வரலாறு: சோழர் குடும்ப நந்தா விளக்குகல்வெட்டுகளில் நந்தா விளக்கு  எரிக்க 90/96 ஆடுகள் அல்லது 32 பசுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏன் நந்தா விளக்கு எரிக்கப்பட்டது என்ற காரணம் அறியாமல் இதுவரை இருந்தது. சோழர் குடும்பத்தவர் நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்யும் பின் புலத்தை ஆராயுங்கால் அது ஒருவர் நோய் நீங்கி நலம் பெற வேண்டியோ அல்லது இறந்த பின்னர் நற்கதி எய்த வேண்டியோ  ஏற்றுவதற்கு உற்றாரால்  ஏற்பாடு செய்யப்படுகிறது. பின் வரும் கல்வெட்டுகளில் அது புலனாகிறது.

ஸ்வஸ்திஸ்ரீ கச்சியுங் தஞ்சையுங் கொண்ட ஸ்ரீ கன்னர தேவர்க்கு யாண்டு இருப[த்தே]ழா[வது] பல்குன்றக் கோட்டத்[து] / த[ரை]யூர் நாட்டு மாம்பா[க்க]த்து   கோதண்ட மன்றாடி திருவோத்தூர் மஹாதேவர்க்கு பகல் விளக்குக்கு வைத்த சாவா [மூ]வா  பேர்[ஆடு அ]ஞ்பது

விளக்கம்: இராட்டிரகூடன் 3 ஆம் கிருஷ்ணனுக்கு 27 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.966)   பல்குன்றக் கோட்டத்து (போளூர் செங்கம் வட்டம்) தரையூர் நாட்டில் அமைந்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோதண்ட மன்றாடி என்பான் திருவோத்தூர் மகாதேவர்க்கு பகல் பொழுதில் விளக்கு எரிக்க 50 இளம் ஆடுகளை கொடுத்துள்ளான். ஒரு முழு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகள்  கொடுப்பர். அதில் பாதி 48 ஆகும். இவன் இரண்டு ஆடுகள் கூடுதலாக கொடுத்து பகலில் மட்டும் எரிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறான். அப்படி என்றால் 50 ஆடுகள் அரை நந்தா விளக்கு கணக்கில் வருகிறது.  கல்வெட்டில் நந்தா விளக்கு என்ற சொற் பதிவு இல்லை.

உத்தம சோழன் நினைவில்
ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேஸரி பந்மர்க்கு யாண்டு 14 வது திருவோத்தூர் மஹாதேவர்க்கு திருநந்தா விளக் கெரிப்ப  / தற்க்கு வைத்த ஆடு உத்தம சோழமாராயந் சூறையிற் போக உடையார்  செம்பியன் மஹாதேவியார்க்கு விண்ண / ப்பஞ்செய்ய  அருளுச்செய்ய  மீண்ட ஆடு இருனூறும் உடையார் வைத்த திருநந்தா விளக்கினுக்கு சாவா மூ / வாப் பேராடு ஸந்த்ராதித்தவரை இரண்டு திருநந்தா விளக் கெரிப்பதற்க்கு  பஞ்சவாரக் காலோடொக்கு நாழியால் திங்கள் / பதிநாறு நாழி உரி ஆழாக்கு நெய்[யு]ம் கோயிலுக்கே கொண்டு சென்று திருவுண்ணாழிகை யுடையார்களு

விளக்கம்: முற்றுப்பெறாத கல்வெட்டு. உத்தம மாராய சோழன் தனது 14 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.984) சூளை  நோயில் கிடந்த போது நலம் வேண்டி திருவோத்தூர் மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்க ஆடுகள் தந்தான். நலம்பெறாமல் இறந்தும் போகிறான்.  விளக்கு எரிப்பது நிறுத்தப்படுகிறது. இதை அவன் தேவி செம்பியன் மாதேவிக்கு வேண்டுகோள் வைக்க அவள் மீண்டும் 200 ஆடுகள் கொடுத்து இரண்டு நந்தா விளக்கு எரிக்க ஒவ்வொரு மாதமும் 16 நாழி, ஓர் உரி அதனோடு ஓர் ஆழாக்கு நெய் கோவிலுக்கே சென்று கருவறை பொறுப்பாளர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளாள்.   இவனது இன்னொரு தேவி ஆரூரன் அம்பலத்தடிகள் இவனது 15 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.985) இதே போல 25 கழஞ்சு பொன் கொடுத்து இடையன் மூலம் கருவறைக்கே நெய் கொண்டு செலுத்த ஏற்பாடு செய்கிறாள்  என்பது இன்னொரு கல்வெட்டில் பதிவாகி உள்ளது. [பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி XI, திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோவில்]  

