- டாக்டர். B. செல்வராஜ் Ph.D. (முதுநிலை உளவியல் விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி,கோவை) -கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.[பதிவுகள் இணைய இதழில் செப்டம்பர் 2009 இதழ் 117இலிருந்து தொடராக வெளிவந்த இந்த உளவியற் கட்டுரைத் தொடர் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. -- ஆசிரியர்] கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஓர் விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.

கவலைகள் இல்லாமல் வாழ்வதெப்படி என்ற தலைப்பில் ஓர் பயிற்சி நடத்தப்பட்டது. நிறைய பேர் அதில் கலந்து கொண்டார்கள். அப்பயிற்சியை நடத்திய உளவியல் அறிஞர் “கவலை இல்லாமல் வாழ்வதெப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு நிறையப் பேர் இங்கே கூடியிருக்கிறீர்கள். உண்மையில் கவலை இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லாதது. எனவே கவலையோடு சந்தோஷமாக வாழ்வதெப்படி என்றே நான் கற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று கூறி பயிற்சியை நடத்தினார். அதுபோல மன அழுத்தம் இல்லாமல் வாழ முயற்சி செய்வதை விட, மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.

நம் அனைவரிடமும் ஓரளவு பணம் இருக்கும். உங்களிடம் 500 ரூபாய் இருக்கும் போது 5 ரூபாய்க்கு செலவு வந்தால் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது? சாதாரணமாக அந்த செலவை சமாளித்து விடலாம். ஆனால் 50 ரூபாய் இருக்கும் போது 5000 ரூபாய் அளவுக்கு செலவு வந்தால் உங்களால் எப்படி சமாளிக்க முடியும்?

அதைப் போலவே, நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு உடல், மன சக்தி உள்ளது. சாதாரண, நம் சக்திக்கு உட்பட்ட செயள்களை நாம் செய்யும் போது பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றை தீர்க்க முயலும் போது அல்லது செய்ய முடியாத செயல் ஒன்றை செய்து முடிக்க முயலும் போது நாம் நம் உடல், மன சக்தியை மீறி செயல்படுகிறோம் என்று அர்த்தம். இதுபோல நம் உடல், மன சக்திக்கு மீறிய விஷயம் ஒன்றை சமாளிக்க முயலும்போது நம் மனதில் ஏற்படும் தவிப்பு அல்லது பய உணர்வே மன அழுத்தம் எனப்படும்.***

மன அழுத்ததை நல்ல மன அழுத்தம், தீய மன அழுத்தம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சைக்கிள் டயரில் ஓரளவுக்கு காற்று இருந்தால் தான் சைக்கிள் இலகுவாக ஓடும். காற்றழுத்தம் குறைவாக இருந்தால் சைக்கிள் ஓடுவது கடினம். காற்றழுத்தம் அளவுக்கு மீறினால் டயர் வெடித்து விடும். அதைப் போல மிதமான மன அழுத்தம் நமக்குத் தேவையே, உதாரணமாக உங்கள் மனைவி உங்களிடம் உள்ள கெட்ட விஷயங்களை எடுத்து சொல்லும் போது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால் அது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி. விரைவிலேயே அந்த கெட்ட விஷயங்களை விட்டு வெளிவர முயற்சி செய்து வெற்றியும் பெறுவீர்கள். பெரிய காரியம் ஒன்றை முடிக்க வேண்டி ஒருவரிடம் உதவிகள் கேட்டு செல்கிறீர்கள் அப்போது உங்களுக்கு மனப் பதட்டமும், மன அழுத்தமும் ஏற்படும். ஆனால் இம்மன அழுத்தம் உங்களை செயல் வீரராக்கும்.

