ரெ.கார்த்திகேசுவின் 'தேடியிருக்கும் தருணங்கள்'- பெ.பழனிவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் – 7. -முன்னுரை
“அரிதரிது மானிடர் ஆதல் அரிது” என்பது ஔவையாரின் வாக்கு. அதன் படி பெறுதற்கரிய பிறப்பு எடுத்த மானிடர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு நோக்கம் உண்டு. அந்நோக்கத்தை அடைய ஒவ்வொருநிலையிலும் தேடல் என்பது மிக இன்றியமையாதது. ஆம், இப்படித்தான் எழுத்தாளர் பெருந்தகை முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்களின் “தேடியிருக்கும் தருணங்கள்” நாவலின் முக்கியமான கதை மாந்தரான சூரியமூர்த்தியின் வாழ்க்கையில் ஒவ்வொரு இலக்கினையும் அடைய அவன் மேற்கொண்ட தேடுதல்களையே இக்கட்டுரை வெளிப்படுத்துகின்றது.

நாவலாசிரியர்
மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், மலேசியாவின் வட மாநிலமான கெடாவில் பீடோங் என்னும் சிற்றூரில் 1940-இல் பிறந்தார். அங்கே சைனீஸ் தோட்ட தமிழ்ப் பள்ளி, ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் சுங்கைப் பட்டாணி சரஸ்வதி பள்ளியிலும் தொடக்கக்கல்வியைக் கற்றார். தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியை பள்ளியில் முடித்தவர், பின்னர் மலாயப் பல்கலைக் கழகத்தில் 1968 ஆம் ஆண்டு B.A ஆனர்ஸ் பட்டமும், நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1977 ஆம் ஆண்டு M.Sc., in journalism மற்றும் 1986 இல் மலாயப் பல்கலைக் கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் ஆனர்ஸ் பட்டமும் பெற்றார். ஆனர்ஸ் பட்டம் பெற்ற இவர் நல்ல திறனாய்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 1991 ஆம் ஆண்டு Ph.D in Communication டாக்டர் பட்டமும் பெற்றார். மலேசிய வானொலியில் முதல் தமிழ் அறிவிப்பாளராக 1961 முதல் 1976 வரை பணிபுரிந்தார். மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் வானொலி, தொலைக்காட்சித் துறையின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

1952-இல் தமிழ் முரசு “மாணவர் மணிமன்ற மலரில்” எழுதத் தொடங்கி புதிய தொடக்கம், இன்னொரு தடவை, ஊசி இலை மரம், மனசுக்குள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், தேடியிருக்கும் தருணங்கள், அந்திமகாலம் , வானத்து வேலிகள், காதலினால் அல்ல, சூதாட்டம் ஆடும் காலம் போன்ற நாவல்களையும், விமர்சனக் கட்டுரை நூல்கள், மலாயில் ஆராய்ச்சி நூல் மட்டுமின்றி மலாய் மொழியில் ஆறு சிறுவர் நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகளுக்கு “தனி நாயக அடிகள் விருது” “டான் ஸ்ரீ மாணிக்கவாசகர் பரிசு” “தெய்வசிகாமணி பரிசு” என விருதுகளும், தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார்.

