அ.ந.ககுயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?  எனது அ.ந.க பற்றிய முகநூற் பதிவொன்று சம்பந்தமாகக் கருத்துத்தெரிவித்திருந்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் 'ஒரு சந்தேகம் .குயுக்தியார் எஸ் டி சிவநாயகம் இல்லையா ?' என்றொரு கேள்வி கேட்டிருந்தார்.குயுக்தி கேள்வி -பதில் பகுதியை உருவாக்கியவர் யார்? எழுத்தாளர் அ.ந.கந்தசாமியா? பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகமா?

எனது அ.ந.க பற்றிய முகநூற் பதிவொன்று சம்பந்தமாகக் கருத்துத்தெரிவித்திருந்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் 'ஒரு சந்தேகம் .குயுக்தியார் எஸ் டி சிவநாயகம் இல்லையா ?' என்றொரு கேள்வி கேட்டிருந்தார்.

அக்டோபர் 1961 'மரகதம்' சஞ்சிகையில் வெளியான, ராம்- ரஹீம் எழுதிய 'ஒட்டிப்பிறவாத இரட்டையர் அ.ந.க - எஸ்.பொ' என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையில் அ.ந.கந்தசாமியே குயுக்தியார் கேள்வி - பதில் பகுதியை உருவாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எஸ்.டி.சிவநாயகம் சுதந்திரனின் ஆசிரியராக இருந்த காலகட்டம் 1952 – 1961. ஆனால் அ.ந.க.வின் நானா வெளியான காலகட்டத்தில் (4-11-1951) 'கேட்டுப்பாருங்கள் குயுக்தி' என்னும் கேள்வி பதில் சுதந்திரனில் வெளியாகியுள்ளது.

இதிலிருந்து எஸ்.டி,சிவநாயகம் குயுக்தி கேள்வி-பதில் பகுதியை ஆரம்பித்திருக்கச் சாத்தியமில்லை. அவர் ஆசிரியராக விளங்கிய காலகட்டத்தில் அப்பகுதியைத் தொடர்ந்திருக்கவே சாத்தியமுண்டு. இதன்படி அ.ந.கந்தசாமியே குயுக்தி கேள்வி - பதில் பகுதியைச் சுதந்திரன் பத்திரிகையில் உருவாக்கியவராகயிருக்க வேண்டும்.

அ.ந.க சுதந்திரனிலிருந்த காலகட்டத்தில் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் மொழிபெயர்ப்பு , புத்தகவிமர்சனம் மற்றும் குயுக்தி பதில் எனப்பன்முகப் பங்களிப்பு செய்துள்ளார். அது பற்றி அ.ந.க.வின் சுதந்திரன் காலகட்டம் என்னும் தலைப்பிலான ஆய்வு செய்யப்படுவது முக்கியம்.  4.11.1951 சுதந்திரனில் வெளியான குயுக்தி பதில்களுக்கான மற்றும் மரகதம் சஞ்சிகையில் வெளியான கட்டுரைக்கான சான்றுகள் கீழே. இங்குள்ள சுதந்திரன் குயுக்தி கேள்வி-பதில் பகுதியில் வாசகர் ஒருவர் அ.ந.க.வின் நானா பற்றியும் கேள்வியொன்றினைக் கேட்டுள்ளதை அவதானியுங்கள்

- 4.11.1951 சுதந்திரன் பத்திரிகையில் வெளியான குயுக்தி கேள்வி - பதில் -

- 4.11.1951 சுதந்திரன் பத்திரிகையில் வெளியான குயுக்தி கேள்வி - பதில் -

அக்டோபர் 1961 'மரகதம்' சஞ்சிகையில் வெளியான, ராம்- ரஹீம் எழுதிய 'ஒட்டிப்பிறவாத இரட்டையர் அ.ந.க - எஸ்.பொ' என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையில் அ.ந.கந்தசாமியே குயுக்தியார் கேள்வி - பதில் பகுதியை உருவாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

- அக்டோபர் 1961 'மரகதம்' சஞ்சிகையில் வெளியான, ராம்- ரஹீம் எழுதிய 'ஒட்டிப்பிறவாத இரட்டையர் அ.ந.க - எஸ்.பொ' என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையில் அ.ந.கந்தசாமியே குயுக்தியார் கேள்வி - பதில் பகுதியை உருவாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது -


'சுதந்திரன்' பத்திரிகையில் அ.ந.க: எமிலிசோலாவின் 'நானா' (தமிழில் அ.ந.க)

அ.ந.கந்தசாமி அவர்கள் சுதந்திரன் பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் எமிலி சோலாவின் 'நானா' நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 19 அத்தியாயங்கள் சுதந்திரனில் வெளியாகின. அவை என்னிடமுள்ளன.

