- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை

சங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்வின் கண்ணாடியாகத் திகழ்கிறது. அதனடிப்படையில் கலித்தொகையின்வழி முல்லை நில மக்களின் பழக்கவழங்களை அவர்களின் தொழில் முறை, குடி அமைப்பு, வணிகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இக்கட்டுரை ஆய்கின்றது.

முல்லை நிலம்

முல்லைநிலம் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகும். இந்நிலம்வாழ் மக்களாக இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் வாழ்ந்தனர். முல்லை நிலத்தில் வரகு, சாமை, முதிரை போன்றவை விளைவிக்கப்பட்டன. சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றில் களைகட்டல், அவற்றை அரிதல், கடா விடுதல், கொன்றைக் குழலூதல், கால்நடை மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடுதல் ஆகியன முக்கியத் தொழிலாக இருந்துள்ளன.

முல்லை நில மக்களின் பழக்கவழக்கங்கள்

புரோகிதர் புரியும் சடங்குகள் பிற்காலத்து உண்டாயின என்பதனை,

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த காலத்தில் இயற்கை மணமுறைக்குப் பின் புலிப்பல் தாலி அணிந்து தழை உடை அளித்தல், மணக்கிரியையாக இருந்தது. இப்பொழுது இயற்கை மணத்தின் முன் மைந்தரும் மகளிரும் மணவினை ஆற்றுதலாகிய கற்பு நிகழ்ந்தது. மாலைகளாலும், தழைகளாலும் அலங்கரித்த பந்தலின் கீழ் ஆண்களும், பெண்களுமாகிய சுற்றத்தினர் கூடியிருந்து விருந்துண்டபின், ஆண் மக்களை ஈன்ற தாலி தரித்த நான்கு பெண்கள் மணமகளை முழுக்காட்டிப் புது ஆடை உடுத்தி அலங்கரித்து அவளை மணமகனுக்கு அளித்தல் அக்கால மணமுறையாக இருந்தது. (கந்தையா ந.சி, தமிழர் சரித்திரம், ப.45)

என்பதன் வழி அறியலாம்.

பெண் வழி சமூகச் சூழல் மெல்ல மெல்ல மாறி ஆண்வழிச் சமூகமாக மாறியது. அக்காலத்தில் எல்லோருக்கும் சொத்து இருந்தமையாலும், ஆண்களே சொத்துக்கு உரிமை உடையவராக மாறினர். மிகப்பல ஆடு மாடுகளை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தவரின் தந்தை செல்வத்தால் அடையக்கூடிய எல்லா முதன்மைகளையும் பெற்றான். நிலங்களைச் சிறுசிறு கூறுகளாகப் பிரித்ததினால் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கான வாய்ப்புக்கள் குறையும். ஆகவே, பல குடும்பங்களாக வாழ தலைப்பட்டனர். இவ்வகையாக ஒன்றிணைந்த குடும்பங்களுக்கு தலைவன், தொடக்க காலத்தில் அரண் தோன்றுவதற்கு இம்முறையே காரணமாக அமைந்தது.

பல குடும்பங்களின் ஒருமித்த ஒருவன் மூப்பனாக, தலைவனாக மாறினான். இவ்வகையிலேயே கோன் என்னும் சொல் அரசனைக் குறிக்கின்றது. மந்தைகளை மேய்க்கும் இடையனது கோலே அதிகாரத்திற்குரிய செங்கோலாயிற்று. இந்திய நாட்டில் இடையர் ஓரிடத்திலேயே தங்கி தமது வாழ்க்கையைத் தொடங்கினர். பிற நாடுகளில் இடையர் இடம்விட்டு இடம் பெயர்ந்து திரியும் மக்களாக இருந்தனர்.

முல்லை நில மக்களின் தொழில் முறை

காடுகளில் ஆடு, மாடுகள் மந்தைகளாக சென்று மேய ஆயர் மரநிழலில் தங்கி இருந்து குழல்களில் இனிய இராகங்களை ஊதுவர். அவர்களின் குழல்கள் மூங்கில், கொன்றைப் பழம், ஆம்பல் தண்டு ஆகியவற்றால் செய்யப்பட்டன. மாடுகளை மேயும்படி விட்டு நெடுநேரம் வேலையின்றி இருப்பவர்களால் ஆயர் குழலின் இனிய இசையைப் பாடுவதில் வல்லவராய் இருந்தனர் என்பதனை முல்லைப் பாடல் எடுத்துரைக்கும்.

