- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் இருபத்தி ஐந்து

கூட்டம் கூடியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் கதவுகளும், ஜன்னல்களும் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் கும்பலால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மதில் மேல் எட்டிப் பார்த்து விட்டு இவ்வாறு கூறுவார் "இது அவர்கள்தானா?" என்று அங்கே கும்பலாக மற்றவர்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர் பதில் கூறுவார் "அடித்துச் சொல்கிறேன். அவர்கள்தான் அது."அந்தச்செய்தி ஊர் முழுதும் இரண்டு நிமிடங்களில் காட்டுத்தீ போலப் பரவியது. நாலாத்திசைகளிலிருந்தும் மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்த காட்சியைத்தான் நீங்கள் காணவும் வேண்டுமே. சிலர் அவ்வாறு ஓடி வரும் போதே தங்களின் மேல் கோட்டை அணிந்தவாறே வேகமாக ஓடி வந்தனர். தட் தட் என்ற அவர்களின் காலடிச் சத்தம் ஏதோ வீரர்கள் போருக்கு அணிவகுத்து செல்லும்போது கேட்பது போலக் கேட்டது. விரைவிலேயே அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு எங்களை அழைத்துப் போனார்கள். கூட்டம் கூடியிருந்த இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் கதவுகளும், ஜன்னல்களும் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் கும்பலால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மதில் மேல் எட்டிப் பார்த்து விட்டு இவ்வாறு கூறுவார் "இது அவர்கள்தானா?" என்று அங்கே கும்பலாக மற்றவர்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் யாரோ ஒருவர் பதில் கூறுவார் "அடித்துச் சொல்கிறேன். அவர்கள்தான் அது."

நாங்கள் அந்த வீடு இருந்த தெருவை அடைந்து வீட்டை நெருங்கும்போது, அந்த வீட்டின் முன் கூட்டம் அடைந்து கிடந்தது. மூன்று பெண்களும் கதவினருகே நின்று கொண்டிருந்தனர். மேரி ஜேன் சிவப்பு நிற முடியுடன் இருந்தாலும், அது பெரிய வித்தியாசத்தை காட்டாது மிகவும் அழகாகவே காணப்பட்டாள். அவள் முகத்திலும் கண்களிலும் தெய்வீக ஒளி குடிகொண்டிருந்தது. அவளுடைய உறவினர்கள் வந்துவிட்ட சந்தோசம் அவல் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ராஜா தன் கைகளை அவளுக்காக விரித்தார். அவளும் அதில் ஓடி வந்து ஐக்கியமானாள். பிளவுபட்ட உதடுடைய பெண் பிரபுவை நோக்கி ஓடி அவரை அன்போடு தழுவிக் கொண்டாள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடியதைப் பார்த்த அங்கிருந்த அனைவரும், அதிலும் குறிப்பாகப் பெண்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்கள்.

ராஜா பிரபுவைத் தனியாக அழைத்துச் சென்றதை நான் கவனித்தேன். சுற்றிலும் அங்கே தேடிய ராஜா மூலையில் சவப்பெட்டி இரண்டு நாற்காலிகள் மீது வைத்திருப்பதை, கடைசியாகக் கண்டுகொண்டார். எனவே அவரும் பிரபுவும் கண்களுக்கு நேராகக் குறுக்கே ஒருவரின் தோள் மீது இன்னொருவர் கரத்தை வைத்து மிகவும் பதவிசாகவும், மெதுவாகவும் நடந்து சென்று சவப்பெட்டி முன் நின்றார்கள். அங்கிருந்த கூட்டம் அவர்கள் நிற்க வழிவிட்டது. அங்கே பேசிக்கொண்டிருந்த அனைவரும் பேச்சை நிறுத்தி அமைதியானார்கள். அங்கு கூடியிருந்தோர் அனைவரும் "உச்" என்று பரிதாப ஒலி எழுப்பினார்கள். அனைத்து ஆண்களும் தங்களின் தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி தலையை மரியாதையை செலுத்தும் வண்ணமாக குனிந்து நின்றார்கள்.

ஊசி விழுந்தால் கூட ஒலி கேட்கும் அளவு அங்கே அமைதி நிலவியது. அவர்கள் இருவரும் அந்தச் சவப்பெட்டி அருகே நின்று குனிந்து சவப்பெட்டியினுள் நோக்கினார்கள். ஒரு முறை நோக்கியவுடனே இருவரும் கண்ணீர் பெருக்கி அழுதார்கள். அவர்கள் அங்கு செய்த ஆர்ப்பாட்டம் கண்டிப்பாக நியூ ஆர்லியன்ஸ் வரைகூடக் கேட்டிருக்கும் என்று நான் அடித்துச் சொல்கிறேன். பின்னர் அவர்கள் ஒருவரின் கழுத்தை இன்னொருவர் அணைத்தவாறு அவர்களின் கன்னத்தை அடுத்தவர்களின் தோள்பட்டையில் சாய்த்துக் கொண்டார்கள்.

மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் இந்தக் கோலத்திலேயே இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். இவ்வாறு இரு ஆண்கள் தேம்பித் தேம்பி அழுவதை நான் கண்டதேயில்லை. நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். மற்ற அனைவரும் இதே போன்றே அழுதுகொண்டிருந்தார்கள். அந்த இடம் முழுதுமே கண்ணீரின் ஈரம் நிறைந்திருந்தது. இவ்வாறான ஒன்றை நான் கண்டதேயில்லை. பின்னர் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக சவப்பெட்டியினருகே நின்று, முட்டிக்காலிட்டு, தங்களின் நெற்றிகளை சவப்பெட்டியின் மீது வைத்துக் கொண்டு அவர்களுக்காக பிரார்த்திப்பது போன்று நடித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தச்சிறுதந்திரம் அங்கிருந்த கூட்டத்தை வெகுவாகப் பாதித்து விட்டது என்றே கூறலாம். இதைப் பார்த்த மக்கள், பரிதாபமான அந்தச் சிறு பெண்கள் உட்பட அனைவரும் உரக்கவே தேம்பித் தேம்பி அழஆரம்பித்தார்கள். அநேகமாக அங்கிருந்த அனைத்துப் பெண்களும் அந்தச் சிறு பெண்களிடம் சென்று ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மிகுந்த வாஞ்சையுடன் நெற்றியில் முத்தமிட்டார்கள். பின் ஒன்றன் பின் ஒன்றாக பெண்கள் அவர்களின் தலைமீது தன் கையை வைத்து கண்களில் நீர் தாரை தாரையாய் வழிந்தோட, அண்ணாந்து வானத்தை நோக்கி தனது விம்மலை அடக்கியவாறு அடுத்த பெண்ணுக்கு அதைச் செய்ய வழிவிட்டு நகர்வாள். இந்த மாதிரி வெறுப்பூட்டும் செயலை நான் பார்த்ததேயில்லை.

நல்லது. விரைவிலேயே ராஜா எழுந்து ஒரு அடி நகர்ந்து முன்னே வந்தார். நன்கு அழுது முடித்தவராகக் காணப்பட்ட ராஜா தேம்பியவாறே ஒரு சிறிய உரை ஆற்றினார். நாலாயிரம் மைல் பிரயாணம் செய்து வந்த தனக்கும், தனது சகோதரனுக்கும் இறந்து போன தங்களது சகோதரனின் இழப்பு ஆற்றவொணா வடு என்றும் உயிரோடு காண வந்த சகோதரனைப் பிணமாகக் காணும் இந்த இழப்பு அவர்களுக்கு நேர்ந்த சோதனை என்றெல்லாம் பல உளறல்களை கண்ணீருடன் கூறினார். ஆயினும் அந்த கிராமத்து மக்களின் அனுதாபமும், அவர்கள் சிந்திய கண்ணீரும் இந்தச் சகோதரர்களுடைய சோதனைக்காலத்தை மிகவும் எளிதாக்கிப் புனிதப்படுத்தியது என்றும் கூறினார். எனவே அவரின் ஆழ் மனதிலிருந்தும், அவரது வாய் பேசமுடியாத சகோதரர் மனதிலிருந்தும் வாய் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவு எழும் நன்றியலைகளை அந்த ஊர் மக்களுக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறினார். இன்னும் என்னென்னவோ பல குப்பை கூளங்களையும் அவர் கூறிக் கொண்டே சென்றது கேட்க மிகவும் எரிச்சலாக இருந்தது. பின்னர் அவ்வப்போது பக்திமயத்துடன் நல்லதொரு ஆமென் கூறிக் கொண்டும், இடையிடையே விம்மி வெடித்து அழுதுகொண்டும் பெரிதாகப் படம் காட்டிக் கொண்டிருந்தார்.

அவ்வாறு ராஜா சொல்லி முடித்த மறுகணமே, கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் கடவுள் துதியைப் பாட ஆரம்பித்ததும், அனைவரும் தங்களின் பலம் கொண்டமட்டும் சத்தம் போட்டு அந்தப் பாடலைப் பாடுவதில் இணைந்துகொண்டார்கள். அனைவரிடமும் தேவாலயத்தில் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை அது ஏற்படுத்திக் கொஞ்சம் உற்சாகத்தை வரவழைத்தது. அத்துணை நேரம் எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருந்த கசப்பான சுயநலப் பேச்சுக்களையும், பிதற்றல்களையும் பின் தள்ளிவிட்ட இந்தப் பாடல் முன்பு எப்போதும் இருப்பதை விட மிகவும் சுத்தமாகவும், மனதிற்கு இதம் தரும்படியும் இருந்தது.

பிறகு மீண்டும் ராஜா பேச ஆரம்பித்தார். இறந்தவருக்கு சொந்தக்காரர்கள் குடும்பத்தினர் சிலரும், மற்றுமுள்ள சில குடும்ப நண்பர்களும் அவரது சகோதரர் மகள்கள் மற்றும் அனைவரும் அன்றைய இரவு உணவு உண்ண தங்களோடு இணைந்து கொண்டால் அவர்கள் சந்தோசம் அடைவார்கள் என்று ராஜா கூறினார். அத்துடன் இறந்தவரின் அஸ்தியை கரைக்கவும் உதவும்படி கேட்டுக் கொண்டார். இறந்த அவரின் சகோதரர் உயிருடன் இருந்திருந்தால் யாரெல்லாம் அவருக்கு மிக நெருங்கிய நண்பர்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டது போலவே நேரிலும் கூறுவார் என்று ராஜா உரைத்தார். மதிப்பிற்குரிய மிஸ்டர் ஹாப்சன், டீக்கன் லாட் ஹோவி, மிஸ்டர் பென் ரூகர் அப்னர் ஷாக்கில்போர்ட், லெவி பெல், டாக்டர் ராபின்சன் மற்றும் அவர்களது மனைவிகள் மற்றும் பார்ட்லியின் விதவை என்று சில பெயர்களை ராஜா குறிப்பிட்டுக் கூறினார்.

