகள்'; பெண்-மொழி-புனைவு'; பெண் நிலை நோக்கு திறனாய்வு; 'திறனாய்வு - ஆணின் மொழி'; 'ஹெலென்சீல்கு' என்பவரைபற்றிய ஏழு கட்டுரைகள்; பெண்ணெனும் படைப்பு - சில மானுடவியல் குறிப்புகள் என்பதன் கீழ் 'பெண்ணியமும் விஞ்ஞானமும்', 'தாய்மையும் பாலியலும்', 'வேட்டை ஆடுதலா? சேகரித்தலா?', 'காமமும் சுய பிரக்ஞையும்', 'கருவுயிர்த்தலும் ஆணாதிக்கமும்'; 'பெண்களின் தேடல்'; 'புதிய பெண்ணியக் கோட்பாடு அடிப்படையில் சங்க இலக்கிய பெண்பாற் புலவர்களின் கவிதைகள்', 'வேதநாயகம் பிள்ளையின் பெண் நலச் சிந்தனைகள்', பாரதிதாசனின் தமிழ்ப் பெண்ணியம்', 'கு.சின்னப்ப பாரதி படைப்புகளும் பெண்பற்றிய புனைவுகளும்', 'பிரபஞ்சனும் பெண்விடுதலையும்'; ஐம்பது ஆண்டுகால விடுதலை இந்தியாவில் பெண்களின் நிலை', 'பொருளாதாரப் பின்னணியில் பெண்களின் நிலை; 'பொருளாதார பின்னணியில் பெண்', 'இளம்பெண்களின் சிக்கல்களும் சமூக நடைமுறைகளும்', 'பாலியல் வன்முறை', உழைக்கும் பெண்கள்', எய்ட்ஸ் தடுப்பு விளம்பரமும் பெண்ணின் அடையாளமும்', 'கி.ராவின் பெண்கள்', என்று அவருடைய கட்டுரைகளில் பெண்களை மையப்பொருளாகக் கொண்டவை எண்ணிக்கையில் கணிசமாக இருக்கின்றன. தெ.பொ.மீயைப் பற்றி பேசும்போதுகூட பெண்ணுலகம் சார்ந்த அவரது வாழ்நெறியைக் கொண்டாடுகிற க.பஞ்சாங்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

 'தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக் கோட்பாடுகள்:

 'தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக் கோட்பாடுகள்'  அவருடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூலில் க.பஞ்சாங்கத்தின் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளுள் முதலாவதாக வருகிறது. இக்கட்டுரையிலும் அவரது பிறகட்டுரைகள் போலவே தலைப்புக்கான நோக்கத்தைக் கட்டுரையின் நோக்கமாகத் தெரிவிக்கிறார். "எந்தவொரு கருத்தாக்கத்திற்கும் 'உலகப்பரப்பு' என்ற தளமும் உண்டு; தாய்மொழி, தாய்மண் என்ற தேசிய இனத்தளமும் உண்டு (இந்த 'உலகப்பரப்பு' என்பது நம்மைப்பொறுத்தவரை மேலைநாடு சார்ந்தது; ஆங்கிலமொழிசார்ந்தது என்பதையும் பதிவு செய்துகொள்ளவேண்டும்) எனவே தமிழ் இலக்கிய சூழலில் சிறப்பாக வெளிப்படும் பெண்ணியப்பார்வைகளை அடையாளம் கண்டு விளக்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது"(பக்.47, நவீன இலக்கிய கோட்பாடுகள்). கட்டுரையை பெண்ணியம் தொடர்பான மேலை நாடுகளின் நூல்கள் அவற்றின் தாக்கத்தில் வெளிவந்த தமிழ் நூல்கள் துணைகொண்டு எழுதியுள்ளார். அதனைக் காலம் மற்றும் பெண்ணியம் பற்றி தெரிவிக்கும் கருத்தியத்தின் அடிப்படையில் அல்லது அவரே கூறியுள்ளது போன்று மேலை நாட்டுக்கோட்பாடுகளைச் சார்ந்தும், தேசியம், சாதியம் சார்ந்த கோட்பாடுகளைச் சார்ந்தும் பிரித்தறியலாம்.

