அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி (02-12-2017) சனிக்கிழமை, சிட்னியில் கலை - இலக்கியம் 2017 நிகழ்ச்சி நடைபெறும். சிட்னியில் Blacktown என்னுமிடத்தில் அமைந்த Sydwest Multicultural Services மண்டபத்தின் ( 1/ 125, Main Street, Blacktown, N.S.W.2148) முதலாவது தளத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் கவிஞர் எஸ். வைதீஸ்வரன், இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள எழுத்தாளரும் செங்கதிர் இதழின் ஆசிரியருமான த. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுவர். மெல்பன், கன்பரா மற்றும் சிட்னியைச்சேர்ந்த எழுத்தாளர்களும் ஒன்றுகூடும் இந்நிகழ்ச்சியில் நூல்களின் அறிமுகம், கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறும்.

நிகழ்ச்சிகள்:
நூல் அறிமுகம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு
சந்திரிக்கா சுப்பிரமணியம்: சரவணன் எழுதிய கண்டிக்கலவரம் - ( வரலாறு)
கார்த்திக்வேல்சாமி: நடேசன் எழுதிய நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்)
கலையரசி சின்னையா: முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் (புனைவுசாரா இலக்கியம்)
எஸ். எழில்வேந்தன்: 'செங்கதிரோன்' கோபாலகிருஷ்ணன் எழுதிய விளைச்சல் (காவியம்)

இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஊடகங்களும் வாசிப்பு அனுபவங்களும் என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகள் சார்ந்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R