கட்டுரைச் சுட்டு

எதிர்வினை 5: 'பிள்ளை கெடுத்தாள் விளை' எதிர்வினைகளுக்கான மறுபார்வை!  - புதியமாதவி, மும்பை -

புதிய மாதவிஅண்ணன் ரவிக்குமார் அவர்களின் 'பிள்ளை கொடுத்தாள் விளை'சிறுகதை குறித்த பதிவுகளை வாசித்துவிட்டு என் போன்றவர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். அரசியல் ரீதியான பல கருத்துகளில் அவருடன் மாறுபடுபவர்கள் கூட அவருடைய தலித்திய எழுத்துகளில், ஆய்வுகளில் வெளிப்படும் தலித்திய சிந்தனைகளுக்குச் செவிசாய்ப்பவர்கள்தான். ஆனால் தனக்கு அபிமானமான எழுத்தாளர் சு.ரா.வின் மேல் கொண்டிருக்கும் அளவுக்கதிகமான ஈடுபாடு காரணமாகவோ என்னவோ அவர் எழுதியிருக்கும் சில கருத்துகள் தலித்திய சிந்தனைகளைப் பரப்பிவரும் அவருடைய தளத்திலேயே தலித்தியத்தின் அர்த்தங்களை அர்த்தமிழக்கச் செய்ததுவிட்டதை எண்ணி வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

அவருடைய கூற்றில்.. "மொழி என்பது ஒரு குறியீட்டு அமைப்பு(sign system) என்று மொழியிலாளர்கள் சொல்லியுள்ளனர். ஒரு பிரதியை வாசிப்பதற்கு அதற்குள் இருக்கும் குறியீடுகளை வாசிக்கவேண்டும். 'விளை' என முடியும் ஊரின் பெயரும், தாயம்மா, தங்கக்கண் என்பனபோன்ற நபர்களின் பெயர்களும் சுட்டுகின்ற பண்பாடு எதுவெனெத் தெரிந்துகொள்ள நாகர்கோயில் பகுதியின் பண்பாட்டு வரலாறு நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இக்கதையில் உள்ள குறியீடுகளை வாசிக்கும்போது இக்கதைக்கும் இப்போது தலித்துகள் என அறியப்படுபவர்களுக்கும் எந்தத்
தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.தாயம்மாவை 'தாழ்ந்தஜாதிப் பிள்ளை' என்று கதையில்வரும் பாத்திரமொன்று குறிப்பிடுவதைக்கொண்டு அவள் இன்றைய தலித்
சாதிகளில் ஒன்றைச் சேர்ந்தவள் என முடிவுக்கு வருவது கதையை வாசிக்கத் தெரியாத அறியாமையே ஆகும்.

திருவாங்கூர் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் வரலாற்றின் பின்னணியிலும்; அப்படிப் போராடிய சமூகத்தவருக்குக் கல்வி கொடுக்க முயன்ற மிஷனரிமார்கள் பட்ட கஷ்டங்களின் பின்னணியிலும் வைத்து இந்தக் கதையை வாசிக்கவேண்டும்.அப்போதுதான் இது அந்த மக்களுக்கு தரவாக சொல்லப்பட்டிருப்பது புரியும். "

இதில் அண்ணன் ரவிக்குமார் அவர்கள் என்ன சொல்லவருகிறார்? இந்தக் கதையில் சொல்லப்படும் தாழ்ந்தf¡திப்பிள்ளை தலித் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். தோள்சீலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பின்னணியில் இக்கதையை வாசிக்க வேண்டும் என்கிறார். சரி..அவருக்குத் தெரியாதது இல்லை. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் -அவருடைய புரிதல்களுடனேயே வாசித்தாலும்..இன்றைக்கு தலித்திய அட்டவணைச் சாதிகளின் பட்டியலில் வராத ஒரு பெண்ணின் கதையாகவே இருப்பதால் அதைப் பற்றி தலித்துகள் கண்டு கொள்ள வேண்டியதில்லை என்கிறாரா?

'பிள்ளைகள் சொல்லிச்சாம்.அவுங்க வேற தினுசாட்டும் இருக்காங்கம்மா.நம்பளப் போல இல்லேன்னு'

'தாழ்ந்த ஜாதிப்பிள்ள தாழ்ந்த ஜா¡திப்பிள்ள தான்'

'அவள் தாழ்ந்த ஜா¡தி, கருப்பு , ஆனா அழகுக்கு என்ன குறைவு?'

