ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


சங்க இலக்கியங்களில் காணப்படும் தொன்மைகளை காப்பியக்காலத்திற்கு கொண்டு செல்லும் பாலமாக சிலப்பதிகாரம் அமைகிறது. அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் மருதத்திணையின் முதற்பொருள் கருப்பொருளைப் பற்றிமட்டும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

மருதம் என்பதுவயலும் வயல் சார்ந்த இடமும்,வைகறைபொழுது மருதத்தின் சிறுபொழுது, தெய்வம் இந்திரன் எனவும்,வாழும் மக்கள் உழவர்,உழத்தியர், கடையர்,கடைசியர். இம்மக்கள் செந்நெல் அரிசி வெண்ணெல் அரிசிபோன்ற உணவுகளை உட்கொண்டனர். பறவைகள், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, குருகு,தாராஆகும். விலங்குகள் எருமைநீர்நாய் ஆகியனவாகும். பேரூர், மூதூர் என்னும் ஊர்களும் உள்ளன. பூக்கள் தாமரைப்பூ, குவளைப்பூ, கழுநீர்ப்பூ முதலியவையாகும். நெல்லரிகிணை பறை, மணமுழவுபறைகளும் மருதயாழ், மருதப்பண் போன்றவைகள் காணப்படுகின்றன. இந்நிலத்தில் வயற்களைக்கட்டல் நெல்லரிதல் போன்றதொழில்கள் முதன்மையானதாகும். மருதம் என்பதுவயலும் வயல் சார்ந்தபகுதியாகும்.

வயல்வழி, சோலைவழி என்னும் இவ்விரண்டு வழிகளைத் தவிரமதுரைசெல்லவேறு வழி இல்லை என்று கவுந்தியடிகள் கூறினார் (10:94).நீர் இறைக்கும் கருவிகளானஆம்பி,கிழார். ஒளிமிக்கஏற்றம்,நீர் இறைக்கும் கூடை (சால்) ஆகியவைநீர் இறைக்கும் ஒலிமிக்கொலித்தது. கழனிகளில் செந்நெல்லும் கரும்பும் தழைத்துவளர்ந்துள்ளமருதநிலப் பகுதிகளில் பசுமையானபொலிவுடையதாமரைபூத்துக் கிடக்கும் (10:112).

வலப்பக்கம் செல்லாது, இடப்பக்கவழியில் செல்வீராயின் செவ்வரிப் பண்ணைப் போலப் பாடுகின்ற சிறகினையுடைய வண்டுகள் சுற்றுகின்ற ஏரிகளோடு தாழ்ந்தவயல்களையும் பூஞ்சோலைகளையும் கடந்துசென்றால் அழகர் மலையினை அடைவீர்கள் என்று கவுந்தியடிகள் கூறினார் (11:89). மதுரைநகரின் புறஞ்சேரிக்கு பறவைகள் அழகுசெய்யும் வயல்களும் சோலைகளும் மிக்கநீர் நிறைந்த நீர்த்துறைகளும் விளங்கின (13:191). புறஞ்சேரியிடத்தே பொழில்களிலும் நீர்வளம் மிக்கதோட்டங்களிலும் கதிர் முற்றித் தலைசாய்ந்திருக்கும் வயல்களும் இருந்தன (14:2).

மனுநீதிசோழன் போன்ற மன்னர்கள் தோன்றிய குடிசோழர் குடி அவர்களது தலைநகரான புகார் நகரம் நீர்ப்பூக்கள் நிறந்தகழனிகளையும் பூமிதாங்க முடியாத விளைச்சளையும் கொண்டது (23:60). நறுமணம் கமழும் பூம்பொழில் சூழ்ந்தகலிங்கநாட்டிலே இனிய நீர்வளமுடைய கழனிகள் சூழ்ந்தபகுதி உள்ளது (23:140). வாணன் பேரூராகிய'சோ'நகரின் வடக்குவாயிலில் நின்றுஉழத்தியர் வடிவங்கொண்டு இந்திராணி ஆடியதுகடையக் கூத்து (6:61). என்றநிலையில் சிலப்பதிகாரத்தில் வயல் என்பதுகழனி,பழனம் என்றசொற்களில் இடம் பெற்றுள்ளதுமேலும் மதுரைபகுதிவயல் நிறைந்தபகுதியாகஅமைந்துள்ளது.

