“மலைகளைப் பேசவிடுங்கள்" வெளியீடும் - மூன்று நூல்களின் அறிமுகமும்! எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர்  எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்"  நூல் வெளியீடும்!“மலைகளைப் பேசவிடுங்கள்" வெளியீடும் - மூன்று நூல்களின் அறிமுகமும்! எழுத்தாளரும் அரசியலாளருமான மல்லியப்புசந்தி திலகர்  எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்"  நூல் வெளியீடும்!

‘வண்ணச் சிறகு' அரு.சிவானந்தனின் , “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே"  கவிதை நூல், தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘இலங்கையின் சிறுகதை மூலவர்களில் ஒருவரான இலங்கையர் கோன்’ - அறிமுகம்  ( குமரன் வெளியீடு) கனடாவில் இருந்து வெளிவரும் "காலம்"  கலை இலக்கிய சிற்றிதழின்  "தெளிவத்தை ஜோசப்"  சிறப்பிதழ் ஆகியவற்றின்  அறிமுகமும்  இம்மாதம்   9 ஆம் திகதி பௌர்ணமி திங்களன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சாஹித்யரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையிலும் பிரபல தொழில் முனைவரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரா ஷாப்டர் முன்னிலையிலும் இடம்பெறவுள்ளது.

முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா, குமரன் பதிப்பக உரிமையாளர் க. குமரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர். நிகழ்வில்,   கல்வியாளரும் விமர்சகருமான எம். வாமதேவன் அறிமுகவுரையையும் , விமர்சன உரையை திருமதி வசந்தி தயாபரன், சிராஜ் மஷ்ஷூர் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர். நூலாசிரியர் மல்லியப்புசந்தி திலகர் ஏற்புரை நிகழ்த்துவார்.

பாக்யா பதிப்பகத்தின் ஏற்பாட்டில், இடம்பெறவுள்ள இந்நிகழ்வை பிரதாஸ் எஸ். ஆக்ஞயா  தொகுத்து வழங்குவார்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R