இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2001)  பெற்ற  நாவல் இலக்கியப் படைப்பாளி சிவா நேப்போல்"நான் கருப்பொருட்களைக் தேர்ந்துகொள்ள எனது உள்உணர்வுகளிலேயே நம்பிக்கை வைத்துள்ளதோடு என் உள்ளத்து உணர்வுகளுடனேயே எழுதுகின்றேன்" , "நானே எனது புத்தகங்களின் ஒட்டு மொத்தம்" எனவும் குறிப்பிடும் இவ்வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இலக்கிய கர்த்தா திரு. வி. எஸ். நேப்போல் அவர்கள், (Trinidad)  ரினினாட் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தனது இலக்கியப்படைப்பால் உயர்ந்து நிற்கின்றார். உலகில் காணப்படும் ஒரே ஒரு இந்துமத அரசாகக் காணப்படும்; நேபாள தேசத்தின் பரம்பரையில் உதித்தவர்தான் இன்று உலகளாவிய புகழ் படைத்த நாவல் படைப்பிலக்கிய மேதையாகக் கருதப்பட்டு உயர்விருதினைப் பெற்றுக்கொண்ட சிவா நேப்போல் அவர்கள். தனது பாட்டியார் இந்தியாவிலிருந்து வரும்போது பல இந்துமத நூல்களையும், சாத்திரங்களையும் கொண்டு வந்திருந்தார். அவர்கள் சமய அனுட்டானங்களைத் தொடர்ந்தார்கள் நாமும் பின்பற்றினோம் ஆனால் எமக்கு மொழியை யாரும் கற்றுத்தரவில்லை. இந்தி எழுத்துக்களை இளமையில் யாரோ சொல்லித்தந்ததாக ஞாபகம் ஆனால் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அத்தோடு எமது மொழியின் இடத்தில் ஆங்கிலம் திணிக்கப்பட்டதால் நாம் எமது மொழியை மறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தமது ஆதங்கத்தை நோபல் பரிசு பெறுவதற்காக ஸ்ரக்கோம் சென்றவேளை குறிப்பிட்டிருந்தார். எனது புத்தகங்களின் கூட்டு மொத்தம் நானே என்று கூறும் அவர் தனது தாயாரின் ஊர் நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் என்கின்றார்.

எனது குழந்தைப் பருவத்தில் இருளாக இருந்தபகுதியே நான் எழுத்தாளனாக வந்தவேளை எனது கருப்பொருளாக அமைந்தன எனக்கூறும் நேப்போல் அவர்கள் நான் இளமைக் காலத்தில் கேள்விப்பட்ட முற்றுப்பெறாத அன்றித் தெளிவில்லாத சம்பவங்கள், கதைகள் என்பன எனது எழுத்தின் கருவூலங்களாகின. நான் வாழும் றினிடாட் (வுசinனையன) ஒரு புதிய குடியேற்ற நாடகாக விருத்தி பெற்றது. நான் 1932 ஆம் ஆண்டு பிறந்தபோது அங்கு மொத்தச் சனத்தொகை 400,000 ஆக இருந்தது. அதில் 150,000 இந்தி;யாவிலிருந்து வந்த இந்துக்களும் முஸ்லிம்களுமாவார்கள். இவர்கள் எல்லாரும் விவசாயகுடும்பங்களைச் சார்ந்தவர்களும், கங்கைச் சமவெளிப் பிரதேசத் திலிருந்து வந்து குடியேறியவர்களுமாகும். ஏனது இளமைப் பராயத்தில் பழங்குடி மக்கள் இங்குவந்து பழங்களையும் சில விதைகளையும் சேகரித்துச் செல்வார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால் அவர்கள் எவற்றைச்சேகரித்தார்கள் அல்லது ஏன் வராது விட்டார்கள் என்பவற்றிற்கான விளக்கங்கள் கிடைக்கவும் இல்லை. அவை எனது மனத்தி;ல் இருளடைந்தவையாக, நாளடைவில் மறந்துபோய் விட்டது. இவை எல்லாம் என்னை எழுதத் தூண்டியவை மட்டுமன்றி இங்கு வந்து குடியேறிய மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகள், வாழ்க்கை முறைகள் எல்லாம் எனது கருவூலங்கள். சிலவற்றை நான் நேரில் கண்டு அறிந்து கொள்வதற்காக இந்தியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் பிரயாணம் செய்தேன். ஆதனால் அங்கு பல விடயங்ளை நேரில் பார்க்கக் கூடிய வாய்ப்புக்கள் எற்பட்டன. பாடசாலைக் கல்வி எனக்கு எந்த விளக்கங்களையும் தரவில்லை. நான் தரவுகளையும், வாய்ப்பாடுகளையும் பாடமாக்கியதும் தான். ஏல்லாமே நாமாகவே கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. எல்லாமே பிரித்தறியவேண்டியதாகவே இருந்தது. நான் எனது பாட்டியின் வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டதைவிடே மேலாக நான் எதனையும் பெற்றது இல்லை. ஒரு திட்டமோ அல்லது சாராம்சமோ இல்லாத சாதாரண கல்வியே பாடசாலையில் எனக்குத் தரப்பட்டது.