மருதநிலத்திற்குரிய சிறுபொழுது வைகறையாகும். கடற்கரைப் பயணத்தின் போதுபகைவர்க்குஅச்சந்தரும் புகார் நகரில் முழுமதிநாள் வந்தது. வைகறையில் அந்தநகரமக்கள் திரள்திரளாகக் கடலில் நீராடவும் சென்றனர் (6:116).வானம் கண்விழிக்காதவை கறைப் பொழுது விண்மீன்களின் ஒளியோ இன்னும் குறையவில்லை. மேகக் கூட்டத்தில் ஊர்ந்துசென்றவெண்ணிலவோமறைந்துவிட்டது. அன்றையநாளில் இறுதிப்பகுதியிலேகரிய இருள் நிற்றலுக்கும் காரணமானவைகறைப் பொழுதில் கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடுவாயிலைக் கடந்துமதுரைசென்றனர் (10:1). வைகறைப் பொழுதில் மதுரையின் அரசனைவாழ்த்திப் பாடும் பாட்டொலியும் ஒலித்தது.(13:148)

வைகறைப் பொழுதில் புறஞ்சேரியில் உள்ளபொழில்களிலும் நீர்வளம் மிக்கதோட்டங்களிலும் கதிர் முற்றித் தலைசாய்த்திருக்கும் வயல்களிலும் உறையும் பறவையினங்கள் துயில் நீத்துஆரவரித்தன. (14:3). உறையூரில் தங்கியகவுந்திகொவலன்,கண்ணகிஆகிய மூவரும் வைகறையில் புறப்பட்டுத் தென்திசையைநோக்கிச் சென்றனர் (11:11).ஒலிகள் எழுப்புகின்ற கடல் போன்றபரப்புடையபுகார் நகரமக்களைஅதிகாலையிலேதுயிலெழச் செய்தன. அங்கே இருள்மிக்க இரவிலிருந்துவைகறைப் பொழுதுவரைஒருநொடிப் பொழுதும் உறங்காதவனாகமன்மதன் இருந்தான் (4:80).

மருதநிலத்தின் தெய்வம் இந்திரன் ஆவான். களவு நூலில் கூறப்பட்டிருக்கின்றதொழில் நுணுக்கத்தைஆராய்ந்துகளவாடச் செல்வாராயின் இந்திரனுடையமார்பில் உள்ளஆரத்தையும் களவாடிவிடுவர் (16:181).ஆயிரம் செங்கண்களையுடைய இந்திரன் பூட்டியவலிமைமிக்க ஆரத்தைத் தன் அழகியமார்பிலே பூண்டு வாழ்ந்தான் பாண்டியன் (11:24,6:20).வச்சிரப்படையை உடைய இந்திரனின் தலையிலிருந்து மணிமுடியை ஒளியுடைய தனது சக்கரப்டையால் உடைதிட்டதனதுகையினைத் தானேவெட்டிக் கொண்டான் கொற்றவன் (23:50).கோவலன் கண்ணகிகவுந்தியடியகள் ஆகிய மூவரும் மதில் வாயிலைக் கடந்துஅந்நகரின் எல்லையைஅடைந்தபொதுஆயிரம் கண்களையுடைய இந்திரனின் அரியஅணிகலன்கள் நிறைந்தபெட்டியைத் திறந்துவைத்தார் போன்று காட்சி அளித்தது (14:68).காமவேள் விழாவின் நிறைவு நாளான இந்நன்னாளில் தென்திசையில் வலம் மிக்கபூம்புகாரில் உள்ளவர்கள் இந்திரனுக்குவிழாஎடுப்பதற்காகக் கொடியேற்றுவர் (6:1-2). இந்திரனைவணங்குவோம் என்று கூறிமாதவி ஆடத் தொடங்கினாள் (6:27,6:73,5:240).

