ஸ்ரீரஞ்சனிபல்வேறு கனவுகளுடன் திருமணபந்தத்தில் இணைபவர்கள் தங்களின் கனவுகளுக்கேற்ற வாழ்க்கை ஒன்று அமையாதபோது அதைச் சகித்துவாழக் கற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஒருவரை ஒருவர் இம்சிக்காமல் பிரிந்துகொள்கிறார்கள். இதுதான் சகமனித நேசிப்பு இருப்பவர்களின் செயலாக இருக்கிறது. ஆனால், சுயநலமிக்கவர்களோ தாம் அழிந்தாலும் பரவாயில்லை, கூடவாழவந்தவர் அழியவேண்டுமென்ற தன்முனைப்புடன் செயற்படுகிறார்கள். உலகளவில், கொலைசெய்யப்பட்ட பெண்களில் சுமார் 40 சதவீதமானோர் அவர்களது முன்னாள் அல்லது தற்போதைய துணைவரினாலேயே கொல்லப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு. இப்படி நிகழ்த்தப்படும் இந்தப் படுகொலைகளில் பெரும்பாலானவை அந்தப் பந்தத்தைப் பெண் உடைக்கும்போது அல்லது அவ்வாறு செய்வதற்கான தனது விருப்பத்தை அறிவிக்கும்போதே நிகழ்கின்றன, என்கிறார் Aaron Ben-Zeév Ph.D.

பெண்களின் கொலைகளுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அவை இரண்டு பொதுவான அனுமானங்களைப் பகிர்ந்து கொள்கின்றன:

(1) பெண் தன்னுடைய உடைமையென கருதும் ஆணின் மனப்பாங்கு. அதனால் பெண் மீது பாலியல்ரீதியான பொறாமையும் கோபமும் அந்த ஆணுக்கு உருவாகிறது.
(2) பெண்ணின் மீது ஏற்கனவே ஆண் நடாத்திய வன்முறைகளின் உச்சக்கட்டமாக கொலை நிகழ்கிறது

மீண்டும் சேர்தலுக்கான வழி இல்லையென்று உணரும்போது அந்தப் பெண் மீதான ஆணின் கோபமும் பொறாமையும் மிகவும் தீவிரமடைகின்றன, கொலைசெய்யும் திட்டம் உருவாகிறது. தெளிவாகத் திட்டமிட்டே அந்த ஆண்கள் இந்தக் கொலைகளைச் செய்கின்றார்கள். இப்படியான கொலைகளுக்கு முன்பாக அத்தனை பெண்களும் அந்த ஆண்களால் பின் தொடரப்பட்டிருக்கிறார்கள், விரும்பத்தகாத செய்திகளை அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார்கள், உடமைகளை இழந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தக் கொலைகளை எதிர்பாராத செயல்கள் எனக் கூறமுடியாது. ஆண் கட்டுப்பாட்டை இழப்பதால் அல்லது ஆணின் மனநிலை பாதிக்கப்படுவதால்தான் இவை நடக்கின்றன என்றும் கூறமுடியாது. இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை நன்கு திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே செய்யப்படுகின்றன. தன்னை அழித்தாலும் பரவாயில்லை மற்றவரை அழிக்கவேண்டுமென்ற மனநிலையையின் உக்கிரமே இங்கு காணப்படுகிறது என்ற ஆய்வை நிரூபிக்கும் ஒரு கொலையாளியின் வாக்குமூலத்தை நான் நேரடியாகவே கேட்டிருக்கிறேன்.

எனவே, இவ்வகையான கொலைகளுக்கான ஆபத்துக்களை அடையாளம் காணலும், அவற்றைத் தூண்டக்கூடிய தூண்டிகளை இனம்காணலும், அதிலிருந்து தப்பும் பாதுகாப்பு வழிகளை அறிதலும் மிகவும் அவசியமானது. பின்வரும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.