ஆயர்களின் குடி அமைப்பு

ஆயரில் ஒரு பிரிவினர் குறுகிய காலுடைய குறும்பாடுகளை வளர்த்து அவை கொடுக்கும் கம்பளியினால் ஆடை நெய்தனர். இவர்களே குறும்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். இடையர்களின் குடிசைகளின் முன் ஆடுகள் நிற்பதற்குத் தழைகள் கட்டப்பட்டிருக்கும். குடிசைகளின் கதவுகள் பல தடிகளைக் கொண்டு கட்டப்பட்டவைகளாகும். தடிகளை வரிந்து வரகு வைக்கோல் பரப்பிக் கிடாய்த்தோல் விரித்த படுக்கையில் முதிய இடையன் காவலாகப் படுத்திருப்பான். முற்றத்தே அறையப்பட்ட குறுகிய முளைகளில் தாமணி தொடுத்த நீண்ட கயிறுகளை கட்டப்பட்டிருக்கும். ஊரைச் சுற்றி இடப்பட்ட முள்வேலியிடத்தே செம்மறியாடும் வெள்ளாடும் படுத்துறங்கும்.

வணிகம்

தயிர் புள்ளியாகத் தெறித்த வாயுடைய மோர்ப்பானையைப் பூவால் செய்த அம்மாட்டின் மீது தலையில் வைத்துக் குறிஞ்சி நிலத்தில் போய் மோரை விற்கும் தாளுருவி அசையும் காதும், பணைத்த தோளும், ஆற்றின் கருமணல் போன்ற கரிய நெளிய கூந்தலும், நல்ல மாமை நிறமுடைய ஆய்மகள் பறவைகள் துயிலெழுகின்ற வைகறைக் காலத்தே எழுவாள். எழுந்து முட்டைக் காளானது வெள்ளிய முளைகளை ஒத்த குவிந்த முகிழ்களையுடைய இனிய தயிரைப் புலியினது முழக்கத்தையுடைய மத்தை ஆரவாரிக்கும் கயிற்றால் இழுத்துக் கடைவாள். கடைந்த பின் வெண்ணெயை எடுப்பாள். பின் மோருக்கு விலையாகக் கிடைத்த நெல்லைக் கொண்டு சமைத்த உணவால் சுற்றத்தாரை உண்ணும்படி செய்வாள். (மேலது. 47)

இவ்வகை ஆய்மகள், தான் நெய்யை விற்ற விலைக்கு கட்டியாளப் பசும் பொன்ன வாங்காளாய், பாலெருமையையும் கரிய எருமை நாகிளையும் மெய்க்கு ஒப்பாகச் சொல்லி வாங்குவார்.

இடையர் எப்பொழுதும் செருப்புத் தரித்திருக்கும் காய்த்த காலினை உடையவர். பசுக்களுக்கு வருத்தம் செய்யும் தடி மான்றிய கையினர். இரண்டு தலைகளிலும் உறியினையுடைய காக்களைச் சுமந்து செல்லுவதனால் தழும்பு மிகுந்தலும் மயிருடையதுமாகிய தோளுடையவர்கள். காட்டு மரங்களின் உயர்ந்த கிளைகளிடத்தும் கொடிகளிலும் உள்ள பல பூக்களைக் கலந்து நெருங்கத் தொடுத்த மாலையினை அணிந்தவர்கள். பால் சோற்றினை உணவாக கொள்ளக் கூடியவர்கள். ஆயர் பசுக் கூட்டங்களோடு காட்டில் தங்குவர். தங்கித் தீக்கடை கோலால் கடைந்து கொண்ட நெருப்பினையுடைய தீக்கொள்ளியால் இடப்பட்ட கரிய துளையினையுடைய குழலிடைத்தே பாலைப் பண்ணைப் பாடுவர்.

பாலைப்பண் பாடி வெறுத்தவராயின், உள்ளே துளை உடைய குமிழின் தடியை வளைத்துக் கட்டின மரக் கயிற்றை விரலால் தெறித்து வாசிக்கும் நரம்பிணைவுடைய வில்லாகிய யாழில் குறிஞ்சி என்னும் பண்பாடுவர்.