மருதத் திணைக்குரியமக்கள் உழவர், உழத்தியா, கடையர், கடைச்சியர் ஆகியோர் ஆவர். பட்டினப்பாக்கத்தில் மிகக் பெரிய இராசவீதியில் பல்வேறுகுடியினர் வாழ்ந்தனர். அவர்களில் அனைவரும் விரும்பும் குடியினராகிய உழவர்களும் வாழ்ந்தனர் (5:43).வணிக பூதங்களுக்குத் தலைமையான வணிக பூதக் கடவுள் உழவுத் தொழிலிலே நெல் முதலியவற்றை விளைவித்து உலகில் உள்ள மக்களுக்கு உதவும் குற்றமற்ற வாழ்க்கையை உடையவன் (22:85). வானாகிய ஏரினை, உழவனாகிய செங்குட்டுவனது போர்க்களத்தினைப் பேய்களும் வாழ்த்திப் பாடின. (26:234,27:226).நுகத்தடியை பூண்டு உழவேண்டியதில்லை என்னும் பொருளமைந்த ஏரிமங்கலப் பாட்டை விளாக்கோல் உழுகின்றமருதநிலத்துஉழவர்கள் ஆரவாரத்துடன் உழவர்பாணிபாடினர் (27:230).

மருதநிலம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதால் வெண்நெல் அரிசி, செந்நெல் அரிசிமற்றும் கரும்பும் உணவாகஉள்ளன. காவிரி ஆற்றங்கரையில் உள்ளகழனிகளில் வெண்நெல்லும் கரும்பும் தழைத்து வளர்ந்துள்ள மருதநிலப்பகுதிகளில் பசுமையான பொலிவுடைய தாமரைபூத்துக் கிடக்கும் (10:12,10:25).

கரும்பும் வல்லிக்கொடியையும் பெரியதோளிலே தொய்யிலாக எழுதினர் (2:29) கோவலன் கண்ணகியைநலம்புனைந்துரைத்தலின் போதுஉயிரின் இனிமையால் குற்றமற்றவிரையை போன்றகரும்பே தேனே என்று பாராட்டினர் (2:74). கரும்புவயல்களில் கட்டப்பட்டிருக்கும் பெரும் தேனடைகள் சிதைந்து அற்றினது வழியும் தேனான துவயல்களைஅடுத்தவண்டு சூழ்ந்துள்ள பொய்கை நீரோடு கலந்திருக்கும் (10:82,25:45)

மருதநிலத்திற்குரிய பறவைகள், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்குள், குருகு ஆகியவைஆகும். இவற்றுள் சிலப்பதிகாரத்தில் நாரைஅன்னம் ஆகியபறவைகள் இடம்பெற்றுள்ளன. காவிரிஆற்றின் ஒலியும் அதனுடன் பறவைகளின் ஓசையும் கேட்டபோது பெருநாரை ஆகிய நீர்வாழ் பறவைகளும் ஓசைஎழுப்பின (10:114,117).கோவலனும் கண்ணகியும் வீட்டைவிட்டுச் செல்லும் வழியிலே ஆட்டுக் கிடாயும் கவரிமானும் தூய வென்மையான மயிர்களையுடைய அன்னமும் இருந்தன (10:6).

மருதத் திணைக்குரிய விலங்கு எருமை நீர் நாய் ஆகும். மதுரைக்குச் செல்லும் வழியின் எருமை பற்றிக் கவுந்தி கூறுகையில் வயல் வழியில் மலர் மணம் கமழும் நீர் நிறைந்த தடாகங்களில் நீண்ட முதுகுடைய வாளை மீனும் கயல் மீன்களைத் துரத்தும் (10:79). அவ்வாளை மீனைநீர் நாயும் கவ்வும் வழி அது (10:79).காவிரி ஆற்றங்கரையில் உள்ளஉழவர்களின் ஒலியும் பாட்டும் கேட்டும் பகுதியில் உழாத நுண்ணிய பசிய சேற்றிலே புரண்டதால் உடலிலே படிந்துள்ள சேறு கழுவாத மயிருடைய உடம்பும், சிவந்த கண்களும் கொண்ட எருமைகள் அச்சேறு இறுகிஉள்ளதால் தம் உடலிலே உண்டான திணவைப் போக்கிக் கொள்வதற்காக வயல் ஓரங்களில் உள்ளகளத்து மேட்டிலே உழவர்கள் வைக்கோற் போரிலே கட்டிவைத்துள்ள நெற்கூடுகளிலே உராய்ந்தன (10:120).

