வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்  பேரவையின் 32ஆவது தமிழ் விழா

அன்புடையீர் வணக்கம்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்  பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது   உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மற்றும்  சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன் விழா நிகழ்வுகள்  முப்பெரும் விழாவாக சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7 வரை மிகச்சிறப்பாகக்  கொண்டாடப்பட்டன.  இவ்விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து சிறப்பித்த 6000- த்திற்கும் மேலான தமிழர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் மிக்க நன்றி உரித்தாகுக‌. வட  அமெரிக்கத் தமிழர்  வரலாற்றில் இந்த நிகழ்வு, ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது.  உலகத்தமிழர்கள் தமிழின்பால் கொண்டுள்ள அன்பையும், பிணைப்பையும் இந்த முப்பெரும் விழா உலகிற்குப் பறைசாற்றி உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மொரிசியஸ் நாட்டுக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பின் முன்னாள் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை, தமிழ் நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை  அமைச்சர் மாண்புமிகு மா.பா.பாண்டிய ராஜன்,  அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி, கனடிய ப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கேரி ஆனந்த சங்கரி, யாழ்ப்பாண மாநகரத்தந்தை  திரு. இமானுவேல் ஆனல்ட், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்  திரு. சு. வெங்கடேசன், தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள், தமிழக அரசு மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல உரித்தாகுக.

பேரவை விழா மற்றும் 10வது  உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்த பொருளுதவி செய்த  புரவலர்கள், பேராளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மிக்க நன்றி. கொடையாளர்கள்  உதவி இல்லை என்றால் இந்த முப்பெரும் விழாவை நடத்துவது சாத்தியமல்ல. அதற்காக அரும்பாடு பட்ட விழா ஒருங்கிணைப்பாளர் திரு. வீரா வேணுகோபால் மற்றும் திரு. சிவா மூப்பனார் ஆகியோருக்கும் நன்றி. முப்பெரும் விழாவில் 5.5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றை நிறுவ முழு உதவி செய்த தொழிலதிபர்   வி. ஜி. சந்தோசம் அவர்களுக்கு  விழாக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

10ஆவது உலத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு, உலகெங்கிலுமிருந்தும்  தமிழறிஞர்கள் அனுப்பித் தந்த‌ கட்டுரைகள் தமிழை அறிவு சார்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உலக அரங்கில் தமிழ் மற்றும் தமிழரின் தொன்மையை முன்னிறுத்த உதவியுள்ளன. தமிழர் மட்டுமல்லாது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து  பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும்  தமிழ் ஆராய்ச்சியில் கலந்து கொண்டு, தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துக் கூறியது  சிறப்பு.  இவ்விழாவிற்கு வந்திருந்த அனைத்து தமிழறிஞர்களுக்கும் எத்துணை நன்றிகள்  கூறினாலும் போதாது.  இந்தப் பணியைச் செவ்வனே நடத்தி முடிக்க  அரும்பாடுபட்ட  உலகத்  தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் டான் சிறீ மாரிமுத்து,  உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் துணைத் தலைவர் முனைவர்  பொன்னவைக்கோ  மற்றும் 10ஆவது உலகத்தமிழாய்ச்சி மாநாட்டு அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம. இளங்கோவன் மற்றும் கட்டுரை தேர்வுக்  குழுத் தலைவர் புலவர் பிரான்சிஸ் சவரி முத்து அவர்களுக்கும்,  உழைத்த தன்னார்வத்  தொண்டர்களுக்கும் நன்றி சொல்லப் பேரவை கடமைப் பட்டுள்ளது.

உலகத்தமிழ் தொழில் முனைவோரை ஒன்றிணைக்கும் பாலமாக மிகச் சிறப்பாக நடைபெற்ற உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும், அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. சிவா மூப்பனார் அவர்களுக்கும், அதில் கலந்து கொண்ட  தொழில்முனைவோருக்கும்.  சிறப்புப் பேச்சாளர்களுக்கும்  நன்றிகள் பல. பேரவையின் இந்த முன்னெடுப்பு உலகெங்கிலும்   சிறந்த தமிழ்  தொழில் முனைவோரை உருவாக்கவும்,  அவர்களிடையே தொடர்பை ஏற்படுத்தவும் உதவும் என்பதில் ஐயமில்லை.

இவ்விழாவில்  பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் சங்கங்களின் சங்கமம்,  முரசு சேர்ந்திசை, விநாடி  வினா நிகழ்ச்சிகளில் பெரும் ஆர்வத்தோடு பங்கேற்ற பேரவையின் உறுப்பினர் சங்கத்தினர்க‌ள் அனைவருக்கும் பேரவையின் பாராட்டுகள். அது மட்டுமன்றி இளையோர் பலரை பல்வேறு  போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்து, அதை நடத்த உதவியும் செய்து இளையோரின் பங்களிப்பை அதிகப் படுத்திய தமிழ்ச்சங்கங்களுக்கும் நன்றி.  உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு  ஆராய்ச்சியாளர்கள் வருகைக்குப் பொருளுதவி செய்த சங்கத்தினருக்குப் பேரவையின்  பாராட்டுகள்.

உலகெங்கிலுமிருந்து வந்திருந்த 6000க்கும் மேற்பட்டோரை வரவேற்று , பல நூறு நிகழ்வுகளை     ஒருங்கிணைத்து , நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இப்பெரு நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவது என்பது எளிமையான செயல்பாடல்ல.  முழு நேரப் பணியாளர்கள் இல்லாமல் முழுமையாகத்  தன்னார்வலர்களே அனைத்துச் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்துவது நினைத்துப் பார்க்க முடியாத கடினமான செயல். இந்த அரிய பணிக்காக  சிகாகோ தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த  பல நூறு தன்னார்வலர்கள் இரவு, பகல் பாராது, குடும்பம் குடும்பமாகப் பல நாட்களாக அயராது உழைத்தனர். அது போன்ற தன்னார்வலர்களின் உழைப்பே பேரவை விழாக்களின் வெற்றிகளின் அடித்தளம்.  தமிழின் பால் அவர்களுக்கு இருக்கும் அன்பும், தமிழ் பண்பாட்டின் மீது  அவர்களுக்கு இருக்கும் பிடிப்புமே இந்த விழாவிற்குக் கிடைத்த வெற்றி. தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டிற்காக  அரும்பாடு பட்டு உழைத்த அனைத்து தன்னார்வலர்களுக்கும், அவர்களை  ஒருங்கிணைத்து பணியாற்றிய அனைத்துக் குழுத்  தலைவர்கள் மற்றும் குழுவினருக்கும், அவர்களோடு இணைந்து பணியாற்றிய பிற தமிழ்ச்சங்கத் தன்னார்வலர்களுக்கும்   விழாக்குழுவினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். சிகாகோ தமிழ்ச்  சங்கத் தலைவர் திரு.மணி குணசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி.

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குப் பொருளுதவி அளித்த தமிழ் நாடு அரசிற்கும், வாழ்த்துச்    செய்தி அனுப்பிய பாரதப்  பிரதமர் திரு. மோடி அவர்களுக்கும், தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்த பேரவைத் தமிழ் விழாவில் அட்லாண்டா நகரில் அடுத்த ஆண்டு சந்திப்போம்.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
பேரவைச் செயற்குழு  மற்றும் 2019 தமிழ் விழா வழிநடத்தும்
குழு சார்பாக (on behalf of FeTNA Board and 2019 FeTNA
Convention Steering Committee)
சுந்தர் குப்புசாமி, தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R