ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'ஆனந்த விகடன் சஞ்சிகை தமிழ் இலக்கியச் சூழலில் வெளிவரும் முக்கியமான வெகுசன இதழ்களிலொன்று. தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதுபவர்கள் விகடன் போன்ற வெகுசன இதழ்கள் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுவதில்லை. முனைவர்கள் தொடக்கம் சிறு சஞ்சிகை ஆசிரியர்கள் வரைக்கும் இப்போக்கினைக் காணலாம். வெகுசன சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாசகர்களின் உணர்வுகளுக்குத்தீனி போட்டு, பணம் சம்பாதிப்பதையே பிரதானமாகக்கொண்டு செயற்படுபவை. அதனால் அவற்றில் வெளியாகும் படைப்புகள் அனைத்துமே ஒதுக்கித்தள்ளப்பட வேண்டும் என்பது அர்த்தமல்ல. தமிழ் வாசகர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்ததில் அவற்றின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் குறை நிறைகளுடன் அவற்றின் பங்களிப்பு அணுகப்பட வேண்டியவை. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட வேண்டியவை. ஆனால் அதனை நம் விமர்சகப்பெருந்தகைகளோ, சிறு சஞ்சிகை ஆசிரியர்களோ செய்வதில்லை. இவர்களது எழுத்துகளில் எங்குமே இச்சஞ்சிகைகளின் ஆக்கபூர்வமான பங்களிப்பு பற்றியோ, இச்சஞ்சிகைகளில் வெளியான முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் பற்றியோ தகவல்களோ, கட்டுரைகளோ வெளிவருவதில்லை.

அதே சமயம் இவ்வகையான பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தால் பலரைச் சென்றடையும் சூழல் உண்டு. இதனாலோ என்னவோ இவ்வகையான ஊடகங்கள் வழங்கும் விருதுகளுக்கு மட்டும் இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். உதாரணத்துக்கு விகடன் விருதுகள் பற்றிக் குறிப்பிடலாம். விகடன் விருது கொடுத்தால் விகடனின் ஆக்கபூர்வமான இலக்கியப்பங்களிப்புகளையெல்லாம் சுட்டிக்காட்டாத எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதழாசிரியர்கள் எல்லாரும் , விகடன் விருது பெற்ற செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முகநூலில், வலைப்பதிவுகளில் விளம்பரப்படுத்திக் களிப்படைகின்றார்கள். காரணம் விகடன் விருது அவர்களது பெயர்களை இலட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்க்கின்றதல்லவா?

இவர்கள் செய்நன்றிக்கடனாக ஒன்று செய்யலாம். விகடன் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வரும் இலக்கியத்தரம் மிக்க படைப்புகளை, சமூக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப்பற்றியாவது அவ்வப்போது தம் எழுத்துகளில் வெளிப்படுத்தலாம். செய்வார்களா?

வியாபாரத்தை மையமாகக்கொண்டு வெளியாகும் வெகுசன ஊடகங்கள் வாசகர்களின் உணர்வுகளைத்தீனியாக்கிச் சம்பாதிப்பவை. விமர்சனங்களுக்குரியவை. அதே சமயம் கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளையும் அவ்வப்போது பிரசுரிப்பவை. வாசகர்களின் வாசிப்புப் படிக்கட்டுகளில் முக்கியமான பங்களிப்பையும் வகிப்பவை. அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவையும் கூட. குறை, நிறைகளுடன் அவை அணுகப்பட வேண்டியது அவசியம்

நான் ஜெயகாந்தனின் பல நல்ல சிறுகதைப்படித்தது ஆனந்த விகடனில் அவரது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலைப்படித்தது ஆனந்த விகடனில். ஒரு முறை எழுத்தாளர் சுந்தர ராமசாமி இந்நாவலைப்பற்றிக்குறிப்பிடுகையில் தமிழில் முக்கியமான நாவல்களிலொன்று என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது. இந்நாவலைக்குறிப்பிட்ட அவர் இதனை வெளியிட்ட விகடன் பற்றியும் எங்காவது குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை. இது போல் ஜெயகாந்தனின் 'ரிஷி மூலம்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை நான் வாசித்தது தினமணிக்கதிரில். தி.ஜானகிராமனின் நல்ல நாவல்களிலொன்றான 'அன்பே ஆரமுதே' நாவலை வாசித்தது கல்கியில். இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம்.