ஊரின் எல்லைப்பகுதி ஒன்றில் மதிப்பிற்குரிய ஹாப்சன் மற்றும் டாக்டர் ராபின்சன் ஆகிய இருவரும் ஒரே விஷயத்தை வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள். நான் சொல்ல வருவது என்னவென்றால், ஒரு நோயாளி அடுத்த உலகம் செல்ல டாக்டர் உதவிக் கொண்டும், மத போதகர் அதற்கு வழி காட்டிக்கொண்டிருப்பதையும் குறிப்பிட்டேன். லூயிவில்லுக்கு தொழில்நிமித்தமாக வக்கீல் பெல் சென்றிருந்தார். ஆனால் ராஜா பெயர் சொல்லிக் குறிப்பிட்ட மற்ற அனைவரும் அங்கேதான் இருந்தார்கள். எனவே அவர்கள் அனைவரும் ராஜாவிடம் வந்து கைகுலுக்கி நன்றி கூறினார்கள். அதே போல் பிரபுவிடம் வந்து கைகுலுக்கிய போது, பிரபு தன் கைகளால் செய்த சைகைகள் அத்துடன் பேசாத தெரியாத குழந்தை உளறுவது போல "கூ கூ , க்கு கூ க்கு கூ" என்று சத்தம் எழுப்பியபோது, அவர்கள் எதுவும் பேசாது, சும்மா சிரித்துக் கொண்டும், மூடர்கள் போன்று தலையை குலுக்கிக் கொண்டும் இருந்தார்கள்.

ராஜா கொஞ்சம் கூட அசராமல் தனது பேச்சால் அனைவரையும் வாயடைக்கச் செய்துகொண்டிருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவர் பற்றியும், நாய்கள் உள்பட அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு விசாரித்து சமாளித்துக் கொண்டிருந்தார். அந்த ஊர் அல்லது பக்கத்து ஊரில் பல சமயங்களில் நடந்த சிறு சிறு விஷயங்களையும் அல்லது ஜார்ஜ் குடும்பத்தார் மற்றும் பீட்டர் பற்றிய தகவல்களையும் குறிப்பிட்டுப் பேசி அனைவரையும் வியப்பிலாத்தினார். பீட்டர் இந்த விஷயங்களை எல்லாம் தனக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்திருக்கிறார் என்று ராஜா மிக அற்புதமாக நடித்தார். உண்மையில் அது ஒரு அண்டப் புளுகு. இவை அனைத்தும் எங்கள் படகில் ஏறி நீராவிப் படகுக்குச் சென்ற அந்த இளம் முட்டாளிடம் விசாரித்துச் சேகரித்த தகவல்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்த மோசடிக்காரர்கள் அந்தப் பணத்தை எடுத்து விடுவது என்று முடிவு கட்டினார்கள். என்னை ஒரு மெழுகு திரி கொண்டு வரச் சொன்னார்கள். கீழ்பக்கம் உள்ள பாதாள அறையினுள்ளே நாங்கள் நுழைந்து கதவை உள்பக்கமாக சாத்திக் கொண்டோம். அவர்கள் அந்தப் பையை எடுத்து அதில் உள்ள நாணயங்களைத் தரையில் கொட்டினார்கள். ஒட்டுமொத்தமாக அத்தனை மஞ்சள் நிற நாணயங்களை ஒருங்கே காண்பது சொல்லமுடியாத ஆனந்தத்தைக் கொடுத்தது. ராஜாவின் கண்கள் ஜொலித்ததை நீங்கள் கண்டிருக்க வேண்டுமே!

பின்னர் அவளது அப்பா விட்டுச் சென்ற கடிதத்தை மேரி ஜேன் கொண்டு வந்தாள். ராஜா அதைச் சத்தமாகப் படித்து கண் கலங்கினார். அந்த வீடும் ஆயிரம் டாலர் தங்கக் காசுகளும் அந்தப் பெண்களுக்கு என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது. பீட்டர் பார்த்து வந்த மிகவும் நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்த தோல் பதனிடும் தொழிற்சாலை, மூன்றாயிரம் தங்க டாலர் காசுகள் மற்றும் ஏழாயிரம் டாலர் மதிப்புள்ள வேறு சில வீடுகள், நிலம் ஆகியவற்றை வில்லியம் மற்றும் ஹார்வியின் பங்காக ஒதுக்கியிருந்தார். அத்துடன் ஆறாயிரம் டாலர் பொற்காசுகளை வீட்டின் கீழ்ப்பக்கமுள்ள அறையில் மறைத்து வைத்திருப்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மோசடிக்காரர்கள் அந்தப் பணத்தை எடுத்து விடுவது என்று முடிவு கட்டினார்கள். என்னை ஒரு மெழுகு திரி கொண்டு வரச் சொன்னார்கள். கீழ்பக்கம் உள்ள பாதாள அறையினுள்ளே நாங்கள் நுழைந்து கதவை உள்பக்கமாக சாத்திக் கொண்டோம். அவர்கள் அந்தப் பையை எடுத்து அதில் உள்ள நாணயங்களைத் தரையில் கொட்டினார்கள். ஒட்டுமொத்தமாக அத்தனை மஞ்சள் நிற நாணயங்களை ஒருங்கே காண்பது சொல்லமுடியாத ஆனந்தத்தைக் கொடுத்தது. ராஜாவின் கண்கள் ஜொலித்ததை நீங்கள் கண்டிருக்க வேண்டுமே!

பிரபுவின் தோளில் தட்டியவாறு அவர் கூறினார்:

"இதைவிடச் சிறந்தது நீ ஏதேனும் கண்டிருக்கிறாயா? கண்டிப்பாக இருக்காது, பில்லி! நாடகக் கொட்டகை ராஜா விளையாட்டை இது ஓரங்கட்டிவிட்டது. என்ன சொல்கிறாய்?"

பிரபு ஆமோதித்தார். அந்த பொன்னிற நாணயங்களுக்குள் கைவிட்டு அளைந்து, விரல்களால் எடுத்து தரையில் சத்தம் ஏற்படுத்திக் குதித்தோட விட்டார்கள். பிறகு ராஜா கூறினார்:

"பேசுவதற்கு ஒன்றுமில்லை. வாரிசுக்கு என்று குடும்பத்தில் யாருமில்லாது இறந்த மனிதனின் சகோதர்கள் நாம். விலங்குத் தோலினுள் எல்லாம் கொட்டிக் கிடக்கும் அத்தனை சொத்துக்கும் உரிமை கொண்டாடப் போவது நானும் நீயும்தான் பில்ஜ்! இயற்கையின் அருள்நலத்தை நம்பியதற்குக் கிடைத்த பரிசு இது. நீண்ட காலம் கொண்டு செல்ல இதுவே சிறந்தது. நானும் என் வாழ்வில் எத்தனையோ மோசடிகள் செய்திருக்கிறேன். ஆனால் இது போன்று எனக்குக் கிடைத்த பரிசு வேறெதுவும் இல்லை.”

மற்ற யாரேனுமாக இருந்திருந்தால் கொட்டிக் கிடக்கும் தங்கக் காசுகளைக் கண்டு புளகாங்கிதம் அடைந்து அவை அனைத்தும் சரியாகத் தான் இருக்கும் என்று இருந்திருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மோசக்காரர்களும் அந்த நாணயங்களை எண்ண ஆரம்பித்தார்கள். எண்ணி முடித்த பிறகு நானூற்றி பதினைந்து டாலர்கள் குறைவாக இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.

ராஜா கூறினார் "நாசமாய்ப் போக! அந்த நானூற்றிப் பதினைந்து டாலர்களை அந்த ஆள் எங்கே வைத்துத் தொலைத்தான்?"

ஒரு நிமிடம் இருவரும் யோசித்தார்கள். பின்னர் அந்த அறை முழுதும் அந்தக் காசுகளைத் தேடிச் சல்லடையிட்டுச் சலித்தார்கள். பிறகு அந்த பிரபு கூறினார்:

"நல்லது. அந்த மனிதன் ஒரு நோயாளி. கணக்கில் அவன் ஏதேனும் தவறு செய்திருக்கலாம். அப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. யாரிடமும் இது பற்றிப் பேச வேண்டாம். அது நமக்குத் தேவையில்லை."

"ஓ, கண்டிப்பாக. அது நமக்குத் தேவையில்லை. அது பற்றி நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. நாம் எண்ணிய விதம் பற்றித்தான் எனக்கு கொஞ்சம் சந்தேகம் உள்ளது. அது மொத்தப் பணமாக இருந்திருக்கவேண்டும். அல்லவா! இதை மாடியில் கொண்டு சென்று அனைவரின் முன்னிலையில் எண்ணிப் பார்த்தால் சந்தேகம் அகன்று விடும். ஆனால் இறந்த மனிதன் கூறியது போல் ஆறாயிரம் டாலர்கள் இருந்திருக்க வேண்டும். நாம் அதற்கும் குறைவாக ......"

"ஒரு நிமிடம் நில்லு." கத்தினார் பிரபு. "குறையும் அந்தக் காசுகளை நாம் சரி செய்து விடுவோம்."

அவரின் சட்டைப் பையிலிருந்து தங்கக் காசுகளை வெளியே எடுக்க ஆரம்பித்தார்.

"மிகச் சிறந்த யோசனை, பிரபு! உன் தோளுக்கு மேல் நல்ல அறிவார்ந்த தலையை வைத்துக் கொண்டிருக்கிறாய்." ராஜா கூறினார். "அந்தப் பழையகால ராஜா விளையாட்டு மோசடி மீண்டும் இங்கே நமக்கு உதவுகிறது."