ஸ்வஸ்திஸ்ரீ திருமந்நி / [வளர] இரு நிலமட[ந்தை  / யும்  போர்ச் செயப்பா / வை]யும் சீர்த்தனிச்செ / ல்வியும் தந்பெருந் / தேவியராகி இன்புற நெ / [டுதி யூலூழியுளிடைது / றை நாடுந் துடர்வன  வேலிப்ப / டர் வனவாசியுஞ்சுள்ளிச்சூழ்  ம / திள் கொள்ளிப் பாக்கையு  நண்ண / ற்கருமுரண்  மண்ணைக் கடக்க / மும் பொரு கடலீழத் தரசர்தம் முடியும் ஆ முன்னவர் பக்கல் தெந்நவர் வைத்த சுந்தர முடியு மிந்திர நாரமு / தெண்டிரை ஈழமண்டல முழுவது மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி பந்[மரான] / ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்க்கு   யாண்டு 5 ஆவது - - - - / ஜயங்கொண்ட சோழமண்டலத்து தாமர்க் கோ / [ட்டத்]து  [திருவேங்கம்ப]புரத் து / கரைக்கோட்டு பிரஹ்மதேயமான பராக்கி[ர] / மசோழ சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீ போ[ந்)தை மஹாதே / வர்க்கு உடையார் வல்லவரையர் வந்த்ய தேவர் / மந்தர கோவநார்  குந்தாதேவியார் [சி அடிகள்[ /கஞ்சிய அப்பையரசியா - - - பதி -- - - மை அட்டுவ / சாவாமூவாப் பேராடு தொண்ணு  / றும்      சந்த்ராதித்தவற்  ஒரு திருநு / ந்தா விளக்கு எரிகின்ற உழ /க்கால் நிசத உழக்கு நெய் அட் / டி முட்டாமே எரிக்க - - - - /இவ்வாடுமே  - - - - -

விளக்கம்: இராசேந்திர சோழன் ஆட்சிப் பொறுப்பேற்ற 5 ஆம் ஆண்டில் (கி.பி.1017) தாமர் கோட்டத்து திருவேகம்புறத்து கரைக்கோட்டு பிரமதேயமான பராக்கிரமசோழ சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தை மகாதேவர்க்கு  இதாவது,  செய்யாறு பிரம்ம தேசத்தில்  அமைந்த சந்திர மௌலீசுவரர் கோவிலுக்கு வந்த வந்தியத் தேவரின் தேவியாரான  மந்தர கோவநார்  குந்தா  தேவியார்  90 இளம் ஆடுகளைத்  தந்து நிசத உழக்கால் ணெய் அளந்து ஊற்றி  முட்டாமல் நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்தார். இவ்வாடுகளை இடையனிடம் ஒப்படைத்தார். இவ்விளக்கினை கஞ்சி அப்பை அரசியார் நினைவில் வைத்தாரா  என்பது தெரியவில்லை.

வந்திய தேவரின் இன்னொரு தேவியான இந்தள தேவி இராசராசன் ஆட்சி முடியும் முன்  12 கழஞ்சரை பொன் கொடுத்து நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்துள்ளாள். இவள் இதே கோவிலில் இராசேந்திரனின் 3 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1015) இல் இறைவனுக்கு அமுது படிக்காகவும் உச்சி சந்தி வழிபாட்டிற்காகவும் ஐந்து கழஞ்சு பொன் கொடுத்து அதில் வரும் வட்டியை பயன்படுத்தி சந்திராதித்தர் வரை நடத்திவர ஏற்பாடு செய்துள்ளாள். இராசராசன் தமக்கை குந்தவைக்கு இவர்கள் சக்களத்திகள் ஆவர். இவ்வூரை சுற்றி  அமைந்த பகுதி வந்தியத் தேவர் ஆட்சி வழங்கிய பகுதி என்று சிலர் கருத்து உரைக்கின்றனர்.