தேன் மிகுந்தநறுமணம் உடையது தாமரைமலர் (4:74). காதலரைக் கூடும் மகளிர் தாமரையின் இளம் தளிரினைதலையில் சூடிக்கொண்டனர் (4:39). கோவலனும் கண்ணகியும் மகிழ்ந்து இருக்கும் காலத்தில் செங்கழுநீர்ப்பூ, ஆம்பல் மலர், குவளைமலர் வண்டுகள் தேன் உண்ணுதற்கேற்ப அரும்பு அவிழ்ந்து மலர்ந்த தாமரை முதலிய நீர்ப் பூக்கள் (2:15). பூத்துக் குலுங்கினநீர் நிலைகளில் பசிய தாமரைக்காடு விளங்கியது (10:113). வண்டுகள் தேன் உண்ணுமாறு மலர்ந்துள்ள நீலமணி போன்ற இதழ்களை உடைய குவளை மலர்களைமுள்ளிப் பூ மாலையோடு சூடியகுடுமியில் மணங்கமழும் தாமரையின் முழுமலரையும் கோவலர் அணிந்தனர் (27:236,237). பரந்த நீரினையுடைய கங்கையைச் சூழ்ந்த பழனங்களில் உள்ளபசிய இலைகளுடன் புதிய தாமரை மலர்களில் வண்டினங்கள் யாழின் ஒலியைசெய்தன (27:194). கதிரவன் இருள் புலர்கின்றவைகறைப் பொழுதில் பொய்கைகளில் உள்ளதாமரையின் மொட்டுகளை இதழ் விரிந்துமலரச் செய்தான் (14:3).தாமரை மலரானது பெரும்பாலும் உவமைநிலையாகவே அமைந்துள்ளது. வைகரையின் போது நீர்ப்பரப்பிலே தாமரையை வேலியாகக் கொண்டு அழகான மருதநிலம் உவமைச் செய்யப்பட்டுள்ளது (6:148,149). செந்தாமரைமலர் விரியவும் தேமாவின் கொழுந்து ஒழுகுவது போல் வனப்புடன் தளிர்க்கவும் அழகு பொருந்திய அசோகம் விரிந்துள்ளது (8.வெண்பா).தாமரைமலர் போலும் சிவந்தகண்கள் சிவக்க செங்குட்டுவன் சிவந்தான் (28:110). அழகியதாமரைமலர் போன்றநின் சிவந்ததிருவடிகளை வணங்கும் இவ்வேளை நற்பொழுதாகும் (26:29). சிவந்ததாமரைமலர் போன்ற ஒத்தகண்களையுடைய மாதவியின் பரிசுபொருள் மாலையைக் கோவலன் பெற்றான் (3:170). பெரிய நீலோற்பலமலரும் குவளையும் குமிழமும் போன்ற தாமரைமலர் (5:215) என்றுதாமரைமலர் உவமைநிலையில் வைத்து பார்க்கப்படுகின்றது.

உள்ளேயுள்ளநறியதாதுகள் ஊறியதேன் அகம் நிறைந்தகழுநீர் மலர்போலத் தாமரைகாட்சியளித்தது (5:235,236). செங்கழுநீர்ப்பூ ஆம்பல் மலர் இதழ்கள் குலையாதகுவளைமலர் (2:14) பூம்பொடிபொருந்தியகழுநீர் சண்பகமலரால் ஆனமாலையோடுபொருந்தியவள் மாதவி (13:119).

இந்திரன் பற்றிசெய்திகள் பெரும்பாலும் ஆபரணங்களின் வருணனைகளாகவும், இந்திரவழிபாடுகள் பற்றியும் அமைந்தள்ளது. மருதநில மக்களான உழவர்கள் உழவுதொழில் செய்பவர்களாகவும் குற்றமற்ற வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். மருத நிலத்து மக்களின் உணவாக நெல்லும் கரும்பும் இடம் பெற்றுள்ளது. நீர் நிறைந்த பகுதியாதலால் நீர்வாழ் பறவைகளாக நாரையும் அன்னமும் இடம்பெற்றுள்ளது. மருதநிலத்தின் விலங்கான நீர்நாயும்,எருமையும், வாளைமீனும் அமைந்துள்ளது. தாமரை, குவளைமலர், கழுநீர் மலர் ஆகியவை அமைந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் முதற்பொருள் கருப்பொருள் எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்ததகவலை இக்கட்டுரை அளித்துள்ளது.

* கட்டுரையாளர்: ஐ.சுபா, உதவிப்பேராசிரியர்,  இராஜேஸ்வரிமகளிர் கலைமற்றும் அறிவியல் கல்லூரி, பொம்மையப்பாளையம்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R