 கட்டுரையின் ஆரம்பத்தில்: "ஓவையார் எழுத்துக்களை ஒரு பெண்ணின் எழுத்தாகத் தனியாகப் பிரித்து அடையாளம் கண்டவன்' பாரதி என்று மறக்காமல் நினைவூட்டுகிறார். "ஒவையாரைப்போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக்கூடிய ஓர் ஆண்மகன் இங்கு பிறந்திருக்கிறானா?" எனப் பாரதி கேட்டதாக வருகிறது. நமக்குப் பதில் சொல்ல ஒன்றுமில்லை, கேட்பவன் ஓர் ஆண்மகன் மட்டுமல்ல,  இந்திய தேசத்தின் மிகப்பெரிய கவிஞன், 'புதுமைப் பெண்' என்ற திட்பமான சொல்லாடலை கற்பித்தவன், நாட்டின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர் சுதந்திரத்திற்கும் கவிதை பாடியவன். "ஒவையாரைப்போல ஓர் ஆண்மகன் கவிதை செய்திருக்கிறானா? என்கிற பாரதியின் வினாவை க.பஞ்சாங்கம் சுட்டுகிறபோது அதற்கான நியாயத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. கட்டுரையின் தொடக்கத்தில் பெண்ணியம்  உட்பட 'எந்தவொரு கருத்தாக்கத்திற்கும் 'உலகப்பரப்பு', 'தேசியபரப்பு' ஒன்றுண்டு, நம்மைப்பொறுத்தவரை உலகப்பரப்பு என்பது 'மேலை நாடு சார்ந்தது' ஆங்கிலமொழி சார்ந்தது' என்பதை நினைவூட்டும் க.பஞ்சாங்கம், இங்கே பாரதியின் குரலைப் பதிவு செய்யும் நோக்கம் "இங்கு மட்டுமல்ல எங்குமே ஒவையைபோல ஒருத்தி அவள் காலத்தில் மட்டுமல்ல இன்றுவரை பிறக்கவில்லை" எனவே எல்லாவற்றிர்க்கும் மேலைநாடுகளை உதாரணம் காட்டவேண்டாம் என்பதாகத்தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 மேலை நாட்டு பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள்:

 இக்கட்டுரையில் கிடைக்கிற முதலாவது செய்தி "முனைவர் தேவத்தா முயற்சியில்1986 ஆம் ஆண்டு தெரசா மகளிர் பல்கலைகழகம் மதுரையில் நடத்திய ' பெண்கள் படைப்பில் பெண்கள்'  என்ற கருத்தரங்கே" பெண்ண்ணிய திறனாய்விற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதாகும். அக்கருத்தரங்கில் கல்வியாளர்களும், சிவசங்கரி போன்ற எழுத்தாளரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். சிவசங்கரி "எழுத்தை ஆண் எழுத்து பெண் எழுத்து என்று பால் அடிப்படையில் பிரிப்பது தகாது" என்றதை அன்றைய சூழலில் எதார்த்தம் என ஆசிரியர் சொல்கிறார். முனைவர் தேவதத்தா முயற்சியில் தெரஸா பல்கலைகழம் 1992ல் வெளியிட்ட 'பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு' தொடங்கி 1997ல் வெளிவந்த 'பறத்தல் அதன் சுதந்திரம்' என்ற தொகுப்பு நூலுக்கு மாலதி மைத்ரி எழுதிய முன்னுரைவரை அவ்வளவும் பெண்ணியச் சொல்லாடல்களை தமிழில் வளர்த்தெடுக்க காரணமாயிற்று என்கிறார். இரா. பிரேமாவின் பெண்ணியம் ஓர் அறிமுகம் என்ற நூலும் மேலைநாட்டு பெண்ணியச் சிந்தனையை விரிவாக எடுத்துரைத்தது என்ற தகவலும் உண்டு. இருபதாம் நூற்றாண்டு 'சிந்தனை மரபு', பிறதுறைகளைபோலவே பெண்ணியல் சிந்தனையிலும்  மேலை நாட்டு சிந்தனைமரபின் தாக்கத்தைப் பெற்றுள்ளது  என்கிற தமது கூற்றை சிமொன் தெ பொவ்வாரின் 'இரண்டாம் பாலினம்' முதலான நூல்களின் துணைகொண்டு உறுதிபடுத்துகிறார். அதுவன்றி "பெண்ணுக்கான மொழியை மட்டுமல்ல பெண்களுக்கான இலக்கிய கொள்கை ( இலக்கிய கொள்கைகளே கூடாது என்ற கருத்தும் உண்டு), பெண்களுக்கான கதையாடல், வடிவம், உத்தி முதலியன அனைத்தும் புதிதாக உருவாக்கப்படவேண்டும் என்ற புதிய சிந்தனை தமிழ்சூழலில் பரவியதற்கு, ரெமன் செல்டனின் "பெண்ணியல் திறனாய்வு" கட்டுரை -(பெண்ணியம் சார்ந்த இலக்கிய கோட்பாடுகள் உயிரியல், அனுபவம், மொழி, உளநெறி, சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்தவை) -   ஒரு முக்கிய காரணம் என்கிறார். கோவை ஞானி நடத்திய 'நிகழ்' இதழில் இதன் மொழி பெயர்ப்பு வந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.  தமது 'பெண்ணெனும் படைப்பு' நூலிலும்  இக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறதென்கிற தகவலையும் ஆசிரியர் தருகிறார்.