வீரமாதேவி உடன்கட்டை ஏறல்
- -- [தி]ங்களேர் தருதன்றோங்கல் வெண்குடைக்கீழ் நிலமகள் நிலவமலர் மகட்புணர்ந்து செங்கோலோச்சி கருங்கலி கடிந்து மிந்[நு / ப]ல்லூழியுட்   டென்னவர் குலமகன் மானாபரணன் பொன் முடியானாப்  பரு[மணிப்]பசுந்தலைப் பொரு களத்தரிந்து வேணாட்டரைசனை / சேணானட்டொதுக்கி  மேவுபுகழி இராமகுட   மூவர்கெட முனிந்து வேலைக்கெழு காந்தளூர் சாலைக் கலமறுத்து / த்தன் குலத்தவனி வேந்தன் நன்குறு த(தை)கைமை அரைசியலுரிமை வரிசையிலெய்தி வில்லவர் மீனவர் வெ /ஞ்சினர்   சளுக்கியர் வ[ல்]லவசர் முதலினர்  [வ]ணங்க வீற்றிருந்த தராதல[ம்] வளர ஜயங்கொண்ட சோழன் வயங்கு பெரும்புகழ் (கோராஜ) / கோராஜகேஸரி பந்மரான உடையார் ஸ்ரீ ராஜாயிராஜ[தே]வற்கு   யாண்டு 26 ஆவது 920 னால் ஜயங்கொண்ட சோழ மண்டலத்துத் தாமற் கோட்டத்து / த்தாமர் நாட்டுப் பராக்கிரம சோழச் சருப்பேதி  மங்கலத்து மஹாஸபைப் பெருங்குறிப் பெருமக்களோம் பூமி விலையாவணக்   கையெழுத்து. உடையார் ஸ்ரீ ரா / ஜேந்திர சோழதேவர் சிவலோகத்துக்கு எழுந்தருளின நம்பிராட்டியார் வீரமஹா / தேவியாற்கு ஸ்ரீ மதாஹதாஹத்துக்கு   இவருடன் பிறந்த ஸேநாபதிகள்   மதுராந்தகனான [பரகேசரி] வேளார் வைத்த த[ண்ணீ]ர்ப் பந்தல்.  ஸ்ரீ ராஜாயிரா[ஜ] / தண்ணீர்ஏரி வீரமாதேவிப் பேரேரிக்கு - - - - - பாக்கு நிலமாகவும் விற்றுக்குடுப்ப / தற்கு நம்மூர் ஸ்ரீ போந்தை உடைய மஹாதேவர் - - - - யு - - - -யோலை தீத்தக்குளத்திந் வடகரைப் புளிக்கீழ் கூட்டக்குறைவறக் கூடி இக்கோ / ட்டம்  வகை செய்கிந்ற  [பழுவூரு]ழான் மொடநாராயணநுங்  கூடவிருந்து [இசைவு தீட்டு] எழுத்து மணற்புரத்து [ஜெய]நம்பித்தக் கி[ர]மவித்தநும்   ஸ்தரஸார  நம்பி  சீராமக் கிராமவித்தநு மய்யலூர்  இளைய ரிஷாபவாஹன பட்டநும்  பணிப் பணியால் விற்றுக் குடுத்த நிலத்துக்கு / கீழ்பாற்கெல்லை இற்றிடைக் காலார் எல்லைக்கு மேற்கு  தெந்பாற்கெல்லை ஸ்ரீ போந்தை இறையிறுதிலா தேவதாநமாந சிறுதாவூர் / ப் பழ(நி)லத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை    மணற் குந்றுக்குக் கிழக்கும் வடபாற் கெல்லை இறைநிலமாந ஏத்தக்கிணத்துக்குத் தெற்கும் அ / - - - - யில் நடுவுபட்ட நிலத்தால் நீர்நிலம் குழி ஆயிரத்து ஐஞ்ஞூற்று - - - - அறுப்புக்குழி எண்ணாயிரமும் குதளு / - - - - இந்நிலத்தினால் - - - நாவற்கழநி -- --/ - - - - யாகத் திருத்திக்கொள்ள இந்நிலம் திருத்திக்கொள்ளப் பெறுவானாக - - - - நெல்லும் பொந்நும்   திருவேகம்பமுடையார்  [இச்சீவித] முள்ளிட்டுத்  திருக்கொற்ற வா / சலில் போந்த குடிமை எப்பேற்பட்டதும் வெட்டி யமஞ்சியும் - - - - - எச்சோறுமற்று ஊரிடுவரியும் உள்ளிட்டு மற்று மெப்பேர்பட்ட இறையும் நாமே குடு / ப்போமாகவும் இந்நிலத்தால் வந்த ஆய த்ரவ்யமும் இறைய் த்ரவ்யமும் நாமே ஸ்வம்மறக் கைக்கொண்டு சந்திராதித்தவர்   இறையிலியாக சிலாலேகை செய்து குடுத்தோம் மஹாஸபையோம் /  யோம் மஹாஸபையார் பணிக்க எழுதிநேந்  இவை வையாஸந் கௌதம [நம்பிநேய] பட்டநேந் இவை எந்நெழுத்து.