“தேடியிருக்கும் தருணங்கள்” நாவல்

கோலாலம்பூரிலிருந்து இலண்டன் பல்கலைக் கழகத்தில் ஸ்கூல் ஆஃப் எக்கோனோமிக்சில் எம்.ஏ பட்டம் பெறப் புறப்பட்ட சூரியா என்கின்ற சூரிய மூர்த்தி சாமிநாதன், பார்வதி அம்மா அவர்களின் வளர்ப்பு மகன் ஆவான். தங்களுடைய பிள்ளைகளான சந்திரமூர்த்தி, சிவகாமி ஆகியோருக்கு மூத்தபிள்ளையாக சூரியா வளர்ந்து வந்தான். தந்தை இறப்பிற்குப் பின் சூரியாவிற்கு இந்த உண்மை தெரிய வருகிறது. “அப்படி என்றால் என்னை பெற்றெடுத்த அன்னை யார்?” எனக் கண்டறிய வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படுகின்றது. பார்வதியின் அண்ணன், சின்னையா மாமா மற்றும் வழக்கறிஞர் கந்தசாமி ஆகியோர் சூரியாவின் பிறப்பின் மறுபக்கத்தை எடுத்துக்கூற சூரியாவின் தேடல் ஆரம்பமாகின்றது. அப்படியென்றால் பெற்ற தாய் என்னை ஏன் இவர்களிடம் விட்டுச்செல்ல வேண்டும்?, வளர்த்த அன்னை தந்தை இறந்த பின் என்னை ஏன் விலக்க வேண்டும், சின்னையா மாமா ஏன் சொத்தைப் பிரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஒவ்வொரு சூழலையும் எண்ணிப் பார்த்து நடந்த சம்பவங்கள் என்ன ? என்று கண்டறிய வேண்டி தன்னுடைய வாழ்க்கையில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைத் தேடுகின்றான் சூரியமூர்த்தி.

சூரியாவின் அருமை நண்பன் கிருஷ்ணன் மற்றும் பூங்கொடி ஆகியோரின் உற்ற துணையுடன் குடும்பப் பிரச்சனைகளை எல்லாம் ஓரளவு சரி செய்து விட்டு, பெற்ற தாயாகிய செல்லம்மாவைத் தேடி கோலாலம்பூர், சுங்கைப் பட்டாணி, என சுற்றி கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ள கேமரன் மலையின் முக்கியமான நகரான தானா ராத்தா போகும் பாதையில் “பாரத் டீ எஸ்டேட்” இவற்றை எல்லாம் கடந்து பென்னியில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கின்ற கருப்பையா செல்லம்மா தம்பதிகளைப் பற்றி விசாரித்து, செல்லம்மாவை மட்டும் அடையாளம் கண்டு சூரியா தனக்கு தெரிந்த விவரங்களை எல்லாம் கூறி தான் தேடிவந்த நோக்கத்தினையும் நடந்த விவரங்களையும் அன்னையிடமிருந்து தெரிந்துகொள்கின்றான். பிறப்பின் மறுபக்கத்தைத் தேடிக் கண்டுகொண்டு, வளர்த்த (ம) பெற்ற தந்தையின் வாக்கின் படி மேற்படிப்பினைத் தேடி இலண்டன் பல்கலைக் கழகத்திற்கு பேராசிரியர் ஜே.ஹேமில்டன் அவர்களைச் சந்திக்கச் செல்கிறான்

இவ்வாறாக சூரிய மூர்த்தியின் பிறப்பு, படிப்பு, பொருளாதாரம் என ஒவ்வொன்றையும் தம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆதரவோடு தேடிச்செல்லும் பாதையை முறைப்படுத்தி வெற்றி இலக்கோடு தன்னுடைய தேடலை பின் தொடர்வதாக இந்த நாவல் அமைந்திருக்கின்றது.

சத்திய மூர்த்தியின் எண்ணம்
தன்னுடைய மச்சான் தங்கச்சியைக் கல்யாணம் செய்து கொண்ட சத்திய மூர்த்திக்கு, திருமணத்திற்குப் பின் குழந்தைகளே இல்லை. அப்போது அவர் சுங்கப்பட்டாணியில் போஸ்ட்மேனாக பணிபுரிந்து வந்தார், அச்சமயம் கருப்பையா செல்லம்மா தம்பதியருடன் நெருங்கிய நட்பு ஏற்படுகின்றது. மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு கணவர் அடிக்கடி வெளியூர் என சென்றதால் இவர்களின் நட்பு காதலாக மாறியது.

“தாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை
நேர் இகழ்க் கோதையாள் செய்குறி நீ வரின்”
(கலித்தொகை குறிஞ்சிக்கலி 16)

என செல்லமாவின் அன்பில், பாசத்தில், மோகத்தில் மயங்கி நான்காவதாக பிறந்த குழந்தை சூரிய மூர்த்தி. இவற்றை யாரிடமும் சொல்லாமல் பிள்ளை ஆசையில் அக்குழந்தையை வளர்க்க பெற்றுச் சென்று விட்டார். அதற்குப் பின்னர் சந்திரமூர்த்தி, சிவகாமி ஆகிய இரண்டு பிள்ளைகளைப் பெற்றார் பார்வதி அம்மா, மூவரையும் பற்று பாசத்துடன் வளர்த்து வந்தார்

“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே”
(புறநானூறு 312)

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளை மனதில் கொண்டு பிள்ளைகளை கண்ணும் கருத்துமாகக் கவனித்தார். மூத்த பிள்ளை சூரியாவை மட்டும் எண்ணி, கூடுதல் கவனம் செலுத்திவந்தார். ஏனென்றால், அவனை வளர்க்க எடுத்து வந்தது முதலே பார்வதியிடம் அவ்வப்போது சண்டைதான். தனக்குப்பின் அவருக்கு ஒரு நிலையான பொருளாதாரம், சமுதாயத்தில் நல்ல பெயர், புகழ் கிடைத்து யாருடைய துணையும் இன்றி சொந்தக் காலில் நிற்க வேண்டும் என எண்ணினார். இலண்டன் பல்கலைக்கழகம் வரை உயர்கல்வி பயில ஏற்பாடுகள் செய்து வைத்தார்.

(வளர்த்த) அன்னையின் அன்பிற்கு ஏங்குதல் !
சூரியாவிற்கு பள்ளிப் படிப்பு முதல் தற்போது பல்கலைப் படிப்பு வரையும் தந்தை சாமிநாதன் காட்டுகின்ற அக்கறையை தட்டிக் கழித்தார். தான் பெற்ற பிள்ளைகளான சந்திரமூர்த்தி மற்றும் சிவகாமியின் எதிர்கால நிலைகளை மட்டுமே கருத்தில் கொண்டார். கணவர் உடல்நலமின்றி இறந்த பின் சற்றும் கவனிக்கவில்லை சூரியாவை, அவன் ஏதேனும் ஆறுதல் கூறினால் அல்லது மாயாவை பற்றி பேசினால்

“அவரு போயிட்டாரு சூரியா, அவரால என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செஞ்சிட்டு அவர் போயிட்டாரு ! இனியும் அவரே வந்து அவரு விருப்பப்படியே எல்லாம் செய்ய முடியுமா !-1 என சூரியாவின் மனம் வேதனைப்படும் படி பேசிவந்தார்.

அதுமட்டுமின்றி சின்னையா மாமாவின் ஆலோசனைகளைக் கேட்டு சூரியா, உன் படிப்புச் செலவுக்காக அப்பா எவ்வளவோ கொடுத்திருங்காங்க, இனிமேல் லட்சக் கணக்கில் செலவு செய்து மேல்படிப்பு படிக்கவைக்க முடியாதப்பா”-2 என படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொன்னதுடன் தன் மகன் தொழில் தொடங்க நிறைய முதலீடு செய்ய தயாராக இருந்தார். இவ்வாறாக பெற்ற பிள்ளைகளின் மீது தனிப் பாசத்துடன் நடந்துக்கொள்கிறார் பார்வதி அம்மா. இருப்பினும் அம்மாவின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளவர் தான் சூரியமூர்த்தி.