 இந்திய தேசியம் சார்ந்த பெண்ணியல் சிந்தனைகள்:
 
 மேலை நாட்டு பெண்ணிய இலக்கிய கோட்பாடுகள் பரவிய அதே காலத்தில் தேசிய உணர்வின் அடிப்படையில் இந்துமத சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டவர்கள் பெண்களுக்கு ஆதரவாகச் சட்டடங்கள் இயற்ற காரணமாகிறார்கள்.  "இந்திய தேசியப் போராட்டத்தை ஒட்டி எழுந்த பல்வேறு விழிப்புணர்வோடு கூடிய புரிதலின் ஒரு பகுதியாக" அதனைக் கண்ணுறும் க. பஞ்சாங்கம், இந்திய சுதந்திரத்திற்கு முன்னும் (இங்கேயும் மேற்கத்தியர்கள்?) அதன்  பின்னும்  இந்து மத கட்டமைப்பில் உருவான 'பெண்ணை' விடுவிக்க  ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற அமைப்புகளும் பிறரும்  முயன்றதன் விளைவாக ""பாறையாய் இறுக்கமுற்றுக்கிடந்த இந்திய ஆண்-பெண் உறவு முறை நெகிழத் தொடங்கியது"(பக்.50-ந.இ.கோ) என்கிறார். மாறாக  அவர்கள் முயற்சியும், உருவான சட்டங்களும் பெண்ணுரிமைக்கு ஆதரவான இந்தியக்குரலாகப்  பின்னர் வந்த திறனாய்வாளர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டனவென்பதை பரிமளம் என்பவரின் 'இந்துப் பெண்ணியம் (1995) என்ற நூலூடாகவும், கி. இராசா என்பவரின் இந்தியப் பெண்ணியம் (1997 என்ற நூலூடாவும் நிறுவுகிறார்.

 கி.இராசா "குடும்பம் என்ற அமைப்பை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் அதைக் காத்து அடுத்த தலைமுறைக்குத் தருவதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்குண்டு . இருவருமே தங்கள் கடமைகளை உணர்ந்து குடும்பம் என்ற நிறுவனத்தில் பணியாற்றுதல் வேண்டும்" என்கிற போது அதற்கு பதிலளிக்கும் விதமாக "குடும்பத்தில், மதத்தில், கல்வியில், அரசியலில், கலை இலக்கியத்தில், பொருளாதார உறவில் பெண்ணின் நிலை என்ன? அங்கெல்லாம் அவள் எவ்வாறு இரண்டாதரக் குடிமகளாக நடத்தப்படுகிறாள்? அதற்கான மூலகாரணம் என்ன? முதலிய கேள்விகளைக் கேட்காமல் அவற்றிர்க்கப்பால் பொறுமை காத்து, குடும்பத்தை நிலை நிறுத்தவேண்டும் ; தேசத்தை காக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் பார்வையாக இருக்கிறது. இத்தகைய இந்தியப் பெண்ணியம் பேசுகிறவர்கள்தங்களுக்குள்  வினைபுரியும் ஆண் நலம் சார்ந்த கருத்துக்களீல் இருந்து விடுபடமுடியாத தன்னிலையை புரிந்துகொள்ளும் சக்தியின்றி மேலை நாட்டு பெண்ணியப்பார்வைகளைத் தங்களுக்கு முற்றும் அந்நியமானவை என்பதுபோலவும் அவைகள் அற்பத்தனமானவை என்பதுபோலவும் புனைந்துகொண்டு, நமக்கான இந்தியப் பெண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தவும் முயலுகின்றனர்." (பக்.51 ந.இ.கோ) எனக் கண்டிக்கிறார். க.பஞ்சாங்கத்தை பொறுத்தவரை  இந்திய தேசியம் சார்ந்த பெண்ணியம் மிதவாத பெண்ணியம், மேலை நாட்டுபெண்ணியக்கூறுகள் சிலவற்றை எதிர்க்கக்கூடிய சிந்தனை. அது மாத்திரமல்ல பரிமளம் 'இந்துப்பெண்ணியம்' என்ற பார்வையில் தி.ஜா நாவலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதில் க.பஞ்சாங்கத்திற்கு உடன்பாடில்லை. தி.ஜாவின் பெண்ணிய விடுதலை  குறித்தபார்வையை 'இந்தியப் பெண்ணியப் பார்வை' என்பதற்குள்ளேயே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்.

