கவிதை: இலக்கிலாது சஞ்சரித்தேன் நான் I wandered Lonely as a cloud – William Wordsworth)

இலக்கிலாது சஞ்சரித்தேன் நான்
பள்ளத்தாக்கின் மீதும், மலை மீதும், உயர மிதக்கும்
ஒரு வான்முகில் போல்,
கண்டேன் நான் அவ்வமயம்
ஒருமருங்கே அனைத்தையும்
ஒரு பெருந்திரள் கூட்டமாய் பொன் வண்ண எழிலில் டாப்போடில்ஸ் மலர்கள்
ஏரியின் அருகாமையில், மரங்களின் கீழ்நிழலில்
மென்காற்று அலையில்
சிலிர்த்துப் படபடத்துக்கொண்டும், நர்த்தனமாடிக்கொண்டும் அவைகள்.

தொடர்ச்சியாக ஒளிரும் விண்மீன்கள்
பால் வெளி மண்டலத்தின் மேல் கண்சிமிட்டுவது போன்றே
விரிகுடா விளிம்புடன் இணைந்து
முடிவுறா நீண்ட கோடுகளில் அவை பரந்து படர்ந்திருந்தன
கண்டேன் நான் பத்தாயிரம் மலர்க்கூட்டத்தை ஒரு கணப்பொழுதில்
தலையை அசைத்து ஆனந்த நர்த்தனமிடும் அவைகளை.

எழும்பும் அலைகளும் அவற்றின் அருகே கூத்திட்டன; எனினும்
மினுமினுத்த ஏரி அலைகளை அவைகள் குதூகலத்துடன் தோற்கடித்தன.
ஒரு கவிஞனுக்கு மனமகிழ்வை வழங்கும் இத்துணையின்
உல்லாசம் தவிர வேறு ஏதிலும் அடைய வாய்ப்பு இலாது:
கூர்நோக்குடன் கவனித்தேன் நான் - மென்மேலும் கூர்ந்து நோக்கினேன்- ஆயினும்
அக்காட்சி அவ்வமயம் எனக்களித்த
செல்வவளம் பற்றி சொற்ப சிந்தனையே இருந்தது.

எனினும் பின்னாட்களில் அநேகமுறை
என் மஞ்சமதில் மனம் கிறங்கி
சூனியமான நினைவுகளிலோ, ஆழ்ந்த விசாரத்திலோ
மூழ்கிக்கிடக்கும் வேளைதனில்
அந்தராத்மாவின் நேத்திரத்தில் அம்மலர்களின்
மின்னல் போன்ற திடீர் ஒளித்தெறிப்பு நேர்வது
புளகாங்கிதம் அளிக்க வல்ல ஏகாந்த இன்பமாகும்
ஆதலினால், இதயப்பரப்பின் இரகசிய திசுக்களில்
இன்பநுகர்வு இயைந்து வழிந்து
டாப்போடில்ஸ் மலர்கள் உடனான களிநடனக்கூத்தாட்டமிடுகிறது


The Daffodils By  William Wordsworth, 1770 - 1850

I wandered lonely as a cloud
That floats on high o’er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.

Continuous as the stars that shine
And twinkle on the Milky Way,
They stretched in never-ending line
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.

The waves beside them danced, but they
Out-did the sparkling waves in glee:
A Poet could not but be gay,
In such a jocund company:
I gazed—and gazed—but little thought
What wealth the show to me had brought:

For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

- ஆர். தாரணி -

- முனைவர் ஆர். தாரணி -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- மூலம்: ஆங்கிலக்கவி வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் | தமிழ்    மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R