 மேரி ஜேன் ராஜாவை நோக்கியும், சூசன் மற்றும் மேலுதடு பிளவுபட்ட ஜோனா இருவரும் பிரபுவை நோக்கியும் ஓடினார்கள். அடுத்த சில கணங்களுக்கு இதற்கு முன்பு நான் என்றுமே பார்த்திராத வகையில், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ளுதலும், அன்புடன் முத்தம் பரிமாறிக் கொள்ளுதலும் நடந்தேறின. சுற்றிலும் இருந்த அனைவரும் கண்களில் நீருடன் அவர்களை சுற்றிக் கூடினர். பெரும்பான்மையோர் அந்த இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகளிடமும் கைகுலுக்கிக் கொண்டே இவ்வாறு கூறினர் "ஆஹா! அன்பு நிறைந்த ஆத்மாக்களே! எத்தனை நன்றாக உள்ளது! எப்படி இத்தனை அன்பு உங்களிடமிருந்து நிரம்பி வழிகிறது?"

பின்னர் அவரும் அவரது சட்டைப் பையில் கைவிட்டு சில தங்க நாணயங்களை எடுத்து ஒன்றன்மேல் ஒன்றாக வைத்தார். அவர்களுக்கு அது கொஞ்சம் வருத்தமளித்தாலும், குறைந்து போன தங்கக் காசுகளை சரி செய்து ஆறாயிரம் டாலர் காசுகளைச் சேர்த்துவைக்க அந்தச் செயல் உதவியது.

"ஹேய்" அந்தப் பிரபு கூறினார், : எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. நாம் மேலே சென்று அங்கே பணத்தை எண்ணுவோம். பின்னர் எடுத்து அந்தப் பெண்களுக்கு இதைக் கொடுத்து விடுவோம்."

"ஆஹா என்ன அருமையான யோசனை, பிரபு! இங்கே வா! உன்னை ஒருமுறை அன்புடன் அணைத்துக் கொள்கிறேன். இது போன்ற சிறந்த யோசனை யாருக்கும் உதிக்கவே உதிக்காது. இதுவரை நான் பார்த்த ஆட்களிலேயே உன் போன்ற மூளை உள்ளவர்கள் எவரும் இல்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். ஓ! இது ஒரு மிகச் சிறந்த திட்டம்தான். சந்தேகமே இல்லை. இது அவர்களை அமைதியாக வைத்திருக்கும். இப்போது கூட அவர்கள் நம்மை சந்தேகப்பட முயற்சித்திருக்கலாம்."

திரும்ப நாங்கள் மாடி ஏறிவந்தபிறகு, அனைவரும் மேசையின் மீது ஒன்று கூடி அமர்ந்திருக்கும் வேளையில் ராஜா அந்த தங்க நாணயங்களை எண்ணிப்பார்க்க ஆரம்பித்தார். பின்னர் அந்த நாணயங்களை முன்னூறு டாலர்கள் ஒரு குவியலில் இருக்கும் வண்ணம் நேர்த்தியான இருபது சிறிய குவியல்களாய் அடுக்கி வைத்த்தார். அனைவரும் தங்களின் நாவால் உதடுகளை ஈரப்படுத்தியவண்ணம் மிகுந்த ஆசையுடன் அதை நோக்கினார்கள். பின்னர் அவற்றை மேசையிலிருந்து தள்ளி அந்தப் பைக்குள் விழும்படி செய்தனர். அடுத்தாக தனது நெஞ்சைத் தேய்த்தவாறு இன்னொரு உரையாற்ற ராஜா தயாரானதை நான் கண்டேன்.

அவர் கூறியதாவது: "நண்பர்களே! அதோ அங்கே மீளாத்துயிலில் உறங்கும் எனது சகோதரன் அவன் இறப்பால் யாரையெல்லாம் துன்பக் கடலில் மூழ்கச் செய்தானோ அவர்களுக்காக அவன் மிகுந்த பெருந்தன்மையுடன் இருந்திருக்கிறான். இதோ இந்த பரிதாபத்துக்குரிய தாயும் தந்தையுமற்ற இளம் ஆட்டுக்குட்டிகள் போன்ற பெண்களை அவன் மிகவும் நேசித்து தங்க இடம் கொடுத்து பெரும் கருணை காட்டியிருக்கிறான். ஆம். அத்துடன் அவனுடைய அன்புத் சகோதரர்கள் வில்லியம் மற்றும் எனக்கு ஏதேனும் அநியாயம் இழைத்துவிடக்கூடாதென அஞ்சி இன்னும் பெருந்தன்மையாக அவன் இருந்திருப்பான் என்பது அவனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட நம்மைப் போன்றவர்கள் நன்கு புரிந்திருக்கக் கூடும். அப்படித்தானே? அதில் எனக்கு எந்தச் சந்தேகக் கேள்வியும் கிடையாது. நல்லது. இல்லையானால், அவனின் கஷ்டகாலத்தில் அவன் வழியை மறைத்து நின்றால், பிறகு நாங்கள் என்ன விதமான சகோதரர்கள்? அத்துடன் அவன் மிகவும் நேசித்த இந்த பாவப்பட்ட இளம் ஆட்டுக்குட்டிகள் போன்ற பெண்களிடமிருந்து நாங்கள் திருடினால்-ஆம், அது திருட்டுதான் - அப்புறம் எப்படி நல்ல பெரியப்பா, சித்தப்பாக்கள் ஆக நாங்கள் இருக்கமுடியும் இந்தக் குழந்தைகளுக்கு? எனக்கு வில்லியம் பற்றி நன்கு தெரியும் என்று நினைக்கிறன். அவன்...... நல்லது. அவனையும் ஒரு வார்த்தை கேட்டுவிடுகிறேன்."

