வன்னி மண்ணின் வாழ்வை எழுதிய தாமரைச்செல்வியின் "வன்னியாச்சி" கதைகளைப் பேசும் இலக்கிய அரங்கு!

இலண்டன்: தாமரைச்செல்வியின் 'வன்னியாச்சி' கதைகளைப்பேசும் இலக்கிய அரங்கு!

 

1970களின் தொடக்கத்திலிருந்து எழுதிவரும் தாமரைச்செல்வி, இதுவரை 2௦௦க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 1953இல் இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி - பரந்தனில் பிறந்த இவர் தான் சார்ந்த விவசாய மக்களின் வாழ்வை தனது படைப்பின் ஊடாக பதிவாக்கியவர். இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 37 சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல். தாமரைச்செல்வி போருக்குப் பின் புலம்பெயர்ந்து , தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

வழிப்படுத்தல்
- சந்திரா இரவீந்திரன்

உரைகள்
- நவஜோதி யோகரட்ணம்
- மாதுமை சிவசுப்ரமணியம்
-ச. வேலு
-இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
- சார்ல்ஸ் குணநாயகம்

காலம் - 15 ஏப்ரல் 2018 (ஞாயிறு) மாலை 4 மணி

இடம் - St. Mary`s Church Hall, The Fairway, Ruislip HA4 0SN (Nearest under ground - South Ruislip )

அழைப்பு - Nachiyar Events (07951847840) /  தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (07817262980)

அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம் .......

 

தகவல்: எம்.பெளசர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். / முருகபூபதி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R