'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார்'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '

இந்தியாவில் இதுபோன்ற செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. தடுப்பதற்கு  தற்போது அமெரிக்காவில் நடைபெறுவதைப்போல்.  இளைய சமுதாயம் (அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய) தாமாகவே போராட வேண்டும். Talit Lives Matter, Women Lives Matter போன்ற நோக்கங்களின் அடிப்படையில் போராட வேண்டும்.  இவ்விதமான குற்றச்செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதற்கு இந்திய ஊழல் அரசியல்  துணையாக இருக்கப்போவதில்லை. போராடினால்தான் அரசியல்வாதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி இவ்விடயத்தில் கடுமையாகக் குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.

அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றிணைந்து தலித் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கெதிராகப் போராட வேண்டும். பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராகப் போராட வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால் தலித் சமுதாயத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அங்குள்ள தலித் அரசியல்வாதிகள் நிரம்பி வழியும் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியான போராட்டங்களைச் செய்வதாகப் பத்திரிகைகளில் நான் செய்திகளைக் காண்பதில்லை. ஏன்? இந்நிலை மாற வேண்டும்.


 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R