விளக்கம்: கல்வெட்டு இராசாதிராச சோழனின் மெய்க்கீர்த்தியொடு தொடங்குகிறது. இராசாதிராசன் பட்டம் ஏற்ற 26 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1044) வேந்தன் இராசேந்திரன் முதுமையுற்று இறக்க அவன் பள்ளிப்படையிலே உடன்கட்டையேறி சிவலோகம் எய்திய வீரமாதேவியர் நினைவில் அவளது உடன்பிறந்தான் சோழத் தளபதி மதுராந்தகன் பரகேசரி வேளான் அவளது தாகம் தணிக்க வேண்டி தண்ணீர்பந்தல் வைத்தான். அத்தண்ணீர் பந்தலுக்கு வேண்டிய தண்ணீரை ஏற்பாடு செய்ய ஸ்ரீ இராசாதிராசன் பெயரில் தண்ணீர்க் குளமும், வீரமாதேவியார் பெயரில் ஒரு பெரிய குளமும் வெட்ட நிலம் வாங்குவதற்கு ஊர் சபையோர் போந்தையுடைய மஹாதேவர் தீர்த்தக் குலத்திற்கு வடகரையில் அமைந்த புளியமரத்தடியில் திரளாக கூடினர். இக்கோட்டம் (குளம்) அமைய பழுவூரருழான் மொடநாராயணன் உடனிருந்து இசைவு எழுத்து எழுதினான்.  மணற்புரத்து ஜெய நம்பித்தக் கிரமவித்தன்,  ஸ்தரஸார  நம்பி  சீராமக் கிராமவித்தன்,  அய்யலூர்  இளைய ரிஷாபவாகன பட்டன் பணிக்கடமையாக விற்றுக் கொடுத்த நிலத்திற்கு எல்லை விவரிக்கப்படுகிறது. நிலத்தை விற்றுக் கொடுத்த ஊர் மகாசபையார் அதற்கான வரியை தாமே ஏற்றுக்கொண்டனர். ஊர் மகாசபை பணிக்க வியாசன் கௌதம நம்பினேய பட்டன் இதை கல்வெட்டாக எழுதினான்.

வீரமாதேவி எந்த அரச குலத்தை சார்ந்தவள் என்று தெரியவில்லை.  மதுராந்தகன் பரகேசரி வேளான் எனத் தன்  பெயரோடு வேளான் என்று போட்டுக்கொள்வதால் பல்லவ குலமோ  என்று ஐயுற வேண்டியுள்ளது. ஏற்கனவே கருணாகரத் தொண்டைமான் வேளாண் என்று அவன் மனைவி குறிப்பிடுகிறாள். அல்லது பழுவூர் உழான் உடனிருந்து செய்வதால் அக்குடியை சேர்ந்தவளா வீரமாதேவி எனத் தெரியவில்லை.    [மேல் இரண்டு கல்வெட்டு பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி XI, செய்யாறு சந்திரமௌலீசுவரர்  கோவிலில் உள்ளவை]

பார்வை நூல் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி XI பற்றிய கருத்து: இந்நூலில் பல்லவர் காலத்து கல்வெட்டு முதல் குலோத்துங்கனுக்கு  சோழனுக்கு முற்பட்ட கால சோழர் கல்வெட்டுகள் நிரம்ப உள்ளன. சம்புவராயரது கால கல்வெட்டுகள் நிறைய உள்ளன. இதில் வெவ்வேறு சம்புவராயர் குறித்த கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக செங்கேணி குடும்பம் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன.

இந்நூலில் பாண்டியன் சடையவர்மன் திரிபுவன வீரபாண்டியன் (கி.பி.1341), நான்காம் சடையவர்மன் திரிபுவன  ஸ்ரீ வீர பாண்டியன் (கி.பி.1349), முதலாம் மாறவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1353) கல்வெட்டுகளை பார்க்குங்கால் எழும் கேள்வி யாதெனில் மதுரையில் இருந்து தொலைவான காஞ்சியை கைப்பற்றி ஆளமுடிந்த பாண்டிய வேந்தரால் ஏன் மதுரையை சுல்தான் ஆட்சியில் இருந்து மீட்க முடிந்ததில்லை என்பதே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R