ராஜா பிரபுவின் பக்கமாகத் திரும்பி அவரின் கைகளினால் ஏதேதோ சைகைகள் செய்து காட்டினார். ஏதோ தான் ஒரு முட்டாள் என்பதைப்போல அவரைக் கொஞ்சநேரம் பிரபு வெறித்துப் பார்த்தார். பின்னர், திடீரென அவர் ராஜாவைப் புரிந்து கொண்டதுபோல நடித்தார். துள்ளிக் குதித்து, தன் பலம் கொண்டமட்டும் கூ கூ என்று ஊளையிட்டுக் கொண்டே ராஜாவை நோக்கிப் பாய்ந்து குறைந்தபட்சம் ஒரு பதினைந்து முறைகளாவது கட்டிப் பிடித்து பின் அவரைப் போக விட்டார். பின்னர் ராஜா கூறினார்: "எனக்குத் தெரியும். அவன் என்ன உணர்கிறான் என்ற விஷயம் அனைவரையும் நம்பவைக்கும் என்று எனக்குப் புரிகிறது. இதோ! இந்தப் பணத்தை, மேரி ஜேன், சூசன், ஜோனா நீங்கள் அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தையுமே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதோ அங்கே உறங்கும் மனிதனின் பரிசு இது. அவன் இப்போது சந்தோசமாக உறங்குவான்."

மேரி ஜேன் ராஜாவை நோக்கியும், சூசன் மற்றும் மேலுதடு பிளவுபட்ட ஜோனா இருவரும் பிரபுவை நோக்கியும் ஓடினார்கள். அடுத்த சில கணங்களுக்கு இதற்கு முன்பு நான் என்றுமே பார்த்திராத வகையில், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ளுதலும், அன்புடன் முத்தம் பரிமாறிக் கொள்ளுதலும் நடந்தேறின. சுற்றிலும் இருந்த அனைவரும் கண்களில் நீருடன் அவர்களை சுற்றிக் கூடினர். பெரும்பான்மையோர் அந்த இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகளிடமும் கைகுலுக்கிக் கொண்டே இவ்வாறு கூறினர் "ஆஹா! அன்பு நிறைந்த ஆத்மாக்களே! எத்தனை நன்றாக உள்ளது! எப்படி இத்தனை அன்பு உங்களிடமிருந்து நிரம்பி வழிகிறது?"

திரும்ப அனைவரும் இறந்து போனவரைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அவன் எவ்வளவு நல்லவன் என்றும் அவன் இறந்தது மிகப் பெரிய இழப்பு என்று இன்னும் இது போல பேசிக் கொண்டே இருந்தார்கள். ரொம்ப நேரம் இவ்வாறு சென்றிருக்காது. அங்கே ஒரு பெரிய இரும்புத்தாடை கொண்ட மனிதன் வெளியிருந்து வந்து அந்தக் கூட்டத்தினுள் நுழைந்தான். சிறிது நேரம் அங்கே நின்றபடி, அங்கு நடப்பதை ஒரு வார்த்தை கூடப் பேசாது அமைதியாகப் பார்வையிட்டான். ராஜா தொடர்ந்து பொய் புளுகிக் கொண்டிருப்பதை மற்ற அனைவரும் மும்முரமாகக் கவனித்துக் கொண்டிருந்ததால், வேறு யாரும் அவனிடம் எதுவும் பேசவில்லை. ராஜா தான் ஆற்றிய உரையில் மத்தியப் பகுதிக்கு வந்து விட்டார்.

".............அவர்கள் இறந்தவரின் நல்ல நண்பர்கள். அதனால் தான் அவர்களை இன்று மாலை நான் விருந்துக்கு அழைத்திருக்கிறேன். ஆனால், நாளை நீங்கள் அனைவரும் தவறாமல், ஒவ்வொருவரும் தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும். எனது சகோதரன் உங்கள் அனைவர் மீதும் நல்ல மதிப்பும், மரியாதையும், அன்பும் வைத்திருந்தார். எனவே அவரது இறுதிச் சங்கடங்கள் அனைவரின் முன்னிலையிலும் நாளை நடைபெற வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும்."

அவரின் குரலை அவரே ரசித்தபடி இன்னும் என்னென்னவோ பிதற்றிக் கொண்டே போனார். அடிக்கடி இறுதிச் சடங்கு என்ற வார்த்தையை தவறாக இறுதிச் சங்கடங்கள் என்று அவர் கூறிக் கொண்டே போனதைத் தாங்கமுடியாத பிரபு ஒரு தாளில் அது "சடங்கு- சங்கடம் அல்ல கிழட்டு முட்டாள்" என்று எழுதி மடித்து வைத்து கூட்டத்தினுள்ளே கூ கூ எனக் கத்திகொண்டே நுழைந்து ராஜாவிடம் செல்ல முயற்சித்தார். அவரால் ராஜாவை மிக அருகில் நெருங்க முடியாத காரணத்தால்.அங்கே நின்றுகொண்டிருந்த மக்களின் தலை மீதாக அந்தச் சீட்டை ராஜாவிடம் நீட்டினார். அதே வாங்கிப் படித்துப் பார்த்த ராஜா ஒன்றுமே நடவாத மாதிரி அந்தத் துண்டுச்சீட்டை தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கூறினார்.

"பாவம் வில்லியம். அவனின் உடல் ஊனமாக இருந்தாலும், இருதயம் சரியான இடத்தில்தான் இருக்கிறது. உங்கள் அனைவரையும் இறுதிச் சடங்கிற்கு அழைக்கச் சொல்லி அவன் கூறியிருக்கிறான். நீங்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறீர்கள் என்ற எண்ணத்தை உங்களுக்கு அளிக்கச் சொல்லி அவன் என்னிடம் செய்தி அனுப்பியிருக்கிறான். ஆனால் அவன் அத்தனை சிரமப்படத் தேவையில்லை. ஏனெனில் நானே அதைச் செய்வதாகத்தான் இருந்தேன்."

மிகவும் பொறுமையாக திரும்பவும் பேசத்தொடங்கிய அவர் அவ்வப்போது முன்பு சொன்னது போன்றே "சங்கடங்கள்" என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார். மூன்றாம் முறையாக தவறாக அந்த வார்த்தையை சொன்னபோது, அவர் "நான் சங்கடங்கள் என்று கூறும் வார்த்தை சடங்குகள் என்ற வார்த்தையின் தவறான பிரயோகம் அல்ல. சங்கடங்கள்தான் சரியான வார்த்தை. சடங்கு என்ற வார்த்தை இங்கிலாந்தில் தற்போது உபயோகத்தில் இல்லை. அது பழையகால பிரயோகம். தற்போது பயன்படுத்தும் வார்த்தை சங்கடம் என்பதாகும். ஏனெனில் அந்த வார்த்தை உண்மையில் மனிதர்களுக்கு ஏற்படும் உணர்வுப் பூர்வமான சங்கடங்களைக் குறிக்கிறது அது கிரேக்க மற்றும் ஹீப்ரு மொழியில் இருந்து வந்தது.”

“அப்படியென்றால் தன் சங்கடங்களை மறைத்து மண்ணுக்குள் வைப்பது என்று பொருள். மொத்தத்தில் ஒரு மனிதனை அடக்கம் செய்வது என்பது அவனின் சங்கடங்களைப் பொதுமக்கள் மத்தியில் புதைப்பது என்று பொருள்படும்."

இப்படி ஒரு கேவலமான சமாளிப்பை நான் பார்த்ததே இல்லை. அங்கிருந்த இரும்புத் தாடை மனிதன் ராஜாவின் முகத்துக்கெதிராகவே வாய்விட்டுச் சிரித்தான். அனைவரும் திடுக்கிட்டு "டாக்டர்" என்று கூவினார்கள்.

அப்னர் ஷாக்கில்போர்ட் கூறினார்: "ஏன் டாக்டர் ராபின்சன்! நீங்கள் செய்தியைக் கேள்விப்பட்டீர்களா? இவர்தான் ஹார்வி வில்க்ஸ்."

ராஜா வாய் நிறைய புன்னகை புரிந்து கொண்டே மிகுந்த ஆர்வத்துடன் கை குலுக்க வேண்டி தனது கரத்தை முன்பக்கமாக நீட்டிக்கொண்டே சொன்னார்:

"ஓ! நீங்கள்தான் எனது அன்புச் சகோதரனின் உற்ற தோழனான டாக்டர் இல்லையா? நான் ..........."

"கையை என் மேலிருந்து எடு" கோபமாய் கூறினார் டாக்டர். "இங்கிலீஸ்காரன் மாதிரி நீ பேசுவதாய் ரொம்ப நினைப்போ? ஏன், இதுவரை நான் கேட்டதிலேயே இது போன்ற கேவலமான ஆங்கில உச்சரிப்பு எங்கும் இல்லை. நீ பீட்டர் வில்க்ஸ்ஸின் சகோதரனா? நீ ஒரு வஞ்சகன். அதுதான் நீ!"

மொத்தக்கூட்டமும் அதிர்ந்து நின்றது. அனைவரும் டாக்டரைச் சூழ்ந்து அவரை அமைதிப்படுத்த முயன்றார்கள். பின்னர் எவ்வாறு ஹார்வி குறைந்தபட்சமாக நாற்பது வெவ்வேறு வழிகளில் தான் ஹார்வி என்பதை நிரூபித்தான் என்று விளக்கினார்கள். அவனுக்கு அந்த ஊர் மக்கள் அனைவரது பெயரும், ஏன், நாய்கள் பெயர் கூட தெரிந்துள்ளது என்று கூறினார்கள். ஹார்வியின் மனத்தையோ, அல்லது அந்த அப்பாவிப் பெண்களின் மனத்தையோ காயப்படுத்திவிட வேண்டாம் என்று டாக்டரிடம் அந்த மக்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை. கடும் சீற்றத்துடன் டாக்டர் கத்தினார். ஆங்கிலேயரின் ஆங்கிலத்தைப் பின்பற்றி நடிக்கும் எவனும் இந்த மோசடி பேர்வழி அல்லது பொய்யன் போல் கேவலமாகச் செய்யமாட்டான் என்று காறி உமிழ்ந்தார். அந்த அப்பாவிப் பெண்கள் ராஜாவைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதார்கள். அவர்கள் பக்கமாக சடாரெனத் திரும்பிய டாக்டர் கூறியதாவது:

"நான் உங்களின் அப்பாவின் நண்பன். உங்களுக்கும் நண்பன்தான். எனவே நேர்மையான ஒரு நல்ல நண்பனாக உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். உங்களைப் பாதுகாத்து, துன்பத்திலிருந்து தூர விலகி இருக்கச் சொல்லி எச்சரிக்கிறேன். இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து தள்ளி நில்லுங்கள். அவனுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரீக் என்றும் ஹீப்ரு என்றும் இந்த அறிவுகெட்ட தறுதலை பொய்யடிக்கிறான். எல்லாரையும் விட உறுதியற்ற மாற்றுவேடக்காரன் இவன்.”

“எங்கோ, யாரிடமிருந்தோ சேகரித்த வெற்றுத்தகவல்களையும், பல்வேறு புனைப்பெயர்களையும் கொண்டு இங்கு வந்திருக்கிறான். ஆயினும் இங்குள்ள மற்ற முட்டாள் நண்பர்கள் அவன் நிறைய சான்றுகள் அளித்துள்ளான் என்று சொல்வதைக் கேட்டு அவன் உங்களை ஏமாற்றி முட்டாளாக்க நீங்களே அவனுக்கு உதவிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்திருக்க வேண்டும். மேரி ஜேன் வில்க்ஸ் உங்களின் வாழ்வுக்குத் துணை நிற்கும் ! சுயநலம் கருதாத ஒரு நண்பன் நான் என்று உனக்கு நன்றாகவே தெரியும். இப்போது நான் சொல்வதைக் கேள்! இந்தக் கயவனை வெளியே துரத்து. அவ்வாறு செய்யுமாறு நான் உன்னிடம் மன்றாடுகிறேன். செய்வாயா?"

மேரி நிமிர்ந்து நின்றாள். ஆஹா! அந்தக் கோலத்தில்தான் அவள் எத்தனை அழகாக இருந்தாள்!

"இதோ என் பதில்" இவ்வாறு கூறியவாறே, அவள் கையிலிருந்த தங்க நாணய மூட்டையை ராஜாவின் கைக்கு நகர்த்தினாள். பின் கூறினாள்: "இந்த ஆறாயிரம் டாலர் பொற்காசுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதை என் பெயரில் அல்லது எனது சகோதரிகள் பெயரிலோ உங்களின் விருப்பம் போல முதலீடு செய்யுங்கள். அது பற்றிய ஆவணங்கள் கூட நீங்கள் எங்களிடம் காட்டவேண்டிய அவசியமில்லை."

பின்னர் அவளின் ஒரு கரத்தை ராஜாவின் மீது அணைத்தவாறு வைத்தாள். அதே போன்றே சூசனும், பிளவுபட்ட உதடுடைய பெண்ணும் அவர்களின் கரங்களை ஆதரவாக ராஜா மீது அணைத்தவாறு வைத்தார்கள். அங்கிருந்த மற்ற அனைவரும் கைகளைத் தட்டிக் கொண்டு காலால் நிலத்தை உதைத்துச் சப்தம் எழுப்பினார்கள். இடிமுழக்கம் போன்ற அந்த சப்தத்தால் அந்த இடம் முழுதுமே கிடுகிடுத்தது. இதற்கிடையில் அந்த ராஜா தன் முகத்தை பெருமையுடன் உயர்த்தி வைத்துக் கொண்டார். அந்த டாக்டர் கூறினார்:

"சரி. இந்த விஷயத்தில் என் கைகளைக் கழுவி விடுகிறேன். ஆனால், வெகு சீக்கிரம் வரப்போகும் பின்னொரு நாளில் நீங்கள் ஏமாந்து வேதனையுறும் போது இந்தநாளைக் கண்டிப்பாக எண்ணி மனம் வருந்துவீர்கள் என்று மீண்டும் நான் உங்கள் அனைவரையும் எச்சரிக்கிறேன்."

இவ்வாறு கூறிய டாக்டர் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

"ரொம்பச் சரி டாக்டர்! அந்த நாள் வரும்போது உங்களுக்குக் கண்டிப்பாக சொல்லி அனுப்புவோம்" ஏளனத்துடன் கேலியாக இவ்வாறு ராஜா கூறியது அனைவரையும் சிரிக்க வைத்தது. டாக்டரை நன்கு நையாண்டி செய்கிறார் என்று கூறிச் சிரித்தார்கள்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R