தடம் மாறும் தம்பியை நல்வழிப்படுத்துதல்
படிப்பிலும் பின்தங்கி, வாழ்க்கையிலும் பின்தங்கி, தடம் மாறும் ஆசைதம்பி சந்திரமூர்த்தி, ஆம்

பல நல்ல கற்றக்கடத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது. (குறள் : 823)

என்று வள்ளுவர் கூறுகின்ற நல்ல வார்த்தைகளைக் கூறி பகைவர்களுடன் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்ய எண்ணி, சூரியாவை அண்ணன் என்று பார்க்காமல் எதிரியாகவே பார்த்து

“உன்னால மாத்திரம் தான் முடியுமா ? என்னால குடும்பத்த நடத்த முடியாதா?” “ஒனக்கே எல்லாம் குடுத்து அழிச்சிட்டா எனக்கும் தங்கச்சிக்கும் என்ன இருக்கு ?”-3
என்று தனக்கே உரிய தனி குரலால் அதட்டியது மட்டுமின்றி
“நம்ப அப்பா, நம்பஅப்பான்னு பேசாத....”4

என சூரியாவை வாய்க்கு வந்தபடி எல்லாம் இழிசொற்களால் ஏசுகின்ற தம்பியை குடி பழக்கத்திலிருந்து மீட்டு அவனையும் சமுதாயத்தில் நல்ல மனிதனாக நடமாட செய்ய வேண்டுமென எண்ணுகிறார்.

பாசமான தங்கை சிவகாமி
உண்மைதான், பார்வதி அம்மா அன்பாய்ப் பேச மறுத்தாலும், தம்பியாகிய சந்திரமூர்த்தி அண்ணனாக மதிக்கவில்லை என்றாலும், தன்னுடைய அண்ணனாகிய சூரிய மூர்த்தியின் மீது தன்னுடைய தந்தைக்கு நிகராக பாசத்துடன் இருப்பவர் சிவகாமி. வீட்டில் சூரியா இல்லாத நேரங்களில் சந்திரா குடித்துவிட்டு அம்மாவை அடிப்பதும், திட்டுவதும் என இருப்பதையும், அதுமட்டும் இன்றி தன்னையும் அடித்து உதைத்துவிட்டதையும் , சின்னையா மாமாவுடன் கூட்டு சேர்ந்து இல்லத்தின் அனைத்து பொருளாதார சூழலையும் முடக்கம் செய்கின்ற எண்ணங்களையும், அவ்வப்போது கண்டு சூரியாவிற்கு தெரியப்படுத்தி ஆறுதல் அடைவள். இத்தங்கையின் அளவில்லாத பாசத்திற்கு சூரியமூர்த்தி அடிமைப்பட்டவராவான். தந்தையின் மறைவிற்குப் பின் அக்குடும்பத்தில் தந்தை ஆசைப்பட்டது போல பொருளாதாரத்தில் உயர்கல்வி கற்று நல்ல பெயருடன், புகழுடன் திகழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகின்ற பாசமலர் இவர்தான்

வாழ்க்கையைத் தேடும் சூரிய மூர்த்தி
எல்லாம் முடிந்துவிட்டது. அனைத்து உண்மைகளும் சூரியமூர்த்திக்குத் தெரிந்த பின்னர் அவனால் ஒரு சிந்தனையுடனும் முழுமனதுடன் தன் வீட்டிற்குச் செல்ல மனம் இடம்தரவில்லை. ஏனென்றால் சின்னையா மற்றும் பார்வதிஅம்மாள், சந்திரா போன்றவர்கள் நடவடிக்கைகள், பேசுகின்ற வார்த்தைகள் அப்படி இருக்கின்றன. இருப்பினும் தன் தந்தை கடிதத்தில் சொன்னது அவ்வப்போது நினைவிற்கு வந்து செல்கின்றது “சூரியா ! நீ என் மகன் தான் ! யார் என்ன சொன்னாலும் என் மகன் தான் ! உன் முகத்தைக் கண்ணாடியில் பார் ! உன் தாத்தா கல்யாண சுந்தரத்தின் சாயலும் என் சாயலும் தெரிய வில்லையா ?”5

சாமிநாதன் சூரியாவை அறிவு நிறைந்த பிள்ளையாக கல்வியில் முதல் மாணவணாக சிறந்து விளங்க வேண்டுமென கண்ணும் கருத்துமாய் வளர்த்தார், ஆம் வள்ளுவர் கூறுவது போல

தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்    (குறள்: 67)

“இன்னைக்கு இது ஒரு ஆரம்பம்தான் சூரியா, ஒரு நாள் நீ பொருளாதாரத் துறையில் டாக்டர் பட்டம் பெற்று வரும் போது, இது தான் என் மகன் டாக்டர் சூரியமூர்த்தி என்று சொல்லும்போது தான் நான் உண்மையாகப் பெருமைப்படுவேன்.”6

என்று கூறிய தந்தையின் கனவினை முறியடிக்க நினைக்கின்ற பார்வதி அம்மாவின் ஆலோசகர் சின்னையா மாமாவின் ஒரு சிறிய எண்ணம் படிப்பிற்கு முட்டுக்கட்டையாய் நின்றது. தந்தையின் நண்பரான கந்தசாமியை அலுவலகத்தில் சந்தித்து படிப்பினைத் தொடர விருப்பமில்லை என்று கூறினார். அதற்கு கந்தசாமி

“சூரியா ! சாமிநாதன் உன் மேல் வச்சிருந்த அன்பு கொஞ்ச நஞ்சமல்ல. உன்னைப் பார்த்துப் பேசிய மறு வினாடியே உயிரை விட்டாருன்னா அது எவ்வளவு இறுக்கமான உறவா இருந்திருக்க வேணும் ?”7 எண்ணிப்பார்

“அப்படிப்பட்ட மனுஷன் உன்னைக் கைவிட்டிடுவானா?”8

“இதோ பார், உங்கப்பா உனக்கு வச்சிட்டுப் போயிருக்கிற சொத்து !”9

என்று சாமிநாதன் இப்படியெல்லாம் ஏதேனும் நடக்கும் என ஏற்கனவே அறிந்து சூரியாவின் பெயரில் வங்கியில் சேமிப்பு கணக்கில் மொத்தம் ரூ. 75,630.25 இருந்ததற்கான புத்தகத்தை வழங்கினார்.

“உன் படிப்புத் தொடர உன் அப்பாவின் ஆவி அனுப்பியிருக்கிற ஸ்காலர்ஷிப்”10

என கந்தசாமி சூரியாவிற்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் மனம் ஏற்க மறுக்கின்றது. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தந்தை தனக்கொன்று எழுதிய கடிதம் கிடைக்கின்றது. அதில் ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க மனம் உருகியது. தந்தை சாமிநாதனின் எண்ண அலைகள் தன்னை வருடியது. அதில் தன்னைப் பெற்ற செல்லம்மாவின் கால் கொலுசு ஒன்று இருந்தது. இவற்றை எல்லாம் கொண்டு நண்பர் கிருஷ்ணனின் துணையுடன் எங்கெங்கோ தேடி அலைந்து தன்னைப் பெற்ற அம்மாவைத் தேடி அலைகின்றார். இருளிலிருந்து கண்களைப் பெயர்க்காமல் சூரியா சொன்னான் “தேடிப் பார்க்கப் போறேன் கிருஷ் !நாளைக்கே ஆரம்பிக்கப் போறேன் !”11

என தன்னைப் பெற்றவளைத் தேடிப்பார்த்தே ஆக வேண்டும். அவர் மட்டும் சாகாமல் இருந்தால் என் கண்ணால் காண வேண்டுமென கிருஷ்ணனுடன் சுங்கப்பட்டாணியில் ஆரம்பித்து கேமரன் மலையில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த செல்லம்மாவைக் கண்டுகொண்டான்.

அம்மாவைத் தனியே சந்தித்துப் பேச தயாராக இருந்தான். வந்தவர் வைத்த விழி வாங்காமல் சூரியாவையேப் பார்த்தார். நடந்த விவரங்களை சூரிய எடுத்துக்கூறினான்.

“அம்மா..... நாந்தாம்மா....நாந்தான் அந்தப் பிள்ளை !

