- சுப்ரபாரதிமணியன் --கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப்பெண்களைக் கூட  புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது. தொடை தெரியும் குட்டைப் பாவாடைகள், பெர்முடாஸ், அரை ஜீன்ஸ்கள் என்று தமிழ் பெண்களும் மலேயர்கள், சீனர்கள் மத்தியில் தென்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், தமிழ்க்கோவில்களிலும் தமிழ்ப்பெண்கள் புடவை அணிகிறார்கள். தமிழ்த்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி வாசிப்பில் பெண்கள் புடவை அணிந்து வருவது கட்டாயமாக இருந்தது. இப்போது அது குறைந்து விட்டது என்று தமிழ் அமைப்பினரும், சனாதானிகளும் கண்டித்திருப்பது சமீபத்திய சலசலப்புச் செய்தியாக இருக்கிறது. நம்மூர் வேடிடி சட்டை போல் மலேயா தேசிய உடையிலும் சிலர் தென்படுகிறார்கள். தலையில் குல்லா. முழுக்கைச் சட்டை. பேண்ட் மேல் சுற்றப்பட்ட கைலி. இதுதான் தேசிய உடை எனலாம். சுதந்திரதினத்தை தேசிய தினமாகக்  கொண்டாடும்  வைபவத்தில் நாடு முழுவதும் மலேசியா தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.1958ல் சுதந்திரம் பெற்றது.அந்நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி இரும்பால் வார்த்தெடுக்கப்பட்டு வீதிமுழுக்க  விளக்குக் கம்பங்களில் மினுங்குகிறது. 100 வருடத்திற்கு முன் தமிழன் கட்டிய ரயில்வே ஸ்டேசன் மின் விளக்கில் பளிச்சிடுகிறது.இந்தியர்களின் பெருமையைச் சொல்லும் லிட்டில் இந்தியாவிற்கு எப்போதும் மவுசுதான்.கோலாலம்பூரின் மத்தியில் தென்படுகிறது ராம்லீ தெரு. ராம்லி நம்மூர் சிவாஜிகணேசன் போல் முக்கிய நடிகர்.  இவரை இயக்கிய முக்கிய இயக்குனர்களீல் ஒருவரான கிருஸ்ணன் ஒருதமிழர்.மலேசியாவின் முதல் கோடீஸ்வரர்  ஆனந்த கிருஸ்ணனுக்குச் சொந்தமானது  கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களில் ஒன்று. அதை விற்றுவிட்டார். 2ஜி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டு பல நிறுவனப் பங்குகளை விற்றுவருகிறார். இவரின் ஒரே மகன் புத்தமத சாமியாராகிவிட்டார்.

பத்துமலை முருகனுக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். பத்து என்றால் கல். கல் மலை. பத்து மலையைச் சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள் இருந்தது ஒரு காலத்தில் .1991ல் கும்பவிசேகம் கண்ட பின் மிக உயர  சிலையில் முருகன் பத்துமலை முகப்பில் சிரிக்கிறார்.

13 வது பொது தேர்தல் எப்போதும் வந்துவிடலாம் என்ற தேர்தல் காய்ச்சலில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அய்ந்து வருடங்கள் எந்த அரசும் முழுமையடைவதில்லை.இந்த முறை ஆளும் கட்சியின் அரசுக்கு மூன்றரை ஆண்டுகளே கடந்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு அரைமாத போனஸ் என்று இந்த திடீரென பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருப்பது தேர்தல் கவர்ச்சிக்குதானாம். (எல்லா பெரிய புள்ளிகளின் பெயர்களுக்கு முன்னால் ட்த்தோ இருக்கிறது. நம்மூர் பத்மஸ்ரீ போல என்கிறார்கள்.) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இந்தியர்கள்., மலாய்க்காரர்கள் ஆதரவு குறைந்திருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.சீனர்களின் ஆதரவு தூக்கிப்பிடித்து நிறுத்துகிறது. ஆனால் அவரின் அரசிற்கான மதிப்பு அப்படி இல்லை என்கின்றன ஆய்வுகள்.இந்தத்  தேர்தலில் தோல்வி நிச்சயம் என்கிறார்கள் .

இந்த தேர்தலில் இந்திய சமூகத்தினரின் எதிர்பார்ப்புகள் இப்படியாக உள்ளன:

1.அரசின் ” ஒரே மலேசியா” கொள்கையின் கீழ் இந்தியர்களுக்கு அரசுத்துறைகளில் தாராளமாக  வேலை வாய்ப்பு வேண்டும்.
2. அரசின் உதவிகளும் இந்திய சமூகத்திற்கான நலத்திட்டங்களும் முறையாக சென்றடையாமல் நிறைய இடைத்தரகர்கள் இருப்பதை நீக்க வேண்டும்.
3.இந்திய சமுதாயத்திற்கானப் பொருளாதாரப் பங்குகளை ஏற்படுத்த வேண்டும்.
4.குடியுரிமை இல்லாமல் சிவப்பு அடையாள அட்டையாலும் பிறப்புப் பத்திரம் இல்லாமலும் அகதிகள் போல் இருக்கும் நிலை மாற வேண்டும்.
5.தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.(குடிக்கக் கூழும் படிக்க தமிழும் சந்தோசம் தரும் என்று வாழும் தமிழ் தலைமுறையில் புதியவர்களுக்கு தமிழ்க் கல்வி சற்றே கசந்து வருகிறது).
    
குறைவாகவே சிலைகள் தென்படுகின்றன. பெரியார் சிலையைப்பார்க்க கோலாலம்பூரிலிருந்து 250 கி.மீ நிபோங்  போக வேண்டும். மலேசியா சென்ற பெரியாரின் தோற்றத்தைப்  பார்த்த தமிழ் பெண்ணொருத்தி ” என் மகளுக்கு வயித்திலே புழு பூச்சி ஆக மாட்டீங்குது. நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்”  என்றிருக்கிறாள்.” பெரியார் நாகம்மையைச் சுட்டிக்காட்டி “ இவங்க என் சம்சாரம். இவங்களுக்கும் குழந்தையில்லே. டாக்டரை நம்புங்க.” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். மலேசியா முஸ்லீம் நாடு. கடவுள் மறுப்பிற்கு அதன் சட்டவடிவமைப்பில் இடமில்லை. கடந்த பத்தாண்டுகளில் இன்னும் பலமிழந்திருக்கும் மலேசியா தி.க. தலைமறைவு இயக்கம் போல்தான் செயல்படுகிறதாம்.

மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.கடந்த 5 ஆண்டுகளாக மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் போட்டி நடத்தி 1,75,000 ரூபாய்  பரிசுத் தொகை வழங்குகிறது. கூடவே தமிழகம் வந்து செல்ல விமான டிக்கட்.இவ்வாண்டும் அப்போட்டியின் முன்னோடியாகவே இந்தப் பட்டறைநடத்தியது. சென்றாண்டு சிறுகதைப் பட்டறையை நடத்தியவர் எஸ்.இராமகிருஸ்ணன். மலேசிய  தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு இது பொன் விழா. இவ்வாண்டு நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகள் என்று மொத்தம் 2,50,000 ரூபாய் பரிசு பம்பர் மலேசியா எழுத்தாளர்களுக்குக் காத்திருக்கிறது.
   
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R