முல்லை நிலத்தில் உள்ளோர் தம் சிறுமியரை ஏறு தழுவி வீரச் செயல் காட்டும் காளையருக்கு அளிப்பதும் வழக்கமாக இருந்தது. கூரிய கொம்புடைய கொழுத்த எருதை அவிழ்த்துவிட ஒருவன் அதைப்பிடித்து அடக்குதலே ஏறு தழுவுதல் ஆகும். ஏறு தழுவும்போது எருதுகள் பல இளைஞரின் உடலை கூரிய கொம்புகளால் பிளந்து கொல்வதும் உண்டு, ஏறு தழுவும் காட்சியைப் பற்றிய செய்யுட்கள் பல கலித்தொகையில் காணப்படுகின்றன.

மகட்கொடை நேர்ந்த ஆயர் ஒன்று சேரக் கூடி இறைவனுடைய குந்தாலிப் படைபோல கூறியதாக கொம்புகளைச் சீவி ஏறுகளைத் தொழுவிடத்தே புகுத்திவிட்டனர்.

"அவ்விடத்து ஏறுகளைத் தழுவிப் போக்கும் படியை உட்கொண்டு வந்து திரண்டு மழை முழக்கமும் இடியும் போல ஆரவாரம் எழ புகையொடு துகள் எழ ஏறு தழுவினார்க்குக் கொடுத்ததற்கு நல்ல மகளிர் இரண்டு நிற்ப நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும் உறையும் தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைத் தழுவி தொழுவிலே பாய்ந்தார்" (சிவதம்பி கா., பண்டையத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி.., ப.27)

''நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக்
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்” (மு.கலி. 101)

எருதினது நோக்கை அஞ்சானாய் அதின் மேலே பாய்ந்த இடையனை அவ்வெந்து சாகும்படி குத்திக் கொண்டைக் எடுத்துக் கொண்டு பாலம், குலைக்கின்ற தோற்றம், திரெளபதியின் துய்ய கக்கலை கைலய நீட்டிய இச்சான்றுடைய நெஞ்சைப் பிளக்க பகைவர் ஒரு வேமான் சொன்ன வஞ்சியத்தை வாய்க்கச் செய்க விய சோனைப் போன்றவை என்று எருதுகளின் ஆவேசம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

"விடர் இயம் கன்னிப் பொதுவளைச் சாடிக்
குடர்கொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றம் கார்" (மு.கலி. 101.)

அங்கணம் பாய்ந்து கொட்டத்தேப் பிடித்து கொண்டு மார்பிலே கூறுப்படி தழுவிக் கொண்டும் கழுத்திடத்தே அடங்கிக் கிடந்தும் இயில் முறியுப்படி தழுவியும் தோளுக்கு நடுவே கழுத்தைப் புரட்டுப் பிடித்தும் நெருங்கிக் கொம்புகள் தம்மேலே சென்ற ஆயரைப் பின்னர் கீழே விழ்த்து நீண்ட மருப்புத் தைக்கும்படி குத்தி, அவர்கள் தழுவுகின்ற கழுத்திடத்தைத் தழுவக் கொடாதே ஏறுகள் அவரை நீக்கி நிறுத்தின

அங்கனம் நிறுத்திய பின்பும் சென்று தழுவுவாரைப் பெறாமல் நின்ற சிவந்த நிறத்தையுடைய ஏறு உயிர் குறைகின்ற மானிடத்தே அவர் பின்னே சென்று குற்றத்தைச் செய்து உயிரை மாறும் கூற்றுவளைப் போன்றது என ஏறு தழுவுதலின் சிறப்பு கலித்தொகையில் பல பாடல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

முடிவுரை

கலித்தொகையின்வழி முல்லை நில மக்களின் பழக்கவழங்களை அவர்களின் தொழில் முறை, குடி அமைப்பு, வணிகம் ஆகியவற்றின்வழி இக்கட்டுரை எடுத்தியம்பியது. இதில் முல்லைநில மக்கள் ஏனைய நில மக்களைக் காட்டிலும் பண்பாட்டில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர் என்பது அறியலாகிறது.

துணைநூற் பட்டியல்

கந்தையா ந.சி, தமிழர் சரித்திரம்ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை-1,ப.ஆ1964.

சிவதம்பி கா., பண்டையத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி..,, மக்கள் வெளியீடு, ப.ஆ. 2003.

புலியூர் கேசிகன் (உரை), கலித்தொகை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, ப.ஆ.2010.

* கட்டுரையாளர்: முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி. எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்), விளாப்பாகம் – 632 521.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R