இப்ப தெரியுதா அம்மா ? என் முகம் தெரியுதா ?12

எனக்கூறிய அவன் குரல் தழுதழுத்தது. இதனைக் கேட்ட செல்லம்மா சட்டெனப் பற்றி வாரி அணைத்தார். கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. சூரியாவை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மனம் ஏங்குகின்றது. ஆனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடும் என எண்ணி மனம் வேதனை அடிக்கின்றார்.

இருபத்தைந்து வருட இடைவெளியை அந்தச் சில மணி நேரங்களில் அடைத்துவிட இருவரும் அவசரப்பட்டார்கள்

“மறுபடி ஒன்னப் பார்ப்பேனா கண்ணு ?”13

என்று பிரியாவிடைதர “நான் வெளிநாட்டுக்குப் படிக்கப் போகிறேன்”, என்று சொல்லி விட்டு, முகவரியும் தந்துவிட்டு சுங்கை பாலாஸ் தோட்டக் குன்றுகளிலிருந்து இறங்கி வந்து பாயான் லெப்பாஸ் விமான நிலையத்திலிருந்து இலண்டன் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பினைத் தொடரப் புறப்படுகின்றான். விமானத்தில் கண்களை மூடி தன்னை இந்த அளவிற்கு உயர்த்திய அப்பாவை நினைத்துப் பார்த்தான். அவருடைய கடித வரிகள் மனதுக்குள் ஓடின

“சூரியா, நீ அறிவுள்ள பிள்ளை, அபூர்வமான பிள்ளை, என் பரம்பரைப் பெருமையை, உன் தாத்தாவின் புகழை நீதான் நிலை நிறுத்துவாய். சூரியா ! உனக்கு என் ஆசீர்வாதங்கள்”14

முடிவுரை:
இவ்வாறாக இந்தத் “தேடியிருக்கும் தருணங்கள்” என்னும் நாவல் சமுதாயத்தில் சூரியாவைப் போன்றவர்கள் நல்ல குடும்ப உறவுகளையும், அவற்றில் கிடைக்கும் அன்பு, பாசம் , மனநிறைவு போன்றவற்றுடன் தங்களுடைய கல்வி, பொருளாதார தேவைகள போன்றவற்றை நிறைவு செய்து கொள்ளவும் இவற்றை எல்லாம் தேடி அவை தனக்கு கிடைக்கும் தருணங்களை எதிர் நோக்குதலையும் முனைவர் ரெ. கார்த்தேகேசுவின் நாவல் வரிகள் படிப்பவர்களையும் மேலும் தேடச்செய்கின்றது

துணை நூற்பட்டியல்
* தனிப்பாடற் றிரட்டு மூலம், பி.நா. சிதம்பர முதலியார் & பிரதர்ஸ்,
* மலேசியா, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் (2005), மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ், சென்னை 24.
* ரெ. கார்த்திகேசு, தேடியிருக்கும் தருணங்கள், சீதை பதிப்பகம், சென்னை – 5.
* கலித்தொகை, முல்லை பதிப்பகம், சென்னை – 40.
* புறநானூறு, புலவர்.கோ.இளையபெருமாள், மாணிக்கம் பதிப்பகம் , சென்னை
* மு. வரதராசனார் – திருக்குறள் தெளிவுரை
* பி.எஸ். ஆச்சார்யா – திருக்குறள், நர்மதா பதிப்பகம், சென்னை – 17.

குறிப்புகள்:
1 மேலது ப – 47
2 மேலது ப - 60
3 மேலது ப - 61
4 மேலது ப - 61
5 மேலது ப - 113
6 மேலது ப - 4
7 மேலது ப - 97
8 மேலது ப - 97
9 மேலது ப - 97
10 மேலது ப - 98
11 மேலது ப - 147
12 மேலது ப - 251
13 மேலது ப - 255
14 மேலது ப - 262

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - பெ.பழனிவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் – 7. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R