மன அழுத்தம் சிறிதளவு கூட இல்லையென்றால் யாராலும் எந்தக்காரியத்தையும் செய்து முடிக்க முடியாது. தேர்வு வருகின்றது என கேள்விப்பட்டவுடன் மன அழுத்தத்திற்கு உட்படாத மாணவன் உருப்படியாக படித்து தேர்வில் வெற்றி பெற மாட்டான். ஓரளவுக்கு மன அழுத்தம் கொள்ளும் மாணவர்களே சிரத்தையுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் நல்ல மன அழுத்தம் நம்மை கச்சிதமாக காரியத்தை முடிக்கத் தூண்டும். மேலும் நல்ல மன அழுத்தம் நம் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி நம்மை செயல்புரிய வைக்கிறது. முடிக்க வேண்டிய காரியத்தை நினைத்து சிறிதளவு பயம் கொள்ளச் செய்கிறது.

அளவுக்கதிகமான கெட்ட மன அழுத்தம் நம்மை நிலைகுலையச் செய்வது போல, அளவுக்கு அதிகமான நல்ல மன அழுத்தம் நம்மை சிறப்பாக செயல்புரிய செய்கிறது. நாம் அனைவரும் மன அழுத்தத்தின் கெட்ட முகத்தைத் தான் காண்கிறோம். அதற்கு இன்னொரு நல்ல முகமும் உண்டு.

பாம்பின் விஷம் கூட மருந்துக்குப் பயன்படுவது போல மன அழுத்தமும் நமக்கு நன்மை புரியும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓரளவுக்கு ஏற்படும் மன அழுத்தம் நன்மைக்கே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.***

நாய் ஒன்று பூனையைத் துரத்துகிறது. பூனையோ நாயிடமிருந்து தப்பிப்பதற்காக தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. இறுதியாக ஓர் அறையின் மூலையொன்றில் பூனை மாட்டிக்கொள்கிறது. அதற்கு மேல் ஓட வழியில்லை. அப்போது பூனை என்ன செய்யும் என்று கவனித்து இருக்கிறீர்களா?

பூனையின் கண்மணிப்பாவை விரிந்து பார்வை கூர்மையாகும். அமுங்கி இருக்கும் கால் நகங்கள் நாயை கீருவதற்கு வசதியாக வலிமை பெறும். பூனையின் உடலிலுள்ள மயிர்கால்கள் குத்திட்டு நிற்கும். கூறிய பற்களை காண்பித்து சத்தத்துடன் நாயைக் கடிக்க பூனை தயாராகிவிடும். இறுதிப் போரட்டத்தில் சிறிய பூனை வலிமையான நாயையே கொண்று விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

நாயைப் போன்ற மன அழுத்தம் நம்மை தாக்கும்போது நாமும் பூனையைப் போலவே ஒன்று பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிவோம் அல்லது பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.

இவ்வாறு நாம் நடந்து கொள்வதற்கு போராடு-அல்லது-புறங்காட்டு வினை (Fight-or-Flight response) என்று பெயர். இந்த வினை கற்காலத்திலிருந்தே மனிதர்களிடத்தில் காணப்படுகிறது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று வருந்திக் கொண்டிருந்த மனிதன் சிங்கதைக் கண்டதும் அதையே அடித்து உணவாகப் பயன்படுத்திக் கொண்டான். சிங்கத்தை அடிக்கும் அளவுக்கு மனபலமும் உடல் பலமும் இல்லாத மனிதன் சிங்கத்திற்கு இரையாகிப் போனான். எனவே ஒருவன் சிஙகத்தை உணவாக்கிக் கொண்டதும், சிங்கத்திற்கு உணவாகிப் போனதும் எவ்வளவு வேகமாக போராடு-அல்லது-புறங்காட்டு வினையை ஒருவன் வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தே அமைந்தது. அதைப் போல இந்த நவீன உலகில் நம்மை துரத்திவரும் மனஅழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்வதும், பயம் கொண்டு விலகி ஓடுவதும் நம்முடைய போரடும் அல்லது புறங்காட்டும் வினையைப் பொறுத்தே அமைகிறது. அதுவே நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் தீர்மானிக்கிறது.***

E-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Blogspot: http://gestaltselvaraj.blogspot.com/


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R