பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பதிவுகள் இணைய இதழ்

சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..'

E-mail Print PDF

சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..'1.

குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம்.ஒரு உஷார். எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும்போதெல்லாம் அவனைக்காணவேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்கமுடியும். அவனை ஒருதனமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்கமுடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது.  தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன்.என்னைத்தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையில் ஆரம்பத்தில் மீண்டும் உயிர்பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தது.இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்தஉறவிலா? அம்மாவழிச் சொந்தத்திலா? இல்லை அப்பாவழி பந்தத்திலா? 'யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன். இதே உறவு ஊரிலும்எ மக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும்போதெல்லாம் அதே நினைவு. ஊரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காணவேணும்போல மனம் கிடந்துதுடிக்கும். இவனைக்கண்டாலோ பழசுகள் மனசை வந்து ஒரு தட்டுத்தட்டும்.

இவனை மாதிரித்தான் ஊரில் அவனும் விருட்சமாக வளர்ந்து அடிப்பாகம் அகன்றுமூன்று பகுதிகளாக நிலத்துடன் ஆழப்பதிந்திருந்தான். அவன்,  இவன்,  நான் அதில் குந்துவோம். மற்றவன், இன்னொருவன் சைக்கிள் சட்டத்தில் சாய்ந்திருப்பார்கள். மாணிக்கவாசருக்கு குருந்தமரம், புத்தபெருமானுக்கு போதிமரம், எங்களுக்கு இந்த அரசமரம். பசளையிட்டு நீர்ப்பாய்ச்சி அந்தமரம் வளரவில்லை. மழைநீரில் அந்த மரம் வளர்ந்தது. பசளையாய் எம் பேச்சு இருந்தது. எமது முன்னோர் சிலரும் அந்த மரத்தின் அடியில் குந்தியிருந்து கதைபேசியிருக்கலாம். நாமும் கதைப்போம். என்னதான் கதைக்கவில்லை? எல்லாக் கதையும் அந்த மரம் சொல்லும். எமது நட்பின் ஆழத்தை அது சொல்லும். எங்கள் வேதனைகளை விரக்திகளை அது சொல்லும்.கிண்டல் கேலிப்பேச்சுக்கள் அதையும் சொல்லும். வாழ்வில் ஏதும் சாதிக்கவேண்டும் என்ற விருப்பத்தையும் அது சொல்லும். எங்கள் கேலிப்பேச்சுக்களுக்கு சலசலவென்ற ஒரு சிரிப்புச்சிரிப்பான்.  இப்படி இருக்கமுடியாதபடி காக்கைக்கூட்டத்திற்கு ஒருநாள் கல்லெறி விழுந்தது.

2.

காக்கைகள் நாம் சிதறினோம். சிதறிப்போன ஒவ்வொருவரையும் நான் நினைத்துப்பார்க்கின்றேன். அவன், இவன், மற்றவன், இன்னொருவன், பிறகுநான். நினைவழியா நாட்கள். எப்போதும் வானம்போல, எப்போதும் சூரியன்போல எப்போதும் கடல்போல , எப்போதும் எங்களூர் பனைபோல அழிந்தே போயிராத, அழிந்தே போகமுடியாத நாட்கள். நினைவுகள் அழிவதில்லை.

முதன்முறையாக பள்ளிக்கூடம் போகின்றேன்.முதலாம் வகுப்பு.முதலாம் நாள். அம்மா கூட்டிப்போகிறா. அழுகை, அழுகையாக வருது. பயமா இருக்கு. இதனால் அம்மாவின் கையை இன்னமும் அழுத்தமாக பிடித்துக்கொள்கின்றேன். அம்மாவை விட்டிட்டிருக்க வேணும். அதுதான் அழுகை. யாரோடோ இருக்கவேணும். அதுதான் பயம். அழுகையும் வராமல், பயமும் வராமல் "இஞ்சை எனக்குப்பக்கத்தில இருக்கலாம்" என்று ஒருவன் இடம் தந்தான். அவன் என் மனதில் இடமானான்.  நண்பர்களானவர்கள் இப்படித்தான் ஏதோ ஓர் இக்கட்டில் கைகொடுத்தவர்கள்.
 
