கவிதை படிப்போமா? கவிப்புயல் இனியவன் கவிதைகள்.காந்தள் மலர்கின்ற
காலத்திலே உம்மைக்
காந்தமாய் இழுக்கின்றோம்- மண்ணை
மாந்தி உயிர்க்கொடை
வாரியதா லுங்கள்
மாண்பில் உயிர்க்கின்றோம்- வண்ணப்
பூந்திரி போலுடல்
போர்கொண்டு சென்று
பொன்னாய் உருகிவிட்டீர்- உம்மை
ஏந்தி அழுகையில்
ஏர்கொண்டு கீறிய
இரத்தத்தால் எழுதுகின்றோம்!

வானக் கடல்வென்றீர்
மண்ணில் புதையுண்டீர்
மலர்முகம் எங்கையப்பா?- தமிழ்
மானப் பெயர்கொண்டு
மடியில் உறைந்துநீர்
வார்த்தனை குருதியப்பா!- அந்த
ஈன உலகெலாம்
ஒன்றாய் எரித்தனர்
இன்றென்ன கண்டாரோ?- மக்கள்
போன பின்னாலந்தப்
பேய்களின் வாலினைப்
பிடித்துமே விட்டாரோ!

உயிரின் கொடைதன்னில்
ஓங்கியதாம் உங்கள்
உண்மைக் கனல்வடிவம்- அந்தப்
பயிரின் வரிச்சினைப்
பட்டறைபோல் இன்று
பார்த்தது அகில்வடிவம்- உங்கள்
செயிரின் பறையிலே
சிந்தியதா மிந்தச்
செகமிடும் ஊர்வலங்கள்- நாங்கள்
கயிறாய்த் திரிந்தபின்
கார்த்திகைத் தீபமே
காண்கிறோம் சீவியங்கள்!

கல்லறை மீதிலே
கனிந்தவுன் சோதியில்
கட்டிப் புரளுகின்றோம்- இந்தச்
செல்லறைச் சீவியம்
செப்பிடும் காந்தள்எம்
தெய்வத்தைக் காணுகின்றோம்- உங்கள்
வெல்ல உயிரினை
விதைத்தஉம் தற்கொடை
விழிநீரைச் சுமக்கின்றோம்- எங்கள்
செல்லக் கிளிகளே!
செந்தமிழே கண்ணீர்ச்
சுனையிலே நனைக்கின்றோம்!- என்றுk;
சிந்தையில் நினைக்கின்றோம்!

 

 


 

2. கவிதை: நத்தார் இதுநாள் வித்தாம் புதுநாள்

மீண்டும் பிறப்பு என்பது இன்னோர்
மீள்பரி சோதனை!
ஞாண்டும் பிறந்தாய்; நாதா இதுவோர்
நல்லொளிச் சாதனை!

காணக் கிடைத்த பாலன் உதிப்பு
கண்டோம் இதுபோது!
மாணப் பரிசு மகிழ்ந்தோம் என்றால்
வரிசை கிடையாது!

நேற்றும் சாவு இன்றும் நோவு
நிகழ்ச்சி நிரலேயாம்!   
கூற்றுங் காவிக் குலமாய் எடுத்துக்
கொழுத்து திதுகாலம்!

பாலன் வரவில் பூமிப் பரப்பில்
பார்த்திடும் கலிகாலம்!
சீலங் கருதி நாமுங் களித்தோம்
நிறுத்தாய் பலிகாலம்!

வானம் மழையாய் தானம் கொடுக்கும்
மண்ணின் சிறப்பேயாம்!
வானத் தேறி வலியாற் புகுந்தோம்
மதிப்பே கனடாவாம்!

(இ)யேசு மழலை பேசு இதுகால்
பூவுல கெல்லாமும்
வாசம் எழுது மனிதந் தழுவு
வாழுக எல்லோரும்!

கொடியவர் வாழும் குலமாய்ஈழக்
குலத்தை மாற்றாதே!
அடிமை ஆக்கிக் குடியாய் மாற்றும்
அவலம் ஆக்காதே!

நத்தார் இதுநாள் வித்தாம் புதுநாள்
வரவாய் வைக்கின்றோம்!
கர்த்தர் எனவே காப்பாய் நாமும்
கரங்கள் குவிக்கின்றோம்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R