உங்களின் துணைவர் அல்லது முன்னைய துணைவர்:

1. அவரது முஷ்டியால் அல்லது உங்களை காயப்படுத்தக்கூடிய எதாவது ஒரு பொருளால் உங்களைத் தாக்கினாரா?
2. உங்களைக் காயப்படுத்தக்கூடிய ஏதாவது பொருளை உங்கள் மீது எறிந்தாரா?
3. உங்களுக்கு வலிக்கச்செய்யும் வகையில் சுவருடன் மோதுமாறு உங்களைத் தள்ளினரா?
4. உங்களை அடித்தாரா / உதைத்தாரா?
5. உங்களின் கழுத்தை நெரித்தாரா?
6. துப்பாக்கியை அல்லது கத்தியைக் காட்டி உங்களை அச்சுறுத்தினாரா?
7. உங்களை மிரட்டுவதன் மூலமோ அல்லது உங்களைத் துன்புறுத்துவதன் மூலமோ பாலியல்ரீதியான செயல்பாடுகளைச் செய்யும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறாரா?

மேலுள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என இருந்தால், இத்தகைய செயல்களை எவை தூண்டுகின்றன, எப்படி இவற்றிலிருந்து உங்களைப் பாதுகாப்பது என முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்கள் துணைவர்தானே, உங்களைக் கொல்லமாட்டார் என ஒருபோதும் நம்பாதீர்கள்! முரண்பாடுகளின்போது வன்முறையைக் காட்டும் பதிலளிப்பு, பச்சாத்தாபம் மற்றும் இரக்கமற்ற தன்மை, இலகுவில் ஆத்திரப்படல், அதிகப்படியான கட்டுப்பாடுகள் போன்ற நடத்தைகளைக் காட்டும் துணைவர்களுடன் வாழும் பெண்களுக்குக் கொலைக்கு உட்படும் ஆபத்து இருக்கலாம்.

பிரிவினையை ஏற்காதபோது, வெறித்தனமான பொறாமையைக் காட்டும்போது, வன்முறையின் தீவிரம் அதிகரிக்கும்போது, வீட்டிலிருக்கும் செல்லப்பிராணிகளுக்கு எதிராக கொடுமைசெய்யும்போது, பின்தொடரும்போது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தும்போது, முக்கியமாக நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாதபோது இந்த ஆபத்து மோசமடைகிறது என உணருங்கள். 

இப்படியான நிலைமைகள் இருந்தும் சமூக, பொருளாதாரக் காரணங்களினால் சேர்ந்துவாழ வேண்டிய பெண்களும் சரி, விட்டுவிலகும் பெண்களும் சரி கொலைசெய்யப்படுவதை நாங்கள் பார்க்கிறோம். டிசம்பர் 2017இல், ஸ்காபோரோவில் ஒரு தமிழ்ப் பெண் வன்முறையின் பாதிப்புக்குள் வாழ்ந்து மடிந்தாள், செப்ரெம்பர் 2019இல், இதே ஸ்காபோரோவில் ஒரு தமிழ் பெண் வன்முறையை விட்டு வெளியேறி மடிந்தாள்.

திருமணம் என்பது ஒரு அந்தஸ்சு ஆகப் பார்க்கப்படும் நிலை, உடைவு ஏற்பட்டதும் குறித்த மனிதரைத் தோல்வி அடைந்த ஒரு மனிதராக உணரவைக்கிறது. மேலாக ஆண் என்ற ஆணவமும் அகம்பாவமும் மனைவி விட்டுவிட்டுப் போவதை ஏற்கவிடுவதில்லை. இது தமிழ் சமூகத்தில் மட்டுமன்றி எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவான பிரச்சினையாகவே உள்ளது. எனவே சமூக மாற்றம்தான் அவசியமானது. 

கொலைசெய்யப்பட்டது எத்தனை மோசமான ஒரு கோரச் செயல் எனப் பார்க்காமல் அதைச் செய்வதற்கு அந்த ஆணைத் தூண்டியது என்னவோ எனப் பெண் மேல் தவறு சுமத்தும் சமூகம் முதலில் திருந்த வேண்டும். ஆண் பிள்ளைகள் உள்ள தாய்மார் எல்லோரும் பெண்கள் இரண்டாம்தர மனிதரல்ல என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆண்கள் அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்தை இனம்கண்டு அதை மாற்றுவதற்கான வழிவகைகள் ஏதாவது செய்யவேண்டும்.

இனியும் இப்படியான கொலைகள் நிகழாமல் இருப்பதற்காக வன்முறைக் கலாசாரத்தை அழிப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்படுவோம் என உறுதியெடுப்போம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R