அருமை நண்பர்கள் ஐவரானோம்.எங்களுடைய அரசமரத்துடன் ஆறுபேராகிவிட்டோம். மாலையில் அவன் முன்னால் ஒன்று கூடுவோம். அன்றைய கூடலில் முதலில் சபைக்கு எடுக்கப்படுவது எமது அன்றைய நிதி நிலைமை எப்படி என்பதே. ஒவ்வொருவன் பொக்கற்றுக்குள் இருப்பதையும் சேர்த்துப்பார்ப்போம். சரி இன்றைக்கு ´மொக்கங்´கடையில் புட்டும் இறைச்சிக் குழம்பும் சாப்பிடலாம். நல்ல ரசமும் குடிக்கலாம். காசு போதாதா? பிளவ்ஸில் சுடச்சுடப்பாணும் இறைச்சி ரொஸ்ற்றும். அதற்கும் போதாதா? இருக்கிறது பத்மா கபே வடையும் பிளேன் ரீயும்.இல்லாவிட்டால் பிளேன்ரீ மாத்திரம்.  பிறகு.. ஒரு உஷார். கவியரங்கம், பாடல்கள், நகைச்சுவைக்கதைகள் ,பேச்சுக்கள், ஓவியம் கூட அந்தச் "சமாவில்" சங்கமமாயிருந்தது. யாழ் கோட்டையும், அதனுடன்சேர்ந்து அகழியும், முனியப்பர் கோவில் முன்றலில் கிரிக்கெட் விளையாட்டும், அந்தக்கடலைக்காரியும் கரம் சுண்டல் காரனும் என்று அந்த வெள்ளியின் மாலைப்பொழுதையும் உணர்வு கலந்த ஓவியமாக்கியிருப்பான். வசந்தமாளிகைக் கட்அவுட்டில் சிவாஜியையும் வாணிஸ்ரீயையும் பாவங்களுடன் வரைந்த அவனின் திறமையும் அந்த மரத்தடியில் அரங்கேறியது. இவன்சொல்லுவான் பாரதியின் கண்ணம்மாவிற்கு காற்சட்டை போட்டுப்பார்க்கவேண்டும், மினி போட்டுப்பார்க்கவேண்டுமென்று. அதன் அர்த்தமே பாரதியார் பாடல்களிற்குப்புதுமெட்டுக்கட்டிப்பாடுவதுதான்.

இவனொருபாடகன். சினிமாப்பாடல்களைப்பாடிவிட்டு அதே மெட்டில் திருக்குறளையும் பாடுவான். இசையில் ஆர்வம் இவனால் எமக்கு வந்தது. திரைப்படம் பார்த்தால் எழுத்தோட்டத்திலிருந்து சுபம் வரைக்கும் ஒரு வரிவிடாமல் கதை இசை பாடலென்று திரையில்லாமல் சொல்லும் கதைஞன் மற்றவன். மேசை, கதிரை கரண்டி தகரடப்பாக்களில் இசை வழங்கும் இன்னொருவன்.அந்தி நேரக்கூடலில் வெறும் தகரடப்பாவில் நல்ல இசையை வழங்கி அப்பொழுதை களைகட்டச்செய்வான். சோகத்திலும் சுகம் இருக்கிறது என்று சிரித்துக்கொண்டு நகைச்சுவையாகப்பேசுவான். வாழ்க்கையில் துவண்டு மடிதல் கூடாது என பலமாகவே நம்பிவந்தான். எவ்வளவ கலகலப்பு, சந்தோஷம், சைக்கிள் ஓட்டம், விளயாட்டு வேடிக்கையென்று களைப்பு அறிந்திராத வயது.

3..

இளைஞர்கள் ஊர்ஊராக வேட்டையாடப்பட்டுக்கொண்டிருந்த நாட்கள். இரவிரவாக இளைஞர்கள் இல்லாமல் போன நாட்கள். கரும்பச்சை வாகனம் கரும்புகைகக்கி வீதியை அதிரவைத்த நாட்கள்.வருகின்ற செய்திகள் அச்சம் தந்தன.செய்தியின் தலைப்புக்கள் இரத்தத்தால் எழுதப்பட்டு வந்தன.

அம்மா போகச்சொன்னா "ராசா எங்கையெண்டாலும்..."

"எங்க போறது?எல்லோருக்கும் இருக்கிற கஷ்டந்தானே?"