 தமிழ் மருமலர்ச்சி கால பெண்ணியல் சிந்தனைகள்:

 பாரதியும், பாரதிதாசனும் தமிழ்  மறுமலர்ச்சிகால பெண்ணியல் சிந்தனைக்கு காரணமாகிறார்கள். இவர்களின் கவிதைகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகளை ("நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்", (பாரதியார்), " அச்சமும் நாணமும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ் நாட்டின் கண்கள்", (பாரதிதாசன்)) முன் வைக்கும் கட்டுரை ஆசிரியர்,  இந்திய தேசிய பெண்ணியல் சிந்தனைகளைப்போலவே இவர்கள் இருவரின் பெண்ணியல் சிந்தனைகள் தமிழ், தமிழ் தேசிய நலன் சார்ந்தவை, என்கிறார்.

 தலித் பெண்ணியல் சிந்தனைகள்:

 அம்பேத்கார் நூற்றாண்டின்போது எழுந்த தலித்திய சிந்தனை, அதனை ஒட்டிய தலித் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார். பொதுவாகவே ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது தனி கரிசனத்துடன் வினையாற்றுகிற க.பஞ்சாங்கம், இங்கே பெண்கள் தலித்தாகவும் அடையாளம் பெறுகிறபோது பிரச்சினையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவரின் கருத்தின்படி "இந்திய சமூகத்தில் தலித்துகள் என்ற கட்டுமானத்தில் முழுவதும் வினையாற்றியிருப்பது சமூகம். ஆனால் பெண்கள் என்ற கட்டுமானத்தில் சமூகத்தோடு இயற்கையின் பங்களிப்பும் இடம் பெற்றுள்ளது. இருவரையும் ஒடுக்கிய ஆதிக்க சமூகத்தின் செயல்பாட்டுத் தந்திரம் இரண்டிலுமே ஒன்றுபோலவேதான் அமைந்துள்ளது; பொருள் ஆதாரத்தைப் பறிப்பது; வேலை பிரிவினை அமைப்பது; நடமாடும் வெளியை வரையறுப்பது; மொழியைப்பிடுங்குவது... (பக்கம் 53 ந.இ.கோ). ஆசிரியருக்கு, தலித் ஆணைக்காட்டிலும் தலித் பெண் கூடுதலாக ஒடுக்கபடுகிறாள். ஒரு தலித் பெண் இஅரண்டு முறை ஒடுக்கப்படுகிறாள் என்ற கருத்து கவனத்திற்கொள்ளப்படவேண்டியது.  'தலித்' என்ற அடையாளத்தினால் பெறும் அடக்குமுறை .ஒன்று, மற்றது பெண் என்பதால் கிடைப்பது. ஆக ஒரு தலித் பெண்ணுக்கான பெண்ணுரிமை, பொத்தாம் பொதுவானதல்ல, சாதிரீதியாகவும் அணுகவேண்டும் என்ற அவரது கருத்தை மறுப்பதற்கில்லை.

(தொடரும்)  

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R