49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி) -  தகவல்: கருணாகரன் சிவராசா

பிராந்திய கால்நடை அபிவிருத்திப் பயிற்சி நிலைய மண்டபம் (மத்திய வங்கியின் பிராந்திய நிலையத்துக்கு அருகில்), அறிவியல் நகர், கிளிநொச்சி
2019 செப்ரெம்பர் 21, 22 சனி, ஞாயிறு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை

முன்வைப்புகளும் உரையாடலும்

1.   வன்னி – நிலம், நீர், சமூகம்
2.   வறுமையின் நிறம் பச்சை – பிரதிகள் காட்டும் வழி?
3.   வன்னிக் காடு – வாழ்வும் அரசியலும்
(பிரதிகளில் உள்ளடக்கப்பட்டவையும் உள்ளடக்கப்படாதவையும்)
5.   முஸ்லிம் சமூகமும் சமகால நெருக்கடிகளும்
6.   அந்தரிப்புக்குள்ளானோரும் சமூகத்தின் பொறுப்பும் (காணாமலாக்கப்பட்டோர் மற்றும் போரில் இழப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தோர் பிரச்சினை)
7.  இலக்கிய அரசியல்: உண்மையும் விடுபடலும்
8. பிரதிகளில் இயற்கை, சூழல், உயிரினங்கள் (வரலாற்றுச் சித்திரிப்பும் புதிய உணர்தல்களின் அவசியமும்)
9.போருக்குப் பிந்திய ஈழ இலக்கியம்: கச்சாப்பொருள், சந்தை, பதிப்பு முயற்சிகள்
10. போரின் பின்னான  பத்திரிகைகள்: அறிக்கையிடலின் உளவியல்
11.   ஈழ அகதிகள்: தமிழகத்திலும் தமிழகத்திலிருந்து ஈழத்திலும்
12.   போருக்குப் பின்னரான சிறுகதைப் பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும்
13. தெய்வம் – சடங்கு – மரபு: வன்னி நிலமும் கையளிப்புகளும்
14.  வரலாற்றின் பயணவழியில் மக்கள் பண்பாடும் போர்ச்சுவடுகளும்
15.   மரபும் நவீனமும்: மன்னார்ப்பண்பாட்டு இடையசைவுகள்
16.   திரையும் நிஜமும்

பங்கேற்பாளர்கள் அனைவரையும் உரையாடலில் இணைப்பதற்கமைவாக ஒவ்வொரு முன்வைப்புகளையும் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  கேள்விகள், மாற்றுக் கருத்துகள், மேலதிக விரிப்புகளை நோக்கியதாக உரையாடல்கள் நிகழும். புத்தகக் காட்சி மற்றும் விற்பனைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறும்படங்கள், ஆவணப்படங்கள், விவரணப்படங்கள் போன்றவற்றையும் விற்பனை செய்ய விரும்புவோர் எடுத்து வரலாம். அதற்குரியவர்கள் முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறு கேட்கிறோம். ஓவியம் மற்றும் ஒளிப்படக் காட்சிகளும் உண்டு. ஒருங்கிணைப்பு – சதீஸ்ராஜா, மு.தமிழ்ச்செல்வன்.
இலக்கியச் சந்திப்பில் பங்கு பற்ற விரும்புவோர்  கீழுள்ள மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்களில் தொடர்பு கொள்க.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொலைபேசி எண்கள்
0770871681, 0777577932


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R