மேற்படி முகநூற் பதிவுக்கு வந்த எதிர்வினைகள்:

George RC : விருது வாங்கும் போது மட்டும் இலக்கியம் வர்க்க வேறுபாடு பார்ப்பதில்லையோ?

Pas Pasupathy :  தி,ஜானகிராமனின் 'மோகமுள்' பற்றிக் குறிப்பிடுவோர் அது வந்த இதழ் 'சுதேசமித்திரன்' என்று குறிப்பிடுவதில்லை. தி,ஜா வே அதைக் குறிப்பிடுவதில்லை!

K S Sivakumaran : Through Ananda Vikatan's Muthiraik Kathaikal, serious writers came to be know to the average readers. Jeyakanthan was one.,Thank you VNG for your stance.

Giritharan Navaratnam:   கல்கியில் (27.08.1961) 'மோகமுள் பிறந்த கதை' என்னும் கட்டுரையொன்று வெளியாகியிருந்தது. அதில் அதுபற்றிக் கூறுகையில் தி.ஜா பின்வருமாறு கூறியிருப்பார்: "எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின." . நீங்கள் கூறியது சரிதான். தி.ஜா இங்கு ஒரு வாரப்பத்திரிகை என்றுதான் கூறியிருக்கின்றார். அதன் பெயரைக் குறிப்பிடவில்லை. அது சுதேசமித்திரன் பத்திரிகை வெளியிட்ட வாரஇதழ். கதை, கட்டுரை, கவிதைகளுக்காக வெளியிடப்பட்ட வார இதழ். :-) உண்மையில் தமிழில் நல்லதொரு நாவலை உருவாகக் காரணமான 'சுதேசமித்திரன்' பத்திரிகை பாராட்டுக்குரியது. ஒரு காலத்த்தில் இதே சுதேசமித்திரன் பத்திரிகையில்தான் உதவி ஆசிரியராக மகாகவி பாரதியார் பணியாற்றினார். அவரது படைப்புகள் பல வெளியாகிய பத்திரிகை. ஆர்வியின் புகழ்பெற்ற நாவல்களான 'அணையா விளக்கு' , 'திரைக்குப்பின்' ஆகியவையும் அதில்தான் வெளியாகியிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். சரியாகத்தெரியவில்லை.

Pas Pasupathy : அந்த மூன்று பேர்கள் யார்? தெரியவில்லை. அவர்களால் தானே மோகமுள் நமக்குக் கிட்டியது!

Giritharan Navaratnam: எழுத்தாளர்கள் தம் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் தம் படைப்புகள் வெளிவந்த பத்திரிகளையிட்டுப் பெருமையடைய வேண்டும். அவை பற்றிய விபரங்களை அப்படைப்புகள் பற்றிக் கூறுகையில் அல்லது நேர்காணல்களில் விரிவாகப்பதிவு செய்ய வேண்டும். யார் அந்த மூவர்? அவர்களது பெயர்களை யாரும் அறியப்போவதில்லை. ஆனால் அவர்களும் அந்நாவல் உருவாக ஒருவகையில் காரணமாகவிருந்திருக்கின்றார்கள்.

Pas Pasupathy: Had there been one "investigative" curious reporter, he/she could have contacted Thi.Jaa as soon as the article was published and asked for the name of the magazine and the three persons' names . And could have reported it.

Giritharan Navaratnam: உண்மைதான். தமிழ் இலக்கியச் சூழலில் இது போன்ற விடயங்களின் முக்கியத்துவம் உணர்ந்து செயற்படும் நிருபர்கள் அரிதாகவே தென்படுகின்றார்கள்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R