சுதந்திரனில் அவரிருந்த காலத்தில் கலையரசன், கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர் மற்றும் அ.ந.க, அ.ந.கந்தசாமி ஆகிய பெயர்களில் கதை, கட்டுரை, கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு எனப் பல்வகை ஆக்கங்களை எழுதியுள்ளார். மேலும் 'குயுக்தியார்' பதில்கள் இவரது காலத்தில் புகழ்பெற்றவையாக இருந்துள்ளதையும் அறிய முடிகின்றது. இவரே குயுக்தியார் கேள்வி - பதில் பகுதியை உருவாக்கியதாக 'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'ஒட்டிப்பிறவாத இரட்டையர் அ.ந.க - எஸ்.பொ' என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவல், கவிதை, நாடகம், சிறுகதை, விமர்சனம் & மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால்பதித்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமியை அவரது பன்முகப்புலமை காரணமாகவே அறிஞர் அ.ந.கந்தசாமி என அழைத்தார்கள். அவரது புலமையில் மதிப்பு வைத்த பேராசிரியர் க.கைலாசபதி தனது 'ஒப்பியல் இலக்கணம்' நூலினை அ.ந.கந்தசாமி அவர்களுக்கே சமர்ப்பணம் செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் மிகுந்த பாண்டித்தியம் வாய்ந்தவர் அ.ந.க. இவரது ஆங்கிலக் கட்டுரைகள் பல டிரிபியூனில் வெளியாகியுள்ளன. அ.ந.க.வின் ஆங்கிலக் கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகை, பத்திரிகைகளில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றைச் சேகரிப்பது முக்கியமான பணிகளிலொன்று. டிரிபியூனில் வெளியான பின்வரும் கட்டுரைகள் என்னிடமுள்ளன.

1. Was Hitler Another Dr. Faustus? (Tribune , sep. 11, 1965)
2. On Pinces and Statecraft (Valluvar -2; Tribune)
3. Horders, Blakmarketeers & Smugglers (From the Pages of Arthasastra; Tribune Dec. 4, 1965)
4. What id Unique ,Three - sided genius (Valluvar -1 ; Oct 16, 1965)

''சுதந்திரன்' பத்திரிகையில் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் 'நானா' வெளியானபோது பலத்த வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு இலங்கையிலும், தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. 'நானா' நாவலின் மொழிபெயர்ப்பு பற்றி வெளியான வாசகர்கள் கடிதங்களையும், கலையரசன் என்னும் பெயரில், 'நானா கதை ஆபாசமே அல்ல. சிருங்காரம் ஆபாசமா?' என்னும் தலைப்பில், அ.ந.க எழுதிய 'நானா' பற்றிய விளக்கக் கட்டுரையினையும் இங்கு காணலாம். 30.12.51 அன்று வெளியான சுதந்திரனில் வெளியான கட்டுரை மற்றும் கடிதங்கள் இவை

'சுதந்திரன்' பத்திரிகையில் அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் 'நானா' வெளியானபோது பலத்த வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு இலங்கையிலும், தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. 'நானா' நாவலின் மொழிபெயர்ப்பு பற்றி வெளியான வாசகர்கள் கடிதங்களையும், கலையரசன் என்னும் பெயரில், 'நானா கதை ஆபாசமே அல்ல. சிருங்காரம் ஆபாசமா?' என்னும் தலைப்பில், அ.ந.க எழுதிய 'நானா' பற்றிய விளக்கக் கட்டுரையினையும் இங்கு காணலாம். 30.12.51 அன்று வெளியான சுதந்திரனில் வெளியான கட்டுரை மற்றும் கடிதங்கள் இவை

மேற்படி பதிவுக்கான முகநூல் எதிர்வினை:

K S Sivakumaran: I remember my writing a review of his play Matha Maatrm in Tribune in 1961 or 1962..I must trace the article. I was introduved to ANK by M S M Iqbal at the then Information Department..he was smartly dressed and a very senior writer. I was working as the Thami Translator and getting introduced to Lanjkan Thamil writers.ANK from the first instance he took me as his friend although i was only 25 years then,immature and boyish.Sillayoor Selvarajan,.M S M Iqbal .Ramanathan, Rainbow Kanagaratnam., S Ganeshalingan,. K Kailasapathy,K Sivathamby were the people who opened my eyes to understand contemporary Thamil Literature At a priod where I only knnw western Literature.

K S Sivakumaran:  A N Kanthasamy appreciated my review of his play.From then my friendship was continuous.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R