எனக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட சமூக பகைப்புலம் இதர சமூகங்களுடன் சேர்வது நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்குக் கடினமானதாக இருந்தது. புத்தகங்கள் பற்றிய எண்ணமே எனது விருப்பாக இருந்தது. இவற்றைப் வாசிப்பது கடினமாக இருந்தது நான் அண்டர்சன்(Aderson)), எயிசொப்(Aeashop) ஆகியோரது புத்தகங்களை எனது இளமைனக் காலத்தில் வாசிப்பேன். ஆனால் அவர் தனது கல்லூரியின் இறுதிக்காலத்தில் மொலியர் (Moliere),  சிறானோ தி பேர்ஜெராக்( Cyrano de Bergerac) ) போன்றோரது நூல்களை விரும்பிப்படித்ததுண்டு. நான் ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு ஒரு கதை எழுதுவேன் எனவும் பலவிடயங்ளைத் தவிர்த்துக்கொள்வேன் எனவும் குறிப்பிடும் அவர் பின்னர் தனது கதைகள் நீண்டுசென்றதனையும், ஒருநாளிலோ அன்றி சிலநாட்களிலோ எழுதி முடிக்க முடியாதிருந்தமையையும் நினைவு கூருகின்றார்.

எனது தந்தையார் தனது சமூகப்பின்னணியை வைத்து எழுயவர் எனவும் தனக்கும் அவருக்கும் இருந்த சூழல் வேறுபட்டதெனவும் குறிப்பிடுகின்றார். நான் எழுதிய எல்லாப் புத்தகங்களுமே என்னை வியப்பில் ஆழ்த்தின நான் என்றும் தனது மன உணர்வுடன் மாத்திரம் நின்றேன் என்றும் அரசியல் சார்ந்து எழுதவில்லை எனவும் அதற்கு இவ்வருடம் மறைந்த இந்திய எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனைப் பின்பற்றியதாகவும் குறிப்பிடுகின்றார். தனது தந்தையும் இவ்விதமே எழுதினார் என்றாலும் அவரது காலம் இருண்டகாலமாதலால் அவருக்கு எந்த விருதுகளும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றார்.

திறமை (Talent) பற்றி அவர்குறிப்பிடும் போது பிரபல எழுத்தாளர்கள் Proust அவர்களின்  Against Sainte-Beuve  என்ற கட்டுரையில் அவர்குறிப்பிட்டவற்றை எடுத்துக் காட்டுகின்றார் “எங்களிடம் திறமை இருந்தால் நாம் மிக அழகானவற்றை எழுதலாம்”  என்றும் “திறமை ஒரு வகையான ஞாபக சக்தி அது ஈற்றில் தெளிவற்ற இசையை மிகத் தெளிவாகக் கேட்கக் கூடியவகையில் குறிப்பிடுவதற்கு மிக நெருக்கமாகக்கொண்டு வருகின்றது”. எனவும் "திறமை என்பது அதிஷ்டமும் கடின உழைப்புமே" என்றும் கூறுவதைக் காட்டி தனது எழுத்தாற்றலுக்குக் கடின உழைப்பும் தனது இளமைக்காலத்தில் இருள்சூழ்தவைகளாகக் காணப்பட்ட பகுதிகளுமே காரணம் என்றும் குறிப்பிடுகின்றார்.

திரு. சிவா நேப்போல் அவர்கள் எழுதிய நாவல்கள், கதைகள் அனைத்துமே சமுதாயப் பார்வையும் அதன் உண்மைப் பின்னணியையும் கொண்டமைந்தவை. கற்பனா வாதமோ, இல்லாதவற்றை உண்டென உரைக்கும் தன்மையோ அவரது கருப்பொருட்களாக அமையாதமை அவரது எழுத்தாற்றலுக்குக் கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். அவரது எழுத்துக்கள் யதார்த்தமானவை. இலகு நடை பயின்று வருபவை. சாதாரணர்கள் நுகர்ந்து அனுபவிக்கக்கூடிய ஆங்கில நடையினைக் கொண்டநூல்கள் நேரில் கண்டு அனுபவித்தவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் இலக்கியவாதியாக அவர் திகழ்கின்றார். இலக்கியப் படைப்பாளிகள் அவரது எழுத்துக்களைக் கூர்ந்து கவனித்தல் பயன் தரும்.

எழுத்தாளர்களுள் தலைசிறந்து விளங்கியவர் கடந்த ஆண்டு மறைந்த இந்திய எழுத்துலக மேதை ஆர்.கே. நாராயணன் அவர்கள். ஆனால் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என்னும்  ஆதங்கம் பல வாசகர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. திரு. நாராயணனின் எழுத்துக்கள் நோபல் பரிசுக்குழவினருக்கு எட்டாமல் போனது கசப்பான ஒரு உண்மையே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R