இவை எல்லாம் தலித்திய பெண்ணை குறிக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். பிறப்பின் காரணமாக நிலைநிறுத்தப்பட்ட f¡திப்பிரிவின் கீழ் எந்தச் சமூகம் ஒடுக்கப்பட்டாலும் சரி.. அதை எதிர்ப்பதுதானே தலித்தியம்? சாதியின் பெயரால் நிலைநிறுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளில் முதல் படிநிலையில் உள்ளவர்கள் இரண்டாவது நிலையில் இருப்பவர்களை ஒடுக்கி மூன்றாவது படிநிலையில் இருப்பவர்களுடன் நேசம் கரம் கொள்வதால் மட்டுமே முதல் படிநிலையில் இருப்பவர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை விட்டொழித்தவர்கள் என்றொ மூன்றாவது படிநிலையில் இருப்பவர்களைச் சமமாக ஏற்றுக்கொண்டவர்கள் என்றொ நினைக்கமுடியுமா? தலித்தியத்தின் நோக்கமும் பயணமும் சாதிகளற்ற சமுதாயம் காண்பது சாதியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவம் படைப்பதுதான் என்ற புரிதலும் உங்கள் சொற்களில் உடைபட்டு தலித்தியமே அல்லவா காயப்பட்டிருக்கிறது! அதுவும் உங்களால்..!!

'தலித் பிரச்சனையை முன்னெடுப்பது இந்து மத மீட்புவாத பாசிசத்துக்கு எதிராக சனநாயகப் போராட்டத்தின் வடிவமாக உள்ளது' என்று எழுதியிருந்த நீங்கள் இன்று அதே பாசிசக் குரலின் பின்னணியுடன் படைக்கப்பட்டிருக்கும் கதைக்கு
இந்த மாதிரியான விளக்கம் கொடுக்க வேண்டியதன் பின்னணி என்னவோ?

இந்தக் கதை தலித்தினப் பெண்ணின் கதையல்ல என்ற உங்கள் கருத்துடன் உடன்படும் எழுத்தாளர். சகோதரி பாமா அவர்களும்கூட இந்தக் கதையைப் பற்றிச் சொல்லும்போது.." இதுவொரு கேணத்தனமான கதை. இப்ப இருக்கிற சூழ்நிலைல இந்தக் கதையை ஏன் சுந்தர ராமசாமி எழுதினாருன்னே தெரியலே. திட்டமிட்டு வேணுமின்னே இந்தக் கதய எழுதவேண்டும் என்று எழுதியிருக்கிறதாதான் எனக்குத் தோணுது..மொராலிட்டியே இல்லாம இது எழுதப்பட்டிருக்கு.. அவருடைய மோசமான வக்கிரத்தையே காட்டுது.." என்கிறார்.

தாயம்மாவை தலைமையாசிரியராக நியமிக்கவில்லை என்றால் தான் கமிட்டி பதவியிலிருந்து விலகிவிடுவதாக படைக்கப்பட்டிருக்கும் பாத்திரம் சுதந்திரத்தியாகி "மோகந்தாஸ்". தாழ்த்தப்பட்டவர்கள் பதவியில் அமர மோகந்தாஸ்தான் காரணம் என்று எழுதவதில் மிகவும் சாதாரண வாசகனுக்கு கூட அவர் என்ன சொல்லவருகிறார் என்பது அப்பட்டமாகத் தெரியவருகிறது. மோகந்தாஸ், சுதந்திரப்போராட்ட தியாகி என்பதெல்லாம் இன்றைக்கு அரசியல் தளத்தில் (இரட்டை வாக்குரிமைக்கான குரல் மீட்டெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில்) ஒலிக்கும் ஒடுக்கப்பட்டுவர்களுக்கு எதிராக சு.ரா. படைக்கும்-- வேண்டுமென்றே சரியான பெயர்க் காரணத்துடன்.. புரியாதவர்களுக்கும் புரியவேண்டும் என்றே படைத்திருக்கும் குறீயிடல்லாமல் வேறேன்ன?

தாயம்மா, தங்கக்கண் என்ற பெயர்கள் எல்லாம் நீங்கள் சொல்லும் அதே நாகர்கோவில் மண்ணில் நம் முப்பாட்டன் காலத்திலிருந்தே தலித்துகளுக்கும் பெயர்களாக இருந்தன என்பதை நானறிவேன்.

"தலித்துகளுக்கு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அறிவுகிடையாது.. என்பது போன்ற தவறான கருத்துகள் வலுப்படவே வழிவகுக்கும்.அது நிச்சயமாக தலித்துகளுக்கு உதவக்கூடியதல்ல.." என்று கரிசனத்துடன் எழுதியிருக்கிறீர்கள். தலித்துகளுக்கு இப்போது உங்களைப் புரிந்து கொள்ளும் அறிவில்லை.!.இதுபோன்ற உங்கள் கருத்துகள் தலித்துகளுக்கும் தலித்திய சிந்தனைகளுக்கும் உதவக்கூடியதுதானா?..தலித்திய சிந்தனைகள் குறித்த தவறானப் புரிதல்கள் வலுப்படவே தலித்திய சிந்தனையாளரான உங்களின் இக்கருத்து வழிவகுக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி: பதிவுகள் மே 2005; இதழ் 65!


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R