இந்த நாட்களில் ஒருநாள்கூடலில் ஒருவன் தன் வெளிநாட்டுப்பயண அறிவித்தலை முன்வைத்தான். வீட்டில் எல்லாம் முடிவாகி, முடிவை தீர்மானமாக தன்னிடம் சொன்னார்களாம்."என்னடா செய்ய" என்று கலங்கிப்போய் நின்றிருந்தான். அவ்வளவு விரைவில் விட்டுவிட்டுப்போகக்கூடிய பந்தமாக எமது நட்பு இருந்திருக்கவில்லை. ஒருநாளைக்கு ஒருத்தன் குறைஞ்சாலே என்னமோ, ஏதோ என்று அவன் வீட்டிற்கே போய்விடுவோம். ஒருத்தனுக்குச்சுகமில்லையென்றால் அவனைத்தனியாகவிட்டுவிட்டு நாம் களித்திருந்ததில்லை. அவனுக்குத்துணையாக எமது கூடலும் அவனருகில்தான் இருக்கும். இப்படியிருந்த சங்கிலிப்பிணைப்பிற்குள் ஒரு சங்கிலி அறுந்துபோனால் தொய்ந்துபோறமாதிரி மனமும் தொய்ந்து போயிற்று. அவனைத்தேற்றி, அவனின் பயணத்திற்கும் ஆயத்தங்கள் செய்துகொண்டே அழுதோம், மனத்தால் கதறி அழுதோம்.அந்த மரமும் அன்று சேர்ந்து அழுதது. எல்லோரும் பொழிந்த கண்ணீர் அடங்குவதற்குள் அவனும் பிரிந்து எம்மைவிட்டுப்பறந்தான். போனவன் போட்ட கடிதத்தை அரசமரத்தின் கீழிருந்து வாசித்தோம். தன் இலைகளையும் சரசரக்காமல், எம்முடன்கூடி அவனின் சுகமறிந்துகொண்டபின் அது" ஓ" வென்று இரைச்சலிட்டது. கண்ணீர் சிந்தமுடியாமல், கவலைகளைச்சொல்ல முடியாமல் இரைச்சலிட்டே தன் வேதனைகளைப்பறைந்தது. பகிர்ந்தது. என்றும் சலசலவென்று சிரிக்கும் அவனின் சோகத்தின் வெளிப்பாட்டை எம்மால்உணரமுடிந்தது.எமக்கிடையில் இசைநின்று போயிற்று.சோகத்திற்குள்ளும் சுகம்கண்டவன், சுகத்தையே சோகமாக்கி விட்டுப்போயிருந்தான். இசைபிரிந்த பின்னால் பாட்டிற்கென்ன மதிப்பென்று எண்ணினானோ இவனும் பறந்தான்.மற்றவனும் பறந்தான்.

இவர்களின் பிரிவால் எமக்கிடையில் வெறுமை படரத்தொடங்கியது. எங்களின் குதூகலமிழந்த முகத்தைக்கண்டு ஏனோ இவனும் தன்செழிப்புக்குன்றத்தொடங்கினான். இலைகளை உதிர்த்து சலசலப்புக்குறைந்துபோய் நின்றிருந்தான். காலத்தின் விரட்டலில் கடல்கடக்க நானும் தயாரானேன். வேதனை மீதூரக்கடல் கடந்தேன். இளமையில் எமது நண்பனை அங்கு விட்டு விட்டு நாமும் அவன் நினைவுடன் பிரிந்துவிட்டோம். பிரிந்தநாம் கடைசியில் நரைதட்டி மூப்பெய்திய பின்னாவது, உயிர் பிரியும் முன்னாவது அம்மரத்தடியில் ஐவரும் கூடுவோமா? பழையதையெல்லாம் இளமைத்துடிப்புடன் பறையவேண்டும். சைக்கிளில் டபிள் போகவேணும். டபிள் பெடலும் போட வேண்டும். ஆகுமோ? அப்படி நடக்குமோ? ஊரில் அந்த உயிர் இருக்குமா?'செல்' அடித்து பொம்மர் குத்தி அந்த மரம் தன்தலையை இழந்து முண்டமாக இருக்குதோ? அல்லது சிதறிப்போயிற்றோ? இல்லையென்றால் இன்னும் நாலு இளவட்டங்கள் அதனடியில் குந்தியிருக்கலாம். என்றாவது எம்மைக்காண நாள்வரும் என்ற நம்பிக்கையில் முண்டமாகவோ, முடமாகவோ நிச்சயம் அந்த அரசமரம் உயிர்வாழும். நாங்களும் ஊர் போவோம். ஒரு சொல்லாவது எம்சோகம் அதனுடன் பகிர்வோம். நம்பி இருப்போம். நம்பிக்கை... நம்பிக்கை.   மனிதர்கள் மட்டும் நம் சொந்தங்களல்ல. பூக்களும் மரங்களும் மழையும், மண்ணும்... கடலும்,  காற்றும்கூட எம் சொந்தங்களே..

Last Updated on Friday, 12 September 2014 23:05  


'

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

சிறுகதைகள்: கடந்தவை

கடந்தவை

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)



'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

Yes We Can




வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்

 

' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

THANK YOU!

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

மதுரைத் திட்டம்

மதுரைத்திட்டம்

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

படிப்பகம்

உலக வானொலி