- வ.ந.கிரிதரன் -- தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -

தொகுப்புகள்

சிறுகதைகள்

1. சிறுகதை: 'ஒரு மா(நா) ட்டுப் பிரச்சினை' - வ.ந.கிரிதரன் - மித்ர பதிப்பக வெளியிட்ட 'பனியும், பனையும்' சிறுகதைத்தொகுப்பு. புகலிடத்தமிழர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியது.
2. சிறுகதை: 'சாவித்திரி ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் குழந்தை' - ஞானம் சஞ்சிகை (இலங்கை) வெளியிட்ட புலம்பெயர்தமிழர்களின் சிறப்பிதழ் (சிறப்பிதழ் என்றாலும் இது தனியான தொகுப்பு நூல்.)
3. அறிவியற் சிறுகதை 'நான் அவனில்லை' - வ.ந.கிரிதரன் - (அமரர் சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடாத்திய - உலக ரீதியிலான - அறிவியற் சிறுகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான ரூபா 5000 பரிசினைப் பெற்ற சிறுகதை. ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட அறிவியற் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.)

கட்டுரைகள்:
1. "அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!" - வ.ந.கிரிதரன் - (வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாண்டு இலக்கியப்பணியினைச் சிறப்பிக்கும் முகமாக வெளியான 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும் , விவாதங்களும்' தொகுப்பு நூலில் இடம்பெற்ற கட்டுரை)
2. 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்' - வ.ந.கிரிதரன் - 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை.
3.- 'அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' - வ.ந.கிரிதரன் - கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை.
4. 'கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!' - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் பென்னேஸ்வரன் டெல்லியில் வெளியிட்ட 'வடக்கு வாசல்' சஞ்சிகையின் 'இலக்கிய மலர் 2008' இல் வெளியான கட்டுரை:)
5. 'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!' - வ.ந.கிரிதரன் - (ஊடகவியலாளர் செந்தில்நாதனின் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை)
6. 'நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்' - வ.ந.கிரிதரன் - (அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் - சொ.அ.டேவிட் ஐயா - சமூக இயல் பதிப்பகம், ஐக்கிய இராச்சியம்)

கவிதைகள்:
1. கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்' - (எழுத்தாளர் மாலன் இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை' தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.)
2. கவிதை " குதிரைத் திருடர்களே!" - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் தொகுத்த சமகால இருமொழிக்கவிதைத்தொகுப்பான a 'Fleeting Infinity (VOL 1) ((கணநேர எல்லையின்மை) அநாமிகா அல்ஃபபெட்ஸ் (Anaaamikaa alphabets) பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.)
3. கவிதை: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் யோ.புரட்சி - இலங்கை - தொகுத்த 1000 தமிழ்க் கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.)

சிறப்பு மலர்களில் வெளியான படைப்புகள்:

சிறுகதைகள்:
1. 'சொந்தக்காரன்' - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
2. வீட்டைக் கட்டிப்பார் - ஜீவநதி சஞ்சிகை (இலங்கை) வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் (புரட்டாதி 2012) வெளியான சிறுகதை.
3. சிறுகதை: அவன் 'ஐசிஎம்'மில் வேலை செய்கின்றான்! - வ.ந.கிரிதரன் - (- எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான கூர் 2012' கலை இலக்கிய மலரில் வெளியான சிறுகதை.)

கட்டுரைகள்:
1. 'புலம்பெயர்தலும், புலம்பெயர் இலக்கியமும், தமிழரும்'. - வ.ந.கிரிதரன் - (எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ஆண்டுதோறும் வெளியாகும் கூர் 2011(கனடா) இலக்கிய மலரில் வெளியான கட்டுரை:)
2. அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய குறிப்புகள் - வ.ந.கிரிதரன் - ஞானம் சஞ்சிகை (ஏப்ரல் 2018) வெளியிட்ட 'எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60' சிறப்பு மலரில் இடம் பெற்ற கட்டுரை).
3. அ.ந.கந்தசாமியின் மனக்கண் - வ.ந.கிரிதரன் - தொகுப்பிதழாக வெளியான ழகரம் 5 (ஆனி 2016) இதழில் வெளியான கட்டுரை.
4. புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள் - வ.ந.கிரிதரன் - மகுடம் சஞ்சிகை (இலங்கை) வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் (ஏப்ரல் - டிஸம்பர் 2016) வெளியான கட்டுரை.)
5. கனடாத் தமிழ் இலக்கியத்தில் 'தாயகம் (கனடா)\வின் பங்களிப்புப் பற்றியதொரு சுருக்கமான அறிமுகம்! - வ.ந.கிரிதரன் - (- எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான 'கூர் 2018' இதழில் வெளியான கட்டுரை.)
6. தேவன் (யாழ்ப்பாணம்) - யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தின் வருடாந்தக் கலைவிழாவான 'கலையரசி 2015' நிகழ்வினையொட்டி வெளியான 'கலையரசி' மலரில் வெளியான கட்டுரை.

7.  'ஜான் மார்டெலி'ன் (Yann Martel) 'பை'யின் வாழ்வு (Life Of Pi)! - வ.ந.கிரிதரன் - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணைய மலர் 'சங்கப்பொழில்' (2015)

கவிதைகள்
1. கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் - ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழில் வெளியான கவிதை.

* யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கம் ஆண்டு தோறும் நடாத்தும் கலையரசி கலைவிழாவை முன்னிட்டு , வெளியிடும் கலையரசி சிறப்பு மலரிலும் எனது கட்டுரைகள், சிறுகதை, கவிதை ஆகியன வெளியாகியுள்ளன.

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள்:

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை
மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).
3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க் (கணையாழி மே 2012)
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7. கணையாழி செப்டம்பர் 2017: கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R