
1. Puthiyavan Siva <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Oct. 28 at 1:14 p.m.
வணக்கம் சான்றீர், எனது ஆய்வு மற்றும் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு பதிவுகள் இணைய இதழ் அங்கீகாரம் வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன். தங்கள் அங்கீகாரத்தால் கிட்டும் ஊக்கத்தைப் பயன்படுத்தி இலக்கியத்தின் சமூகவிஞ்ஞான இலட்சியங்களுக்கு எனது பங்களிப்பை செலுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நன்றி சான்றீர்.
என்றும் அறிவன்புடன்
புதியவன்
2. Letchumanan Murugapoopathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Oct. 29 at 6:02 p.m.
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு குழந்தை சுர்ஜித்துக்காக நீங்கள் வரைந்த கண்ணீர் ஓவியம் படித்து உருகிப்போனேன். பெற்றோரின் கவன ஈனம் அரசினதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருக்கும் மெத்தனங்களும்தான் இத்தகைய இழப்புகளுக்கு அடிப்படை!
ஆழ்துணை கிணறுகளை சுற்றி வேலி அமைத்து - அல்லது அவற்றை நிரந்தரமாக மூடியாவது உயிரிழப்புகளை தடுக்கமுடியும். மேலே இருக்கும் இணைப்பையும் பார்க்கவும். அறம் என்ற திரைப்படத்தையும் நீங்கள் பார்த்திருக்கலாம். நன்றி.
அன்புடன்
முருகபூபதி
3. Rajalingam Velauthar <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Oct. 29 at 5:17 p.m.
ஈரம் வற்;றிவிட்ட நிலையில் இதயத்தைத் தொடும் குரல். நெஞ்சைத் தொடுகிறது.
- தீவகம் வே.இராசலிங்கம்
4.
1. Sunil Joghee <suniljogTo:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Oct. 23 at 1:29 p.m.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். முனைவர் கோ. சுனில்ஜோகி ஆகிய நான் கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். நீலகிரி மலைவாழ் மக்களான படகர் இன மக்களை பற்றியும் தோடர், குறும்பர் போன்ற இதர பழங்குடி மக்களைப் பற்றியும் 13 ஆண்டுகள் ஆய்வு அனுபம் பெற்றுள்ளேன். இது சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். மேலும் கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புத் திறன்களையும் நான் பெற்றுள்ளதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். என் ஆய்வு சார்ந்த தகவல்களை, என் படைப்புகளை உலகம் முழுவதற்கும் பகிர விழைகிறேன். நன்றி....
[ நன்றி. உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். 'பதிவுகள்' அவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஆவலாகவுள்ளது. எழுத்தாளர் பிலோ இருதயநாத் பல வருடங்களுக்கு முன்னர் இந்தியப் பழங்குடி மக்களைப்பற்றி எழுதிய சஞ்சிகைக் கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன. மானுடவியற் துறையில் இவை போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. உங்கள் பணி பாராட்டுக்குரியது. - ஆசிரியர், பதிவுகள்.]
5. Mani Kannan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Sep. 3 at 11:29 a.m.
சான்றீர் வணக்கம், தங்களது ‘பதிவுகள்’ இணைய இதழ் தற்காலத்தின் பரிணாமத்திற்கு ஏற்றாற் போல் இயங்கி வரும் முறைமை மகிழ்ச்சியைத் தருகிறது.
நன்றி....
முனைவர் இரா. மணிக்கண்ணன்,
உதவிப்பேராசிரியர்,
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி,
விழுப்புரம்.
அலைபேசி; 9629488271
மின்னஞ்சல்;
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
[ உங்கள் கனிவான கருத்துகளுக்கு நன்றி. - ஆசிரியர், பதிவுகள் ]
6. Kuru Aravinthan <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Aug. 1 at 10:03 p.m.
அன்பின் கிரிதரன், வணக்கம்.
தங்களின் 'சுமணதாஸ்' பாஸ் பல விடயங்களை எடுத்துச் சொல்லும் குறுநாவலாக இருக்கின்றது. இயற்கை சார்ந்த மரம், குளம், மிருகம், பறவை என்று அந்த மண்ணில் வாழ்ந்தவர்களோடு இணைந்த அத்தனையும் பாத்திரங்களாகி இருக்கின்றன.
கதையில் வருவது போல, அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்குவது அனேகமன சிறுவர்களின் பழக்கமாக அக்காலத்தில் இருந்தது. நானும் இப்படித்தான் அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு இருட்டியதும் தென்னிந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி பறக்கும் மாம்பழ ஒளவால்களை நிலவு வெளிச்சத்தில் எண்ணியிருக்கின்றேன். இலுப்பம்பழக் காலத்தில்அதிகமாக பறந்து வரும் இவை காலையில் திரும்பிச் சென்று விடுமாம்.
குறுநாவல் மூலம் பல விடயங்களைத் தெரிய வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
குரு அரவிந்தன்.
[ நன்றி குரு அரவிந்தன் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு. - ஆசிரியர், பதிவுகள்]
7. Rajalingam Velauthar <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Aug. 3 at 9:04 p.m.
சுமணதாஸ் பாஸ் என்ற குறுநாவல் தன்னில் பெறுமானம் கொண்டது உங்கள் எழுத்து. பெருமை கொள்கின்றேன். முழுமையாக வாசிக்கத் தூண்டிய உங்கள் எழுத்து தொடரட்டும். நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் தீவகம் வே.இராசலிங்கம்
[ நன்றி உங்கள் கருத்துகளுக்கு. - ஆசிரியர், பதிவுகள்]
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems