அறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)அறிவொளி சஞ்சிகையின் 1967 தை மாத இதழில் வெளியான 'இராமன் விளைவு' என்னும் அறிவியற் கட்டுரை என்னைச் சஞ்சிகையின் பக்கங்களைப் புரட்டியதுமே கவர்ந்தது. முதன் முதல் நோபல் பரிசு பெற்ற சேர்.சி.வி.ராமன் அதனை இயற்பியலுக்காகப்பெற்றார். அவர் கண்டுபிடித்த கண்டு பிடிப்பே 'இராமன் விளைவு'. இயற்பியலில் பல்கலைக்கழக மட்டத்தில் கற்பிக்கப்படுகின்றது. அவரது கண்டு பிடிப்பே வானம் ஏன் நீல நிறமாக விளங்குகின்றது என்பதற்கான காரணத்தை விளக்குகின்றது என்பது பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் அது தவிர மேலதிகமாக எவற்றையும் அறிந்திருக்க மாட்டீர்கள்.

அந்தக் கண்டுபிடிப்பே ஒளியின் அலை, மற்றும் துகள் கொள்கையினை விளக்கப்போதுமானது. அதனையும் குவாண்டம் இயற்பியல் பற்றியும் , ஐன்ஸ்டைனின் போட்டோன்கள் பற்றிய கண்டு பிடிப்பு பற்றியும் இ.பத்மநாபனின் இவ்வறிவியற் கட்டுரை விளக்கமாக விபரிக்கின்றது. அதனால் அக்கட்டுரை வெளியான அறிவொளி சஞ்சிகையினை வாசிக்க அதற்கான இணைப்பிங்கே: http://noolaham.net/project/390/38918/38918.pdf

நான் இதுவரை தமிழில் 'ராமன் விளைவு' பற்றிய அறிவியற் கட்டுரை வேறு வாசித்ததில்லை. வந்திருக்கலாம். நான் அறியவில்லை. ஆனாலிந்த அறிவியற் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஒளியின் அலை, மற்றும் துகள் பண்புகளை அழகாக ராமன் விளைவு மூலம் வாசிக்கும் எவரும் அறியும் வண்ணம் கட்டுரையாளர் இ.பத்மநாபன் இக்கட்டுரையினை எழுதியிருந்தார்.

இ.பத்மநாபனின் மேலும் சில அறிவியற் கட்டுரைகளை இலங்கையில் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட நவீன விஞ்ஞானி பத்திரிகையிலும் அறிவியல் மேதைகள் பற்றி எழுதியுள்ளார். அவையும் என்னை மிகவும் கவர்ந்தன. நவீன விஞ்ஞானி பத்திரிகையில் வெளியான இ.பத்மநாபனின் அறிவியற் கட்டுரைகள் பற்றிய விபரங்கள் வருமாறு ( என் கண்களுக்கு அகப்பட்டவை):
1. பார்வை குன்றிய மனிதர் வானியல் மேதையானார் - இ.பத்மநாதன் (பத்மநாபன் பத்மநாதன் என்று தவறுதலாக வெளியாகியுள்ளது) (நவீன விஞ்ஞானி - 27-3-1968)

2. எண்களின் நண்பர் கணித மேதையானார் - பகுதி ஒன்று - இ.பத்மநாபன் (நவீன விஞ்ஞானி -- 24.7.1968)

3. எண்களின் நண்பர் கணித மேதை (இறுதிப்பகுதி) - இ.பத்மநாபன் (கணித மேதை ராமனுஜன் பற்றிய கட்டுரையின் இறுதிப்பகுதி) நவீன விஞ்ஞானி - 7.8.1968)

4. அணுவின் அமைப்பை ஆராய்ந்தவர் : நீல்ஸ் போர் - இ.பத்மநாபன் (இ.பத்மநாதன் என்று தவறுதலாகப் பெயர் பிரசுரிக்கப்பட்டுள்ளது) - நவீன விஞ்ஞானி - 8.5.1968

5.பிரயோக கணிதம் (1) - இ.பத்மநாபன் - கிடைக்கவில்லை

6. பிரயோக கணிதம் (2 ) - இ.பத்மநாபன் - 3.7.1968

இ.பத்மநாபனின் அறிவியற் கட்டுரைகள் சிறப்பானவை. நவீன விஞ்ஞானி பத்திரிகையுட்பட வெளியான ஏனைய அறிவியற் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இவரது அறிவியற் கட்டுரைகள் வேறேதாவது வெளியாகியுள்ளனவா என்பதை என் எதிர்காலத்தேடலில் நோக்குதற்கு இக்கட்டுரைகள் தூண்டியுள்ளன.


அறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் வேறு யாருமல்லர் தமிழ் இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட இ. பத்மநாப ஐயரே. இவர் பல இலக்கியத்தொகுப்புகளை, நூல்களைப் பதிப்பித்துள்ளார். தொகுத்துள்ளார். இவரைப் பேராசிரியர்கள் பலர் அறிவார்கள். ஆனால் யாருமே இ.பத்மநாபன் என்னும் அறிவியல் எழுத்தாளனை அறிந்ததாகத் தெரியவில்லையே. அவரது அறிவியல் எழுத்துகள் பற்றி சில வரிகளாவது குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லையே. அப்படிக் குறிப்பிட்டிருந்தால் அறிந்தவர்கள் அறியத்தரவும். என்னைப்பொறுத்தவரையில் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு அறிவியல் தமிழ் இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் எழுத்தாளர்கள் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளார்கள், இவர்களைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இவர்களது பங்களிப்பு இனங்காணப்பட வேண்டும். ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவரது மேற்படி அறிவியற் கட்டுரைகள் இவரது எழுத்துகளைத் தேடிப்பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தினைத்தூண்டி விட்டுள்ளன.

எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ.பத்மநாப ஐயர்) அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக இயற்பியற் பட்டதாரி. தமிழில் அறிவியலில் எழுதுபவர்கள் குறைவு. அறிவியலில் அவர் அதிகம் எழுதினாலே மிகுந்த பயனாகவிருக்கும். எழுதுவார் என்று எதிர்பார்ப்போம்.


நவீன விஞ்ஞானிகள் பத்திரிகைகளை வாசிப்பதற்குரிய இணைய இணைப்பு: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R